புனித ஷஃபான் மாதம் வருவதையிட்டு உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் வந்தனங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அந்த புனித மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் நோம்பு நோற்று அதன் இராத் தொழுகைகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். அந்த மாதத்தில் கேட்கப் படும் துஆக்கள் அனைத்தும் அங்கீகரிக்கப்படும். இன்னும் அதற்கு ரஸுலுல்லாஹ்வுடைய மாதம் என்றும் பெயர் வைக்கப் பட்டுள்ளது என ஹதீஸ்களிலே வந்துள்ளது. ஆகவே அப்புனித மாதத்தில் இறை வணக்கத்தில் அதிகமாக ஈடுபட்டு பாவங்களை செய்யாது இருக்க இறைவன் நம் அனைவருக்கும் அருள் புரிவாணாக ! ஆமீன் , என வேண்டியவர்களாக மர்ஹும் முஹத்தித் கும்மி அவர்களின் மபாதீஹுல் ஜினான் எனும் நூலில் இருந்து ஷஃபான் மாத்தில் செய்ய வேண்டிய அமல்களை நீங்கள் செய்து பிரயோசனம் அடைய வேண்டும் என இங்கு தருகின்றோம் .
ஷஃபான் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதங்களில் ஒன்றாகும். அது உலகத் தூதர் உத்தம நபி (ஸல்) அவர்களுடைய மாதமாகும். நபி (ஸல்) அவர்கள் அந்த மாதம் முழுவதும் நோன்பு நோற்று பின் அதைத் தொடர்ந்து வரும் றமழான் மாதமும் நோன்பு பிடித்தார்கள். இதைப் பற்றி அவர்கள் சொன்னார்கள்: ஷஃபான் எனது மாதமாகும். எவர் ஒருவர் அதில் ஒரு நாள் நோன்பு நோற்கின்றாறோ அவருக்கு சுவர்க்கம் வாஜிபாகி விடும் .
இன்னும் ஹஸரத் இமாம் ஜஃபர் சாதிக் (அலை) அவர்கள் கூறியதாக அறிவிக்கப் பட்டுள்ளதாவது: ஷஃபான் மாதம் நெருங்கிக் கொண்டிருக்கும் போது ஹஸரத் செய்னுல் ஆபிதீன் (அலை) அவர்கள் தனது சகாக்களை ஒன்று சேர்த்து சொன்னார்கள் ஏய் எனது தோழர்களே! இது எந்த மாதம் என்பதை அறிந்து கொள்ளுங்கள் இது நபி (ஸல்) அவர்கள் எனது மாதம் எனக் கூறிய மாதமாகும். ஆகவே நோன்பு பிடியுங்கள். இறை நெருக்கத்கிற்
காகவும் ,இறைத்தூதரின் நேசத்திற்காகவும் இந்த மாதத்தில் நோன்பு பிடியுங்கள். அலி இப்னு ஹுஸைனுடைய உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக , எனது தந்தை ஹுஸைன் இப்னு அலி கூற நான் கேட்டேன் அவர்கள் சென்னார்கள் அமீருல் முஃமினீன் அவர்கள் கூற நான் கேட்டேன் , எவர் ஒருவர் இறைவனை நெருங்க வேண்டும் எனவும் , இறைத்தூதரை நேசம் கொள்ள வேண்டும் எனவும் நோன்பு பிடிக்கின்றாரோ அல்லாஹ் அவரை நேசிக்கின்றார். நாளை மறுமையில் சுவனத்தை அவருக்கு கடமையாக்குகின்றான் என்றார்கள். ஹஸ்ரத் இமாம் ஜஃப் ஸாதிக் (அலை) கூறியதாக சப்வான் ஜமால் அறிவிக்கின்றார். ஹஸரத் சொன்னார்கள். நாயகம் (ஸல்) அவர்கள் ஷஃபான் மாத தலைப்பிறையைக் கண்டதும் மதீனா மக்களை அழைத்து ஓ மக்களே! நான் இறைவனால் அனுப்பப்பட்ட அவனது தூதராவேன் அறிந்து கொள்ளுங்கள் நிச்சயமாக ஷஃபான் மாதம் , என்னுடைய மாதமாகும். எவர் இந்த மாதத்தில் எனக்கு உருதுணையாக இருக்கின்றாரோ அதாவது நோன்பு நோக்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் அருள் செய்யட்டும் என்றார்கள். மேலும் சொன்னார்கள் , ஹஸரத் அலி (அலை) அவர்கள் சொன்னார்கள் எப்போது நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்டேனோ அன்றிலிருந்து இன்று வரைக்கும் ஷஃபான் மாத நோன்பை நான் விடவில்லை இன்ஷா அல்லாஹ் எனது உயிர் இருக்கும் காலமெல்லாம் அவை கலாவாக மாட்டாது. ஷஃபான் , றமழான் போன்ற இருமாதத்தில் பிடிக்கும் நோன்பு இறைவனிடத்தில் இருந்து கிடைக்கும் தௌபாவும் , பாவமன்னிப்புமாகும் என்றார்கள். இஸ்மாயீல் இப்னு அப்துல் காலிக் அறிவிக்கின்றார்கள். நாங்கள் இமாம் ஜஃபர் ஸாதிக் (அலை) அவர்களிடத்தில் இருந்தோம் அப்போது ஷஃபான் மாதத்துடைய அமல்கள் திக்ருகள் பற்றி பேசப்பட்டது. இதைக் கேட்டுக்கொண்டிருந்த ஹஸ்ரத் அவர்கள் ஷஃபான் மாதத்தின் சிறப்புகளையும் அதில் ஓத வேண்டிய திக்ருகளையும் பற்றி எங்களுக்கு அழகாக சொல்லிக் காட்டினார்கள். யாருடைய இரத்தமாவது ஹராத்துடன் சேர்ந்தால் அவர் ஷஃபான் மாதம் நோன்பு நோற்று அம்மாதத்தை திரன்பட பிரயோசனப்படுத்திக் கொண்டால் அவருக்கு மன்னிப்புகிடைக்கும் என்று கூறிய அவர்கள் இந்த கண்னிய மிக்க மாதத்தில் செய்யப்படும் அமல் இரண்டு வகைப்படும் ஒன்று பொதுவான கூட்டான அமல் ,
மற்றது இந்த மாதத்திற்கு குறிப்பான அமல் எனச் சொன்னார்கள். பொதுவான அமல்களாவன .
1- ஒவ்வொரு நாளும் 70 தடவை أَسْتَغْفِرُ اللَّهَ وَ أَسْأَلُهُ التَّوْبَةَ என்று சொல்லுதல்
2- ஒவ்வொரு நாளும் 70 தடவை أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لا إِلَهَ إِلا هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ الْحَيُّ الْقَيُّومُ وَ أَتُوبُ إِلَيْهِ என்று கூறுதல் .
ஹதீஸ்களில் வந்துள்ளவாறு இந்த மாதத்தில் சொல்லப்படும் சிறந்த திக்ரு , கேட்கப்படும் துஆ , இஸ்திஃபார் எனும் பாவமன்னிப்புத் தேடலாகும். எவர் ஒருவர் இந்த மாதத்தில் ஒவ்வொரு நாளும் 70 தடவை இஸ்திஃபார் செய்கின்றாரோ அவர் இது அல்லாத மாதங்களில் 70 ஆயிரம் தடவை இஸ்திஃபார் செய்ததைப் போலாகும் .
3- ஸதகா கொடுத்தல் எவர் ஒருவர் இந்த மாதத்தில் ஈத்தம் பழத்தின் ஒரு பாதியையாவது தருமம் செய்தால் அல்லாஹ் அவருக்கு நரக நெருப்பை ஹராமாக்குகிறான். இமாம் சாதிக் (அலை) அவர்களிடம் இருந்து கூறப்பட்டிருப்பதாவது , ஹஸரத்திடம் ரஜப் மாதத்துடைய நோன்பின் சிறப்புகளைப் பற்றி கேட்டகப் பட்டபோது அவர்கள் ஏன் ஷஃபான் மாத நோன்பை விட்டும் பராமுகமாக இருக்கின்றீர்கள் என்றார்கள். ராவி (அறிவிப்பவர்) நபியின் பேரரே ஷஃபானில் ஒருநாளில் நோன்பு பிடிக்கும் ஒருவருடைய கூலி என்ன வென்று கேட்டதற்கு , இமாம் இறைவன் மீது சத்தியமாக அவருடைய கூலி சுவனமாகும் என்றார்கள். மேலும் ராவி , இம்மாதத்தில் செய்ய வேண்டிய அமல்கள் என்ன என்று கேட்டதற்கு தான தருமம் செய்தலும் பாவ மன்னிப்பு கேட்டலுமாகும் என்றார்கள் .
4- இந்த மாதம் பூராகவும் 1000 விடுத்தம் لا إِلَهَ إِلا اللَّهُ وَ لا نَعْبُدُ إِلا إِيَّاهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ وَ لَوْ كَرِهَ الْمُشْرِكُونَ என்று சொல்ல வேண் ;டும். இதற்கு அதிகமான நன்மைகள் உண்டு. அவைகளில் ஒன்று அவனது பட்டோலையில் 1000 வருடத்து வணக்கத்தின் நன்மையை எழுதுகின்றனர் .
5- இந்த மாதத்தின் ஒவ்வொரு வியரிக்கிழமையிலும் இரண்டு ரக்அத்து தொழுதல். ஒவ்வொரு ரக்கத்திலும் சூரத்துல் பாத்திகாவிற்கு பிறகு 100 தடவை சூரதுல் இஹ்லாஸை ஓதுதல். இன்னும் ஸலாம் கொடுத்த பின் 100 தடவை ஸலவாத்துச் சொல்லுதல் அப்போது அல்லாஹ் அவனது தேவைகளை நிறைவேற்றிவைப்பான். ஹதீஸிலே வந்திருக்கின்றது எவர்கள் ஷஃபான் மாதத்தின் ஒவ்வொரு வியாழக் கிழமைகளிலும் நோன்பு நோற்று வானத்தை அழகுபடுத்துகின்றார்களோ , மலக்குகள் இறைவனிடத்தில் இந்நாளில் நோன்புடையோரின் பாவங்களை மன்னிக்கும் படியும் , அவர்களின் துஆக்களை ஏற்றுக்கொள்ளும் படியும் வேண்டுகின்றனர். வேரொரு அறிவிப்பிலே வந்திருக்கின்றது எவர் ஒருவர் ஷஃபான் மாதத்தின் திங்கட்கிழமைகளிலும் , வியாழக்கிழமைகளிலும் நோன்பு நோற்கின்றாரோ , அல்லாஹுதஆலா அவருடைய உலக தேவைகளில் இருபதையும் மறுமையுடைய தேவைகளில் இருபதையும் நிறைவேற்றுகிறான் .
6- இந்த மாதத்தில் அதிகமாக ஸலவாத்து சொல்லுதல் .
7- ஷஃபான் மாதத்தின் ஒவ்வொரு மதிய நேரத்திலும் , இரவின் நடுநிசியிலும் இமாம் செய்னுல் ஆபிதீன்(அலை) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த ஸலவாத்தை ஓததல் .
