Back | Index | Next |
விடயம் 243: ஒருவருடைய கை அல்லது முகம் பொதுவான அளவை விட சிறியதாக அல்லது பெரியதாக இருந்தால் அவரும் ஏனையவர்கள் எந்தளவு தங்களது முகங்களை கழுவுகின்றார்களோ அதே அளவு கழுவ வேண்டும். ஆனால் ஒருவருடைய முகமும் கையமும் வழமைக்கு மாற்றமாக இருந்து , இரண்டும் ஒன்றுக் கொன்று பொருத்தமாக இருந்தால் ஏனைய மக்களை கவனிக்க வேண்டிய அவசியமில்லை. என்றாலும் மேல் கூறப்பட்டது போன்று வுழு செய்ய வேண்டும். மேலும் நெற்றியின் மேல் முடி முளைத்திருந்தால் அல்லது தலையின் முன் பகுதியில் முடி இல்லாது இருந்தால் பொதுவாக கழுவப் படுகின்ற அளவிற்கு தன் நெற்றியை கழுவ வேண்டும்.
விடயம் 244 : ஒருவர் தனது கண் புருவம் , கண் ஓரப்பகுதி , உதடுகளில் தண்ணீர் படுவதை தடுக்கக் கூடியவாறு கொழுப்பு அல்லது அது போன்றவை இருப்பதாக சந்தேகித்தால் , மக்களும் அவரைப் பார்க்கின்ற போது அச்சதேகம் அவர்களுக்கும் ஏற்படுமென்றிருந்தால் கட்டாயமாக அவர் வுழு செய்வதற்கு முன் அதை நீக்க வேண்டும்.
விடயம் 245: முகத்தின் தோல் முடிகளுக்கு இடையால் தெரியுமாக இருந்தால் கட்டாயமாக அதற்கு நீர் செலுத்த வேண்டும். தெரிய வில்லை என்றிருந்தால் நீர் செலுத்துவது அவசிய மில்லை. முடியை மட்டும் கழுவுவது போதுமாகும்.
விடயம் 246: ஒருவர் முடிகளுக்கு இடையால் முகத்தின் தோல் தெரிகின்றதா இல்லையாவென சந்தேகம் கொண்டால் , பேணுதலுக்காக வேண்டி முடியைக் கழுவுவதுடன் தோலுக்கும் நீர் செலுத்துதல் அவசியமாகும்.
விடயம் 247: மூக்கின் உற்பகுதியையும் , உதடு , கண்களை மூடம் போது வெளியே தெரியாத பகுதியையும் கழுவுவது அவசியமில்லை. ஆனால் அவசியமாக கழுவப் பட வேண்டிய எல்லா இடங்களும் கழுவப் பட்டு விட்டது என்று உறுதி ஏற்படுவதற்காக வேண்டி அவைகளின் ஒரு பகுதியை கழுவ வேண்டும்.
விடயம் 248: கட்டாயமாக இஹ்தியாத்து வாஜிபின் படி முகத்தை மேலிருந்து கீழ் நோக்கி கழுவ வேண்டும். மாறாக கழுவினால் அதில் பிரச்சினை இருக்கின்றது. அதே போன்று கைகளையும் முழங்கையிலிருந்து நுனி விரல் வரையும் கழுவ வேண்டும்.
விடயம் 249: கையை ஈரமாக்கி முகத்தையும் கையையும் தடவினால் , கையில் இருக்கும் ஈரம் தடவுதலின் மூலமாக கொஞ்சத்தண்ணீர் முகம் கைகளில் ஓடுமாகயிருந்தால் அது போதுமாகும்.
விடயம் 250: முகத்தைக் கழுவியதன் பிறகு கட்டாயமாக வலது கையையும் அதன் பின் இடது கையையும் முழங்கையிலிருந்து நுனி விரல் வரையும் கழுவ வேண்டும்.
விடயம் 251 : முழங்கை சம்பூரணமாக கழுவப் பட்டு விட்டது என்று உறுதி ஏற்ப்படுவதற்காக அதை விட கொஞ்சம் மேலாக கழவ வேண்டும்.
விடயம் 252: முகத்தை கழுவுவதற்கு முதல் கைகளை மணிக் கட்டு வரை கழுவிய ஒருவர் , வுழுச் செய்யும் போது கைகளை நுனி விரல் வரை கழுவ வேண்டும். மாறாக அதை மணிக்கட்டு வரை கழுவினால் அவரது வுழு பாத்திலாகும்.
