Back | Index | Next |
விடயம் 75: ஒருவர் தொழுது முடிந்ததன் பின் , தொழுகைக்கு முதல் மலம் வெளியான இடத்தை சுத்தம் செய்தேனா என சந்தேகம் கொண்டால் , தொழுதவை சஹீஹாகும். ஆனால் பின்பு தொழுவதனால் கட்டாயமாக அதை சுத்தம் செய்ய வேண்டும்.
விடயம் 76: இஸ்திப்ரா என்பது ஆண்கள் சிறு நீர் கழித்ததன் பிறகு செய்யும் முஸ்தஹப்பான ஒரு அமலாகும். அது பல வகைப்படும். அதில் மிகவும் சிறந்தது சிறுநீர் கழித்து முடிந்ததன் பின் , மலம் வெளியாகும் இடம் நஜிஸாகி இருந்தால் முதல் அதை சுத்தம் செய்து விட்டு பின் மூன்று தடவை இடது கையின் நடு விரலால் மலம் வெளியாகும் இடத்திலிருந்து ஆண்குறியின் கடைசிப் பகுதி வரைக்கும் உருக வேண்டும். பின் பெரு விரலை ஆண் குறியின் மேலும் அதற்கு அடுத்தாற் போல் இருக்கும் விரலை ஆண்குறியின் கீழும் வைத்து மூன்று முறை கத்னா செய்யப்பட்ட பகுதி வரைக்கும் இழுத்தல். பின் ஆண்குறியின் நுனிக்பகுதியை மூன்று முறை நசித்து விடல்.
விடயம் 77:சில வேலை விளையாட்டின் பின் மனிதனிலிருந்து ஒரு வகையான நீர் வெளிவரும் அதற்கு மஸி என்று சொல்லப்படும். அது சுத்தமாகும். இன்னும் சில வேலை இந்திரியம் வெளியானதின் பின் ஒரு வகையான நீர் வெளி வரும் அதற்கு வஸி என்று சொல்லப் படும். அதுவும் சுத்தமாகும். மேலும் சிறுநீர் கழித்ததன் பிறகு சிலவேலை ஒரு வகையான நீர் வெளிவரும் அதற்கு வதி என்று சொல்லப்படும்.அதுவும் சுத்தமாகும். ஒருவர் சிறு நீர் கழித்ததன் பிறகு இஸ்திப்ரா செய்து அதன் பிறகு அவரிலிருந்து ஒரு வகை நீர் வெளியாகி அவர் சிறுநீரா அல்லது மேல் குறிப்பிட்ட வகைளில் ஒன்றா என சந்தேகம் கொண்டால் அது சுத்தமாகும்.
வியடம் 78:ஒருவர் இஸ்திப்ரா செய்தேனா இல்லையா என சந்தேகம் கொண்டு அவரிலிருந்து ஒரு வகை நீர் வெளியாகி அது சுத்தமா இல்லையா என தெரியாது போனால் அது நஜிஸாகும். அவர் வுழு செய்திருந்தாலும் அது பாத்திலாகும். ஆனால் சரியாதன முறைப்படி இஸ்திப்ரா செய்தேனா இல்ல i யாவென ஒருவர் சந்தேகம் கொண்டு அவரிலிருந்து ஒரு வகை நீர் வெளியாகி அது சுத்தமா இல்லையா என தெரியாது போனால் அது சுத்தமாகும். வுழுவும் பாத்திலாக மாட்டாது.
விடயம் 79:ஒருவர் சிறு நீர் கழித்து இஸ்திப்ரா செய்யாது சிறு நேரம் சென்றதன் பின் சிறு நீர் வெளியாகும் இடத்தில் ஏதும் இல்லை என உறுதி கொண்டு பின் அவரில் ஒரு ஈரத்தைக் கண்டு அது சுத்தமா இல்லையா என சந்தேகம கொண்டால் அந்த ஈரம் சுத்தமாகும். வுழு செய்திருந்தால் அது பாத்திலாக மாட்டாது.
விடயம் 80:ஒருவர் சிறுநீர் கழித்ததன் பிறகு இஸ்திப்ரா செய்து வுழு செய்ததன் பிறகு தன்னில் ஒரு ஈரத்தைக் கண்டு அது சிறு நீர் அல்லது இந்திரியம் என அறிந்தால் இஹ்தியாத் துக்காக வேண்டி குளிக்கவும் வேண்டும் வுழுவும் செய்ய வேண்டும். ஆனால் வுழு செய்திருக்க வில்லை என்றால் வுழு மட்டும் செய்தால் போதுமாகும்.
