Back | Index | Next |
விடயம் 277 : ஒருவர் இருக்கும் தண்ணீரை அபகரிக்கப்பட்டது என்று தெரியாது இருந்தாலோ அல்லது மறந்து போய் அதன் மூலம் வுழுச் செய்தால் அவரது வுழு சஹீஹாகும்.
நான்காவது நிபந்தனை: வுழுச் செய்யும் நீர் இருக்கும் பாத்திரம் முபாஹானதாக( ஆகுமானதாக) இருத்தல்.
ஐந்தாவது நிபந்தனை: வுழுச் செய்யும் நீர் இருக்கும் பாத்திரம் தங்கம் வெள்ளியிலானதாக இல்லாதிருத்தல்.
விடயம் 278 : வுழுச் செய்யும் நீர் அபகரிக்கப்பட்ட பாத்திரத்தில் இருந்தால் , அந்நீரை விட வேறு தண்ணீர் இல்லாது இருந்தால் கட்டாயமாக தயம்மும் செய்ய வேண்டும். அவ்வாறில்லாது அந்த நீரின் மூலம் வுழுச் செய்தால் அது பாத்திலாகும். மேலும் முபாஹான வேறு தண்ணீரும் இருக்கின்றன அதுவும் அபகரிக்கப்பட்ட பாத்திரத்தில் இருந்து அதில் வுழு இர்திமாஸி செய்தாலோ அல்லது அந்தப் பாத்திரத்தின் மூலம் தண்ணீரை முகம் கைகளில் ஊற்றினாலோ அவரது வுழு பாத்திலாகும். ஆனால் அதிலிருக்கும் நீரை கையால் அள்ளி பின் முகம் கைகளில் ஊற்றினால் அவரது வுழு சஹீஹாகும். தங்கம் வெள்ளியிளான பாத்திரத்தில் வுழுச் செய்வதற்கும் இதே சட்டம் தான்.
விடயம் 279 : ஒரு கல்லு அபகரிக்கப் பட்டு கட்டப் பட்ட கவ்ழில் வுழுச் செய்தால் அவரது வுழு சஹீஹாகும்.
விடயம் 280 : இமாம்கள் அல்லது அவரது பரம்பரையினர் அடக்கம் செய்யப்படடிருக்கும் முன்றலில் கவ்ழு அல்லது ஓடை கட்டினால் அவ்விடம் முன்பு ஜனாஸா அடக்கப் படும் இடமாக இருந்திருந்தால் , அதை , அதாவது இவ்விடம் ஜனாஸாக்கள் அடக்கம் செய்வதற்கு வக்பு செய்யப்பட்டது என ஒருவர் அறியாது இருந்தால் அந்த கவ்ழு அல்லது ஓடையில் வுழுச் செய்ய முடியும். அதில் பிரச்சினையில்லை.
ஆறாவது நிபந்தனை: கழுவும் போதும் மஸ்ஹுசெய்யும் போதும் வுழுவுயைட உறுப்புக்கள் சுத்தமாக இருத்தல்.
விடயம் 281 : வுழு செய்து முடிப்பதற்கு முதல் கழுவிய அல்லது மஸ்ஹுசெய்த இடம் நஜிஸானால் அவரது வுழு சஹீஹாகும்.
விடயம் 282 : வுழுவுடைய உறுப்பு அல்லாத ஒன்று நஜிஸாக இருந்தால் அவரது வுழு சஹீஹாகும். ஆனால் மலம் சலம் வெளியாகும் இடத்தை சுத்தம் செய்ய வில்லை என்றிருந்தால் முதலில் அதை சுத்தம் செய்ய வேண்டும் பின்னர் வுழு செய்ய வேண்டும்.
விடயம் 283 : வுழுவுடைய உறுப்புக்களில் ஒன்று நஜிஸாக இருந்து வுழுச் செய்து முடிந்ததன் பின் அவ்விடத்தை சுத்தம் செய்தேனா இல்லையா என சந்தேகம் கொண்டால் , வுழு செய்யும் போது அவ்விடம் சுத்தமாக அல்லது நஜிஸாக இருப்பதைக் கவனிக்க வில்லை என்றிருந்தால் அவருடைய வுழு பாத்திலாகும். மாறாக கவனித்தார் என்று அறிந்தால் அல்லது கவனித்தேனா இல்லையாவென சந்தேகம் கொண்டால் அவருடைய வுழு சஹீஹாகும். எந்நிலையிலும் நஜிஸான இடத்தை தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும்.
