Back | Index | Next |
விடயம் 373 : ஹராமான முறையில் ஜுனுபாகியிருக்கு ஒருவரது வியர்வை நஜிஸ் இல்லை. ஹராமான வழி மூலம் ஜுனுபாகியிருக்கு ஒருவர் சுடு நீரால் குளித்தாலும் அவரது குளிப்பு சஹீஹாகும்.
விடயம் 374 : குளிக்கின்ற போது தலை முடியின் அளவு அவரது உடம்பில் கழுவப் பட வில்லை என்றாலும் அவரது குளிப்பு பாத்திலாகும். ஆனால் வெளியில் தெறியாத இடங்களைக் கழுவுவது உதாரணமாக காதினுல் , மூக்கினுல் வாஜிப் இல்லை.
விடயம் 375 : உடம்பின் உற்பகுதியா வெளிப்பகுதியா என சந்தேகம் கொள்ளும் இடத்தை இஹ்தியாத்து வாஜிபின் படி அதைக் கழுவுவது வாஜிபாகும். ஆனால் முன்பு உற்பகுதியாக கனிக்கப் பட்டு இப்போது அது வெளியாகி விட்டதா என சந்தேகம் கொண்டால் தவிர. இந்நிலையில் அதைக் கழுவ வேண்டிய அவசியமில்லை.
விடயம் 376 : மன்னியுடைய ஓட்டை இன்னும் அது போன்றவை மிகவும் பெரிதாக இருந்து அதன் உற்பகுதி தெறிந்தால் அதுவும் உடம்பின் வெளிப்பகுதியாகவே கனிக்கப் படும். எனவே கட்டாயமாக அதைக் கழுவ வேண்டும். ஆனால் தெறிய வில்லை என்றால் அது உம்பின் உற்பகுதியாகும். எனவே உற்ப்பகுதியை கழுவ வேண்டிய அவசிமில்லை.
விடயம் 377 :நீர் படுவதைத் தடுக்கும் ஒன்று உடம்பில் இருந்தால் கட்டாயமாக அதை நீக்க வேண்டும். அது நீக்கப் பட்டு விட்டு என்று உறுதி ஏற்படுவதற்கு முதல் குளித்தால் அது சரியாகாது.
விடயம் 378 : குளித்துக் கொண்டிருக்கும் போது தண்ணீர் சேருவதைத் தடுக்கும் ஒன்று உடம்பில் உள்ளதா இல்லையா என சந்தேகம் கொண்டால் , அவரது சந்தேகம் புத்தி ரீதியானதாக இருந்தால் , அதில் ஒன்றும் இல்லை என உறுதி வருவதற்காக அதைப் பார்க்க வேண்டும்.
விடயம் 379 : குளிக்கின்ற போது உடம்பின் பகுதி என கனிக்கப் படுகின்ற கட்டையான முடிகளையும் கட்டயாம் கழுவ வேண்டும். இஹ்தியாத்தின் பிரகாரம் பெரிய முடிகளையும் கழுவுவது அவசியமாகும்.
விடயம் 380 : வுழு சஹீஹாவதற்கு இருக்கின்ற எல்லா நிபந்தனைகளும் உதாரணமாக நீர் சுத்தமாக இருத்தல் , அபகரிக்கப் பட்டதாக இல்லாதிருத்தல்... குளிப்புக் கடமையாவதற்கும் இருக்கின்றது. ஆனால் குளிக்கின்ற போது உடம்பை மேலிருந்து கீழ் நோக்கிக் கழுவுவது அவசியமில்லை. இன்னும் தர்தீபியான குளிப்பில் கூட ஒரு பகுதியை கழுவிய பிறகு மறு பகுதியை உடனடியாக கழுவ வேண்டும் என்ற அவசியமில்லை. என்றாலும் தலையையும் கழுத்தையும் கழுவியதன் பிறகு கொஞ்ச நேரம் பொறுமையாக இருந்து பின் வலது பக்கத்தையும் சற்று நேரத்தின் பின் இடது பக்கத்தையும் கழுவினால் அதில் பிரச்சினை இல்லை. முஸ்தஹாளான பெண்ணைத் தவிர அது பற்றி பின்னர் கூறப் படும்.