விடயம் 253: வுழு செய்யும் முகம் கைகளை கழுவுதல் முதலாவது தடவை வாஜிபும் இரண்டாவது தடவை ஜாயிஸாகும். மூன்றாவது அல்லது அதை விட கூடுதலாக கழுவுவது ஹராமாகும். ஒரு அல்லு தண்ணீர் மூலம் வுழுவுடைய நிய்யத்துடன் உறுப்பில் ஊற்றப்பட்டு எல்லா உறுப்பும் கழுவப் பட்டால் அது ஒரு தடவைதான் என கணிக்கப் படும். அவர் அதை ஒரு தடவைதான் என நிய்யத்து செய்திருந்தாலும் சரி. இல்லை என்றாலும் சரி.
விடயம் 254 : இரண்டு கைகளையும் கழுவியதன் பிறகு , கையில் இருக்கும் ஈரத்தின் மூலமாக தலையின் முன் பகுதியை மஸ்ஹு செய்ய வேண்டும். அது வலது கையால் தான் இருக்க வேண்டும் என்பதோ மேல் இருந்து கீழ் நோக்கித் தான் இருக்க வேண்டும் என்பதோ அவசிய மில்லை.
விடயம் 255: நெற்றியின் மேல் உள்ள தலைப் பகுதயின் நான்கில் ஒரு பகுதியே மஸ்ஹுடைய இடமாகும். இப் பகுதயின் எப்பகுதியையும் எவ் அளவு மஸ்ஹு செய்தாலும் அது போதுமாகும். ஆனால் இஹ்தியாத்து முஸ்தஹப்பின் படி அதன் நீளம் ஒரு விரலுடைய அளவிற்கும் அதன் அகலம் ஒட்டிய மூன்று விரல்களின் அகலத்திற்கு மஸ்ஹு செய்ய வேண்டும்.
விடயம் 256: மஸ்ஹு செய்தல் தலையின் தோலின் மேல் தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. தலை முடியின் மேல் செய்தாலும் மஸ்ஹு சஹீஹாகும். ஆனால் ஒருவருடைய முடி மிகவும் பெரியதாக இருந்து தலை வாரும் போது அவரது முடி முகத்தின் மேலோ அல்லது வேறு பகுதியிலோ விழுந்தால் கட்டாயமாக தலையில் இருக்கும் முடியின் மீது தான் மஸ்ஹு செய்ய வேண்டும். அல்லது தலை முடியை உச்சி பிரிச்சி வார்ந்து தோலின் மீது மஸ்ஹு செய்ய வேண்டும். மேலும் முகத்தின் மீதோ அல்லது வேறு பகுதயிலோ விழுந்த முடிகளை எடுத்து தலையின் முன் பகுதயில் வைத்து மஸ்ஹு செய்தால் , அது பாத்திலாகும்.
விடயம் 257: தலையை மஸ்ஹு செய்ததின் பிறகு கையில் இருக்கும் ஈரத்தின் மூலமாக கால்களை நுனி விரலிலிருந்து கரண்டைக் கால் வரை மஸ்ஹு செய்ய வேண்டும்.
விடயம் 258: கால்களை மஸ்ஹு செய்வதின் அகலம் எவ்வளவுக்கு இருந்தாலும் போதுமாகும். ஆனால் இஹ்தியாத்து முஸ்ஹப்பின் படி உள்ளங்கையால் மஸ்ஹு செய்ய வேண்டும்.
விடயம் 259: இஹ்தியாத்து வாஜிபின் பிரகாரம் கால்களை மஸ்ஹு செய்யும் போது கையை காலின் மேல் நுனி விரல்கள் மீது வைத்து காலின் மேல் பகுதியை மெதுவாக மஸ்ஹு செய்ய வேண்டும். ஒருவர் கையின் எல்லா விரல்களையும் காலின் மேல் வைத்து கொஞ்சம் தடவினால் அது சரியாகாது.
விடயம் 260: தலையும் கால்களையும் தடவும் போது கையை அதன் மீது தடவ வேண்டும். மாறாக ஒருவர் கையை அப்படியே வைத்து விட்டு தலையை அல்லது கால்களை இழுத்தால் அவரது வுழு பாத்திலாகும். ஆனால் கையை இழுக்கும் போது சிறிதளவு தலை அல்லது கால் அசைந்தால் அதில் பிரச்சினை இல்லை.
விடயம் 261: மஸ்ஹு செய்யும் இடம் கட்டாயமாக காய்ந்ததாக இருக்க வேண்டும். மாறாக அவ்விடங்களில் , கையில் இருக்கின்ற ஈரம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தாத அளவிற்கு ஈரமாக இருந்தால் அவரது மஸ்ஹு பாத்திலாகும். ஆனால் அதில் இருக்கின்ற ஈரம் மஸ்ஹு செய்தால் அடையாளம் தெரியுமளவிற்கு குறைவாக இருந்தால் பிரச்சினை இல்லை.