விடயம் 81:பெண்களுக்கு சிறுநீர் கழித்ததன் பின் இஸ்திப்ரா இல்லை. ஆனால் ஈரத்தைக் கண்டு அது சுத்தமா இல்லையா என சந்தேகம் கொண்டால் அது சுத்தமானதாகும். அது வுழு , குளிப்பகளை பாத்திலாக்க மாட்டாது.
விடயம் 82:மலம் சலம் கழிப்பதற்கு அமர்கின்ற போது எவரும் காணாத இடத்தில் அமர்வது முஸ்தஹப்பாகும். மலம் சலம் கழிக்கும் இடத்திற்கு நுளையும் போது முதலில் இடது காலையும் வெளியாகும் போது வலது காலையும் முன் வைப்பது முஸ்தஹப்பாகும். அதே போல் மலம் சலம் கழிக்கும் போது தலையை மூடுவதும் , உடம்பின் பாரத்தை வலது பக்கம் வைப்பதும் முஸ்தஹப்பாகும்.
விடயம் 83:சூரியன் சந்திரனை நோக்கி மலம் சலம் கழிப்பது மக்ரூஹாகும். ஆனால் தனது அவ்ரத்தை ஒரு பொருளினால் மறைத்தால் மக்ரூஹ் அல்ல. காற்று வீசும் திசையை நோக்கி , நெடுஞ்வாலைகளில் , குறுக்கு வீதிகளில் , வீட்டு வாசப்படியில் பழம் தரும் மரத்திற்கு கீழ் மலம் சலம் கழிப்பது மக்ரூஹாகும்.
விடயம் 84:நின்ற நிலையில் , கட்டியான மண்ணில் , விலங்குகளின் கூட்டில் , தண்ணீரில் குறிப்பாக ஓடாது தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறு நீர் கழித்தல் மக்ரூஹாகும்.
விடயம் 85: மலம் சலம் கழிப்பதை விட்டும் தடை செய்வது மக்ரூஹாகும். அது சங்கடத்தை ஏற்படுத்தினாலும் சரி ஒரு போதும் தடுக்க கூடாது.
விடயம் 86:மனிதன் தொழுகைக்கு முதலும் , தூக்கத்திற்கு முன்பும் , உடலுறவு கொள்வதற்கு முதலும் இந்திரியம் வெளியானதின் பிறகும் சிறுநீர் கழிப்பது முஸ்தஹப்பாகும்.
விடயம் 87: நஜிஸ்கள் பதினொரு வகைப் படும். அவை 1) மலம் 2) சலம் 3) இந்திரியம் 4) இறந்தவை 5) இரத்தம் 6 ,7) நாய் , பன்றி 8) முஷ்ரிக் (ஷிர்க் வைப்பவன்) 9) மது பானம் 10) புக்கா ( தொலிக் கோதுமையிலிருந்து செய்யப்படும் ஒரு வகைப் பானம் , பியர் ) 11) நஜிஸ் உண்ட ஒட்டகத்தின் வியர்வை
விடயம் 88: மனிதனுடைய , இன்னும் குதித்துப் பாயும் இரத்தமுடைய சகல விலங்குகளுடைய மலம் சலமும் நஜிஸாகும்.
விடயம் 89: உண்பது ஹராமான பறவைகளின் விட்டை சுத்தமானதாகும்.
வியடம் 90: நஜிஸ் உண்ட விலங்குகளுடைய மலம் சலம் நஜிஸாகும். அதேபோல் மனிதன் சேர்க்கை செய்த விலங்குகளுடைய மலம் சலமும் நஜிஸாகும். இன்னும் பன்றிப் பால் குடித்து உடம்பு வளர்த்த ஆட்டினுடைய மலம் சலமும் நஜிஸாகும்.
விடயம் 91:குதித்துப் பாயும் இரத்தமுடைய விலங்குகளின் இந்திரியம் நஜிஸாகும்.