விடயம் 284 : முகம் அல்லது கையில் முறிவு அல்லது காயம் இருந்து அவற்றில் இருந்து போடப் பட்டிருக்கும் பென்டோச்சால் இரத்தம் வெளிவர வில்லையென்றிருந்தால் , தண்ணீரை உபயோகி p ப்பதும் தீங்கை , ஆபத்தை ஏற்ப்படுத்த மாட்டாது என்றிருந்தால் , கூடுதலான அல்லது ஓடத்தண்ணீரில் அதை நுழைத்து பென்டோச்சில் இருக்கும் இரத்தம் வெளி வரும்படி முறுக்க வேண்டும். பின் மேலே கூறியது போன்று வுழு இர்திமாஸி செய்ய வேண்டும்.
ஏழாவது நிபந்தனை: வுழுச் செய்வதற்கும் தொழுவதற்கும் நேரம் போதுமானதாக இருத்தல்
விடயம் 285 : நேரம் குறைவாக இருந்து , வுழுச் செய்தால் தொழுகை முழுவதும் அல்லது அதில் ஒரு பகுதியேனும் நேரம் சென்றதின் பின் தொழப் படும் என்றிருந்தால் கட்டாயமாக தயம்மம் செய்ய வேண்டும். ஆனால் தயம்மம் செய்வதற்கும் வுழுச் செசய்வதற்கும் ஒரே அளவான நேரம் தான் எடுக்கும் என்றிருந்தால் கட்டாயமாக வுழுச் செய்ய வேண்டும்.
விடயம் 286 : நேரம் குறுகியதாக இருக்கும் போது தயம்மம் செய்ய வேண்டிய ஒருவர் வுழு செய்தால் அவரது வுழு சஹீஹாகும். அது அந்த தொழுகையை நிறைவேற்றுவதற்காக இருந்தாலும் சரி அல்லது வேறு காரணங்களுக்காக இருந்தாலும் சரி.
எட்டாவது நிபந்தனை: கஸ்துல் குர்பத் கொண்டிருத்தல் அதாவது இறைகட்டளையை நிறை வேற்ற வுழு செய்கின்றேன் என நினைத்தல். எனவே உடம்பு குளிராக இருக்க வேண்டும் , அல்லது வேறு எண்ணங்களுக்காக வுழு செய்கிறேன் என நிய்யத்து வைத்தால் அது பாத்திலாகும்.
விடயம் 287 : வுழுடைய நிய்யத்தை வாயினால் மொழிய வேண்டும் அல்லது உள்ளத்தால் வைக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால் வுழுடைய எல்லா நிலையிலும் வுழு செய்கின்றேன் என்பதை கவனத்தில் வைத்துக் கொண்டால் அது போதுமாகும்.
ஒன்பதாவது நிபந்தனை: தர்தீப் , மே n லு கூறிய ஒழுங்கு முறைப்படி செய்தல். முதலாவது முகத்தையும் பின் வலது கையையும் அதன் பிறகு இடது கையையும் கழுவுதல். பிறகு தலையையும் கால்களையும் மஸ்ஹுசெய்தல். இஹ்தியாத்து வாஜிபின் படி முதலில் வலது காலையும் பிறகு இடது காலையும் மஸ்ஹு செய்தல். ஆகவே இந்த ஒழுங்கு முறைப் படி வுழு செய்யாது விட்டால் வழு பாத்திலாகும்.
பத்தாவது நிபந்தனை: முவாலாத் , தொடரச்சியாக ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றுதல்.
விடயம் 288 : வுழுவுடைய செயல்களுக்கு இடையில் பிரிவு ஏற்ப்பட்டால் , அதாவது ஒரு இடத்தை கழுவ அல்லது மஸ்ஹு செய்கின்ற போது அதற்கு முன் கழுவிய அல்லது மஸ்ஹு செய்த இடம் காய்ந்து விட்டால் வுழு பாத்திலாகும். மேலும் இப்போது கழுவ அல்லது மஸ்ஹு செய்யப் போகின்ற இடத்திற்கு முன்பு கழுவ அல்லது மஸ்ஹு செய்யப்பட்டதுடைய இடத்தில் ஈரத்தன்மை மட்டும் காய்ந்து விட்டால் உதாரணமாக இடது கையை கழுவப் போகின்ற போது வலது கையில் இருந்த ஈரம் காய்ந்திருந்து முகம் ஈரமாக இருந்தால் , மீண்டும் வுழுவை ஆரம்பத்திலிருந்து செய்வது சிறந்ததாகும்.
