Back | Index | Next |
விடயம் 339: வுழுவுடைய இடத்தில் காயம் முறிவு இல்லாதிருந்தால் , வேறொரு விதத்தில் நீர் கை , முகத்தில் படுவது அவருக்கு தீங்கை விளைவிற்குத் என்றிருந்தால் அவர் கட்டாயம் தயம்மும செய்ய வேண்டும். இன்னும் கை அல்லது முகத்தின் ஒரு பகுதிக்குத்தான் தீங்கு ஏற்ப்படும் என்றிருந்தால் இஹ்தியாத்து வாஜிபின் படி அதன் ஓரப் பகுதிகளை கழுவ வேண்டும் இன்னும் தயம்மும் செய்ய வேண்டும்.
விடயம் 340: வுழுவுடைய உறுப்புக்களில் ஒரு இடத்தில் குழாய் வைக்கப் பட்டிருந்தால் அதில் தண்ணீரால் கழுவவும் முடியாது என்றிருந்தால் , அல்லது நீர் பட்டால் விளைவு ஏற்ப்படும் என்றிருந்தால் , மேலும் அதன் மேல் பகுதி மூடப் பட்டிருந்தால் பெண்டேசுடைய பகுதியில் கூறப் பட்டது போல் செய்து கொள்வான். ஆனால் அதன் மேல் பகுதி திறந்திருந்தால் அதன் ஓரங்களை பழுவியதன் பின்னர் இஹ்தியாத்து வாஜிபின் படி துணி ஒன்றை அதன் மேல் வைத்து ஈரமான கையை அதில் தடவ வேண்டும்.
விடயம் 341 : வுழு அல்லது குளிப்புடைய இடத்தில் ஒன்று ஒட்டிக் கொண்டிருந்தால் அதை நீக்க முடியாது என்றிருந்தால் அல்லது அதை நீக்குவது தாங்கமுடியா கடும் கஸ்டத்தைக் கொடுக்கும் என்றிருந்தால் பெண்டேசுடைய சட்டத்தின் படி செய்து கொள்வான்.
விடயம் 342: பெண்டேசுடைய குளிப்பும் பெண்டேசுடைய வுழுவைப் போன்றது தான். ஆனால் இஹ்தியாத்து வாஜிபின் படி அதை இர்திமாஸி இல்லாது தர்தீபின் படி நிறை வேற்ற வேண்டும்.
விடயம் 343: தயம்மும் செய்ய வேண்டிய ஒருவர் , தயம்மத்துடைய சில இடங்களில் காயம் அல்லது பொக்குலம் அல்லது முறிவு காணப்பட்டால் அவர் பெண்டேசுடைய சட்டத்தின் படி தயம்மும் ஜபீரே செய்து கொள்வார்.
விடயம் 344: ஜபீரேவுடைய குளிப்பு அல்லது வுழுவே ஜபீரேவுடன் தொழும் ஒருவருக்கு , தொழுகையின் கடைசி நேரம் வரைக்கும் அக்காரணம் நீங்க மாட்டாது என்று அறிந்தால் , அதன் ஆரம்ப நேரத்தில் தொழ முடியும். ஆனால் அக்காரணம் தொழுகையின் கடைசி நேரம் வரை நீங்கி விடும் என்ற நம்பிக்கை இருந்தால் இஹ்தியாத்து வாஜிப் அவர் கடைசி நேரம் வரை பொருமையாக இருப்பார் அவரது காரணம் நீங்க வில்லை என்றால் ஜபீரேவுடைய குளிப்பு அல்லது ஜபீரேவுடைய வுழுவுடன் தொழுவார்.
விடயம் 345: தயம்மம் செய்ய வேண்டுமா ? அல்லது வுழுவே ஜபீரே செய்ய வேண்டுமா ? என்று அறியாத ஒருவர் இஹ்தியாத்து வாஜிபின் படி அவ்விரண்டையையும் செய்ய வேண்டும்.
விடயம் 346: வுழுவே ஜபீரே உடன் தொழப் பட்ட தொழுகைகள் சஹீஹாகும். அவரது காரணம் நிங்கியதன் பிறகு , அதன் பின் நிறைவேற்றப் படும் தொழுகைகளுக்கு வுழு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவரது கடமை ஜபீரேயா அல்லது தயம்மமா என்று அறியாது அவ்விரண்ரடையும் செய்திருந்தால் கட்டாயமாக அதன் பின் நிறைவேற்றப் படும் தொழுகைகளுக்கு வுழுச் செய்ய வேண்டும்.