விடயம் 381 : பொதுவான குளியறையில் குளித்து அதற்குறிய பணத்தை அதன் சொந்தக் காரருக்கு கொடுக்கக் கூடாது என்ற நினைப்பில் இருக்கும் ஒருவர் , அல்லது சொந்தக் காரர் பொருந்திக் கொள்வாரா என்று அறியாது அவருக்கு கடன் சொல்ல இருக்கும் ஒருவர் , குளித்தன் பின் குளியலறை சொந்தக் காரரை பொருந்த வைத்தாலும் சரி அவரது குளிப்பு பாத்திலாகும்.
விடயம் 382 : ஒருவர் பொதுவான குளியலறையில் குளித்து அதற்காக ஹராமான முறையில் வந்த பணத்தைக் கொடுத்தாலோ அல்லது கும்ஸைக் கொடுக்காத பணத்தைக் கொடுத்தாலோ அவரது குளிப்பு பாத்திலாகும்.
விடயம் 383 : ஒரு குளியறையின் சொந்தக் காரர் கடன் கூறுவதையும் பொருந்திக் கொள்பவராக இருந்தால் , ஆனால் அங்கு குளிப்பர் அவரது பணத்தைக் கொடுப்பதில்லை அல்லது அதை ஹராமான பணத்தில் இருந்து தான் கொடுப்பது என்று நினைத்தால் அவரது குளிப்பு பாத்திலாகும்.
விடயம் 384 : ஒருவர் சேகரித்துள்ள தண்ணீரில் மலம் வெளியாகும் இடத்தை சுத்தம் செய்து அதல் குளிப்பதற்கு முன் தான் இதில் மலம் வெளியாகும் இடத்தை சுத்தம் செய்தேன் எனவே நான் இங்கு குளிப்பதற்கு அதன் சொந்தக் காரர் இனங்குவாரா ? இல்லையா என சந்தேகம் கொண்டு அங்கு குளித்தால் அவரது குளிப்பு பாத்திலாகும். ஆனால் குளிப்பதற்கு முதல் குளியலறையின் சொந்தக் காரரை அவர் பொருந்த வைத்துக் கொண்டால் தவிர.
விடயம் 385 : ஒருவர் குளித்தேனா இல்லையா என சந்தேகம் கொண்டால் அவர் கட்டாயமாக குளிக்க வேண்டும். ஆனால் குளித்து முடிந்ததன் பிறகு தன் குளிப்பு சரியா இல்லையா என சந்தேகம் கொண்டால் அவர் இரண்டாவது முறையாக குளிக்க வேண்டிய அவசிய மில்லை.
விடயம் 386 : குளித்தக் கொண்டிருக்கையில் அவருக்கு சிறு தொடக்கு ஏற்ப்பட்டால் உதாரணமாக சிறு நீர் கழித்தல்... குளித்து முடிந்ததும் வுழுச் செய்ய வேண்டும்.
விடயம் 387 : ஒருவர் குளித்து விட்டு தொழ நெரம் இருக்கின்றது என்ற நினைப்புடன் தொழுகைக்காக வேண்டி குளித்தால் , பின்னர் குளிக்கும் அளவுக்கும் நேரம் இருக்க வில்லை என அறிந்து கொண்டால் அவரது குளிப்பு சஹீஹாகும்.
விடயம் 388 : ஜுனுபான ஒருவர் குளித்தாரா இல்லையா என சந்தேகம் கொண்டால் அதற்கு முன் தொழப் பட்ட தொழுகைகள் அனைத்தும் சஹீஹாகும். ஆனால் பின் தொழப் போகின்றவைக்கு கட்டாயம் குளிக்க வேண்டும்.
விடயம் 389 : பல குளிப்புக்கள் கடமையான ஒருவருக்கு அவை அனைத்தினது நிய்யத்துடனும் ஒரு தரம் குளிக்கவும் முடியும். அவைகளை வௌவேறாக செய்யவும் முடியும்.