விடயம் 92:குதித்துப் பாயும் இரத்தமுடைய விலங்களின் இறந்தவை நஜிஸாகும்.அது தானாக இறந்திருந்தாலும் சரி அல்லது மார்க்கத்தில் கூறப்பட்டிருக்கம் சட்டத்திற்கு மாற்றமாக அறுக்கப் பட்டிருந்தாலும் சரியே.மீன் குதித்துப் பாயும் இரத்தம் இல்லாததால் தண்ணிருக்குள்ளே இறந்தாலும் அது சுத்தமானதாகும்.
விடயம் 93:குதித்துப் பாயும் இரத்தமுடைய விலங்ககளின் முடி , கொம்பு , பல்லு போன்ற உயிர் அற்ற பொருட்கள் நாய் பன்றி அல்லாத மிருகங்களினுடையதாக இருந்தால் அது சுத்தமாகும்.
விடயம் 94:மனிதன் அல்லது குதித்துப்பாயும் இரத்தமுடைய விலங்குகளின் உடம்பிலிருந்து அவைகள் உயிருடன் இருக்கும் போது இறைச்சி அல்லது வேறு ஏதாவது வேறொன்று அவைகளிலிருந்து வேறாக்கப்பட்டால் அது நஜிஸாகும்.
விடயம் 95:உதட்டிலிருந்து அல்லது வேறு இடங்களிலிருந்து கிழம்பி விழும் கட்டத்தை அடைந்த தோல்களை அதை வேறாக்கினாலும் அது சுத்தமாகும்.
விடயம் 96:இறந்த கோழியின் வயிற்றுக்குள் இருந்து முட்டை வெளி வருகின்றது அதன் கோது கடிணமடைய வில்லை என்றாலும் சரி அது சுத்தமானதாகும்.
விடயம் 97:ஆட்டுக் குட்டி இறந்து அதன் மடியில் ஒரு வித கட்டியிருந்தால் அது சுத்தமானதாகும். இருந்தும் அதன் வெளிப் பகுதியை கழுவ வேண்டும்.
விடயம் 98:இஸ்லாம் அல்லாத நாடுகளிலிருந்து கொண்டு வரப் படும் மருந்து வகைகள் , அத்ர் , எண்ணெய் , சூபொலிஸ் , சவர்க்காரம் போன்றவைகளில் நஜிஸ் இல்லை என உறுதி ஏற்ப்பட்டால் அது சுத்தமானதாகும்.
விடயம் 99:முஸ்லிமான ஒருவரிடமுள்ள இறைச்சி , கொழுப்பு , தோல் போன்றவை சுத்தமானதாகும். ஆனால் அந்த முஸ்லிம் அதை காபிரிடத்தில் இருந்து வாங்கினார் என்றும் , அவர் அந்த மிருகம் மார்க்கத்தில் கூறப்பட்டுள்ள வாறு அறுக்கப் பட்டதா இல்லையாவென கவணிக்க வில்லை என்றும் தெரிந்தால் அது நஜிஸாக மாட்டாது. ஆனால் உண்பது ஹராமாகும். அத்துடன் அதன் தோலினால் செய்யப் பட்ட ஆடையுடன் தொழுதால் அதுவும் ஸஹீஹாக மாட்டாது.
விடயம் 100:மனிதனுடைய இன்னும் குதித்துப் பாயும் இரத்துமுடைய சகல விலங்குகளினது இரத்தமும் நஜிஸாகும். மீன் , நுளம்பு போன்ற குதித்துப் பாயும் இரத்தமல்லாத விலங்ககளின் இரத்தம் சுத்தமாகும்.
விடயம் 101:உண்பது ஹலாலான விலங்கை மார்க்கத்தில் கூறப்பட்டுள்ளவாறு அறுக்கப் பட்டு வழமையான அளவு அதிலிருந்து இரத்தம் வெளியாகி , பின் அதனுடைய உடலில் எஞ்சி இருக்கும் இரத்தம் சுத்தமானதாகும். ஆனால் மூச்சி இழுப்பதன் மூலமாக , அல்லது அவ்விலங்கினுடைய தலை உயரமான இடத்திலிருந்து இரத்தம் அதன் உடலுக்கள் சென்றால் அந்த இரத்தம் நஜிஸாகும்.
விடயம் 102:கோழி முட்டைக்குள் இருக்கம் இரத்தம் நஜிஸ் இல்லை. இஹ்தியாத் தே முஸ்தஹப்பின் படி அதை (உண்ணாது) தவிர்ந்து கொள்ள வேண்டும்.
