Back Index Next

விடயம் 198: சூரிய ஒளி நஜிஸான சுவரின் ஒரு பக்கத்தில் மாத்திரம் பட்டால் அது படாத மறு பக்கம் சுத்தமடைய மாட்டாது. ஆனால் சுவர் மெல்லியதாக இருந்து ஒரு பக்கம் வீசுவதால் மறு பக்கமும் காயும் என்றிருந்தால் அப்பக்கமும் சுத்தமடையும்.

4 இஸ்திஹாலா ( ஒரு நிலையிலிருந்து மறு நிலைக்கு மாறுதல்)

விடயம் 199: நஜிஸான பொருளின் அடிப்படை மாறி சுத்தமான நிலைக்கு வருதல். இம்மாற்றத்தை இஸ்திஹாலா என்று கூறப்படும். உதாரணமாக நஜிஸான பலகை எரிந்து சாம்பலாக மாறுதல் , நாய் உப்பளத்தில் விழுந்து உப்பாக மாறுதல். ஆனால் அதன் அடிப்படை மாற வில்லையென்றிரு ந்தால் , உதாரணமாக நஜிஸான தொலிக் கோதுமையை எடுத்து அரைத்து மா எடுத்தல் , அல்லது அதன் மூலம் உரட்டி சமைத்தல் , இந்நிலையில் அது சுத்தமாகாது.

விடயம் 200: நஜிஸான களி மண்ணின் மூலம் செய்யப் பட்ட கூசாக்களும் அது போன்ற ஏனைய பொருட்களும் நஜிஸாகும். நஜிஸான பலகையிலிருந்து பெறப் பட்ட கறிகளை விட்டும் விலகிக் கொள்ள வேண்டும்.

விடயம் 201 : இஸ்திஹாலா ஆகியதா இல்லையா என்று தெரியாத நஜிஸான பொருள் நஜிஸேயாகும்.

5 திராட்சைச் சாறு வினாகிரியாக மாறுதல்

விடயம் 202: கல்லு தானாகவோ அல்லது வினாகிரி , உப்பு போடப்பட்ட ஒன்றின் மூலமாக வினாகிரியானால் அது சுத்தமாகும்.

விடயம் 203: நஜிஸான திராட்சைப் பழத்தால் செய்யப் பட்ட கல்லு வினாகிரியாக மாறுவதன் மூலம் சுத்தமடைய மாட்டாது. மேலும் வெளியில் இருந்து நஜிஸ் அதில் விழுந்தால் , இஹ்தியாத்து வாஜிபின் படி அது வினாகிரியாக மாரியதன் பிறகு அதை பாவிப்பதை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

விடயம் 204 : நஜிஸான திராட்சைப் பழம் , பிளம்ஸ் , ஈத்தம் பழத்திலிருந்து வினாகிரி செய்தால் அது நஜிஸாகும்.

விடயம் 205: ஈத்தம் பழம் அல்லது திராட்சைப் பழம் போன்றவற்றினுல் இருக்கும் ஈக்கில் போன்ற சிறு சிறு கம்புத் துண்டுகள் வைத்து வினாகிரி செய்தால் அதில் பிரச்சினையில்லை.

விடயம் 206: கொதித்துக் கொண்டிருக்கும் திராட்சைச் சாறின் மூன்றில் இரண்டு வீதம் ஆவியாகி ஒரு வீதம் அதில் இருந்தால் அது நஜிஸ் இல்லை. ஆனால் அதை உண்பது ஹராமாகும். என்ராலும் அவை மயக்கத்தை ஏற்படுத்தும் என்று உறுதியாக்கப் பட்டால் அதைப் பாவிப்பது ஹராம் , நஜிஸ் ஆகும். அது வினாகிரியாக மாறுவதன் மூலம் மட்டுமே சுத்தமடைவதுடன் பாவிப்பதும் ஹலாலாகும்.

விடயம் 207: உதாரணமாக பழுக்காத ஒரு திராட்சைக் காயினுல் ஒன்று அல்லது இரண்டு முத்திய விதைகள் இருந்தால் , அதிலிருந்து எடுக்கப் படும் சாறை திராட்சைக் காய்ச்சாறு என்று சொல்லப் படும். அதில் இனிப்புத் தன்மை இருக்கமாட்டாது அதைக் கொதிக்க வைத்தால் அது சுத்தமாகும் , இன்னும் உண்பதும் ஹலாலாகும்.