விடயம் 390 : ஒருவரது உடம்பின் மேல் குர்ஆனுடைய வசனம் அல்லது அல்லாஹுடைய பெயர் எழுதப் பட்டிருந்தால் அல்லது அதை மை மூலம் குத்தியிருந்தால் ஜுனுபாவதற்கு முன் அதை அழித்து விட வேண்டும். அல்லது குளிக்கின்ற போது அதில் தண்ணீரை மட்டும் ஓட விட்டு கை படாது கவனமாக குளிக்க வேண்டும்.
விடயம் 391 : ஜனாபத்துடைய குளிப்பபை நிறைவேற்றிய ஒருவர் தொழுகைக்காக வேண்டி வுழுச் செய்யக் கூடாது. ஆனால் வேறு வகையான வாஜிபான குளிப்பாக இருந்தால் , நடுத்தரமான இஸ்திஹாலாவுடைய குளிப்பைத் தவிர , குளித்ததன் பின் வுழு இல்லாது தொழவும் முடியும். வுழுச் செய்து கொள்வது சிறந்ததது என்றிருந்தாலும் சரியே.
பெண்களில் இருந்து வெளியாகும் இரத்தங்களில் ஒன்று இஸ்திஹாழாவுடைய இரத்தமாகும். இஸ்திஹாழாவுடைய இரத்தம் வெளியானதன் பிறகு பெண்ணை முஸ்தஹாழா என்று கூறப் படும்.
விடயம் 392: இஸ்திஹாழாவுடைய இரத்தம் அநேகமாக மஞ்சள் கலராகவும் குளிராகவும் இருக்கும். வேகமாக சூடாக வெளி வரவுமாட்டாது. கட்டியாகவும் இருக்க மாட்டாது. ஆனால் சில சமயங்களில் கருப்பும் சிவப்பும் கலந்ததாக சூடாக இன்னும் கட்டியாக இருக்கும். மேலும் வேகமாக சூடாக வெளி வரும்.
விடயம் 393: பொதுவாக பெண்ணிருந்து வெளியாகும் ஒவ்வொரு இரத்தமும் காயத்தின் மூலமாக இல்லாதிருந்தால் இன்னும் ஹைழு (மாதாந்த ருது ) உடையதாவும் இல்லாதிருந்தால் அது இஸ்திஹாழுவுடைய இரத்தமாகும். அதில் மேலே கூறிய நிபந்தனைகள் இல்லாதிருந்தாலும் சரியே.
விடயம் 394: இஸ்திஹாழா மூன்று வகைப் படும்.
குறைவானது (கலீலா ): பெண்ணுறுப்பில் வைக்கின்ற பஞ்சி அல்லது துணியின் மேல் பகுதியில் மட்டும் பட்டு அதன் உற்பகுதிக்கு செல்லாதவை.
நடுத்தரமானவை (முதவஸ்ஸிதா): பெண்ணுறுப்பில் வைக்கின்ற பஞ்சி அல்லது துணியின் மேல் பகுதியில் மட்டும் பட்டு அதன் உற்பகுதிக்கும் சென்று மறு பக்கமாக வெளியாகாதவை.
அதிமானவை (கஸீரா): பெண்ணுறுப்பில் வைக்கின்ற பஞ்சி அல்லது துணியின் மேல் பகுதியில் மட்டும் பட்டு அதன் உற்பகுதிக்கும் சென்று மறு பக்கமாகவும் வெளியாகுபவை.
விடயம் 395 : இஸ்திஹாழா குறைவாக இருக்கின்ற போது ஒவ்வொரு தொழுகைக்கும் வுழு செய்ய வேண்டும். இரத்தம் பெண்ணுறுப்பின் மேல் பகுதியில் பட்டிருந்தால் கழுவ வேண்டும். மேலும் இஹ்தியாத்து வாஜிபின் படி பஞ்சை அல்லது துணியை மாற்ற வேண்டும் அல்லது கழுவ வேண்டும்.