விடயம் 262: மஸ்ஹு செய்வதற்கு உள்ளங்கையில் ஈரம் ஏதும் இல்லை என்றிருந்தால் , வெளியில் இருக்கின்ற தண்ணீர் மூலம் அதை ஈர மாக்க முடியாது. மாறாக உறுப்பின் ஏனைய பகுதிகளில் இருந்து ஈரத்தன்மையை எடுத்து அதன் மூலம் தான் மஸ்ஹு செய்ய வேண்டும்.
விடயம் 263: உள்ளங்கையில் இருக்கின்ற ஈரத்தின் மூலம் தலை மட்டும் தான் மஸ்ஹு செய்ய முடியுமாக இருந்தால் அதன் மூலம் தலை மஸ்ஹு செய்து பின் கால்களை மஸ்ஹு செய்வதற்காக உறுப்பின் ஏனைய பகுதிகளில் இருந்து ஈரத்தன்மையை எடுக்க வேண்டும்.
விடயம் 264: கால் உறை , செருப்பின் மேல் மஸ்ஹு செய்தால் அது பாத்திலாகும். ஆனால் கடும் குளிர் அல்லது திருடப்பட்டு விடும் அல்லது மிருகங்களின் பயம் போன்ற காரணங்களுக்காக செருப்பை அல்லது கால் உறையை கலட்ட முடியாது போனால் , அவைகளின் மீது மஸ்ஹு செய்தலில் பிரச்சினை இல்லை. மேலும் செருப்பின் மேல் பகுதி நஜிஸாக இருந்தால் கட்டாயமாக சுத்தமான ஒன்றை செருப்பின் மேல் போட வேண்டும் பின் அதன் மேல் மஸ்ஹு செய்ய வேண்டும்.
விடயம் 265: காலின் மேல் பகுதி நஜிஸாக இருந்து , அதை தண்ணீரால் சுத்தம் செய்ய முடியாது போனால் கட்டாயமாக தயம்மம் செய்ய வேண்டும்.
விடயம் 266: ஒருவர் வுழுவுடைய நிய்யத்துடன் மேலிருந்து கீழ் நோக்கி கழுவுதலை கவனத்தில் கொண்டு முகம் கைகளை தண்ணீருக்குல் கொண்டு செல்லல். அல்லது நீருக்குல் கொண்டு சென்றவைகளை வெளியே எடுத்தல். இதை வுழூ இர்திமாஸி எனப்படும்.
விடயம் 267: வுழூ இர்திமாஸியிலும் கூட முகத்தையும் , கைகளையும் மேலிருந்து கீழ் நோக்கியே கழுவப்பட வேண்டும். இதன் படி முகத்தையோ அல்லது கைகளையோ தண்ணீருக்குல் கொண்டு செல்லும் போது வுழுவுடைய நிய்யதை வைத்தால் கட்டாயமாக முகத்தை நெற்றியின் பக்கமிருந்தும் கைகளை முழங்கையுடைய பக்கமிருந்தும் கொண்டு செல்ல வேண்டும். மேலும் நீருக்குல் இருந்து வெளியே கொண்டு வரும் போது வுழுடைய நிய்யத்தை வைத்தால் கட்டாயமாக முகத்தை நெற்றியின் பக்கத்தாலும் கைகளை முழங்கையுடைய பக்கத்தாலும் வெளியே எடுக்க வேண்டும்.
விடயம் 268: வுழுவுடைய சில பகுதியை இர்திமாஸி மூலமும் சில பகுதியை இர்திமாஸி அல்லாத மூலமும் செய்தாலும் அதில் பிரச்சினை இல்லை.
விடயம் 269 : வுழு செய்யும் ஒருவர் அவரது பார்வை தண்ணீரில் விழும் போது இந்த துஆவை ஓதுவது முஸ்ஹப்பாகும்.