விடயம் 289 : வுழுவை தொடர்ச்சியாக செய்து வருகின்ற போது சூடான காற்று அல்லது கடும் வெப்பம் போன்ற காரணத்தால் ஈரத்தன்மை காய்ந்தால் அவரது வுழு சஹீஹாகும்.
விடயம் 290 : வுழு செய்து கொண்டிருக்கும் போது நடத்தலில் பிரச்சினை இல்லை. இதன்படி முகத்தையும் கைகளையும் கழுவியதன் பிறகு கொஞ்சம் நடந்து பின் தலையையும் கால்களையும் மஸ்ஹு செய்தால் அவரது வுழு சஹீஹாகும்.
பதினோராவது நிபந்தனை: தானாகவே வுழு செய்தல் , வேறொருவர் செய்து விட்டாலோ அல்லது உதவி செய்தாலோ வுழு பாத்திலாகும்.
விடயம் 291 : வுழு செய்வதற்கு சக்தி இல்லாத ஒருவர் , அவருக்கு வுழு செய்து விடுவதற்காக வேண்டி பகரமாக ஒருவரை எடுக்க வேண்டும். அவர் கூலி கேட்டால் அதைக் கொடுக்க முடியுமாயின் கட்டாயமாக கொடுக்க வேண்டும். ஆனால் இஹ்தியாத்து வாஜிபின் படி இருவரும் வுழுவுடைய நிய்யத்தை வைக்க வேண்டும். இன்னும் தனது கையாலேயே மஸ்ஹு செய்ய வேண்டும். முடியாது விட்டால் பகரமாக வந்தவர் கையைப் பிடித்து மஸ்ஹுசெய்ய வேண்டிய இடத்தில் தடவ வேண்டும். இதற்கும் முடியாது போனால் அவரது கையில் இருந்து பகரமாக வந்தவர் ஈரத்தை எடுத்து அதன் மூலம் சக்தியில்லதவருடைய தலையையும் கால்களையும் மஸ்ஹு செய்து விட வேண்டும். மேலும் இஹ்தியாத்து முஸ்தப்பின் படி முடியுமாக இருந்தால் வுழுவுடன் சேர்த்து தயம்மமும் செய்து விட வேண்டும்.
விடயம் 292 : வுழுவுடைய செயல்களில் தன்னால் இதை செய்ய முடியும் என்றிருந்தால் அதைச் செய்து விடுவதற்கு உதவி எடுக்கக் கூடாது.
பனிரெண்டாவது நிபந்தனை: தண்ணீரைப் பாவிப்பது அவருக்கு தடையில்லாது இருத்தல்.
விடயம் 293 : வுழுச் செய்தால் நோயாளியாகி விடுவார் அல்லது இருக்கின்ற நீரை வுழுச் செய்வதற்குப் பயன் படுத்தினால் தாகத்துடன் இருக்க வேண்டிய நிலை ஏற்ப்படும் என அஞ்சும் ஒருவர் அதன் மூலம் வுழுச் செய்தால் அவரது வுழு இஹ்தியாத்து வாஜிபின் படி பாத்திலாகும். ஆனால் தண்ணீரைப் பாவிப்பதால் ஏதும் தீங்கு இருக்கின்றதா இல்லையாவென அறியாது வுழுச் செய்து பின் அதனால் அவருக்கு தீங்கு இருப்பதாக அறிந்தால் செய்யப்பட்ட வுழு சஹீஹாகும். அந்த வுழுவுடன் தொழுதிருந்தால் அதை திரும்பத் தொழுவது இஹ்தியாத்து முஸ்ஹப்பாகும்.
விடயம் 294 : முகம் , கைகளில் வுழு சஹீஹாகும் அளவுக்கு குறைந்தளவாக நீரைப் பாவிப்பது அவருக்கு தீங்கை ஏற்ப்படுத்தாது , மாறாக அதை விட கூடுதலாக பாவிப்பது தீங்கை விளை விக்கும் என்றிருந்தால் குறைவான அளவே பாவித்து வுழு செய்ய வேண்டும்.
பதிமூன்றாவது நிபந்தனை: வுழுவுடைய உறுப்பக்களில் தண்ணீர் படுவதைத் தடுக்கும் ஒன்று இல்லாது இருத்தல்.