விடயம் 396 : தொழுகைக்கு முதல் அல்லது தொழுது கொண்டிருக்கையில் நடுத்தரமான அளவு இஸ்திஹாழாவுடைய இரத்தம் வெளியானால் கட்டாயம் அந்த தொழுகைக்கு குளிக்க வேண்டும். ஆனால் நடுத்தரமான (முதவஸ்ஸிதான ) நிலையில் சுபஹுக்கு முதல் குளித்தால் அடுத்த சுபஹ் வரும் வரை ஒவ்வொரு தொழுகைக்கும் மேலே குறைவான பகுதியில் சொல்லப் பட்டவாரு செய்து கொள்ள வேண்டும். ஆனால் மேண்டுமென்று அல்லது மறதியால் குளிக்காது இருந்தால் கட்டாயமாக ளுஹர் அஸருடைய தொழுகைக்கு குளிக்க வேண்டும். அதற்கும் குளிக்க வில்லை என்றால் கட்டயாமாக மஃரிப் இஷாவுக்கு முதல் கட்டாயம் குளிக்க வேண்டும்.
விடயம் 397 : இஸ்திஹாழா அதிகமாக இருக்கின்ற போது நடுத்தரமான நிலையில் கூறப் பட்டவைகளை செய்வதுடன் ஒவ்வொரு தொழுகைக்கும் பஞ்சை அல்லது துணியை மாற்ற அல்லது அதைக் கழுவ வேண்டும். இன்னும் ளுஹர் அஸருக்காக ஒரு முறையும் மஃரிப் இஷாவுக்காக ஒரு முறையும் குளிக்க வேண்டும். இவை இரண்டு தொழுகைகளு க்கும் இடையில் பிரிக்க வில்லை என்றால் தான் , ஆனால் அவைகளுக்கிடையில் பிரித்தால் இரண்டாவது தொழுகைக்காகவும் (அவைகள் அஸர் இஷா ) குளிக்க வேண்டும்.
விடயம் 398 : தொழுகையுடைய நேரம் வருவதற்கு முன் நடுத்தரமான அல்லது கூடுதலான இஸ்திஹாழாவுடைய இரத்தம் வெளிவந்து பின் நின்று விட்டால் இஹ்தியாத்து வாஜிபின் படி தொழுகைக்காக குளித்துக் கொண்டு வுழுவும் செய்ய வேண்டும். ஆனால் அதற்கு முதல் தொழுகைக்காக குளித்திருந்தால் இன்னும் குளிப்பதற்கு முதல் இரத்தம் முற்றாக நின்றிருந்தால் தவிர.
விடயம் 399 : நடுத்தர இஸ்திஹாழாவுடைய பெண் வுழுவும் செய்ய வேண்டும் குளிக்கவும் வேண்டும். அவைகளில் எதை முதலில் செய்தாலும் சஹீஹாகும். ஆனால் முதலில் வுழுச் செய்வது சிறந்தது.
விடயம் 400 : குறைவான இஸ்திஹாழாவுடைய பெண் சுபஹ் தொழுகையின் பின் நடுத்தர நிலைக்கு மாறினால் கட்டயாமாக ளுஹர் அஸர் தொழுகைகளுக்கு குளித்துக் கொள்ள வேண்டும். அதேபோல் ளுஹர் அஸருக்குப் பிறகு நடுத்தர நிலைக்கு மாறினால் மஃரிப் இஷாவுக்கு குளிக்க வேண்டும். குளித்ததன் பின் அந்நிலை தொடர்ந்திருந்தால் மறுநாள் சுபஹ் தொழுகைக்கு இரண்டு முறை குளிக்க வேண்டும்.