விடயம் 208: காயா , பழமா என்று தெரியாத ஒன்றை கொதிக்க வைத்தால் அது ஹராமாக மாட்டாது.

6 இன்திகால்

விடயம் 209: மனிதனுயைட அல்லது குதித்துப் பாயும் இரத்தமுடைய மிருக்கத்தின் இரத்தம் , குதித்துப் பாயும் இரத்தமில்லாத மிருக்கத்தின் உடம்பிற்கு சென்று அவ்விரத்தம் இம்மிருக்கத்தினுடையது தான் என கணிக்கப் பட்டால் அது சுத்தமாகும். இதை இன்திகால் என்று கூறப்படும். எனவே அட்டை மனிதனிலிருந்து உறிஞ்சி எடுக்கும் இரத்தத்தை அட்டையுடைய இரத்தம் என்று சொல்லப் பட மாட்டாது. மாறாக அதை மனித இரத்தம் என்றே சொல்லப் படும் ஆகவே அது நஜிஸாகும்.

விடயம் 210: ஒருவர் தன்னில் அமர்ந்திருந்த நுலம்பு ஒன்றை அடித்தால் , அதிலிருந்து வெளிவந்த இரத்தம் அவரிலிருந்து குடித்ததா அல்லது நுலம்பில் இருந்ததா என்று தெரியாது போனால் அது சுத்தமாகும். அதே போன்று அவ்விரத்தம் அவரில் இருந்து குடித்ததுதான் என்று தெரியும் , ஆனால் அது நுலம்பின் உறுப்பின் ஒரு பகுதியாக கருதப்பட்டால் அது சுத்தமாகும். ஆனால் குடித்ததற்கும் அதை அடித்ததற்கும் இடையில் உள்ள நேரம் இது மனித இரத்தம் தான் என்று சொல்லுமளவிற்கு மிகவும் குறுகியதாக இருந்தால் , அல்லது இதை மக்கள் மனித இரத்தமா அல்லது நுலம்பின் இரத்தமா இவைகளில் எதைச் சொல்லுவார்கள் என்று தெரியாது போனால் அவ்விரத்தம் நஜிஸாகும்.

7 இஸ்லாம்

விடயம் 211 : இனைவைத்த ஒருவன் , அஸ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹு வ அஸ்ஹது அன்ன முஹம்மதர் ரஸுலுல்லாஹ் என்று சொன்னால்  முஸ்லிமாகி விடுவான். இவன் முஸ்லிமாதன் பிறகு அவனது உடல் , உமிழ் நீர் , வியர்வை சுத்தமானதாகும். ஆனால் முஸ்லிமாகும் போது அய்ன நஜிஸ் அவனது உடம்பில் இருந்தால் கட்டாயம் அதை நீக்கி விட்டு அவ்விடத்தை தண்ணீர் மூலம் சுத்தம் செய்ய வேண்டும். மேலும் முஸ்லிமாவதற்கு முன்பு அதில் இருந்த அய்ன நஜிஸ் நீக்கப் பட்டிருந்தாலும் அவ்விடத்தை தண்ணீர் மூலம் சுத்தம் செய்வது அவசியமாகும்.

விடயம் 212: முஸ்ரிகாக இருந்த போது அவனது உடை ஈரமாக அவனது உடம்பில் பட்டிருந்தால் , அது முஸ்லிமாகும் போது அவனது உடம்பில் இல்லை என்றிருந்தால் அது நஜிஸாகும். ஆனால் அவனது உடம்பில் அது இருந்தாலும் அதை தவிரந்து கொள்ள வேண்டும்.

விடயம் 213: முஸ்ரிக் , காபிர் கலிமாவைச் சொன்னால் அவன் உள்ளத்தால் சொன்னானா இல்லையா என்று தெரியாது போனால் அவன் சுத்தமாகும். ஆனால் அவன் உள்ளத்தால் சொல்ல வில்லை என்று அறிந்து கொண்டால் இஹ்தியாத்து வாஜிபின் படி அவனை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

8 தபயிய்யத்

விடயம் 214 : நஜிஸான ஒன்று சுத்தமாவதன் காரணத்தால் அதனுடன் தொடர்புடைய நஜிஸான வேறொரு பொருள் சுத்தமாவதை தபயிய்யத் எனப் படும்.