«بِسْمِ اللهِ وبِاللهِ وَالْحَمْدُللهِ الّذى جَعَلَ الْماءَ طَهوُراً وَلَم يَجْعَلْهُ نَجِساً» ( பிஸ்மில்லாஹி வ பில்லாஹி வல் ஹம்து லில்லாஹில்லதி ஜஅலல் மாஅ தஹுரா வலம் எஜ்அல்ஹு நஜிஸா) , பின் வுழு செய்தற்கு முன் கைகளை கழுவும் போது இதை ஓதுவதும் முஸ் h தஹப்பாகும். « اللّهمَّ اجْعَلنى مِنَ التّوّابِينَ وَاجْعَلْنِى مِنَ المُتَطَهِّرينَ» ( அல்லாஹும்மஜ்அல்னி மினத் தௌவ்வாபீன் வஜ்அல்னி மினல் முததஹ்ஹிரீன்) , வாய் கொப்பளிக்கும் போது இதை ஓத வேண்டும். «اَللّهُمَّ لَقِّنِىِ حُجَّتِى يَوْمَ اَلْقاكَ وَاَطْلِقْ لِسانِى بِذِكْرِكَ» ( அல்லாஹும்ம லக்கினி ஹுஜ்ஜதி யவ்ம அல்காக வஅத்திக் லிஸானி பி திக்ரிக) , நாசிக்கு நீர் செலுத்தும் போது இதை ஓதுவதும் முஸ்தஹப்பாகும். «اَللّهُمَّ لا تُحَرِّمْ عَلَىَّ ريحَ الْجَنَّةِ وَاجْعَلْنِى مِمَّن يُشُمُّ ريحَها وَروْحَها وَطيبَها» ( அல்லாஹும்ம லா துஹர்ரிம் அலைய்ய ரீஹல் ஜன்னா வஜ்அல்னி மிம்மன் எஷும்மு ரீஹஹா வ ரூஹஹா வ தைபஹா) முகத்தைக் கழுவும் போது இதை ஓதுவதும் முஸ்தஹப்பாகும். « اللّهُمَّ بَيِّضْ وَجْهى يَوْمَ تَسْوَدُّ فيهِ الْوُجوُهُ وَلا تُسَوِّدْ وَجْهى يَوْمَ تَبْيَضُّ فيهِ الْوُجوُهُ» ( அல்லாஹும்ம பய்யிழ் வஜ்ஹி யவ்ம தஸ்வத்து பீஹில் வுஜுஹ் வலா துஸவ்வித் வஜ்ஹி யவ்ம தப்யழ்ழு பீஹில் வுஜுஹ்) , வலது கையை கழுவும் போது இதையும் ஓதுவது முஸ்தஹப்பாகும் «اللّهُمَّ اَعْطِنِى كِتابِى بِيَمينى وَالْخُلْدَ فِى الجنانِ بِيَسارى وَحاسِبْنى حِساباً يَسيراً» ( அல்லாஹும்ம அஃதினி கிதாபீ பி யமீனீ வல் குல்த பில் ஜினானி பியஸாரீ வ ஹாஸிப்னீ ஹிஸாபன் யஸீரா) , இடது கையை கழுவும் போது இதை ஓத வேண்டும். «اللّهُمَّ لا تُعْطِنِى كِتابىِ بِشمالىِ وَلا مِنْ وَراءِ ظَهْرِى وَلا تَجْعَلْها مَغْلوُلَةً اِلى عُنُقِى وَاَعوذُبِكَ مِنْ مُقَطِّعاتِ النِّيرانِ» ( அல்லாஹும்ம லா துஃதினி கிதாபீ பிஸிமாலீ வலா மின் வராயி ழஹ்ரீ வலா தஜ்அல்ஹா மக்லூலதன் இலா உனுகீ வஅஊதுபிக மின் முகத்திஆதின் னீரான்) , தலையை மஸ்ஹு செய்யும் போது ஓதும் துஆ «اللّهُمَّ غَشِّنِىِ بِرَحْمَتِكَ وَبَرَكاتِكَ وَعَفْوِكَ»( அல்லாஹும்ம கஸ்ஸினீ பி ரஹ்மதிக வ பரகாதிக வ அபவிக) , காலை மஸ்ஹு செய்யும் போது இதை ஓத வேண்டும். «اللّهُمَّ ثَبِّتْنِى عَلَى الصِّراطِ يَوْمَ تَزِلُّ فِيْهِ الاَْقْدام وَاجْعَلْ سَعْيِى فى ما يُرْضيكَ عَنِّى يا ذَالْجَلالِ وَالاِْكْرامِ» . ( அல்லாஹும்ம தப்பித்னீ அலஸ் சிராதி யவ்ம தசில்லு பீஹீல் அக்தாம் வஜ்அல் ஸஃயி பீ மா யுர்ழீக அன்னி யா தல் ஜலாலி வல் இக்ராம்)
வுழு சரியாவதற்கு பதின்மூன்று நிபந்தனைகள் இருக்கின்றன.
முதலாவது நிபந்தனை: வுழுச் செய்யும் நீர் சுத்தமாக இருத்தல்.
இரண்டாவது நிபந்தனை: வுழு செய்யும் நீர் முத்லக்காக இருத்தல்.
