H
Home

ஹஸரத் ஆயதுல்லாஹ் அல் உழ்மா அல் ஹாஜ் அஷ்ஷெய்க் முஹம்மது
பாழில் லங்கரானி  அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்

பிறப்பு:

இவர்கள் 1931ம் ஆண்டு அறிவின் பட்டணமாம் கும் நகரில் பிறந்தார்கள். இவர்களது தந்தை கும் இஸ்லாமிய உயர் கற்கை நெரி கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்களில் ஒருவராக திகழ்ந்த மர்ஹும் ஆயதுல்லாஹ் பாழில் லங்கரானி (றஹ்) அவர்களாகும்.

கல்வி:

முதற்தர படிப்பை முடித்துக் கொண்ட இவர்கள் இஸ்லாமிய கல்வியில் கொண்டிருந்த விருப்பதின் காரணமாக தனது 13 வது வயதில் இஸ்லாமிய கற்கை நெரிகளை பிறந்த மண்ணிலே ஆரம்பித்தார்கள். 6 வருடங்களில் அடிப்படை இஸ்லாமிய கற்கை நெரிகளை முடித்ததன் பிறகு , 19 வது வயதில் இஸ்லாமிய உயர் கற்கை நெரிகளான இஸ்லாமிய சட்டக் கலையான பிக்ஹையும்,உசூலுல் பிக்ஹையும் அறிவின் மகுடமாம் ஹஸரத் ஆயல்லாஹ் அல் உழ்மா செய்யித் புரூஜர்தி (றஹ்) அவர்களிடத்தில் கற்க ஆரம்பித்தார்கள். இவர்கள் குறைந்த வயதும், சிறந்த ஆழமான அறிவும் விளக்கமும் கொண்டிருந்த காரணத்தால் சக மாணவர்களிடத்திலும் தன் ஆசிரியரிடத்திலும் நன்கு கவரப் பட்டிருந்தார்கள். இவர்களது உற்ற நண்பராகவும், படித்தவைகளை சேர்ந்து மீட்டக் கூடிய பள்ளித் தோழராகவும் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஸ்தாபகரின் மகனான ஆயதுல்லாஹ் அஷ் ஷஹீத் முஸ்தபா கொமைனி (றஹ்) அவர்கள் காணப்பட்டார்கள்.

ஆசிரியர்கள்:

இவர்கள் 11 வருடங்கள் ஹஸரத் ஆயதுல்லாஹ் அல் உழ்மா செய்யித் புரூஜர்தி(றஹ்) அவர்களிடமும், 9 வருடங்கள் இருபதாம் நூற்றாண்டின் இணையில்லா அறிவு மேதையாம் இமாம் கொமைனி(றஹ்) அவர்களிடத்திலும் உயர் கற்கை நெரிகளைப் பயின்றார்கள்.

பல வருடங்கள் மெய்யியலையும், அல் குர்ஆன் விரிவுரையை (தப்ஸீருல் குர்ஆனை)யும்  கற்று தனது 25 வது வயதில் அறிவின் உயர் நிலையாம் இஜ்திஹாத் செய்யும் தரத்திற்கு உயர்ந்தார்கள். இது இவர்களது  ஆசிரியருடம் தலை சிறந்த அறிஞருமான ஹஸரத் ஆயதுல்லாஹ் அல் உழ்மா செய்யித புரூஜர்தி(றஹ்) அவர்கள் மூலம் உறுதி செய்யப் பட்;டது.

கற்பித்தல்:

இவர்கள் பல வருடங்கள் கும் நகரில் பல கலாபீடங்களில் இஸ்லாமிய அடிப்படை வகுப்புக்களை நடாத்தியுள்ளார்கள். சுமார் 35 வருடங்களுக்கு மேலாக இஸ்லாமிய சட்டக் கலையான பிக்ஹ் , உசூலுல் பிக்ஹ் போன்ற பாடங்களில் உயர் வகுப்புக்களுக்கு விரிவரை செய்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களது விரிவுரை சிறந்து சுறுசுறுப்பாக இருக்கின்ற காரணத்தினால் இவ்விரிவுரைக்கு 700 இற்கும் மேற்பட்ட இஸ்லாமிய சட்டக் கலை உயர் வகுப்பு மாணவர்கள் சமுகம் கொடுக்கின்றனர். அத்துடன் இவர்களது விரிவுரைகள் ஒலிப்பதிவு செய்யப் பட்டு பல வருடகாலமாக ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஒலிபரப்பு செய்து கொண்டிருக்கின்றது. இதன் மூலம் உள் நாடு மற்றும் வெளி நாடுகளில் இருந்து இவரது வகுப்புக்கு சமுகம் தர முடியதவர்கள் பிரயோசனம் அடைகின்றனர்.

மன்னருக்கு எதிரான அரசியல் போராட்டம்:

இமாம் கொமைனி (றஹ்) அவர்கள் அநியாயம், அட்டூழியம் செய்து கொண்டிருந்த மன்னருக்கு எதிராக தனது அரசியல் போராட்டத்தை ஆரம்பித்த காலத்திலிருந்து மன்னர் சபை இராணுவத்தினரால் விசாரணைக்காக அழைக்கப் பட்டு பல தடவைகள் சிறையடைக்கப் பட்டுள்ளார்கள். பின்னர் கும் நகரிலிருந்து பந்தர் லங்கே எனும் இடத்திற்கு இடமாற்றம் செய்யப் பட்டார்கள். அங்கு நான்கு மாதங்கள் தங்கி விட்டு பின் அங்கிருந்து யஸ்த் எனும் நகருக்கு மீண்டும் அழைத்து வரப் பட்டார்கள். அங்கும் தனது வாழ்நாளில் 2.5 வருடங்களைக் கழித்தார்கள்.

மர்ஜயிய்யத் எனும் அந்தஸ்து:

இமாம் கொமைனி (றஹ்) அவர்களின் மறைவிற்குப் பின்னர் முஃமின்களில் அதிகமானோர் பின் பற்றுகின்ற விடயத்தில் இவர்களிடம் வந்து அனுமதி கேட்டார்கள். ஹஸரத் ஆயதுல்லாஹ் அல் உழ்மா அஷ்ஷெய்க் அராகி (றஹ்) அவர்களின் மறைவிற்குப் பின்னர் கும் இஸ்லாமிய உயர் கற்கை நெரி சிரேஷ்ட விரிவுரையாளர்களின் அமைப்பினால் இஸ்லாமிய சமுகத்தினர் மார்க்க சட்ட விடயங்களில் இவரைப் பின் பற்ற முடியும் என உலக முஸ்லிகளுக்கு அறிமுகப் படுத்தப் பட்டார்கள்.