விடயம் 215: கல்லு வினாகிரியானால் , இருந்த பாத்திரமும் , அது கொதிக்கும் போது தெரித்துப் பட்ட இடங்களும் இது சுத்தமடைந்ததுடன் சுத்தமாகி விடும். பொதுவாக அதை மூடி வைக்கும் பொருளிலும் நஜிஸின் ஈரம் பட்டிருந்தால் அதுவும் சுத்தமாகும். அத்துடன் கொதிக்கும் போது அது வழிந்து வெளியாகி பாத்திரத்தின் வெளிப் பகுதியும் நஜிஸாகி இருந்தால் , வினாகிரியானவுடன் அப் பகுதியும் சுத்தமாகி விடும்.

விடயம் 216: மையித்தைக் குளிப்படாட்டுவதற்காக பயன் படுத்திய பலகை அல்லது கல்லு , அதனுடைய அவ்ரத்தை மறைப்பதற்காக போடப்பட்ட துணி , இன்னும் மையித்தைச் சுத்தம் செய்த சவர்க்காரம் , அதைக் குளிப்பாட்டியவரின் கை போன்றவை குளிப்பட்டி முடிந்தவுடன் சுத்தமாகி விடும்.

விடயம் 217: ஒருவர் நஜிஸில் தண்ணீரை ஊற்றி தன் கை மூலம் சுத்தம் செய்தால் , அப்பொருள் சுத்தமடைந்ததன் பிறகு அவருடைய கையும் சுத்தமாகி விடும்.

விடயம் 218: ஆடை போன்ற முறுக்குது அவசியமானவற்றை கழுவி அவற்றை முறுக்கிய பின் அதில் எஞ்சி இருக்கும் தண்ணீர் சுத்தமானதாகும்.

விடயம் 219: நஜிஸான பாத்திரத்தை குறைவான தண்ணீரால் சுத்தம் செய்தால் , அதை ஊற்றி விட்டதன் பின் சுத்தப் படுத்துவதற்காக வேண்டி அதில் நீர் ஊற்றப்பட்டு பின் எஞ்சியிருக்கும் கொஞ்சத் தண்ணீர் சுத்தமானதாகும்.

9 அய்ன நஜிஸ் நீங்குதல்

விடயம் 220: மிருகத்துடைய மேனி இரத்தம் போன்ற அய்ன நஜிஸால் அல்லது அழுக்கடைந்த நீர் போன்ற நஜிஸானதால் அழுக்கடைந்தால் , அவை நீக்கப்பட்டால் அம்மிருகத்தின் மேனி சுத்தமடைந்து விடும். அதே போன்று தான் மனிதனுடைய உடம்பின் வாய் , மூக்கின் போன்ற  உற்ப்பகுதி , உதாரணமாக , பல் இடைவெளிகளில் இருந்து இரத்தம் வெளி வந்து ஒமிழ் நீரில் கழந்து இல்லாது போனால் வாயை நீரினால் சுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை.

விடயம் 221 : பல் இடைவெளிக்குல் உணவு இருக்கும் போது இரத்தம் வெளிவந்தால் அவ்வுணவு சுத்தமாகும். செயற்கைப் பல்லுக்கும் இதே சட்டம் தான்.

விடயம் 222: ஒருவரில் நஜிஸ் பட்டு அவ்விடம் உற்பகுதியாய அல்லது வெளிப்பகு p யா என அவருக்குத் தெரியாது போனால் தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை.

விடயம் 223: நஜிஸான புழுதி , மண் போன்றவை ஆடை , விரிப்புப் போன்றவைகளில் பட்டால் , அவை காய்ந்ததாக இருந்தால் நஜிஸாகமாட்டாது. ஆனால் அவை ( புழுதி , மண் , ஆடை போன்றவை) ஈரமாக இருந்தால் அவை பட்ட இடத்தை தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும்.

10 நஜிஸ் உண்ட மிருகத்தைச் சுத்தப்படுத்தல்

விடயம் 224 : நஜிஸ் உண்பதை வழமையாக்கிக் கொண்ட மிருகத்தின் மலம் , சலம் நஜிஸாகும். இப்படியான மிருகங்களை சுத்தப் படுத்த விரும்பினால் அதை இஸ்திப்ரா செய்ய வேண்டும். அதாவது சில நாட்கள் அதை நஜிஸ் உண்பதை விட்டும் தடுத்து வைத்து அதற்கு சுத்தமான உணவைக் கொடுக்க வேண்டும். இடன் படி இஸ்திப்ரா செய்தற்கு கீழ் வரும் கால எல்லையை கவனத்திற் கொள்ள வேண்டும். ஒட்டகம் நாற்பது நாட்கள் , மாடு இருபது நாட்கள் , ஆடு பத்து நாட்கள் , தாறா ஐந்து நாட்கள் , நாட்டுக் கோழி மூன்று நாட்கள்.