விடயம் 295 : ஒருவர் வுழுவுடைய உறுப்புக்களில் தண்ணீர் சேருவதை தடுக்கும் ஒன்று ஒட்டி இருந்தால். பின் அது தண்ணீர் உடம்பில் படுவதை தடுக்கின்றதா இல்லையா என சந்தேகம் கொண்டால் கட்டாயம் அதை நீக்க வேண்டும். அல்லது அதன் கீழ் தண்ணீரை சேர வைக்க வேண்டும்.
விடயம் 296 : நகத்துக்கு கீழ் சீல் இருந்தால் வுழுச் செய்வதில் பிரச்சினை இல்லை. ஆனால் நகத்தை வெட்டினால் வுழுச் செய்வதற்கு முதல் சீலை சுத்தம் செய்ய வேண்டும். மேலும் நகம் பொதுவாக அளவை விட பெரியதாக இருந்தால் அதன் கீழ் இருக்கும் சீல் அதன் வெளிரங்க உறுப்பாக கணிக்கப் படும். எனவே கட்டதயமாக நகத்தின் அளவுக்கு இருக்கின்ற சீலை சுத்தம் செய்ய வேண்டும்.
விடயம் 297 : முகம் , கை , நெற்றியின் மேல் கால்களில் எரிவு அல்லது வேறு காரணமாக பொக்கிலம் ஏற்ப்பட்டால் அதை மேலால் கழுவுவது , மஸ்ஹுசெய்வது போதுமாகும். அதில் ஓட்டை ஏற்ப்பட்டாலும் அதன் கீழ் தண்ணீர் செலுத்த வேண்டும் என்பது அவசியமில்லை. அத்துடன் அதன் ஒரு பகுதியின் தோல் கிளிந்தால் ஒட்டியிருக்கும் பகுதிற்கு கீழ் நீர் செலுத்த வேண்டும் என்பது அவசியமில்லை. மேலும் வேறாகியுள்ள தோல் உடம்பில் சில வேலை ஒட்டியும் சில வேலை ஒட்டாமலும் இருந்தால் அதை முற்றாக வேறாக்க வேண்டும். அல்லது அதன் கீழ் பகுதிற்கும் மேல் பகுதிற்கும் தண்ணீரை செலுத்த வேண்டும்.
விடயம் 298 : வுழுவுடைய உறுப்பில் ஏதாவது ஒட்டியுள்ளதாக ஒருவர் சந்தேகித்தால் அவரது சந்தேகமும் மக்கள் மத்தியிலும் ஏற்ப்படும் என்றிருந்தால் உதாரணமாக களி வேலை செய்ததன் பின் அது அவரது உடம்பில் ஒட்டியுள்ளதா இல்லையாவென சந்தேகம் கொள்வது போல் , இந்நிலையில் அதை நன்று பார்க்க வேண்டும் பின் நன்றாக அவ்விடத்தை ஒட்டியுள்ளவை இல்லாது விட்டது அல்லது அதன் கீழ் நீர் சென்று விட்டது என உறுதி வரும் வரை அதை நன்று கழுவ வேண்டும்.
விடயம் 299 : கட்டாயமாக கழுவ வேண்டிய பகுதியை மஸ்ஹு செய்தால் அதில் உள்ள கொழுப்புத் தன்மை தண்ணீர் உடம்பில் சேருவதைத் தடுக்காது என்றிருந்தால் அதில் பிரச்சினையில்லை. அதேபோல் சுண்ணாம்பு அல்லது அது போன்ற வேலை செய்ததன் பின் வெள்ளை நிறமான அவைகள் தண்ணீர் உடம்பில் சேருவதைத் தடுக்காது என்றிருந்தால் அது இருப்பதில் பிரச்சினையில்லை. ஆனால் அவை இருப்பது தண்ணீர் சேருவதைத் தடுக்குமா இல்லையா என சந்தேகித்தால் கட்டாயமாக அதை சுத்தம் செய்ய வேண்டும்.
விடயம் 300 : வுழு செய்வதற்கு முன் வுழுவின் உறுப்புக்களில் தண்ணீர் சேருவதைத் தடுக்கும் ஒன்று அதில் இருக்கின்றது என அறிந்து , வுழு செய்ததின் பின் அவ்விடத்திற்கு நீர் சென்றதா இல்லையா ? என சந்தேகித்தால் , வுழுச் செய்யும் போது அதை கவனித்து கொண்டுதான் இருந்தார் என்றிருந்தால் அவரது வுழு சஹீஹாகும்.