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّد وَ آلِ مُحَمَّد شَجَرَةِ النُّبُوَّةِ وَ مَوْضِعِ الرِّسَالَةِ وَ مُخْتَلَفِ الْمَلائِكَةِ وَ مَعْدِنِ الْعِلْمِ وَ أَهْلِ بَيْتِ الْوَحْيِ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّد وَ آلِ مُحَمَّد الْفُلْكِ الْجَارِيَةِ فِي اللُّجَجِ الْغَامِرَةِ يَأْمَنُ مَنْ رَكِبَهَا وَ يَغْرَقُ مَنْ تَرَكَهَا الْمُتَقَدِّمُ لَهُمْ مَارِقٌ وَ الْمُتَأَخِّرُ عَنْهُمْ زَاهِقٌ وَ اللازِمُ لَهُمْ لاحِقٌ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّد وَ آلِ مُحَمَّد الْكَهْفِ الْحَصِينِ وَ غِيَاثِ الْمُضْطَرِّ الْمُسْتَكِينِ وَ مَلْجَإِ الْهَارِبِينَ وَ عِصْمَةِ الْمُعْتَصِمِينَ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّد وَ آلِ مُحَمَّد صَلاةً كَثِيرَةً تَكُونُ لَهُمْ رِضًى وَ لِحَقِّ مُحَمَّد وَ آلِ مُحَمَّد أَدَاءً وَ قَضَاءً بِحَوْل مِنْكَ وَ قُوَّة يَا رَبَّ الْعَالَمِينَ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّد وَ آلِ مُحَمَّد الطَّيِّبِينَ الْأَبْرَارِ الْأَخْيَارِ الَّذِينَ أَوْجَبْتَ حُقُوقَهُمْ وَ فَرَضْتَ طَاعَتَهُمْ وَ وِلايَتَهُمْ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّد وَ آلِ مُحَمَّد وَ اعْمُرْ قَلْبِي بِطَاعَتِكَ وَ لا تُخْزِنِي بِمَعْصِيَتِكَ وَ ارْزُقْنِي مُوَاسَاةَ مَنْ قَتَّرْتَ عَلَيْهِ مِنْ رِزْقِكَ بِمَا وَسَّعْتَ عَلَيَّ مِنْ فَضْلِكَ وَ نَشَرْتَ عَلَيَّ مِنْ عَدْلِكَ وَ أَحْيَيْتَنِي تَحْتَ ظِلِّكَ وَ هَذَا شَهْرُ نَبِيِّكَ سَيِّدِ رُسُلِكَ شَعْبَانُ الَّذِي حَفَفْتَهُ مِنْكَ بِالرَّحْمَةِ وَ الرِّضْوَانِ الَّذِي كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَ آلِهِ وَ سَلَّمَ يَدْأَبُ فِي صِيَامِهِ وَ قِيَامِهِ فِي لَيَالِيهِ وَ أَيَّامِهِ بُخُوعا لَكَ فِي إِكْرَامِهِ وَ إِعْظَامِهِ إِلَى مَحَلِّ حِمَامِهِ اللَّهُمَّ فَأَعِنَّا عَلَى الاسْتِنَانِ بِسُنَّتِهِ فِيهِ وَ نَيْلِ الشَّفَاعَةِ لَدَيْهِ اللَّهُمَّ وَ اجْعَلْهُ لِي شَفِيعا مُشَفَّعا وَ طَرِيقا إِلَيْكَ مَهْيَعا وَ اجْعَلْنِي لَهُ مُتَّبِعا حَتَّى أَلْقَاكَ يَوْمَ الْقِيَامَةِ عَنِّي رَاضِيا وَ عَنْ ذُنُوبِي غَاضِيا قَدْ أَوْجَبْتَ لِي مِنْكَ الرَّحْمَةَ وَ الرِّضْوَانَ وَ أَنْزَلْتَنِي دَارَ الْقَرَارِ وَ مَحَلَّ الْأَخْيَارِ.
8- இப்னு ஹாலவிய்யா அறிவித்திருக்கும் இந்த முனாஜாத்தை ஓதுதல். ஷஃபான் மாதத்தில் இதை ஹஸரத் அமீருல் முஃமினீன் அவர்களும் அவர்களது பிள்ளைகளில் இருந்து வந்த இமாம்களும் ஓதக் கூடியவர்களாக இருந்தனர் என அவர் சொன்னார் ;.
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّد وَ آلِ مُحَمَّد وَ اسْمَعْ دُعَائِي إِذَا دَعَوْتُكَ وَ اسْمَعْ نِدَائِي إِذَا نَادَيْتُكَ وَ أَقْبِلْ عَلَيَّ إِذَا نَاجَيْتُكَ فَقَدْ هَرَبْتُ إِلَيْكَ وَ وَقَفْتُ بَيْنَ يَدَيْكَ مُسْتَكِينا لَكَ مُتَضَرِّعا إِلَيْكَ رَاجِيا لِمَا لَدَيْكَ ثَوَابِي وَ تَعْلَمُ مَا فِي نَفْسِي وَ تَخْبُرُ حَاجَتِي وَ تَعْرِفُ ضَمِيرِي.
وَ لا يَخْفَى عَلَيْكَ أَمْرُ مُنْقَلَبِي وَ مَثْوَايَ وَ مَا أُرِيدُ أَنْ أُبْدِئَ بِهِ مِنْ مَنْطِقِي وَ أَتَفَوَّهَ بِهِ مِنْ طَلِبَتِي وَ أَرْجُوهُ لِعَاقِبَتِي وَ قَدْ جَرَتْ مَقَادِيرُكَ عَلَيَّ يَا سَيِّدِي فِيمَا يَكُونُ مِنِّي إِلَى آخِرِ عُمْرِي مِنْ سَرِيرَتِي وَ عَلانِيَتِي وَ بِيَدِكَ لا بِيَدِ غَيْرِكَ زِيَادَتِي وَ نَقْصِي وَ نَفْعِي وَ ضَرِّي إِلَهِي إِنْ حَرَمْتَنِي فَمَنْ ذَا الَّذِي يَرْزُقُنِي وَ إِنْ خَذَلْتَنِي فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُنِي إِلَهِي أَعُوذُ بِكَ مِنْ غَضَبِكَ وَ حُلُولِ سَخَطِكَ إِلَهِي إِنْ كُنْتُ غَيْرَ مُسْتَأْهِل لِرَحْمَتِكَ فَأَنْتَ أَهْلٌ أَنْ تَجُودَ عَلَيَّ بِفَضْلِ سَعَتِكَ إِلَهِي كَأَنِّي بِنَفْسِي وَاقِفَةٌ بَيْنَ يَدَيْكَ وَ قَدْ أَظَلَّهَا حُسْنُ تَوَكُّلِي عَلَيْكَ فَقُلْتَ فَفَعَلْتَ مَا أَنْتَ أَهْلُهُ وَ تَغَمَّدْتَنِي بِعَفْوِكَ إِلَهِي إِنْ عَفَوْتَ فَمَنْ أَوْلَى مِنْكَ بِذَلِكَ وَ إِنْ كَانَ قَدْ دَنَا أَجَلِي وَ لَمْ يُدْنِنِي يَدْنُ مِنْكَ عَمَلِي فَقَدْ جَعَلْتُ الْإِقْرَارَ بِالذَّنْبِ إِلَيْكَ وَسِيلَتِي إِلَهِي قَدْ جُرْتُ عَلَى نَفْسِي فِي النَّظَرِ لَهَا فَلَهَا الْوَيْلُ إِنْ لَمْ تَغْفِرْ لَهَا إِلَهِي لَمْ يَزَلْ بِرُّكَ عَلَيَّ أَيَّامَ حَيَاتِي فَلا تَقْطَعْ بِرَّكَ عَنِّي فِي مَمَاتِي إِلَهِي كَيْفَ آيَسُ مِنْ حُسْنِ نَظَرِكَ لِي بَعْدَ مَمَاتِي وَ أَنْتَ لَمْ تُوَلِّنِي تُولِنِي إِلا الْجَمِيلَ فِي حَيَاتِي إِلَهِي تَوَلَّ مِنْ أَمْرِي مَا أَنْتَ أَهْلُهُ وَ عُدْ عَلَيَّ بِفَضْلِكَ عَلَى مُذْنِب قَدْ غَمَرَهُ جَهْلُهُ إِلَهِي قَدْ سَتَرْتَ عَلَيَّ ذُنُوبا فِي الدُّنْيَا وَ أَنَا أَحْوَجُ إِلَى سَتْرِهَا عَلَيَّ مِنْكَ فِي الْأُخْرَى إِلَهِي قَدْ أَحْسَنْتَ إِلَيَّ إِذْ لَمْ تُظْهِرْهَا لِأَحَد مِنْ عِبَادِكَ الصَّالِحِينَ فَلا تَفْضَحْنِي يَوْمَ الْقِيَامَةِ عَلَى رُءُوسِ الْأَشْهَادِ إِلَهِي جُودُكَ بَسَطَ أَمَلِي وَ عَفْوُكَ أَفْضَلُ مِنْ عَمَلِي إِلَهِي فَسُرَّنِي بِلِقَائِكَ يَوْمَ تَقْضِي فِيهِ بَيْنَ عِبَادِكَ إِلَهِي اعْتِذَارِي إِلَيْكَ اعْتِذَارُ مَنْ لَمْ يَسْتَغْنِ عَنْ قَبُولِ عُذْرِهِ فَاقْبَلْ عُذْرِي يَا أَكْرَمَ مَنِ اعْتَذَرَ إِلَيْهِ الْمُسِيئُونَ إِلَهِي لا تَرُدَّ حَاجَتِي وَ لا تُخَيِّبْ طَمَعِي وَ لا تَقْطَعْ مِنْكَ رَجَائِي وَ أَمَلِي إِلَهِي لَوْ أَرَدْتَ هَوَانِي لَمْ تَهْدِنِي وَ لَوْ أَرَدْتَ فَضِيحَتِي لَمْ تُعَافِنِي إِلَهِي مَا أَظُنُّكَ تَرُدُّنِي فِي حَاجَة قَدْ أَفْنَيْتُ عُمُرِي فِي طَلَبِهَا مِنْكَ إِلَهِي فَلَكَ الْحَمْدُ أَبَدا أَبَدا دَائِما سَرْمَدا يَزِيدُ وَ لا يَبِيدُ كَمَا تُحِبُّ وَ تَرْضَى إِلَهِي إِنْ أَخَذْتَنِي بِجُرْمِي أَخَذْتُكَ بِعَفْوِكَ وَ إِنْ أَخَذْتَنِي بِذُنُوبِي أَخَذْتُكَ بِمَغْفِرَتِكَ.