விடயம் 103:காயம் குணமாகிப் போகின்ற போது அதன் ஓரத்தில் காணப்படும் மஞ்சல் நிறமான நீர் , அது இரத்தத்துடன் கலந்துள்ளதா இல்லையா என தெரியாது போனால் அது சுத்தமானதாகும்.
விடயம் 104:பால் கரக்கின்ற போது சில வேலைகளில் இரத்தம் காணப்பட்டால் அது நஜிஸாகும். பாலையும் அது நஜிஸாக்கி விடும்.
விடயம் 105:வாய் முரசு , பல்லுகளுக்கு இடையில் இருந்து வரும் இரத்தம் உமிழ் நீருடன் கலந்து இல்லாது போய் விட்டால் அது சுத்தமானதாகும். இந்நிலையில் உழிழ் நீர் உள்ளே சென்றாலும் பிரச்சினை இல்லை.
விடயம் 106:நகத்துக்கு கீழ் அல்லது தோலுக்கு கீழ் கண்டியிருக்கும் இரத்தம் , அதை இரத்தம் என்று சொல்லும் அளவுக்கு அது இல்லை என்றிருந்தால் அது சுத்தமாகும். மாறாக அதை இரத்தம் என்று கூறினால் நஜிஸாக இருக்கின்ற போது நகம் அல்லது தோலில் ஓட்டையை ஏற்படுத்த வேண்டும். இந்நிலையில் கஸ்டம் இல்லை என்றிருந்தால் வுழு செய்வதற்கு அல்லது குளிப்பதற்கு கட்டாயம் இரத்தத்தை வெளிப்படுத்த வேண்டும். கஸ்டம் என்றிருந்தால் அதன் ஓரங்களை நஜிஸ் அதிகமாகாதவாறு கழுவ வேண்டும். அதன் மேல் புடவை போன்ற ஒன்றை வைத்து ஈரமான கையை அதன் மேல் தடவ வேண்டும்.
விடயம் 107:தோலுக்கு கீலே கண்டியிருப்பவை இரத்தமா அல்லது சதை கண்டியதால் இவ்வாறு உள்ளதா என தெரியாது போனால் அது சுத்தமாகும்.
விடயம் 108:உணவு கொதித்துக் கொண்டிருக்கின்ற போது அதில் ஒரு துளி இரத்தமாவது விழுந்தால் அதில் இருந்த அனைத்து உணவும் , அந்த பாத்திரமும் நஜிஸாகி விடும். அது சூட்டில் கொதிப்பதனால் அவை சுத்தமாக மாட்டாது. ஏனெனில் நெருப்பு சுத்தம் செய்யக் கூடியவை அல்ல.
விடயம் 109:தரையில் வாழுகின்ற நாய் பன்றிகளும் அதன் முடி , எலும்பு , நகம் , அதன் ஈரம் முதலியவை கூட நஜிஸாகும். ஆனால் கடலில் வாழுகின்ற நாய் பன்றி சுத்தமானதாகும்.
விடயம் 110:முஷ்ரிக் (இணை வைப்பவன்) அதாவது வணக்கத்திற்கு தகுதியான ஒரு இறைவனை வணங்காது வேறு கடவுள்களை , சிலைகளை வணங்குபவன் , நஜிஸாகும்.ஆனால் எவராகிலும் இறைவன் ஒருவன் என்று ஏற்றுக் கொண்டும் இறைத் தூதர்களில் ஒருவரை ஏற்றுக் கொண்டிருந்தால் அவர்கள் (யஹுதிகள் , கிறிஸ்தவர்கள் , சர்தூஸ் திகள் , சாபியீன்கள்) சுத்தமாகும். கிறிஸ்தவர்கள் அவர்களுயைட மார்க்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியதன் மூலமாக முஷ்ரிகாக மாறியிருந்தால் அவர்களுக்கும் ஏனைய முஷ்ரிக்குகளுக்குறிய சட்டம் தான் அதாவது நஜிஸானவர்கனாகும். அதே போல் நாஸ்திகர்களும் நஜிஸாகும். இன்னும் நாஸிபீன்களும் அதாவது அஹ்லுல் பைத் இமாம்களின் எதிரிகளும் , கவாரிஜிகளும் அத்துடன் ஹஸரத் அலியை இறைவன் என்று சொல்பவர்களும் , தீனின் அடிப்படைகளில் ஒன்றை நிராகரிப்பவர்களும் நஜிஸாகும்.