வாஜிபான குளிப்புகள் ஏழு வகைப் படும்: முதலாவது ஜனாபதுடைய குளிப்பு இரண்டாது கைளுடைய குளிப்பு மூன்றாவது நிபாஸுடைய குளிப்பு நான்காவது இஸ்திஹாளாவுடைய குளிப்பு ஐந்தாவது மைய்யித்தை தொட்டதுடைய குளிப்பு ஆறாவது மைய்யிதுடைய குளிப்பு ஏழாவது நேர்ச்சை அல்லது சத்தியம் போன்றவற்றால் அவர்கள் மீது கடமையாகும் குளிப்பு.
விடயம் 347 : இரண்டு விடயங்கள் மூலம் மனிதன் ஜுனுபாளியாகின்றான்.
முதலாவது: உடலுறவு கொள்ளல்
இரண்டாவது: இந்திரியம் வெளியாகுதல் , தூக்கத்தில் அல்லது விழிப்பில் , கூடுதலாக அல்லது குறைவாக , இச்சையுடன் அல்லது இச்சை இல்லாது , உணர்வுடன் அல்லது உணர்வு இல்லாது இருந்தாலும் சரியே.
விடயம் 348 : ஒருவரிலிருந்து ஈரம் வெளியானால் அது இந்திரியமா அல்லது சிறுநீரா அல்லது அது போன்றதா என்று அறியாது போனால் , அது இச்சையுடன் , குதித்து வெளி வந்திருந்தால் அதன் பிறகு தன் உடம்பு பலவீனமடைந்திருந்தால் அதற்கு இந்திரியத்துடைய சட்டமாகும். அதில் மேற் கூறிய எந்த அடையாளங்கள் அல்லது அதில் சில இல்லாது இருந்தால் அதற்கு இந்திரியத்துடைய சட்டம் இல்லை. ஆனால் பெண்ணிலும் நோயாளிலும் அந்த தண்ணீர் குதித்து வெளி வர வெண்டும் என்ற அவசியமில்லை , மாறாக இச்சையுடன் வெளி வந்திருந்தால் அதற்கு இந்திரியதுடைய சட்டமாகும். அவரது உடல் மலவீனமடைய வேண்டும் என்பது அவசியமில்லை.
விடயம் 349 : மனிதன் இந்திரியம் வெளி வந்ததன் பிறகு சிறுநீர் கழிப்பது முஸ்தப்பாகும். சிறுநீர் கழிக்காது குளித்தன் பிறகு அவனிலிருந்து ஒரு விதமான ஈரம் வெளியாகி அது இந்திரியமா அல்லது வேற வகையான ஈரமா என்று அறியமுடியாது போனால் அதற்கு இந்திரியத்துடைய சட்டமாகும்.
விடயம் 350 : ஒருவர் உடலுறவு கொண்டால் , ஆண்குறியின் முன்பகுதியின் அளவு அல்லது அதை விட அதிகமாக நுழைந்தால் , பெண்ணில் அல்லது ஆணில் , முன் பக்கத்தில் அல்லது பின் பக்கத்தில் இருந்தால் , பருவ வயதை அடைந்த அல்லது அடையாதவரில் இருந்தால் இந்திரியம் வெளி வந்தாலும் சரி வெளி வர இல்லை என்றாலும் சரி அவர்கள் இருவரும் ஜுனுபாளியாகின்றனர்.
விடயம் 351 : ஒருவர் ஆண்குறியின் முன் பகுதி வரை நுழைந்ததா இல்லையா என சந்தேகம் கொண்டால் குளிப்பு அவர் மீது கடமை இல்லை.
விடயம் 352 : இறைவன் நம்மைப் பாதுகாக்க வேண்டும் , ஒருவர் மிருகத்துடன் சேர்க்கை கொண்டால் , அவரிலிருந்து இந்திரியமும் வெளியானால் குளிப்பு மட்டும் போதுமாகும். இந்திரியம் வெளிவர வில்லையெனில் , சேர்க்கை செய்வதற்கு முன் வுழுவுடன் இருந்திருந்தாலும் குளிப்பு மட்டும் போதுமாகும். வுழுவுடன் இல்லாதிருந்திருந்தால் இஹ்தியாத்து வாஜிப் குளிக்கவும் வேண்டும் பின் வுழுவும் செய்ய வேண்டும்.