وَ إِنْ أَدْخَلْتَنِي النَّارَ أَعْلَمْتُ أَهْلَهَا أَنِّي أُحِبُّكَ إِلَهِي إِنْ كَانَ صَغُرَ فِي جَنْبِ طَاعَتِكَ عَمَلِي فَقَدْ كَبُرَ فِي جَنْبِ رَجَائِكَ أَمَلِي إِلَهِي كَيْفَ أَنْقَلِبُ مِنْ عِنْدِكَ بِالْخَيْبَةِ مَحْرُوما وَ قَدْ كَانَ حُسْنُ ظَنِّي بِجُودِكَ أَنْ تَقْلِبَنِي بِالنَّجَاةِ مَرْحُوما إِلَهِي وَ قَدْ أَفْنَيْتُ عُمُرِي فِي شِرَّةِ السَّهْوِ عَنْكَ وَ أَبْلَيْتُ شَبَابِي فِي سَكْرَةِ التَّبَاعُدِ مِنْكَ إِلَهِي فَلَمْ أَسْتَيْقِظْ أَيَّامَ اغْتِرَارِي بِكَ وَ رُكُونِي إِلَى سَبِيلِ سَخَطِكَ إِلَهِي وَ أَنَا عَبْدُكَ وَ ابْنُ عَبْدِكَ قَائِمٌ بَيْنَ يَدَيْكَ مُتَوَسِّلٌ بِكَرَمِكَ إِلَيْكَ إِلَهِي أَنَا عَبْدٌ أَتَنَصَّلُ إِلَيْكَ مِمَّا كُنْتُ أُوَاجِهُكَ بِهِ مِنْ قِلَّةِ اسْتِحْيَائِي مِنْ نَظَرِكَ وَ أَطْلُبُ الْعَفْوَ مِنْكَ إِذِ الْعَفْوُ نَعْتٌ لِكَرَمِكَ إِلَهِي لَمْ يَكُنْ لِي حَوْلٌ فَأَنْتَقِلَ بِهِ عَنْ مَعْصِيَتِكَ إِلا فِي وَقْت أَيْقَظْتَنِي لِمَحَبَّتِكَ وَ كَمَا أَرَدْتَ أَنْ أَكُونَ كُنْتُ فَشَكَرْتُكَ بِإِدْخَالِي فِي كَرَمِكَ وَ لِتَطْهِيرِ قَلْبِي مِنْ أَوْسَاخِ الْغَفْلَةِ عَنْكَ إِلَهِي انْظُرْ إِلَيَّ نَظَرَ مَنْ نَادَيْتَهُ فَأَجَابَكَ وَ اسْتَعْمَلْتَهُ بِمَعُونَتِكَ فَأَطَاعَكَ يَا قَرِيبا لا يَبْعُدُ عَنِ الْمُغْتَرِّ بِهِ وَ يَا جَوَادا لا يَبْخَلُ عَمَّنْ رَجَا ثَوَابَهُ إِلَهِي هَبْ لِي قَلْبا يُدْنِيهِ مِنْكَ شَوْقُهُ وَ لِسَانا يُرْفَعُ إِلَيْكَ صِدْقُهُ وَ نَظَرا يُقَرِّبُهُ مِنْكَ حَقُّهُ إِلَهِي إِنَّ مَنْ تَعَرَّفَ بِكَ غَيْرُ مَجْهُول وَ مَنْ لاذَ بِكَ غَيْرُ مَخْذُول وَ مَنْ أَقْبَلْتَ عَلَيْهِ غَيْرُ مَمْلُوك مَمْلُول إِلَهِي إِنَّ مَنِ انْتَهَجَ بِكَ لَمُسْتَنِيرٌ وَ إِنَّ مَنِ اعْتَصَمَ بِكَ لَمُسْتَجِيرٌ وَ قَدْ لُذْتُ بِكَ يَا إِلَهِي فَلا تُخَيِّبْ ظَنِّي مِنْ رَحْمَتِكَ وَ لا تَحْجُبْنِي عَنْ رَأْفَتِكَ إِلَهِي أَقِمْنِي فِي أَهْلِ وَلايَتِكَ مُقَامَ مَنْ رَجَا الزِّيَادَةَ مِنْ مَحَبَّتِكَ إِلَهِي وَ أَلْهِمْنِي وَلَها بِذِكْرِكَ إِلَى ذِكْرِكَ وَ هِمَّتِي فِي رَوْحِ نَجَاحِ أَسْمَائِكَ وَ مَحَلِّ قُدْسِكَ إِلَهِي بِكَ عَلَيْكَ إِلا أَلْحَقْتَنِي بِمَحَلِّ أَهْلِ طَاعَتِكَ وَ الْمَثْوَى الصَّالِحِ مِنْ مَرْضَاتِكَ فَإِنِّي لا أَقْدِرُ لِنَفْسِي دَفْعا وَ لا أَمْلِكُ لَهَا نَفْعا إِلَهِي أَنَا عَبْدُكَ الضَّعِيفُ الْمُذْنِبُ وَ مَمْلُوكُكَ الْمُنِيبُ الْمَعِيبُ فَلا تَجْعَلْنِي مِمَّنْ صَرَفْتَ عَنْهُ وَجْهَكَ وَ حَجَبَهُ سَهْوُهُ عَنْ عَفْوِكَ إِلَهِي هَبْ لِي كَمَالَ الانْقِطَاعِ إِلَيْكَ وَ أَنِرْ أَبْصَارَ قُلُوبِنَا.
بِضِيَاءِ نَظَرِهَا إِلَيْكَ حَتَّى تَخْرِقَ أَبْصَارُ الْقُلُوبِ حُجُبَ النُّورِ فَتَصِلَ إِلَى مَعْدِنِ الْعَظَمَةِ وَ تَصِيرَ أَرْوَاحُنَا مُعَلَّقَةً بِعِزِّ قُدْسِكَ إِلَهِي وَ اجْعَلْنِي مِمَّنْ نَادَيْتَهُ فَأَجَابَكَ وَ لاحَظْتَهُ فَصَعِقَ لِجَلالِكَ فَنَاجَيْتَهُ سِرّا وَ عَمِلَ لَكَ جَهْرا إِلَهِي لَمْ أُسَلِّطْ عَلَى حُسْنِ ظَنِّي قُنُوطَ الْإِيَاسِ وَ لا انْقَطَعَ رَجَائِي مِنْ جَمِيلِ كَرَمِكَ إِلَهِي إِنْ كَانَتِ الْخَطَايَا قَدْ أَسْقَطَتْنِي لَدَيْكَ فَاصْفَحْ عَنِّي بِحُسْنِ تَوَكُّلِي عَلَيْكَ إِلَهِي إِنْ حَطَّتْنِي الذُّنُوبُ مِنْ مَكَارِمِ لُطْفِكَ فَقَدْ نَبَّهَنِي الْيَقِينُ إِلَى كَرَمِ عَطْفِكَ إِلَهِي إِنْ أَنَامَتْنِي الْغَفْلَةُ عَنِ الاسْتِعْدَادِ لِلِقَائِكَ فَقَدْ نَبَّهَتْنِي الْمَعْرِفَةُ بِكَرَمِ آلائِكَ إِلَهِي إِنْ دَعَانِي إِلَى النَّارِ عَظِيمُ عِقَابِكَ فَقَدْ دَعَانِي إِلَى الْجَنَّةِ جَزِيلُ ثَوَابِكَ إِلَهِي فَلَكَ أَسْأَلُ وَ إِلَيْكَ أَبْتَهِلُ وَ أَرْغَبُ وَ أَسْأَلُكَ أَنْ تُصَلِّيَ عَلَى مُحَمَّد وَ آلِ مُحَمَّد وَ أَنْ تَجْعَلَنِي مِمَّنْ يُدِيمُ ذِكْرَكَ وَ لا يَنْقُضُ عَهْدَكَ وَ لا يَغْفُلُ عَنْ شُكْرِكَ وَ لا يَسْتَخِفُّ بِأَمْرِكَ إِلَهِي وَ أَلْحِقْنِي بِنُورِ عِزِّكَ الْأَبْهَجِ فَأَكُونَ لَكَ عَارِفا وَ عَنْ سِوَاكَ مُنْحَرِفا وَ مِنْكَ خَائِفا مُرَاقِبا يَا ذَا الْجَلالِ وَ الْإِكْرَامِ وَ صَلَّى اللَّهُ عَلَى مُحَمَّد رَسُولِهِ وَ آلِهِ الطَّاهِرِينَ وَ سَلَّمَ تَسْلِيما كَثِيرا
இந்த முனாஜாத்தை இமாம்கள் ஓதி வந்துள்ளனர். நாமும் அதை உளத் தூய்மையோடும் , விருப்பத்தோடும் ஓதி அதன் நன்மைகளைப் பெறுவோம் இன்ஷா அல்லாஹ் .
ஷஃபான் மாதத்திற்கு மாத்திரம் குறிப்பான அமல்கள்
அதிகமான தொழுகை இதில் சிபார்சு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒன்றுதான் 12 ரக்அத் தொழுகையாகும். ஒவ்வொரு ரக்அத்திலும் ஒருமுறை சூராபாத்திஹாவும் 11 முறை சூரா இஹ்லாஸையும் ஓத வேண்டும் .
இத்தினத்தில் நோன்பு நோற்றல் அதிக நன்மையை கொடுக்கும். அத்தோடு சிறப்பையும் வழங்கும். ஹஸரத் இமாம் ஸாதிக் (அலை) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டிருப்பதாவது எவர் ஒருவர் ஷஃபான் மாதத்தின் முதல் நாளில் நோன்பு நோற்கின்றாரோ அவருக்கு சுவர்க்கம் வாஜிபாகின்றது. செய்யித் இப்னு தாவூஸ் அவர்கள் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளார். நபி (ஸல்) அவர்கள் எவர் ஒருவர் இந்த மாதத்தின் முதல் மூன்று நாளும் நோன்பு நோற்று அதன் இரவுகளில் இரண்டு ரக்அத்து தொழுது ஒவ்வொரு ரக்அத்திலும் ஒரு முறை சூரதுல் பாத்திகாவும் 11 முறை சூரதுல் இஹ்லாஸையும் ஓதி தொழுபவருக்கு அதிகமான நன்மைகள் இருப்பதாக கூறியுள்ளார்கள். செய்கு திகதுல் இஸ்லாம் நூரி நூருல்லாஹ் அவர்கள் அந்த ஹதீதை கலிமதுத் தய்யிபா எனும் நூலின் கடைசி பகுதியில் கூறியுள்ளார்கள். அவை அனைத்தையும் இங்கு கூறுவது இயலாத காரியமாகும் என்பதால் அதன் சுருக்கத்தை உங்களின் பார்வைக்கு வைக்கின்றோம். ஹஸரத் அமீருல் முஃமினீன் அலி (அலை) அவர்கள் ஷஃபான் மாதத்தின் முதலாவது நாளன்று பள்ளியில் அமர்ந்து கழாகத்ர் போன் ;ற வேறுபல விடயங்களைப் பற்றிப் பேசி சத்தம் போட்டுக்கொண்டிருந்த கூட்டத்திற்கு அருகாமையில் சென்று அவர்களுக்கு ஸலாம் சொன்னார்கள். அவர்களும் அதற்கு பதில் கூறி விட்டு எழுந்து தங்களுக்கு பக்கத்தில் அமருமாறு வேண்டினார்கள். ஹஸ்ரத் அவர்களோ அதை பொருட்படுத்தாது அவர்களை நோக்கிக் கூறினார்கள் மனிதர்களே ஏன் நீங்கள் பிரயோசனமில்லாத விடயங்களைப் பற்றிப் பேசி பள்ளியின் சங்கையை குறைப்பதுடன் தங்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றீர்கள். இது என்ன மாதம் என்பது உங்களுக்குத் தெரியாதா ? அதன் சிறப்புகள் அதில் நடந்த நிகழ்வுகள் என்ன வென்று தெரியாதா ? எனக் கூறி விட்டு நபி (ஸல்) அவர்கள் காபிர்களுடன் போரிட அனுப்பிய படையில் இடம் பெற்ற சம்பவத்தைச் சொல்லிக் ;காட்டினார்கள் .
ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் காபிர்களுடன் போரிடுவதற்காக ஒரு படையை அனுப்பி வைத்தார்கள். அன்று இரவு இருள் உலகை சூழ்ந்து கொண்டது. விளித்திருந்த நபித் தோழர்களையும் தூக்கம் அணைத்துக் கொண்டது. நபித் தோழர்களில் சைத் இப்னு ஹாரிதா , அப்துல்லாஹ் இப்னு ரவாஹா , கதாதா இப்னு நுஃமான் , கைஸ் இப்னு ஆசிம் முனக்கரி போன்றோர்கள் ஒவ்வொரு பகுதியிலும் விளித்திருந்து தொழுது குர்ஆன் ஓதுவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். காபிர்கள் இருளைப் பயன் படுத்தி அந்த இரவில் முஸ்லிம்களின் பக்கம் இரத்த ஆறு ஓடச் செய்தனர். அவர்களின் தரத்திலிருந்து அம்புகள் மழை போன்று பொழிந்தன. காபிர்கள் எங்கிருந்து தாக்குகின்றனர் என தெரியாது முஸ்லிம்கள் தத்தளித்து அங்குமிங்குமாக ஓடினர். இச்சந்தர்ப்பத்தில் தான் விளித்து நல்லமல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சில சஹாபாக்களின் வாய்களில் இருந்து ஒளி வெளியாகி அவர்கள் தங்கியிருந்த இடத்தை ஒளிமயமாக்கியது. எஞ்சியிருந்த தோழர்களுக்கும் வீரம் எழுந்தது. பின் அவர்களுடன் போரிட்டு அவர்களை தோற்கடிக்கச் செய்து சிலரையும் கைதிகளாகப் பிடித்து அப் போரில் வெற்றி கண்டனர். மறு நாள் நபி (ஸல்) அவர்களிடத்தில் நடந்தவற்றைச் சொன்னபோது அவர்கள் இது உமது சகோதரர்கள் ஷஃபான் மாதத்தில் செய்த அமல்களின் காரணத்தால் அவர்களது வாயிலிருந்து ஒளி வெளியாகியது என்று கூறி நபி (ஸல்) அவர்கள் ஷஃபான் மாதம் ஆரம்பித்த முதல் நாளில் ஷைத்தான் தனது படையினரை பூமியின் சகல பாகங்களிலும் பரப்பி அவர்களை நோக்கி கூறுகிறான் இந்த மாதத்தில் முடிந்தளவு இறையடியார்க
ளை நம் பக்கம் திருப்புவதற்கு தங்களாலான முயற்சிகளைச் செய்யுங்கள் ஏனெனில் இம்மாதத்தில் இறைவனோ மலக்குமார்களை பூமியின் சகல பாகங்களிலும் பரப்பி அவர்களை நோக்கி எனது அடியார்களைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் அவர்கள் வழிகெட்டு விடாதவன்னம் நேர்வழியை அவர்களுக்கு காண்பித்துக் கொடுங்கள் அப்போது பாவியைத் தவிர மற்றவர்கள் அனைவரும் சீதேவிகளாகி விடுவார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான் என இப்லீஸ் தனது படையினருக்குக் கூறுகிறான். மேலும் நபி (ஸல்) சொன்னார்கள் இறைவன் ஷஃபான் மாதத்தின் முதல் நாள் சுவர்க்க கதவுகளை திறக்கும்படி கட்டளையிடுகிறான். இன்னும் தூபா எனும் சுவன மரத்தையும் அதன் கிளைகளையும் உலகிற்கு சமீபமாக வைத்துவிட்டு அடியார்களை நோக்கி இவ்வாறு அழைக்கின்றான். இறையடியார்களே இது சுவன மரங்களில் ஒன்றாகும் எனவே உங்களை அது சுவனத்திற்கு கொண்டு சேர்க்கும் பொருட்டு அதன் கிளைகளில் தொங்கிக் கொள்ளுங்கள். மேலும் இது ஸகூம் எனும் மரமாகும் எனவே அது உங்களை நரகத்திற்கு கொண்டு போவதிலிருந்து அஞ்சிக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றான் , எனக் கூறிய நாயகம் (ஸல்) அவர்கள் என்னை நபியாக தேர்ந்தெடுத்து அனுப்பியவனின் மீது சத்தியமாக எவர் ஒருவர் இந்த மாதத்தில் நன்மையான நல்ல செயலைக் கற்றுக் கொள்கின்றாரோ அவர் தூபா எனும் சுவன மரத்தின் கிளைகளில் பிடித்துக் கொண்டு சுவனத்திற்குச் செல்வார். எவர் ஒருவர் இதில் கெட்ட பாவமான ஒரு செயலைக் கற்றுக் கொள்கின்றாரோ அவர் ஸகூம் எனும் நரக மரத்தில் தொங்கிக் கொண்டிருக்க அவரை நரகத்திற்கு இழுத்தெடுக்கப்படும். மேலும் சொன்னார்கள் எவர் ஒருவர் அல்லாஹுக்காக சுன்னத்தான தொழுகையைத் தொழுகின்றாரோ அவர் தூபா எனும் மரக்கிளையில் ஒட்டிக் கொள்வார். எவர் நோன்பு பிடிக்கின்றாரோ அவரையும் அல்லாஹ் அதில் ஒட்டச் செய்கிறான். எவர் ஒருவர் கணவன் மனைவிக்கு இடையிலோ அல்லது பெற்றோர் பிள்ளைக்கு இடையிலோ அல்லது தனது குடும்பத்திற்கு இடையிலோ இணக்கத்தை ஏற்படுத்துகின்றாரோ அவரும் அம்மரத்தின் கிளையில் அமர்ந்து கொள்வார். எவர் ஒருவர் மற்றவருடைய கவலை , சோகத்தை இல்லாமல் செய்தாலோ அல்லது குறைத்தாலோ அவரும் அதன் கிளைகளில் அமர்ந்து கொள்வார். எவர் ஒருவர் தனது கணக்கைப் பார்த்து அதில் கடன் கொடுத்தவர் முந்திய கடனில் இருந்து நிராசையையற்றுள்ளார் என அறிந்து உடன் அதைக் கொடுக்கின்றாரோ அவரும் அதில் அமர்ந்து கொள்வார். எவர் இம்மாதத்தில் குர்ஆன் ஓதுகின்றாரோ அவரும் அதில் அமர்ந்து கொள்வார். எவர் தனக்கு இறைவன் செய்துள்ள அருட்கொடைகளை நினைத்து அவனுக்கு நன்றி செலுத்துகின்றாரோ அவரும் அதில் சேர்ந்து கொள்வார். எவர் நோயாளிகளைச் சந்திக்கச் செல்கின்றாரோ அவரும் அதில் சேர்ந்து கொள்வார்.எவர் தனது பெற்றோர்களுக்கு நல்லது செய்கின்றாரோ அவரும் அதில் உட்கார்ந்து கொள்வார். எவர் இந்த மாதத்திற்கு முன்பு கோபித்துக் கொண்டிருந்த ஒருவருடன் போய் கதைத்து அவரைச் சந்தோசப்படுத்துகின்றாரோ அவரும் அக்கிளையில் அமர்ந்து கொள்வார். எவர் ஒரு மையித்தை அடக்கம் செய்கின்றாரோ அவரும் அதில் சேர்ந்து கொள்வார். எவர் மற்றவருக்கு ஏற்பட்ட முஸீபத்துக்காக அவருக்கு அனுதாபம் தெரிவிக்கின்றாரோ அவரும் அதில் சேர்ந்து கொள்வார். எவர் ஒருவர் இந்த மாதத்தில் நல்லவைகளில் ஒன்றைச் செய்கின்றாரோ அவரும் அந்த மரக்கிளையில் ஒட்டிக் கொள்வார். என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் என்னைத் தேர்ந்தெடுத்து உம்மத்திற்கு நபியாக அனுப்பியவனின் மீது சத்தியமாக எவர் ஒருவர் தனக்கு வாஜிபான தொழுகையைத் தொழாது அதை வீணாக்குகின்றாரோ நிச்சயமாக அவர் ஸகூம் எனும் சுட்டெரிக்கும் நரக மரத்தின் கிளையில் இருப்பார். எவரிடம் ஒரு இல்லாத ஏழை உதவி கேட்டு அவர் அவ்ஏழையின் மோசமான நிலையை அறிந்திருந்தும் , அவரிடம் அவ்ஏழைக்கு கொடுக்க வசதிகள் இருந்தும் கொடுக்காது விட்டு அவ்ஏழை சென்று அந்நிலையிலேயே மரணித்தால் அந்த செல்வந்தனும் அதில் சேர்ந்து நரகிற்குச் ; செல்வான். ஒருவர் செய்த கெட்ட செயலுக்காக மன்னிப்புக் கேட்டு அதை ஏற்றுக் கொள்ளாது விட்டு , அவர் செய்த செயலுக்காகவும் தண்டனையும் வழங்காது விட்டு அவரது கெட்ட செயல் அதிகரித்தால் அவரும் அந்த மரக்கிளையில் தொங்கிக் கொள்வார். எவர் ஒருவர் கணவன் மனைவிக்கு இடையில் அல்லது பெற்றோர் பிள்ளைக்கிடையில் அல்லது இரண்டு சகோதரர்களுக்கிடையில் அல்லது தனக்கும் தம் உறவினருக்குமிடையில் அல்லது இரண்டு அயல் வீட்டார்களுக்கிடையில் அல்லது இரண்டு நண்பர்களுக்கிடையில் அல்லது இரண்டு சகோதரிகளுக்கிடையில் பிளவை , பிரிவை ஏற்படுத்துகின்றாரோ நிச்சயமாக அவரும் அம்மரக்கிளையில் ஒட்டிக் கொள்வார். ஒருவருக்கு கஷ்டமான நிலை ஏற்பட்டு , அவருக்கு நாள்தோறும் கஸ்டம் அதிகரிக்கின்றது என தெரிந்திருந்தும் அவருக்கு உதவி செய்யாத செல்வந்தரும் அந்த மரத்தின் கிளையில் இருப்பார்.. எவர் ஒருவர் மோசமான கருத்துக்கள் கொண்ட பாடல்களைப்பாடி அதன் மூலம் பாவத்தின் பக்கம் தூண்டப்பட்டால் அதைப்பாடியவரும் அதில் இருப்பார். எவர் ஒருவர் தான் செய்த கெட்ட செயலைக் கணக்கிட்டு இறையடியார்களுக்குச் செய்த வேதனைகளை நினைத்து பெருமைப்படுகிறாரோ அவரும் அதில் இருப்பார். எவர் ஒருவர் தனது அயல் வீட்டார் நேய்வாய்ப்பட்டிருந்தும் அதை இலேசாக நினைத்து நோய் விசாரிக்க போகாது இருந்தால் அவரும் அதில் இருப்பார். ஒருவருடைய அயல் வீட்டார் மரணித்து அவரை அடக்கம் செய்யாது விட்டு விட்டு , அதை அடக்கம் செய்வதற்கு முயற்சி செய்யாது விட்டால் அவரும் அதில் இருப்பார். எவர் ஒருவர் தன்னிடம் அவருக்கு ஏற்பட்ட முஸீபத்துகளைக் கூறும் போது அதைக் கவனிக்காது அவர் தன்னைவிடக் கீழ்த்தரமானவர்
தானே என அவரை இழிவுபடுத்தினால் அவரும் அதில் இருப்பார். எவர் ஒருவர் பெற்றோர்களை அல்லது அவர்களில் ஒருவரை நோவினை செய்கின்றாரோ அவரும் அதில் இருப்பார். எவர் ஒருவர் இதில் ஒரு கெட்ட செயலை செய்கின்றாரோ அவரும் அதில் இருப்பார். என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் தன்பார்வையை வானத்தின் பக்கம் உயர்த்தி கொஞ்சம் சிரித்தார்கள் பின் அவர்களது பார்வை அங்கிருந்து தாழ்ந்ததும் அவர்களில் மாற்றம் தென்பட்டது. அப்போது தன்தோழர்களைப்பார்த்து சொன்னார்கள் இறைவன் மீது சத்தியமாக தூபா எனும் சுவர்க்க மரத்தில் இருப்பவர்களை அது சுவர்கத்தின் பக்கமாக உயர்த்துகின்றது. அதில் சிலர் ஒருகிளையிலும் சிலர் இரண்டு கிளைகளிலும் மூன்று கிளைகளிலும் பிடித்துக் கொண்டு சுவர்கத்திற்கு செல்கின்றனர். உண்மையாக நான் ஸைத் இப்னு ஹாரிதாவையே பல கிளைகளில் கண்டேன். அது அவரை இல்லிய்யீன் எனும் உயர்ந்த சுவர்க்கத்திற்கு கொண்டு போகின்றது இதனாலே தான் சிரித்தேன் சந்தோசமடைந்தேன். பின் பூமியைப்பார்த்தேன்
ஸகூம் எனும் சுட்டெரிக்கும் நரக மரத்தின் கிளைகளில் பல முனாபிகுகள் இருக்கின்றனர். அது அவர்களை நரகின் அடித்தளத்திற்கு கொண்டு போகின்றது இதனாலே தான் என்னில் மாற்றம் ஏற்பட்டது என சொன்னார்கள் .
இது மிகவும் சிறப்புக்குறிய நாள்களில் ஒன்றாகும். செய்க் அவர்கள் மிஸ்பாக் எனும் நாளில் குறிப்பிட்டுள்ளார்கள். இத்தினத்தில்தான் இமாம் ஹுஸைன்(அலை) அவர்கள் பிறந்தார்கள். அத்துடன் இமாம் ஹஸன் அஸ்கரி (அலை) அவர்கள் தனது பிரதிநிதியாக மக்களுக்கு காஸிம் இப்னு அலா ஹமதானி என்பவரை நியமித்து கொடுத்த கை எழுத்தான கடிதம் இத்தினத்தில் தான் கிடைத்தது. இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் ஷஃபான் மூன்றாவது நாளில் வியாழக்கிழமை பிறந்தார்கள் எனவே இத்தினத்தில் நோன்பு நோற்று இந்த துஅவை ஓதுங்கள் .