11 முஸ்லிம் தலை மறைவாகுதல்

விடயம் 225: ஒரு முஸ்லிமுடைய உடம்பு , உடை அல்லது அவரது தனிப்பாவனைப் பொருட்கள் நஜிஸானால் , அவர் நம்மை விட்டும் மறைவாகி சொற்ப நாட்களுக்குப் பிறகு அவரைக் கண்டால் , அவரது உடம்பு , உடை , பொருட்கள் கீழ் வரும் நிபந்தனைகளைக் கொண்டு சுத்தமெனக் கணிக்கப் படும்.

முதலாவது: அவரது உடல் , உடை மற்றும் பொருட்கள் நஜிஸாகியது என அறிய வேண்டும்.

இரண்டாவது: சுத்தத்தை நிபந்தனையிட்டு  அவற்றை பாவிக்க வேண்டும்.

மூன்றாவது: அவர் முன்பு அவற்றை சுத்தம் செய்தார் என்ற இடம்பாடு இருக்க வேண்டும்.

விடயம் 226: முஸ்லிமான ஒருவருடைய உடம்போ , அல்லது ஆடையோ , அல்லது பாத்திரங்கள் , விரிப்புகள் போன்ற அவரது பொருப்பில் இருப்பவை நஜிஸானால் , பின் அவர் தலை மறைவானால் , வேறொருவர் , தலை மறைவானவர் அதை சுத்தம் செய்திருக்கலாமென இடம் பாடு கொண்டால் அவை சுத்தமாகும். அதைத் தவிர்ந்து கொள்ளவது அவசியமுமில்லை.

விடயம் 227: நஜிஸானவை சுத்தமாகி விட்டது என ஒருவர் உறுதி கொண்டால் , அல்லது இரண்டு நீதமானவர்கள் அது சுத்தம் என்று கூறினால் அது சுத்தமாகும். அதே போல் ஒருவர் தன்னிடமிக்கும் நஜிஸான பொருளைப் பார்த்து சுத்தமாகி விட்டது என்று சொன்னாலோ , அல்லது முஸ்லிமான ஒருவர் அதை சுத்தம் செய்திருக்கலாம் என்றாலோ அது சுத்தமானதாகும். அதை உரிய முறைப்படி சுத்தம் செய்தாரா என்று தெரியதாது விட்டாலும் சரியே!

விடயம் 228: ஒருவருடைய ஆடையை சுத்தம் செய்யுமாறு ஒருவரை பொறுப்புச் சாட்டப் பட்டு , ஆடையும் அவரிடம் இருந்தால் , பின் அவர் நான் அதை சுத்தம் செய்தேன் என்று கூறினால் அவ்ஆடை சுத்தமாகும்.

விடயம் 229: ஒருவருக்கு எவ்வளவு கழுவினாலும் உறுதி ஏற்படாது இருந்தால் அவர் ஏனைய மக்கள் செய்வது போன்று அவர் கழுவ வேண்டும். அவரது உறுதி , யகீன் அவசியமில்லை.

பாத்திரங்களின் சட்டங்கள்

விடயம் 230: நாய் , பன்றி அல்லது இறந்த மிருகங்களுயைட தோலைக் கொண்டு செய்யப்பட்ட பாத்திரத்தில் உண்ணுவது அல்லது பருகுவது ஹராமாகும். அப்பாத்திரத்தை வுழு செய்வதற்கோ அல்லது குளிப்பதற்கோ அல்லது சுத்தமான நிலையில் செய்ய வேண்டிய வேலைகளுக்கோ பயன் படுத்தக் கூடாது.

விடயம் 231 : தங்கம் , வெள்ளி போன்ற பாத்திரத்தில் உண்ணுவது அல்லது பருகுவது ஹராமாகும். அத்தோடு அதை அறையை அலங்கரிப்பதற்காக வைப்பதும் ஹராமாகும். ஆனால் அதை பாதுகாத்து வைத்திருப்பது ஹராமில்லை.

