பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்

ونريد ان نمن عليِ الذين استضعفوا في الارض ونجعلهم ائمة ونجعلهم; الوارثين                 قصص 5

இன்று இஸ்லாமிய உலகம் தினந்தோரும் புதிய புதிய சாதணங்களையும் உபகரணங்களையும்   கண்டு பிடிக்கின்றார்கள் அவைகளோடு முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிப்பதற்காக வேண்டி இரசாயண வாயுக்களைக் கொண்ட ஆயுதங்களைக் கண்டு பிடித்து அவர்களை அழித்துமு வருகின்றதை நாம் காணுகின்றோம். இவை அனைத்தும் தீவிர வாதிகளை அழிக்கின்றோம் என்ற தோரணையிலேதான் நடை பெறுகின்றது. இன்னும் சில நாடுகளில் அந்நாட்டு அபாருளாதாரங்களை சூரையாடுவதற்காக வேண்டி அந்நாட்டை தனது கட்டுப் பாட்டுக்குக் கீழ் கொண்டு வந்து குடி மக்களை அடக்கு முறைப் படுத்துவதோடு சிறைபிடிக்கப்பட்டு கூற முடியா வண்ணம் சித்திரவதை செய்வதோடு பெண்களை மாணசிங்கப் படுத்துவதையும் முஸ்லிம்களாகிய நாம் காணுகின்றாம். இவைகளை நிறுத்த வேண்டும் முஸ்லிம் மக்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்ற அடிப்படையில் இறைவனின் தற்போதைய பிரதிநிதி வெளியாகும் காலநேரம் நெருங்கி விட்டது. எனவே  அன்னாரின் வருகைக்காக நாம் எந்தளவு துஆச் செய்கின்றோமோ அது அவர்களின் வருகையில் தீவிரத்தை ஏற்படுத்தும். இறுதியாக நாம் உலக முஸ்லிம்களிடம் வேண்டிக் கொள்வது அன்னாரின் வருகைக்காக அதிகமாக துஆச் செய்து கொள்ளுங்கள் . அவர்கள் வந்து விட்;டால்  இன்று உலகில் பெரும் பெரும் வல்லரசுகள் செய்யும்  அநீதிகளும் அநியாயங்க ங்ளும் இல்லாது போய் விடும்.

எனவே நாம் அனைவரும் அவர்களது வருகைய iஎதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். ஷஃபான் மாதத்தின் பதினைந்தாவது நாள் அவர்களது பிறந்த தினமாகும். அத்தினம் இன்று உலக முஸ்லிம்களிடத்தில் பராஅத் என பிரபல்யம் அடைந்துள்ளது. உண்மையில் அது இமாம் மஹ்தி (அலை) அவர்கள் பிறந்த தினமாகும். அத்தினத்தை முன்னிட்டு உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் நாம் வாழ்த்துக்களையும் வந்தனங்களையும் தெரிவித்தக் கொள்கின்றோம்.

السلام عليك  يا صاحب الزمان  السلام  عليك  يا مولاي   سلام  مخلص لك  في  الولاية

முஹம்மத் பாழில் லங்கரானி
2004-9-30