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِحَقِّ الْمَوْلُودِ فِي هَذَا الْيَوْمِ الْمَوْعُودِ بِشَهَادَتِهِ قَبْلَ اسْتِهْلالِهِ وَ وِلادَتِهِ بَكَتْهُ السَّمَاءُ وَ مَنْ فِيهَا وَ الْأَرْضُ وَ مَنْ عَلَيْهَا وَ لَمَّا يَطَأْ يُطَأْ لابَتَيْهَا قَتِيلِ الْعَبْرَةِ وَ سَيِّدِ الْأُسْرَةِ الْمَمْدُودِ بِالنُّصْرَةِ يَوْمَ الْكَرَّةِ الْمُعَوَّضِ مِنْ قَتْلِهِ أَنَّ الْأَئِمَّةَ مِنْ نَسْلِهِ وَ الشِّفَاءَ فِي تُرْبَتِهِ وَ الْفَوْزَ مَعَهُ فِي أَوْبَتِهِ وَ الْأَوْصِيَاءَ مِنْ عِتْرَتِهِ بَعْدَ قَائِمِهِمْ وَ غَيْبَتِهِ حَتَّى يُدْرِكُوا الْأَوْتَارَ وَ يَثْأَرُوا الثَّارَ وَ يُرْضُوا الْجَبَّارَ وَ يَكُونُوا خَيْرَ أَنْصَار صَلَّى اللَّهُ عَلَيْهِمْ مَعَ اخْتِلافِ اللَّيْلِ وَ النَّهَارِ اللَّهُمَّ فَبِحَقِّهِمْ إِلَيْكَ أَتَوَسَّلُ وَ أَسْأَلُ سُؤَالَ مُقْتَرِف مُعْتَرِف مُسِيء إِلَى نَفْسِهِ مِمَّا فَرَّطَ فِي يَوْمِهِ وَ أَمْسِهِ يَسْأَلُكَ الْعِصْمَةَ إِلَى مَحَلِّ رَمْسِهِ اللَّهُمَّ فَصَلِّ عَلَى مُحَمَّد وَ عِتْرَتِهِ وَ احْشُرْنَا فِي زُمْرَتِهِ وَ بَوِّئْنَا مَعَهُ دَارَ الْكَرَامَةِ وَ مَحَلَّ الْإِقَامَةِ اللَّهُمَّ وَ كَمَا أَكْرَمْتَنَا بِمَعْرِفَتِهِ فَأَكْرِمْنَا بِزُلْفَتِهِ وَ ارْزُقْنَا مُرَافَقَتَهُ وَ سَابِقَتَهُ وَ اجْعَلْنَا مِمَّنْ يُسَلِّمُ لِأَمْرِهِ وَ يُكْثِرُ الصَّلاةَ عَلَيْهِ عِنْدَ ذِكْرِهِ وَ عَلَى جَمِيعِ أَوْصِيَائِهِ وَ أَهْلِ أَصْفِيَائِهِ الْمَمْدُودِينَ مِنْكَ بِالْعَدَدِ الاثْنَيْ عَشَرَ النُّجُومِ الزُّهَرِ وَ الْحُجَجِ عَلَى جَمِيعِ الْبَشَرِ اللَّهُمَّ وَ هَبْ لَنَا فِي هَذَا الْيَوْمِ خَيْرَ مَوْهِبَة وَ أَنْجِحْ لَنَا فِيهِ كُلَّ طَلِبَة كَمَا وَهَبْتَ الْحُسَيْنَ لِمُحَمَّد جَدِّهِ وَ عَاذَ فُطْرُسُ بِمَهْدِهِ فَنَحْنُ عَائِذُونَ بِقَبْرِهِ مِنْ بَعْدِهِ نَشْهَدُ تُرْبَتَهُ وَ نَنْتَظِرُ أَوْبَتَهُ آمِينَ رَبَّ الْعَالَمِينَ
பின் இந்த துஆவை ஓதுங்கள் இது ஹஸரத் இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் எதிரிகள் அவர்களை சூழந்து கொண்ட போது கடைசியாக ஆஷுராவில் ஓதிய துஆ
اللَّهُمَّ أَنْتَ مُتَعَالِي الْمَكَانِ عَظِيمُ الْجَبَرُوتِ شَدِيدُ الْمِحَالِ غَنِيٌّ عَنِ الْخَلائِقِ عَرِيضُ الْكِبْرِيَاءِ قَادِرٌ عَلَى مَا تَشَاءُ قَرِيبُ الرَّحْمَةِ صَادِقُ الْوَعْدِ سَابِغُ النِّعْمَةِ حَسَنُ الْبَلاءِ قَرِيبٌ إِذَا دُعِيتَ مُحِيطٌ بِمَا خَلَقْتَ قَابِلُ التَّوْبَةِ لِمَنْ تَابَ إِلَيْكَ قَادِرٌ عَلَى مَا أَرَدْتَ وَ مُدْرِكٌ مَا طَلَبْتَ وَ شَكُورٌ إِذَا شُكِرْتَ وَ ذَكُورٌ إِذَا ذُكِرْتَ أَدْعُوكَ مُحْتَاجا وَ أَرْغَبُ إِلَيْكَ فَقِيرا وَ أَفْزَعُ إِلَيْكَ خَائِفا وَ أَبْكِي إِلَيْكَ مَكْرُوبا وَ أَسْتَعِينُ بِكَ ضَعِيفا وَ أَتَوَكَّلُ عَلَيْكَ كَافِيا احْكُمْ بَيْنَنَا وَ بَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ فَإِنَّهُمْ غَرُّونَا وَ خَدَعُونَا وَ خَذَلُونَا وَ غَدَرُوا بِنَا وَ قَتَلُونَا وَ نَحْنُ عِتْرَةُ نَبِيِّكَ وَ وَلَدُ وُلْدُ حَبِيبِكَ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ الَّذِي اصْطَفَيْتَهُ بِالرِّسَالَةِ وَ ائْتَمَنْتَهُ عَلَى وَحْيِكَ فَاجْعَلْ لَنَا مِنْ أَمْرِنَا فَرَجا وَ مَخْرَجا بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ
இப்னு அப்பாஸ் என்பவர் கூறுகின்றார் ஹுஸைன் இப்னு அலி இப்னு சுப்யான் பசூபரி சொல்ல நான் கேட்டேன். அவர் சொன்னார். இமாம் ஜஃபர் ஜாதிக் (அலை) அவர்கள் இந்த துஆவை இத்தினத்தில் ஓதக்கூடியவர்களாக இருந்தார்கள் அவர்கள் சொன்னார்கள் இது ஷஃபான் மாதத்தின் மூன்றாம் நாளில் ஓதுகின்ற துஆக்களில் ஒன்றாகும். அத்தினத்திலே தான் இமாம் ஹுஸைன்(அலை) அவர்கள் பிறந்தார்கள் .
இது அய்யாமுல் பீழ் என்று சொல்லப்படும் நாட்களின் முதலாவது இரவாகும்
இது மிகவும் அருள் பொழிந்த இரவாகும். இமாம் ஸாதிக் (அலை) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது , இமாம் முஹம்மது பாக்கிர் (அலை) அவர்களிடம் ஷஃபான் மாதத்தின் பதினைந்தாவது இரவினுடைய சிறப்புக்களைப் பற்றிக் கேட்கப்பட்டது , அப்போது அவர்கள் சொன்னார்கள் இது லைலதுல் கத்ர் தவிர்ந்த ஏனைய இரவுகளில் மிகவும் சிறப்புக்குறிய இரவாகும். இந்த இரவில் இறைவன் தனது அருட் கொடைகளை தன் அடியார்களுக்கு வழங்குவதோடு அவர்களது பாவங்களையும் மன்னிக்கின்றான். எனவே இந்த இரவில் இறையருட்களையும் பாவ மன்னிப்பையும் பெறுவதற்கு முயற்சி செய்து கொள்ளுங்கள் .
எவர் ஒருவர் இந்த இரவில் இறைவனிடம் துஆக் கேட்கின்றாரோ அவர் வெரும் கையுடன் திரும்பமாட்டார் என இறைவன் சத்தியம் செய்து கூறியுள்ளான். இந்த இரவு லைலதுல் கத்ர் இரவிற்கு அடுத்தாற்போல எமக்கு இறைவனால் வழங்கப்பட்டுள்ளது .
இவ்விரவில் இருக்கின்ற பரக்கத்துக்களில் ஒன்றுதான் இமாம் மஹ்தி (அஜ்ஜலல்லாஹுளுஹுரஹு) அவர்கள் பிறந்ததாகும் எனவே இந்த இரவிற்கென்றே சில அமல்கள் இருக்கின்றது அவைகள் .
1- குளிப்பது , அதன்மூலம் பாவங்கள் குறையும் ;.
2- இமாம் செய்னுல் ஆபிதீன்(அலை) அவர்கள் செய்ததுபோல் இந்த இரவில் விளித்திருந்து தொழுகை , துஆ , பாவமன்னிப்பு போன்ற அமல்களைச் செய்தல் சில அறிவிப்புக்களிலே வந்துள்ளதாவது எவர் ஒருவர் இந்த இரவில் விளித்திருந்து அமல் செய்து இந்த இரவை உயிப்பிக்கின்றாரோ அவரது உள்ளம் , ஏனைய உள்ளங்கள் மரணிக்கின்ற நாள் இறக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது .
3- இந்த இரவில் இமாம் ஹுஸைன் (அலை) அவர்களது சியாரத்தை ஓதுதல் இது இந்த இரவில் செய்யும் சிறந்த அமலாகும். அத்துடன் பாவங்களுக்கு மன்னிப்பு கிடைப்பதற்கும் ஏதுவாக அமையும். எவர் ஒருவர் அவர்களை முஸாபகா செய்ய விரும்புகின்றாரோ , இன்னும் ஒரு இலட்சத்து 24 ஆயிரம் நபிமார்களை சியாரத் செய்ய வேண்டு மென்று விரும்புகின்றாரோ அவர் , இந்த இரவில் குறைந்தது கீழ் வரக்கூடிய அந்த ஹஸரத்துடைய சியாரத்தை ஓத வேண்டும். அதாவது முதலாவது வெளியில் வந்து வலது , இடது பக்கம் பார்த்துவிட்டு பின் தலையை வானின் பக்கம் உயர்த்தி இந்த சியாரத் ஓத வேண்டும். அஸ்ஸலாமு அலைக்க யா அபா அப்தில்லாஹ் அஸ்ஸலாமு அலைக்க வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
السَّلامُ عَلَيْكَ يَا أَبَا عَبْدِ اللَّهِ السَّلامُ عَلَيْكَ وَ رَحْمَةُ اللَّهِ وَ بَرَكَاتُهُ
எவர் ஒருவர் எந்நேரத்திலும் எங்கிருந்தாலும் இதை ஓதினால் அவருக்கு அதிகமான தவாபுகள் எழுதப்படுகின்றன .
4- செய்கும் செய்யிதும் அறிவித்துள்ள இந்த துஆவை ஓதுதல் , இது இமாம் மஹ்தி (அஜ்ஜலல்லாஹு ளுஹுரஹு) அவர்களது சியாரத்துடைய தரத்தைக் கொண்டது .