விடயம் 111:காபிரின் , முஷ்ரிகின் உடம்பின் சகல பாகங்களும் முடி , நகம் , ஈரம் போன்றவைகள் கூடி நஜிஸாகும்.
வியடம் 112:தாய் தந்தை , பாட்டன் , பாட்டி , பருவ வயதை அடையாத சிறு பிள்ளை இருந்தால் அந்த பிள்ளையும் நஜிஸாகும். ஆனால் இவர்களில் ஒருவர் முஸ்லிமாக இருந்தால் அந்த பிள்ளை சுத்தமானதாகும்.
விடயம் 113:முஸ்லிமா இல்லையா என தெரியாத ஒருவர் , அவர் முன்பும் எவ்வாறு இருந்தார் என்றும் அறிய முடியாது போனால் அவர் சுத்தமாகும். ஆனால் ஏனைய முஸ்லிகளுக்கு இருக்கின்ற சட்டம் அவருக்கு இல்லை. உதாரணமாக அவர் முஸ்லிமான பெண்ணை மணமுடிக்க முடியாது. அல்லது அவரை முஸ்லிம்களுடைய அடக்கஸ்தலத்தில் அடக்கம் செய்ய முடியாது.
விடயம் 114:ஒரு முஸ்லிம் பனிரெண்டு அமாம்களில் ஒருவரை தூசித்தால் அல்லது கோபம் கொண்டால் அவர் நஜிஸாகும்.
விடயம் 115:அஹ்லுல் கிதாப் எனும் வேதமுடையவர்கள் சுத்தமானவர்களாகும்.
விடயம் 116:ஒருவர் முஸ்லிம் மத மாறினால் அவர் எந்த மதத்தில் சேர்ந்து கொள்கினள்றாரோ அதை கவனித்தே அவர் நஜிஸானவரா அல்லது சுத்தமானவரா எனக் கவனிக்கப்படும். அவர் யஹுதியாகவோ அல்லது நஸாராகவோ மாறினால் அவர் முர்தத்துதான். ஆனாலும் அவர் நஜிஸானவரல்ல.
விடயம் 117: மதுபானமும் , மனிதனுக்கு மஸ்தை , மயக்கத்தை ஏற்படுத்தும் ஒவ்வொன்றும் நஜிஸாகும்.
விடயம் 118: வெள்ளையான அல்கோல் வைத்தியங்களுக்காக பாவிக்கப்படுபவை சுத்தமானதாகும். ஆனால் அது மதுவிலிருந்தோ அல்லது தொலிக்கோதுமையிலிருந்தோ எடுக்கப் பட்டிருந்தால் அது நஜிஸாகும். அதுபோன்று தான் அல்கோலிலிருந்து சுத்தம் செய்வதங்காக எடுக்கப் பட்டு வைத்திய நிலையங்களில் பயன் படுத்தப் படும் ஏனைய பொருட்களும். அல்கோல் கலந்த ஓடிக்குலோன் மற்றும் ஏனைய உற்பத்திப் பொருட்கள் சுத்தமாகும்.
விடயம் 119:திராட்சை , திராட்சைச் சாறு இயற்கையிலோ அல்லது சூடு காட்டுவதின் மூலமாகவோ கொதித்தால் அதை உண்பது ஹராமாகும் ஆனால் நஜிஸ் இல்லை.
விடயம் 120: ஈத்தம் பழம் , பிளம்ஸ் போன்றவற்றின் நீர் கொதித்தால் சுத்தமானதாகும். அதை உண்பது கூட ஹலாலாகும்
விடயம் 121: தொலிக்கோதுமையிலிருந்து பெறப்படும் பாணம் நஜிஸாகும். அதற்கு புக்கா எனப்படும். ஆனால் வைத்தியரின் ஆலொசனையின் பேரில் அதிலிருந்து பெறப்படும் பாணம் சுத்தமாகும்.
வியடம் 122: நஜிஸ் உண்ட ஒட்டகத்தின் வியர்வை நஜிஸாகும். ஆனால் வேறு மிருகங்கள் நஜிஸ் உண்டால் அதன் வியர்வையிலிருந்து தவிர்ந்து கொள்வது அவசியமில்லை.