விடயம் 353 : இந்திரிம் அதன் இடத்திலிருந்து குதித்து வெளியில் வர வில்லையென்றால் அல்லது ஒருவர் இந்திரியம் அவரிலிருந்து வெளியாகதா இல்லையாவென சந்தேகம் கொண்டால் அவர் மீது குளிப்பு கடமை இல்லை.
விடயம் 354 : குளிக்க முடியாத ஒருவர் ஆனால் அவருக்கு தயம்மம் செய்ய முடியும் , தொழுகையின் நேரம் வந்த பின் தன் மனைவியுடன் நோக்கமின்றி சேர்ந்தால் அதில் பிரச்சினை இருக்கின்றது ஆனால் ஆசைக்காக அல்லது தன் மனதின் மீது கொண்ட பயத்தால் சேர்ந்திருந்தால் அதில் பிரச்சினையில்லை.
விடயம் 355 : ஒருவர் தனட ஆடையில் இந்திரயத்தைக் கண்டால் , அது அவருடையது தான் எனவும் அதற்காக குளிக்க வில்லை என அறிந்தால் கட்டாயம் குளிக்க வேண்டும். இந்திரயம் வெளி வந்ததன் பிறகு நிறைவேற்றப் பட்டவை என உறுதி கொள்ளும் தொழுகைகளையும் கழாச் செய்ய வேண்டும். ஆனால் சந்தேகத்துடன் சில தொழுகைகளை இந்திரியம் வெளியானதன் பிறகு தொழப் பட்டவை என சந்தேகமாக நினைத்து கூறினால் அவைகளை கழாச் செய்ய வேண்டிய அவசியமில்லை.
விடயம் 356 : ஐந்து விடயங்கள் ஜுனுபாளிக்கு ஹராமாகும்.
முதலாவது: உடம்பில் ஒரு பகுதியை குர்ஆனுடைய எழுத்தில் பட வைத்தல் , அல்லது அல்லாஹ் என்ற பெயரில் , இஹ்தியாத்து வாஜிபின் படி நபிமார்களுடைய , இமாம்களுடைய பெயர்களுக்கும் அல்லாஹ் என்றதுடைய சட்டமேயாகும்.
இரண்டாவது: மஸ்ஜிதுல் ஹராம் மஸ்ஜிதுன் நபியிக்குல் செல்லுதல் , அது ஒரு கதவினால் நுழைந்து மறு கதவினால் வெளியாவது என்றாலும் சரியே.
மூனாறாவது: வேறு பள்ளி வாயள்களில் தரித்திருத்தல் , ஆனால் ஒரு கதவினால் நுழைந்து மறு கதவினால் வெளியாவதற்காக , அல்லது ஒன்றை எடுப்பதற்காக நுழைவதில் தடையில்லை. இஹ்தியாத்து வாஜிப் இமாம்களுடைய ஹரத்திலும் தரிக்கதாது இருத்தல். இமாம்களுடைய ஹரம்களில் மஸ்ஜிதுல் ஹராம் மஸ்ஜிதுன் நபியினது சட்டங்களை பேணிக் கொள்வது நல்லது.
நான்காவது: பள்ளியில் ஏதாவது ஒன்றை வைத்தல்.
ஐந்தாவது: குர்ஆனில் வாஜிபான ஸஜதா இருக்கின்ற சூராவை ஓதுதல்.அது நான்கு சூராவாகும். 01 -குர்ஆனில் இருபத்திரெண்டாவது அத்தியாயம் ( சூரா ஸஜ்தா) 02 - நாற்பத்தி ஓறாவது அத்தியாயம் ( சூரா ஹாமீம் ஸஜதா ) 03 - ஐம்பத்தி மூன்றாவது அத்தியாயம் ( சூரா நஜ்ம்) 04 - தொன்னூற்றி ஆறாவது அத்தியாயம் (சூரா அலக்)
இந்த நான்கு சூராக்களிலிருந்து ஒரு எழுத்தை மொழிவதாக இருந்தாலும் சரியே அதுவும் ஹராமாகும்.
விடயம் 357 : ஒன்பது விடயம் ஜுனுபாளிக்கு மக்ரூஹாகும்.
ஒன்று , இரண்டு: உண்ணுதல் , குடித்தல் , ஆனால் வுழு செய்து கொண்டால் மக்ரூஹ் இல்லை.
மூன்று: வாஜிபான ஸஜதாக்கள் இல்லாத சூராக்களிலிருந்து ஏழு ஆயத்துக்களுக்கு கூடுதலாக ஓதுதல்.
நான்காவது: குர்ஆனுடைய உரை , அட்டைகளை , அதன் ஓரப்பகுதியைத் தொடுதல்.
ஐந்தாவது: குர்ஆனை தன்னுடன் வைத்திருத்தல்
ஆறாவது: தூங்குதல் , ஆனால் வுழுச் செய்தால் அல்லது தண்ணீர் இல்லாததால் குளிப்புக்கு பதிலாக தயம்மம் செய்தால் மக்ரூஹ் இல்லை.
ஏழாவது: மருதாணியிடல்.
எட்டாவது: உடம்பில் எண்ணெய் பூசுதல்.
ஒன்பதாவது: தூக்கத்தில் முஹ்தலிமானதன் பின் உடலுறவு கொள்ளுதல்.
விடயம் 358 : முழுக்குடைய குளிப்பு தனிமையில் அது முஸ்தஹப்பாகும். ஆனால் தொழுகை அல்லது அது போன்றதை நிறைவேற்றுவதற்காக குளிப்பது வாஜிபாகும். ஆனால் மையித்துத் தொழுகைக்காக , நன்றியுடைய ஸஜதாவைச் செய்வதற்காக , குர்ஆனின் வாஜிபான ஸஜதாக்களை நிறைவேற்றுவதற்காக ஜனாபத்துடைய குளிப்பை செய்வது அவசியமில்லை.
விடயம் 359 : குளிக்கின்ற நேரத்தில் வாஜிபான அல்லது முஸ்தஹப்பான குளிப்பை நிறைவேற்றுகிறேன் என்று நிய்யத்து வைப்பது அவசியமில்லை. ஆனால் இறை கட்டளையை நிறைவேற்ற குளிக்கின்றேன் என்ற எண்ணம் இருந்தால் போதுமாகும்.
விடயம் 360 : குளிப்பை வாஜிபாக இருந்தாலும் சரி , முஸ்தஹப்பாக இருந்தாலும் சரி இரண்டு முறையில் நிறைவேற்றப் படும். ஒன்று தர்தீபி மற்றது இர்திமாஸி
விடயம் 361 : தர்தீபி முறையிலான குளிப்பில் நிய்யத்துக்குப் பிறகு முதலில் தலை கழுத்தை கழுவுதல். பின் உடம்பின் வலது பக்கத்தைக் கழுவுதல். அதற்குப் பிறகு உடம்பின் இடது பக்கத்தை கழுவுதல். வேண்டுமென்றோ அல்லது மறதியாகவோ அல்லது சம்பந்தமான சட்டம் தெரியாமலோ இந்த் முறையை விட்டால் அவரது குளிப்பு பாத்திலாகும்.
விடயம் 362 : தொப்பிலின் அரைவாசியையும் அவ்ரத்தின் அரைவாசியையும் வலது பக்கத்துடனும் மற்றப் பக்கத்தை இடது பக்கத்துடனும் கழுவ வேண்டும். என்றாலும் ஒவ்வொரு பக்கம் கழுவும் போது தொப்புல் மற்றும் அவ்ரத்தின் எல்லாப் பகுதியையும் கழுவுவது சிறந்தது.
விடயம் 363 : மூன்று பகுதியும் அதாவது தலை கழுத்து , வலது பக்கம் , இடது பக்கம் முழுவதும் கழுவப் பட்டு விட்டு என்று உறுதி ஏற்ப்படுவதற்காக வேண்டி , ஒவ்வொரு பக்கத்தையும் கழுவும் போது மற்றப் பகுதியையும் சேர்த்துக் கழுவுவ வேண்டும். என்றாலும் இஹ்தியாத்து முஸ்தஹப் களுத்தின் வலது பக்கம் முழுவதையும் உடம்பின் வலது பக்கத்துடன் சேர்த்தும் அதன் இடது பக்கத்தை உடம்பின் இடது பக்கத்துடன் சேர்த்தும் கழுவ வேண்டும்.