اللَّهُمَّ بِحَقِّ لَيْلَتِنَا هَذِهِ وَ مَوْلُودِهَا وَ حُجَّتِكَ وَ مَوْعُودِهَا الَّتِي قَرَنْتَ إِلَى فَضْلِهَا فَضْلا فَتَمَّتْ كَلِمَتُكَ صِدْقا وَ عَدْلا لا مُبَدِّلَ لِكَلِمَاتِكَ وَ لا مُعَقِّبَ لآِيَاتِكَ نُورُكَ الْمُتَأَلِّقُ وَ ضِيَاؤُكَ الْمُشْرِقُ وَ الْعَلَمُ النُّورُ فِي طَخْيَاءِ الدَّيْجُورِ الْغَائِبُ الْمَسْتُورُ جَلَّ مَوْلِدُهُ وَ كَرُمَ مَحْتِدُهُ وَ الْمَلائِكَةُ شُهَّدُهُ وَ اللَّهُ نَاصِرُهُ وَ مُؤَيِّدُهُ إِذَا آنَ مِيعَادُهُ وَ الْمَلائِكَةُ فَالْمَلائِكَةُ أَمْدَادُهُ سَيْفُ اللَّهِ الَّذِي لا يَنْبُو وَ نُورُهُ الَّذِي لا يَخْبُو وَ ذُو الْحِلْمِ الَّذِي لا يَصْبُو مَدَارُ الدَّهْرِ وَ نَوَامِيسُ الْعَصْرِ وَ وُلاةُ الْأَمْرِ وَ الْمُنَزَّلُ عَلَيْهِمْ مَا يَتَنَزَّلُ يَنْزِلُ فِي لَيْلَةِ الْقَدْرِ وَ أَصْحَابُ الْحَشْرِ وَ النَّشْرِ تَرَاجِمَةُ وَحْيِهِ وَ وُلاةُ أَمْرِهِ وَ نَهْيِهِ اللَّهُمَّ فَصَلِّ عَلَى خَاتِمِهِمْ وَ قَائِمِهِمْ الْمَسْتُورِ عَنْ عَوَالِمِهِمْ اللَّهُمَّ وَ أَدْرِكْ بِنَا أَيَّامَهُ وَ ظُهُورَهُ وَ قِيَامَهُ وَ اجْعَلْنَا مِنْ أَنْصَارِهِ وَ اقْرِنْ ثَارَنَا بِثَارِهِ وَ اكْتُبْنَا فِي أَعْوَانِهِ وَ خُلَصَائِهِ وَ أَحْيِنَا فِي دَوْلَتِهِ نَاعِمِينَ وَ بِصُحْبَتِهِ غَانِمِينَ وَ بِحَقِّهِ قَائِمِينَ وَ مِنَ السُّوءِ سَالِمِينَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ وَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَ صَلَوَاتُهُ عَلَى وَ صَلَّى اللَّهُ عَلَى سَيِّدِنَا مُحَمَّد خَاتَمِ النَّبِيِّينَ وَ الْمُرْسَلِينَ وَ عَلَى أَهْلِ بَيْتِهِ الصَّادِقِينَ وَ عِتْرَتِهِ النَّاطِقِينَ وَ الْعَنْ جَمِيعَ الظَّالِمِينَ وَ احْكُمْ بَيْنَنَا وَ بَيْنَهُمْ يَا أَحْكَمَ الْحَاكِمِين
5- செய்க் அவர்கள் இஸ்மாயீல் இப்னு பழ்ல் ஹாஸிமி அவர்களிடமிருந்து அறிவித்துள்ளதாவது ,இமாம் ஜஃபர் ஸாதிக் (அலை) அவர்கள் இந்த துஆவை ஷஃபானின் 15வது நாள் ஓத வேண்டுமென எனக்கு கற்றுக் கொடுத்தார்கள் என இஸ்மாயீல் சொன்னார் ,
اللَّهُمَّ أَنْتَ الْحَيُّ الْقَيُّومُ الْعَلِيُّ الْعَظِيمُ الْخَالِقُ الرَّازِقُ الْمُحْيِي الْمُمِيتُ الْبَدِيءُ الْبَدِيعُ لَكَ الْجَلالُ وَ لَكَ الْفَضْلُ وَ لَكَ الْحَمْدُ وَ لَكَ الْمَنُّ وَ لَكَ الْجُودُ وَ لَكَ الْكَرَمُ وَ لَكَ الْأَمْرُ وَ لَكَ الْمَجْدُ وَ لَكَ الشُّكْرُ وَحْدَكَ لا شَرِيكَ لَكَ يَا وَاحِدُ يَا أَحَدُ يَا صَمَدُ يَا مَنْ لَمْ يَلِدْ وَ لَمْ يُولَدْ وَ لَمْ يَكُنْ لَهُ كُفُوا أَحَدٌ صَلِّ عَلَى مُحَمَّد وَ آلِ مُحَمَّد وَ اغْفِرْ لِي وَ ارْحَمْنِي وَ اكْفِنِي مَا أَهَمَّنِي وَ اقْضِ دَيْنِي وَ وَسِّعْ عَلَيَّ فِي رِزْقِي فَإِنَّكَ فِي هَذِهِ اللَّيْلَةِ كُلَّ أَمْر حَكِيم تَفْرُقُ وَ مَنْ تَشَاءُ مِنْ خَلْقِكَ تَرْزُقُ فَارْزُقْنِي وَ أَنْتَ خَيْرُ الرَّازِقِينَ فَإِنَّكَ قُلْتَ وَ أَنْتَ خَيْرُ الْقَائِلِينَ النَّاطِقِينَ وَ اسْئَلُوا اللَّهَ مِنْ فَضْلِهِ فَمِنْ فَضْلِكَ أَسْأَلُ وَ إِيَّاكَ قَصَدْتُ وَ ابْنَ نَبِيِّكَ اعْتَمَدْتُ وَ لَكَ رَجَوْتُ فَارْحَمْنِي يَا أَرْحَمَ الرَّاحِمِينَ
6- நபி (ஸல்) அவர்கள் இந்த இரவில் ஓதிய இந்த துஆவை ஓதுங்கள்
اللَّهُمَّ اقْسِمْ لَنَا مِنْ خَشْيَتِكَ مَا يَحُولُ بَيْنَنَا وَ بَيْنَ مَعْصِيَتِكَ وَ مِنْ طَاعَتِكَ مَا تُبَلِّغُنَا بِهِ رِضْوَانَكَ وَ مِنَ الْيَقِينِ مَا يَهُونُ عَلَيْنَا بِهِ مُصِيبَاتُ الدُّنْيَا اللَّهُمَّ أَمْتِعْنَا بِأَسْمَاعِنَا وَ أَبْصَارِنَا وَ قُوَّتِنَا مَا أَحْيَيْتَنَا وَ اجْعَلْهُ الْوَارِثَ مِنَّا وَ اجْعَلْ ثَارَنَا عَلَى مَنْ ظَلَمَنَا وَ انْصُرْنَا عَلَى مَنْ عَادَانَا وَ لا تَجْعَلْ مُصِيبَتَنَا فِي دِينِنَا وَ لا تَجْعَلِ الدُّنْيَا أَكْبَرَ هَمِّنَا وَ لا مَبْلَغَ عِلْمِنَا وَ لا تُسَلِّطْ عَلَيْنَا مَنْ لا يَرْحَمُنَا بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ
இந்த துஆ சிறந்த துஆக்களில் ஒன்றாகும். இதை ஏனைய நேரங்களில் ஓதுவதும் எமக்கு கிடைக்கும் பாக்கியமாகும். அவாலியு லயாளி எனும் நூலில் , இதை நாயகம் (ஸல்) அவர்கள் எப்போதும் ஓதிவந்தார்கள் என கூறப்பட்டுள்ளது .
7- தினமும் சூரியன் உச்சியிலிருந்து நீங்கும் போது ஓதக் கூடிய துஆவை ஓதுதல்
8- இப்புனித இரவிலேயே கூறப்பட்ட துஆவுக்குமைலை ஓததல் .
9- இறைவன் முந்திய பாவங்களை மன்னித்து , தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு சுப்ஹானல்லாஹி வல் ஹம்துலில்லாஹி வல்லாஹு அக்பர் வலாயிலாஹ இல்லல்லாஹு سُبْحَانَ اللَّهِ و الْحَمْدُ لِلَّهِ و اللَّهُ أَكْبَرُ و لا إِلَهَ إِلا اللَّه என்பதில் ஒவ்வொன்றையும் 100 தடவை சொல்லுதல் .
10- செய்க் அவர்கள் மிஸ்பாக் எனும் தனது நூலில் அபூயஹ்யா என்பவரிடமிருந்து ஷஃபானின் 15 ஆவது இரவின் சிறப்பு பற்றி அறிவித்துள்ளதாவது , அவர் சொன்னார் , ஒரு நாள் செய்யிதினா இமாம் சாதிக் (அலை) அவர்களிடம் ஷஃபானின் 15வது இரவில் கேட்கப்படும் துஆக்களில் மிகவும் சிறந்த துஆ எதுவெனக் கேட்டேன் அப்போது அவர்கள் சொன்னார்கள். இஷாத் தொழுகையை முடித்ததன் பிறகு இரண்டு ரக்அத் தொழுவது அதில் முதலாவது ரகஅத்தில் பாத்திஹா சூராவிற்குப் பிறகு ஜஹ்த் எனும் குல்யா அய்யுஹல் காபிரூன் எனும் சூராவை ஓதுதல். இரண்டாவது ரக்அத்தில் பாத்திஹா சூராவிற்குப் பிறகு தௌஹீத் எனும் குல்குவல்லாஹு அஹது எனும் சூராவை ஓதி தொழுது ஸலாம் கொடுத்ததன் பிறகு சுப்ஹானல்லாஹ் سُبْحَانَ اللَّهِ 33 தடவையும் அல்ஹம்துலில்லாஹ் الْحَمْدُ لِلَّهِ 33 தடவையும் அல்லாஹு அக்பர் اللَّهُ أَكْبَرُ 34 தடவையும் சொல்லுதல் அதன் பிறகு இந்த துஆவை ஓதுதல்
يَا مَنْ إِلَيْهِ مَلْجَأُ الْعِبَادِ يَلْجَأُ الْعِبَادُ فِي الْمُهِمَّاتِ وَ إِلَيْهِ يَفْزَعُ الْخَلْقُ فِي الْمُلِمَّاتِ يَا عَالِمَ الْجَهْرِ وَ الْخَفِيَّاتِ وَ يَا مَنْ لا تَخْفَى عَلَيْهِ خَوَاطِرُ الْأَوْهَامِ وَ تَصَرُّفُ الْخَطَرَاتِ يَا رَبَّ الْخَلائِقِ وَ الْبَرِيَّاتِ يَا مَنْ بِيَدِهِ مَلَكُوتُ الْأَرَضِينَ وَ السَّمَاوَاتِ أَنْتَ اللَّهُ لا إِلَهَ إِلا أَنْتَ أَمُتُّ إِلَيْكَ بِلا إِلَهَ إِلا أَنْتَ فَيَا لا إِلَهَ إِلا أَنْتَ اجْعَلْنِي فِي هَذِهِ اللَّيْلَةِ مِمَّنْ نَظَرْتَ إِلَيْهِ فَرَحِمْتَهُ وَ سَمِعْتَ دُعَاءَهُ فَأَجَبْتَهُ وَ عَلِمْتَ اسْتِقَالَتَهُ فَأَقَلْتَهُ وَ تَجَاوَزْتَ عَنْ سَالِفِ خَطِيئَتِهِ وَ عَظِيمِ جَرِيرَتِهِ فَقَدِ اسْتَجَرْتُ بِكَ مِنْ ذُنُوبِي وَ لَجَأْتُ إِلَيْكَ فِي سَتْرِ عُيُوبِي اللَّهُمَّ فَجُدْ عَلَيَّ بِكَرَمِكَ وَ احْطُطْ خَطَايَايَ بِحِلْمِكَ وَ عَفْوِكَ وَ تَغَمَّدْنِي فِي هَذِهِ اللَّيْلَةِ بِسَابِغِ كَرَامَتِكَ وَ اجْعَلْنِي فِيهَا مِنْ أَوْلِيَائِكَ الَّذِينَ اجْتَبَيْتَهُمْ لِطَاعَتِكَ وَ اخْتَرْتَهُمْ لِعِبَادَتِكَ وَ جَعَلْتَهُمْ خَالِصَتَكَ وَ صَفْوَتَكَ اللَّهُمَّ اجْعَلْنِي مِمَّنْ سَعَدَ جَدُّهُ وَ تَوَفَّرَ مِنَ الْخَيْرَاتِ حَظُّهُ وَ اجْعَلْنِي مِمَّنْ سَلِمَ فَنَعِمَ وَ فَازَ فَغَنِمَ وَ اكْفِنِي شَرَّ مَا أَسْلَفْتُ وَ اعْصِمْنِي مِنَ الازْدِيَادِ فِي مَعْصِيَتِكَ وَ حَبِّبْ إِلَيَّ طَاعَتَكَ وَ مَا يُقَرِّبُنِي مِنْكَ وَ يُزْلِفُنِي عِنْدَكَ سَيِّدِي إِلَيْكَ يَلْجَأُ الْهَارِبُ وَ مِنْكَ يَلْتَمِسُ الطَّالِبُ وَ عَلَى كَرَمِكَ يُعَوِّلُ الْمُسْتَقِيلُ التَّائِبُ أَدَّبْتَ عِبَادَكَ بِالتَّكَرُّمِ وَ أَنْتَ أَكْرَمُ الْأَكْرَمِينَ وَ أَمَرْتَ بِالْعَفْوِ عِبَادَكَ وَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ اللَّهُمَّ فَلا تَحْرِمْنِي مَا رَجَوْتُ مِنْ كَرَمِكَ وَ لا تُؤْيِسْنِي مِنْ سَابِغِ نِعَمِكَ وَ لا تُخَيِّبْنِي مِنْ جَزِيلِ قِسَمِكَ فِي هَذِهِ اللَّيْلَةِ لِأَهْلِ طَاعَتِكَ وَ اجْعَلْنِي فِي جُنَّة مِنْ شِرَارِ بَرِيَّتِكَ رَبِّ إِنْ لَمْ أَكُنْ مِنْ أَهْلِ ذَلِكَ فَأَنْتَ أَهْلُ الْكَرَمِ وَ الْعَفْوِ وَ الْمَغْفِرَةِ وَ جُدْ عَلَيَّ بِمَا أَنْتَ أَهْلُهُ لا بِمَا أَسْتَحِقُّهُ فَقَدْ حَسُنَ ظَنِّي بِكَ وَ تَحَقَّقَ رَجَائِي لَكَ وَ عَلِقَتْ نَفْسِي بِكَرَمِكَ فَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ وَ أَكْرَمُ الْأَكْرَمِينَ اللَّهُمَّ وَ اخْصُصْنِي مِنْ كَرَمِكَ بِجَزِيلِ قِسَمِكَ وَ أَعُوذُ بِعَفْوِكَ مِنْ عُقُوبَتِكَ وَ اغْفِرْ لِيَ الذَّنْبَ الَّذِي يَحْبِسُ عَلَيَّ عَنِّي الْخُلُقَ وَ يُضَيِّقُ عَلَيَّ الرِّزْقَ حَتَّى أَقُومَ بِصَالِحِ رِضَاكَ وَ أَنْعَمَ بِجَزِيلِ عَطَائِكَ وَ أَسْعَدَ بِسَابِغِ نَعْمَائِكَ فَقَدْ لُذْتُ بِحَرَمِكَ وَ تَعَرَّضْتُ لِكَرَمِكَ وَ اسْتَعَذْتُ بِعَفْوِكَ مِنْ عُقُوبَتِكَ وَ بِحِلْمِكَ مِنْ غَضَبِكَ فَجُدْ بِمَا سَأَلْتُكَ وَ أَنِلْ مَا الْتَمَسْتُ مِنْكَ أَسْأَلُكَ بِكَ لا بِشَيْء هُوَ أَعْظَمُ مِنْكَ
பின்பு சுஜுதுக்குப் போய் யாரப்பு என்று 20 தடவையும் யாஅல்லாஹ் என்று 7 தடவையும் லா n;ஹளல வலா குவ்வத இல்லா பில்லாஹ் என்று 7 தடவையும் மாஷா அல்லாஹ் என 10 விடுத்தமும் லாகுவ்வத இல்லா பில்லாஹ் என 10 தடவையும் கூறுவாய் , பின் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் அன்னாரின் குடும்பத்தார் மீதும் ஸலவாத்து சொல்லுவாய் பின் இறைவனிடம் உனது தேவைகளைக் கேட்டால் நிச்சயம் அவை கிடைக்கும் என்றார்கள் .
11- செய்க் தூஸி , கப்அமி (றஹ்) ; ஆகியோர் இந்த இரவில் இதை ஓதுமாறு கூறியுள்ளார்கள்
إِلَهِي تَعَرَّضَ لَكَ فِي هَذَا اللَّيْلِ الْمُتَعَرِّضُونَ وَ قَصَدَكَ الْقَاصِدُونَ وَ أَمَّلَ فَضْلَكَ وَ مَعْرُوفَكَ الطَّالِبُونَ وَ لَكَ فِي هَذَا اللَّيْلِ نَفَحَاتٌ وَ جَوَائِزُ وَ عَطَايَا وَ مَوَاهِبُ تَمُنُّ بِهَا عَلَى مَنْ تَشَاءُ مِنْ عِبَادِكَ وَ تَمْنَعُهَا مَنْ لَمْ تَسْبِقْ لَهُ الْعِنَايَةُ مِنْكَ وَ هَا أَنَا ذَا عُبَيْدُكَ الْفَقِيرُ إِلَيْكَ الْمُؤَمِّلُ فَضْلَكَ وَ مَعْرُوفَكَ فَإِنْ كُنْتَ يَا مَوْلايَ تَفَضَّلْتَ فِي هَذِهِ اللَّيْلَةِ عَلَى أَحَد مِنْ خَلْقِكَ وَ عُدْتَ عَلَيْهِ بِعَائِدَة مِنْ عَطْفِكَ فَصَلِّ عَلَى مُحَمَّد وَ آلِ مُحَمَّد الطَّيِّبِينَ الطَّاهِرِينَ الْخَيِّرِينَ الْفَاضِلِينَ وَ جُدْ عَلَيَّ بِطَوْلِكَ وَ مَعْرُوفِكَ يَا رَبَّ الْعَالَمِينَ وَ صَلَّى اللَّهُ عَلَى مُحَمَّد خَاتَمِ النَّبِيِّينَ وَ آلِهِ الطَّاهِرِينَ وَ سَلَّمَ تَسْلِيما إِنَّ اللَّهَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ إِنِّي أَدْعُوكَ كَمَا أَمَرْتَ فَاسْتَجِبْ لِي كَمَا وَعَدْتَ إِنَّكَ لا تُخْلِفُ الْمِيعَادَ
ஷஹர் நேரத்தில் ஷப்ஃ எனும் தொழுகைக்குப் பிறகு ஓதப்படும் துஆவாகும் .
12- தஹஜ்ஜுதுத் தொழுகைக்குப் பிறகும் ஷப்ஃ உடைய தொழுகைக்குப் பிறகும் செய்கும் , செய்யிதும் அறிவித்துள்ள துஆக்களை திக்ருகளை ஓதுதல் .
13- நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ள துஆக்களை சுஜுதுகளை செய்தல் அவைகளில் ஒன்று செய்க் அவர்கள் ஹம்மாத் இப்னு ஈஸா அவர் அபான் இப்னு தஃலப் என்பவரிடமிருந்து அறிவித்துள்ளார்கள். இமாம் ஜஃபர் ஸாதிக் (அலை) அவர்கள் சொன்னார்கள்: ஒரு முறை ஷஃபான் மாதத்தின் 15வது இரவு ஹஸரத் நாயகம் (ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா நாயகியின் வீட்டில் இருந்தார்கள். இரவின் அரைவாசி முடிந்ததும் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து அமல் செய்வதற்கு சென்று விட்டார்கள். ஆயிஷா நாயகி விளித்துப்பார்க்கையில் அருகில் தூங்கிய அண்ணல் நபி (ஸல்) அவர்களை அங்கு காணவில்லை. ஆயிஷா நாயகியோ , நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஏனைய மனைவிகளிடம் போயிருக்கலாமென நினைத்து பார்தாவை அணிந்து கொண்டு ஏனைய மனைவிமார்கள் தங்கிய அறைகளை ஒன்றன் பின் ஒன்றாக திறந்து பார்த்துக் கொண்டு போனார்கள் அப்போது திடீரென அன்னையாரின் பார்வை பூமியில் குமியல் போன்று கிடந்த ஒரு துணியின் மேல் விழுந்தது. அருகில் சென்று பார்க்கையில் அங்கு நாயகம் (ஸல்) அவர்கள் சுஜுது செய்து கொண்டிருக்கின்றார்கள். அதில் அவர்கள் இந்த துஆவை ஓதுவதைக் கேட்டார்கள் .
سَجَدَ لَكَ سَوَادِي وَ خَيَالِي وَ آمَنَ بِكَ فُؤَادِي هَذِهِ يَدَايَ وَ مَا جَنَيْتُهُ عَلَى نَفْسِي يَا عَظِيمُ عَظِيما تُرْجَى يُرْجَى لِكُلِّ عَظِيم اغْفِرْ لِيَ الْعَظِيمَ فَإِنَّهُ لا يَغْفِرُ الذَّنْبَ الْعَظِيمَ إِلا الرَّبُّ الْعَظِيمُ
பின் சுஜுதிலிருந்து எழுந்து இரண்டாவது தடவையும் சுஜுதுக்கு சென்றார்கள். அங்கு இதை ஓதுவதை அன்னை ஆயிஷா நாயகி அவர்கள் கேட்டார்கள்
أَعُوذُ بِنُورِ وَجْهِكَ الَّذِي أَضَاءَتْ لَهُ السَّمَاوَاتُ وَ الْأَرَضُونَ وَ انْكَشَفَتْ لَهُ الظُّلُمَاتُ وَ صَلَحَ عَلَيْهِ أَمْرُ الْأَوَّلِينَ وَ الآْخِرِينَ مِنْ فُجْأَةِ نَقِمَتِكَ وَ مِنْ تَحْوِيلِ عَافِيَتِكَ وَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ اللَّهُمَّ ارْزُقْنِي قَلْبا تَقِيّا نَقِيّا وَ مِنَ الشِّرْكِ بَرِيئا لا كَافِرا وَ لا شَقِيّا
பின் இரு கண்ணங்களையும் மண்ணில் வைத்து عَفَّرْتُ وَجْهِي فِي التُّرَابِ وَ حُقَّ لِي أَنْ أَسْجُدَ لَكَ
எனும் துஆவை ஓதினார்கள். முடிந்ததும் ஆயிஷா நாயகியைப் பார்த்து செல்லுமாறு வேண்டியதும் அன்னையவர்கள் உரைவிடத்தை நோக்கி விரைந்தார்கள். பின் நாயகமும் அதைத் தொடர்ந்து சென்றார்கள். நாயகம் (ஸல்) அவர்கள் துங்கிக் கொண்டிருக்கையில் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்க அன்னையவர்கள் இது என்ன ? என்று வினவ நாயகம் (ஸல்) அவர்கள் இது என்ன இரவு என்பது உமக்குத் தெரியாதா ? இதுதான் ஷஃபானின் 15வது இரவு இந்த இரவிலே ஒவ்வொருவருடைய ரிஸ்கும் பங்கு வைக்கப்படுகிறது. இதில் தான் அவருடைய காலம் , வாழ் நாள் எவ்வளவு என எழுதப்படுகிறது. இதில் தான் யார் யார் ஹஜ்ஜுக்குச் செல்வார்கள் என குறிப்பிடப்படுகிறது. இதில் தான் இறைவன் தனது அடியார்களுடைய பாவத்தை கல்ப் கோத்ரத்தின் செம்பரி ஆட்டினுடைய முடியை விட கூடுதலான அளவு மன்னிக்கின்றான். இந்த இரவில் தான் இறைவன் வானில் இருந்து மலக்குகளை மக்காவுக்கு அனுப்புகின்றான் என்றார்கள் .
14- இமாம் றிழா (அலை) அவர்களிடமிருந்து செய்க் அவர்கள் அறிவித்துள்ளது போன்று ஜனாப் ஜஃபருத்தையாருடைய தொழுகையை நிறைவேற்றுதல் .