விடயம் 301 : வுழுவுடைய உறுப்புக்களில் சில பொருட்கள் இருக்கின்றன அதன் கீழ் சில சமயம் நீர் தாமாகவே செல்கின்றன. சில சமயம் தண்ணீர் செல்வதில்லை. இந்நிலையில் வுழு செய்ததின் பின் அங்கு நீர் சென்றதா இல்லையாவென சந்தேகம் ஏற்ப்பட்டால் , வுழுச் செய்யும் போது அதன் கீழ்ப் பகுதிக்கு நீர் செல்வதை கவனித்துச் செய்ய வில்லை என்றிருந்தால் திரும்ப வுழுச் செய்ய வேண்டும்.
விடயம் 302 : வுழுச் செய்ததன் பின் வுழுவின் உறுப்புக்களில் நீர் செல்வதைத் தடுக்கும் ஒன்று இருப்பதைக் கண்டால் , அது வுழுச் செய்வதற்க முன் இருந்ததா அல்லது பின் வந்ததா ? என தெரியாது போனால் அவரது வுழு சஹீஹாகும். ஆனால் வுழுச் செய்யும் போது அதைக் கவனிக்க வில்லையென்றிருந்தால் இரண்டாவது தடவை வுழுச் செய்ய வேண்டும்.
விடயம் 303 : வுழு செய்ததன் பின் ஒருவர் வுழுவுடைய உறுப்புக்களில் தண்ணீர் படுவதை தடுக்கும் ஒன்று இருந்ததா இல்லையாவென சந்தேகம் கொண்டால் , அச்சந்தேகமும் புத்திரீதியானதாக இருந்தால் , மேலும் அவர் வுழு செய்த போது அவைகளை கவனித்தே தான் செய்தார் என்கின்ற போது அவரது வுழு சஹீஹாகும்.
விடயம் 304 : ஒருவர் வுழுவுடைய செயல்களிலும் அதன் நிபந்தனைகளிலும் , உதாரணமாக தண்ணீர் சுத்தமாக இருத்தல் , அது அபகரிக்கப்பட்டதாக இல்லாதிருத்தல் போன்றவை , அதிக சந்தேகம் கொள்பவராக இருந்தால் அவரது சந்தேகத்தை கவனிக்கக் கூடாது.
விடயம் 305 : வுழுவுடன் இருந்த ஒருவர் அவரது வுழு பாத்திலாகி விட்டதா இல்லையாவென சந்தேகித்தால் அவர் வுழுவுடன் தான் இருக்கின்றார் என கருதிக் கொள்வார். ஆனால் சிறுநீர் கழித்து இஸ்திப்ரா செய்தாது பின் வுழு செய்திருந்தால் அதன் பின்னர் அவரிலிருந்து ஒருவகையான ஈரம் வெளிவந்தால் , அது சிறு நீரா அல்லது வேறெதுவுமா என்று அறியாது போனால் அவரது வுழு பாத்திலாகும்.
விடயம் 306 : வுழு செய்தேனா இல்லையாவென ஒருவர் சந்தேகித்தால் அவர் கட்டாயம் வுழு செய்ய வேண்டும்.
விடயம் 307 : வுழுச் செய்தார் , சிறுதொடக்கும் அவரில் ஏற்ப்பட்டது என்று அறிந்த ஒருவருக்கு , அவை இரண்டில் எது முதல் இடம்பெற்றது என்று தெரியாது போனால் , இது தொழுகைக்கு முதல் இருந்தால் கட்டாயம் வுழுச் செய்ய வேண்டும். தொழுது கொண்டிருக்கையில் என்றால் அதை நிறுத்தி விட்டு வுழுச் செய்யது ஆரம்பத்திலிருந்து நிறைவேற்ற வேண்டும். தொழுகைக்குப் பின்னதாக இருந்தால் வுழுச் செய்து அதை இரண்டாவதாக தொழ வேண்டும்.
விடயம் 308 : தொழுது முடிந்ததன் பின் ஒருவருக்கு வுழுச் செய்தாரா இல்லையாவென சந்தேகம் ஏற்ப்பட்டால் , அவர் தொழ ஆரம்பிக்கும் போது இதை கவனித்தார் என இடம்பாடு அவருக்கு ஏற்ப்பட்டால் அவரது தொழுகை சஹீஹாகும். ஆனால் மற்ற தொழுகைகளை நிறைவேற்ற வுழுச் செய்ய வேண்டும்.