விடயம் 364 : குளித்து முடிந்தன் பிறகு உடம்பில் ஒரு இடம் கழுவப் பட வில்லை என அவருக்கு விளங்கினால் , அது எந்த இடம் என அறியாது போனால் கட்டாயம் அவர் திரும்பக் குளிக்க வேண்டும்.
விடயம் 365 : குளித்து முடிந்ததன் பின் உடம்பில் ஒரு பகுதி கழுவப் பட வில்லை என அவர் உணர்ந்தால் , அது இடது பக்கமாக இருந்தால் அதை மட்டும் கழுவினால் போதுமாகும். அது வலது பக்கமாக இருந்தால் அதைக் கழுவியதன் பின் இடது பக்கத்தையும் கழுவ வேண்டும். ஆனால் அது தலை கழுத்தின் இருந்தால் அதைக் கழுவியதன் பின் இரண்டாவது தடவையாக உடம்பின் வலது பக்கத்தையும் அதன் பின் இடது பக்கத்தையும் கழுவ வேண்டும்.
விடயம் 366 : குளித்துக் கொண்டிருக்கையில் , இடது பக்கத்தில் ஒரு பகுதியை கழுவியதில் சந்தேகம் ஏற்ப் பட்டால் , அவ்விடத்தை மாத்திரம் கழுவுவது போதுமாகும். ஆனால் இடது பக்கத்தை கழுவி முடித்ததும் வலது பக்கத்தில் கழுவியதில் சந்தேகம் கொண்டால் அல்லது வலது பக்கத்தை கழுவி முடிந்ததும் தலை கழுத்தை கழுவியதில் சந்தேகம் ஏற்ப் பட்டால் அச்சந்தேகத்தைக் கவனிக்கப் படமாட்டாது.
விடயம் 367 : இர்திமாஸி முறையிலான குளிப்பில் தண்ணீர் ஒரே தடவையில் உடம்பு முழுவதையும் எடுக்கும் அளவுக்கு இருத்தல். இர்திமாஸியான குளிப்பின் நிய்யத்துக்கு பின் ஒரே தடவையில் மெதுவாக தண்ணீருக்கு கீழ் சென்றார் அவரது குளிப்பு சஹீஹாகும்.
விடயம் 368 : இர்திமாஸான குளிப்பில் உடம்பு தண்ணீருக்குல் இருந்தால் , குளிப்புடைய நிய்யத்துக்குப் பிறகு உடம்பை உசுப்பினால் அவரது குளிப்பு சஹீஹாகும். ஆனால் இஹ்தியாத்து முஸ்தஹப்பு உடம்பின் அதிகமான பகுதி தண்ணீருக்கு வெளியில் இருந்து நிய்யத்துக்குப் பிறகு தண்ணீருக்குல் செல்ல வேண்டும்.
விடயம் 369 : இர்திமாஸான குளிப்புக்கு பிறகு உடம்பின் ஒரு பகுதியில் நீர் பட வில்லை என அறிந்தால் , அவ்விடத்தை அறிந்தாலும் சரி அறிய வில்லை என்றாலும் சரி அவர் இரண்டாவது தடவையாக குளிக்க வேண்டும்.
விடயம் 370 : தர்தீபி முறையிலான குளிப்புக்கு நேரம் இல்லாது இருந்து இர்திமாஸியான குளிப்புக்கு நேரம் இருந்தால் கட்டாயமாக இர்திமாஸாகத்தான் குளிக்க வேண்டும்.
விடயம் 371 : வாஜிபான நோன்பைப் பிடித்திருக்கும் ஒருவர் அல்லது ஹஜ் அல்லது உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியிருக்கும் ஒருவர் இர்திமாஸாக குளிக்க முடியாது. ஆனால் மறதியா குளித்தால் அவரது குளிப்பு சஹீஹாகும்.
விடயம் 372 : இர்திமாஸாக குளிக்கின்ற போது கட்டயமாக உடம்பு சுத்தமாக இருக்க வேண்டும். ஆனால் தர்தீபியான குளிப்பில் சுத்தமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. உடம்பு முழுவதும் நஜிஸாக இருந்து ஒவ்வொரு பகுதியையும் கழுவுவதற்கு முன் அதன் மீது தண்ணீரை ஊற்றினால் போதுமாகும்.