15- இந்த இரவில் தொழப் ;படக் கூடிய தொழுகைகளை தொழுதல். அவை கூடுதலானவையாகும். அவைகளில் ஒன்றுதான் , அபூயஹ்யா சன்ஆனி என்பவர் இமாம் பாக்கிர் , இமாம் சாதிக் (அலை) ஆகியோரிடமிருந்து அறிவித்துள்ளார். இன்னும் இவ்விரு சங்கை மிக்கோரிடமிருந்து 30 மேலான நம்பத் மகுந்த ஹதீஸ் அறிவிப்பாளர்கள் இதை அறிவித்துள்ளனர். அவர்கள் சொன்னார்கள். ஷஃபான் மாதத்தின் 15வது இரவு வந்ததும் நான்கு ரக்அத் தொழுங்கள். ஒவ்வொரு ரக்அத்திலும் பாத்திஹா சூராவிற்குப் பின் சூரதுத் தௌஹீதை 100 தடவை ஓதுங்கள் இவ்வாறு ஓதி தொழுது முடிந்ததும் இதை ஓதுங்கள் .
اللَّهُمَّ إِنِّي إِلَيْكَ فَقِيرٌ وَ مِنْ عَذَابِكَ خَائِفٌ مُسْتَجِيرٌ اللَّهُمَّ لا تُبَدِّلْ اسْمِي وَ لا تُغَيِّرْ جِسْمِي وَ لا تَجْهَدْ بَلائِي وَ لا تُشْمِتْ بِي أَعْدَائِي أَعُوذُ بِعَفْوِكَ مِنْ عِقَابِكَ وَ أَعُوذُ بِرَحْمَتِكَ مِنْ عَذَابِكَ وَ أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ وَ أَعُوذُ بِكَ مِنْكَ جَلَّ ثَنَاؤُكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ وَ فَوْقَ مَا يَقُولُ الْقَائِلُونَ
அத்தோடு இன்னும் பல தொழுகைகள் இருக்கின்றது. அதாவது இந்த இரவில் 100 ரக்அத்து தொழுதல் அதன்
ஒவ்வொரு ரக்அத்திலும் ஒரு முறை சூரதுல் பாத்திஹாவும் 7தடவை சூரதுத் தௌஹீதையும் ஓதுதல் இந்த தொழுகைக்கு நிறைய நன்மைகள் இருக்கின்றது .
இத்தினத்தில் தான் ஹஸரத் செய்யிதினா வ மௌலானா இமாம் மஹ்தி (அஜ்ஜலல்லாஹுளுஹுரஹு) அவர்கள் பிறந்தார்கள் எனவே எந்நேரத்திலும் , எந்த இடத்திலும் அந்த ஹஸரத்துக்குறிய சியாரத்தை ஓதுவது சுன்னத்தாகும். இமாம் மஹ்தி (அஜ்ஜலல்லாஹுளுஹுரஹு) அவர்கள் வெளியாகி உலகில் இப்போது எவ்வாறு அட்டூழியங்களும் , அழிச்சாட்டியங்களும் நிறைந்துள்ளதோ அதை நீக்கி விட்டு அதே இடத்தை நீதியால் நிரப்புவார்கள். இறைவன் அவர்களுடைய வருகையைத் தீவிரப்படுத்துவானாக.. ஆமீன்
இந்த மாதத்தின் ஏனைய நாட்களுடைய அமல்கள்
இமாம் றிழா (அலை) கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவர் ஒருவர் ஷஃபான் மாதத்தின் கடைசி மூன்று நாளிலும் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து றமழான் மாத நோன்பைத் தொடர்ந்தால் இறைவன் அவருக்கு இரண்டு மாதம் (ஷஃபான் , ரமழான்) தொடர்ச்சியாக நோன்பு பிடித்த நன்மையை எழுதுகிறான் என்றார்கள். அபூ ஸ்ஸலத் ஹரவி என்பவர் அறிவிக்கின்றார். ஷஃபான் மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமையன்று நான் இமாம் றிழா (அலை) அவர்களிடம் சென்றேன் அவ்ஹஸரத் எனக்குச் சொன்னார்கள் அபூஸல்தே! ஷஃ ;பானில் அதிகமானவை சென்றுவிட்டது இதுவோ அதன் கடைசி வெள்ளிக்கிழமை எனவே அதை சரிவரப் பயன் படுத்திக் கொள் , துஆ பாவ மன்னிப்புகளில் அதிகமாக ஈடுபடு , கூடுதலாக குர்ஆன் ஓது , அடுத்த கண்ணியம் வாய்ந்த மாதம் வருவதற்கு முன் உன்னை சுத்தம் செய்து கொள் , மற்றவர்களுக்கு கொடுத்திருக்கும் வாக்குறுதியையும் , உன்னிடம் இருக்கும் அமானிதத்தையும் சரிவர நிறை வேற்று , மற்றவரின் மேல் கோபம் கொள்ளாதே , அவரைப்பற்றிய பொறாமை தப்பெண்ணம் போன்றவற்றை உன்னுள்ளத்தில் வைத்திருக்காதே , செய்த பாவத்தை திரும்பவும் செய்யாதே அதை அப்படியே விட்டு விட்டு இறைவனிடம் பிழை பொறுக்கத் தேடு , இறைவனைப் பயந்து கொள் , அவன் மேல் தவக்குல் வை , வெலிரங்கமாகவும் , உள்ளரங்கமாகவும் உமது வேலைகளை அவனிடமே விட்டு விடு , இந்த மாதத்தில் எஞ்சியிருக்கும் நாட்களில் இந்த துஆவை அதிகம் ஓது
اللَّهُمَّ إِنْ لَمْ تَكُنْ غَفَرْتَ لَنَا فِيمَا مَضَى مِنْ شَعْبَانَ فَاغْفِرْ لَنَا فِيمَا بَقِيَ مِنْهُ
நிச்சயமாக இறைவன் ரமழான் மாத்தைச் சங்கைப் படுத்துவதற்காக வேண்டி இந்த மாதத்தில் நரக வாதிகளில் அதிகமாவர்களை விடுதலை செய்கின்றான். செய்க் அவர்கள் ஹாரித் இப்னு முகீரா நளரி என்பவரிடமிருந்து அறிவித்துள்ளதாவது ஹஸரத் இமாம் ஜஃபர் சாதிக் (அலை) அவர்கள் இந்த துஆவை ஷஃபான் மாதத்தின் கடைசியிலும் ரமழான் மாத்தின் முதலாவது இரவிலும் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள் .
اللَّهُمَّ إِنَّ هَذَا الشَّهْرَ الْمُبَارَكَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ وَ جُعِلَ هُدًى لِلنَّاسِ وَ بَيِّنَات مِنَ الْهُدَى وَ الْفُرْقَانِ قَدْ حَضَرَ فَسَلِّمْنَا فِيهِ وَ سَلِّمْهُ لَنَا وَ تَسَلَّمْهُ مِنَّا فِي يُسْر مِنْكَ وَ عَافِيَة يَا مَنْ أَخَذَ الْقَلِيلَ وَ شَكَرَ الْكَثِيرَ اقْبَلْ مِنِّي الْيَسِيرَ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ أَنْ تَجْعَلَ لِي إِلَى كُلِّ خَيْر سَبِيلا وَ مِنْ كُلِّ مَا لا تُحِبُّ مَانِعا يَا أَرْحَمَ الرَّاحِمِينَ يَا مَنْ عَفَا عَنِّي وَ عَمَّا خَلَوْتُ بِهِ مِنَ السَّيِّئَاتِ يَا مَنْ لَمْ يُؤَاخِذْنِي بِارْتِكَابِ الْمَعَاصِي عَفْوَكَ عَفْوَكَ عَفْوَكَ يَا كَرِيمُ إِلَهِي وَعَظْتَنِي فَلَمْ أَتَّعِظْ وَ زَجَرْتَنِي عَنْ مَحَارِمِكَ فَلَمْ أَنْزَجِرْ فَمَا عُذْرِي فَاعْفُ عَنِّي يَا كَرِيمُ عَفْوَكَ عَفْوَكَ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الرَّاحَةَ عِنْدَ الْمَوْتِ وَ الْعَفْوَ عِنْدَ الْحِسَابِ عَظُمَ الذَّنْبُ مِنْ عَبْدِكَ فَلْيَحْسُنِ التَّجَاوُزُ مِنْ عِنْدِكَ يَا أَهْلَ التَّقْوَى وَ يَا أَهْلَ الْمَغْفِرَةِ عَفْوَكَ عَفْوَكَ اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ ابْنُ عَبْدِكَ وَ ابْنُ أَمَتِكَ ضَعِيفٌ فَقِيرٌ إِلَى رَحْمَتِكَ وَ أَنْتَ مُنْزِلُ الْغِنَى وَ الْبَرَكَةِ عَلَى الْعِبَادِ قَاهِرٌ مُقْتَدِرٌ أَحْصَيْتَ أَعْمَالَهُمْ وَ قَسَمْتَ أَرْزَاقَهُمْ وَ جَعَلْتَهُمْ مُخْتَلِفَةً أَلْسِنَتُهُمْ وَ أَلْوَانُهُمْ خَلْقا مِنْ بَعْدِ خَلْق وَ لا يَعْلَمُ الْعِبَادُ عِلْمَكَ وَ لا يَقْدِرُ الْعِبَادُ قَدْرَكَ وَ كُلُّنَا فَقِيرٌ إِلَى رَحْمَتِكَ فَلا تَصْرِفْ عَنِّي وَجْهَكَ وَ اجْعَلْنِي مِنْ صَالِحِي خَلْقِكَ فِي الْعَمَلِ وَ الْأَمَلِ وَ الْقَضَاءِ وَ الْقَدَرِ اللَّهُمَّ أَبْقِنِي خَيْرَ الْبَقَاءِ وَ أَفْنِنِي خَيْرَ الْفَنَاءِ عَلَى مُوَالاةِ أَوْلِيَائِكَ وَ مُعَادَاةِ أَعْدَائِكَ وَ الرَّغْبَةِ إِلَيْكَ وَ الرَّهْبَةِ مِنْكَ وَ الْخُشُوعِ وَ الْوَفَاءِ وَ التَّسْلِيمِ لَكَ وَ التَّصْدِيقِ بِكِتَابِكَ وَ اتِّبَاعِ سُنَّةِ رَسُولِكَ اللَّهُمَّ مَا كَانَ فِي قَلْبِي مِنْ شَكّ أَوْ رِيبَة أَوْ جُحُود أَوْ قُنُوط أَوْ فَرَح أَوْ بَذَخ أَوْ بَطَر أَوْ خُيَلاءَ أَوْ رِيَاء أَوْ سُمْعَة أَوْ شِقَاق أَوْ نِفَاق أَوْ كُفْر أَوْ فُسُوق أَوْ عِصْيَان أَوْ عَظَمَة أَوْ شَيْء لا تُحِبُّ فَأَسْأَلُكَ يَا رَبِّ أَنْ تُبَدِّلَنِي مَكَانَهُ إِيمَانا بِوَعْدِكَ وَ وَفَاءً بِعَهْدِكَ وَ رِضًا بِقَضَائِكَ وَ زُهْدا فِي الدُّنْيَا وَ رَغْبَةً فِيمَا عِنْدَكَ وَ أَثَرَةً وَ طُمَأْنِينَةً وَ تَوْبَةً نَصُوحا أَسْأَلُكَ ذَلِكَ يَا رَبَّ الْعَالَمِينَ إِلَهِي أَنْتَ مِنْ حِلْمِكَ تُعْصَى وَ مِنْ كَرَمِكَ وَ جُودِكَ تُطَاعُ فَكَأَنَّكَ لَمْ تُعْصَ تَرَ وَ أَنَا وَ مَنْ لَمْ يَعْصِكَ سُكَّانُ أَرْضِكَ فَكُنْ عَلَيْنَا بِالْفَضْلِ جَوَادا وَ بِالْخَيْرِ عَوَّادا يَا أَرْحَمَ الرَّاحِمِينَ وَ صَلَّى اللَّهُ عَلَى مُحَمَّد وَ آلِهِ صَلاةً دَائِمَةً لا تُحْصَى وَ لا تُعَدُّ وَ لا يَقْدِرُ قَدْرَهَا غَيْرُكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