விடயம் 270 : நஜிஸான நீரினாலோ அல்லது முளாபான நீரினாலோ வுழு செய்தால் அது பாத்திலாகும். அது நஜிஸானது அல்லது முளாபானது என்று தெரியாது விட்டாலோ அல்லது மறந்து போனாலும் சரியே!. அப்படியான நீரினால் வுழு செய்து தொழுது இருந்தாலும் அத்தொழுகையை திரும்ப சரியாக வுழு செய்து தொழ வேண்டும்.
விடயம் 271 : களியுடன் கழந்த முழாபான நீரைத்தவிர வுழு செய்வதற்கு வேறு நீர் இல்லை என்றிருந்தால் , தொழுகையுடைய நேரமும் மிகவும் குறுகியதாக இருந்தால் கட்டாயமாக தயம்மம் செய்ய வேண்டும். தொழுகை நேரம் கூடுதலாக இருந்தால் தண்ணீர் தெளிகின்ற வரைக்கும் பொறுமையாக இருந்து வுழு செய்ய வேண்டும்.
மூன்றாவது நிபந்தனை: வுழுச் செய்யும் நீர் முபாஹாக , ஆகுமானதாக இருத்தல்.
விடயம் 272 : வுழுச் செய்யும் நீர் அபகரிக்கப் பட்டதாக இருந்தால் அல்லது சொந்தக் காரர் வுழு செய்தால் பொருந்திக் கொள்வாரா இல்லையா என தெரியாத தண்ணீரால் வுழுச் செய்வது ஹராமும் பாத்திலுமாகும். ஆனால் முன்பு பொருந்தக் கூடியவராக இருந்தால் ஆனால் இப்போது அந்த நிலையில் இருந்து மாறிவிட்டாரா இல்லையாவென தெரியாது போனால் அவரது வுழு சஹீஹாகும். மேலும் வுழுச் செய்யும் நீர் அபகரிக்கப்பட்ட இடத்தில் விழுந்தாலும் அவரது வுழு சஹீஹாகும்.
விடயம் 273 : மத்ரஸாவுடைய கவ்ழில் வுழு செய்வது , அதை எல்லா மக்களும் பயன் படுத்துவதற்காக வாக்பு செய்யப் பட்டுள்ளதா ? அல்லது அங்கு படிக்கின்றவர்களுக்கு மாத்திரம் வக்பு செய்யப் பட்டுள்ளதா ? என்று தெரியாது போனால் , பொதுவாக மக்கள் எல்லோரும் அங்கு வுழு செய்கின்றார் கள் அவர்கள் வுழுச் செய்வது பொதுவான அனுமதியைப் பெறுவதற்கு வழி வகுக்கின்றது என்றிருந்தால் அங்கு வுழு செய்வதில் பிரச்சினை இல்லை.
விடயம் 274 : பள்ளியிலே தொழ விரும்பாத ஒருவார் , அப்பள்ளியில் உள்ள கவ்ழை எல்லா மனிதர்களும் பாவிப்பதற்கு வக்பு செய்துள்ளார்களா ? அல்லது அப்பள்ளியில் தொழுபவர்கள் மாத்திரம் வுழு செய்வதற்கு வைத்தள்ளார்களா ? என்று அறியாது போனால் அவருக்கு அக்கவ்ழில் வுழுச் செய்ய முடியாது. ஆனால் பொதுவாக அங்கு தொழாதவர்களும் அதில் வுழுச் செய்கின்றார்கள் , அவர்கள் அங்கு வுழுச் செய்வது பொதுவான அனுமதியை தெளிவு படுத்துகின்றது என்றிருந்தால் அங்கு வுழுச் செய்வதில் பிரச்சினை இல்லை.
விடயம் 275 : விடுதிகள் , லாஜ்களின் கவ்ழுகளில் அங்கு இல்லாதவர்கள் வுழுச் செய்வது , பொதுவாக அங்கு இல்லாதவர்களும் அதில் வுழுச் செய்கின்றார்கள் அது பொதுவான அனுமதியை நிரூபிக்கின்றது என்றிருந்தால் , அவரது வுழு சஹீஹாகும்.
விடயம் 276 : பெரிய ஓடைகள் , கால்வாய்களில் வுழுச் செய்வது , அதற்கு சொந்தக்காரர் அங்கு வுழுச் செய்வதை விரும்புவாரா இல்லையாவென தெரியாது போனானும் பரவாயில்லை சஹீஹாகும். ஆனால் அவர் அதில் வுழுச் செய்வதை தடுக்கின்றார் என்றிருந்தால் இஹ்தியாத்து வாஜிபின் படி அதில் வுழு செய்யக் கூடாது.