விடயம் 232: வெள்ளி தங்கப் பாத்திரங்கள் செய்வதும் அதைச் செய்வத்காக எடுக்கப்படும் கூலியும் ஹராமாகும்.

விடயம் 233: தங்கம் வெள்ளிப் பாத்திரங்களை விற்பதும் அதன் மூலம் வியாபாரி பெரும் பணமும் ஹலாலாகும். அதாவது ஹராமில்லை.

விடயம் 234 : கிளாஸ் , ஜொக்குப் போன்ற பாத்திரங்களின் கை புடியை தங்கம் அல்லது வெள்ளியால் செய்தால் , அதன் பின் அதற்கு பாத்திரம் என்றால் அதைப் பாவிப்பது ஹராமாகும். அது வெறுமுனே கிளாஸாக இருந்தாலும் சரியே!. மாறாக அதற்கு பாத்திரம் என்று சொல்ல வில்லை என்றால் அதைப் பாவிப்பது ஹராமில்லை.

விடயம் 235: வெள்ளி , தங்கத்தால் முலாம் பூசப்பட்ட பாத்திரங்களைப் பாவிப்பதில் பிரச்சினை இல்லை.

விடயம் 236: பித்தளையை வெள்ளி அல்லது தங்கத்துடன் கலந்து அதன் மூலம் பாத்திரம் செய்தால் , கலக்கப்பட் பித்தளை கூடுதலாக இருந்து பாத்திரம் செய்யப் பட்ட பின் அதற்கு வெள்ளி அல்லது தங்கப் பாத்திரம் என்று சொல்ல வில்லை என்றால் அதைப் பாவிப்பதில் தடையில்லை.

விடயம் 237: ஒருவர் தங்கம் வெள்ளிப் பாத்திரத்தில் இருக்கும் உணவுகளை சாப்பிடுகிறேன் என்ற எண்ணத்துடன் வேறு பாத்திரத்துக்கு மாற்றினால் இச்செயல் ஹராமாகும். மாறாக வெள்ளி அல்லது தங்கப் பாத்திரத்தில் இருக்கின்றது அதைப் பாவிப்பது ஹராம் என்ற உணர்வோடு வேறு பாத்திரத்துக்கு மாற்றுவதில் பிரச்சினை இல்லை. இவ் இரண்டு நிலையிலும் இரண்டாவது பாத்திரத்தில் அது வெள்ளி அல்லது தங்கம் இல்லை என்றிருந்தால் உண்ணுவது பருகுவது தடையில்லை.

விடயம் 238: வாலினுயைட உரை , குர்ஆன் வைக்கும் பெட்டி தங்கத்தால் அல்லது வெள்ளியால் செய்யப் பட்டிருந்தாலும் பிரச்சினையில்லை அதே போன்று தான் அத்ர் கீஸாக்களும் , சுருமா கீஸாக்களும் ஹராமில்லை.

விடயம் 239: சங்கடமான இடங்களில் தங்கம் வெள்ளிப் பாத்திரங்களைப் பாவிப்பதில் பிரச்சினை இல்லை. ஆனால் சங்டமான நிலையிலும் கூட அவைகளை வுழுச் செய்வதற்கோ அல்லது குளிப்பதற்கோ பயன் படுத்த முடியாது.

விடயம் 240: தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்டதா அல்லது வேறொன்றால் செய்யப்பட்டதா என்று தெரியாத பாத்திரத்தைப் பாவிப்பதில் பிரச்சினை இல்லை.

வுழு

விடயம் 241 : வுழு செய்யும் போது முகத்தையும் கைகளையும் கழுவுவதும் , தலையின் முன் பாகத்தையும் காலின் மேல் பகுதியையும் தடவுவது (மஸ்ஹு) செய்வது வாஜிபாகும்.

விடயம் 242: முகம் , நீளத்தாள் தலை முடி முளைக்கும் இடத்திலிருந்து நாடிக் குழி வரை , அகலத்தால் பெரு விரலுக்கும் நடு விரலுக்கும் இடைப் பட்ட முகத்தின் பகுதியை கட்டாயம் கழுவ வேண்டும். கூறப்பட்டதில் சிறு பகுதியாலும் கழுவப்படாது விட்டால் வுழு பாத்திலாகும். எனவே எல்லாப் பகுதியும் கழுவப் பட்டு விட்டது என்று உறுதி ஏற்படுவதற்காக அதை விட கொஞ்சம் கூடுதலாக கழுவ வேண்டும்.