விடயம் 401 : நடுத்தர நிலையில் இஸ்திஹாழா உள்ள பெண் சுபஹுத் தொழுகைக்குப் பிறகு அதிகமான இஸ்திஹாழாவுடைவளாக மாறினால் கட்டாயமாக ளுஹர் அஸர் தொழுகைக்கு ஒரு முறை குளிக்க வேண்டும் , இன்னும் மஃரிப் இஷாவுக்குமாக வேறொரு முறை குளிக்க வேண்டும். அப்பெண்ணுக்கு இஸ்திஹாழா ளுஹர் அஸர் தொழுகைக்குப் பிறகு அதிகமானால் கட்டாயம் மஃரிப் இஷாவுக்கு குளிக்க வேண்டும். அதே போன்று மறுநாளில் உள்ள சுபஹுத் தொழுகைக்கும் குளிக்க வேண்டும். ஆனால் அவள் குளிப்பதற்கு முதல் அன்று இரவு இஸ்திஹாழா குறைந்தால் அல்லது அது முற்றாக நின்று விட்டால் தவிர.
விடயம் 402 : முஸ்தஹாழாவான பெண் வாஜிபான தொழுகைக்கோ அல்லது முஸ்தஹப்பான தொழுகைக்கோ கட்டாயம் வுழுச் செய்ய வேண்டும். அத்துடன் நிறைவேற்றப் பட்ட தொழுகைகளை பேனுதலுக்காக வேண்டி இரண்டாவது தடவையாக தொழ விரும்பினாலோ அல்லது தனிமையில் ( புராதா ) தொழுதவைகளை ஜமாஅத்தாக நிறைவேற்ற விரும்பினால் , அவள் இஸ்திஹாழாவுடைய பிரிவில் சொல்லப் பட்ட அத்தனை வேளைகளையும் செய்ய வேண்டும். ஆனால் இஹ்தியாத்துடைய தொழுகையை தொழுதல் , மறந்த ஸஜதாவை செய்தல் , மறந்த தஷஹ்துதை ஓதுதல் போன்றவைகளை தொழுகைக்குப் பின் உடனடியாக நிறைவேற்றினால் இஸ்திஹாழாவுடைய வேளைகளை மீண்டும் செய்ய வேண்டிய அவசியமில்லை.
விடயம் 403 : இஸ்திஹாழாவுடைய இரத்தம் முற்றாக நின்று விடும் போது அவ்விரத்தம் குறைவானதாக இருந்தால் அதை மட்டும் சுத்தம் செய்து விட்டு அடுத்து வரும் தொழுகைக்காக வுழுச் செய்யவேண்டும். அல்லது அது நடுத்த அளவானதாக அல்லது கூடுதலாக இருந்தால் கட்டாயம் குளித்துக் கொள்வதுடன் அடுத்து வரும் தொழுகைகளை நிறைவேற்ற வுழுச் செய்ய வேண்டும். இந்தக் குளிப்பை இரத்தம் நின்றதன் பின் நிறைவேற்றவும் முடியும் தொழுகையுடைய நேரம் முடிவடைந்திருந்தாலும் சரியே.
விடயம் 404 : ஒரு பெண்ணிலிருந்து இஸ்திஹாழாவுடைய இரத்தம் வெளியாகும் போது அது எந்த பிரிவைச் சேர்ந்தது என அவளுக்கு தெரியாது போனால் , தொழுவதற்கு விரும்பும் போது ஓரளவு பஞ்சியை அவரத்தினுல் வைத்து சற்று நேரம் பொருமையாக இருந்து பின் அதை வெளியெடுக்க வேண்டும். அவள் இரத்தம் இஸ்திஹாழாவின் எந்த பிரிவைச் சேர்ந்தது என அறிந்து கொண்டதன் பின் மேலே அதற்குறிய விடயத்தில் கூறப்பட்டது போல் செய்து கொள்வால். இது தொழுவதற்கு முன் இஸ்திஹாழா மாறமாட்டாது என்று அறிந்திருந்தால்தான் இதனால் தொழுகைக்கு முதலும் ஒரு முறை தன்னை பார்த்துக் கொள்ள வேண்டும்.
விடயம் 405 : முஸ்தஹாழாவான பெண் வெளியாகும் இரத்தத்தை எவ்வகையைச் சேர்ந்தது என பரிசீலித்துப் பார்க்குமுன் தொழுதால் , அவள் இறைநெருக்கத்தைப் பெறுவதற்காக வேண்டி செய்கின்றேன் என்ற என்னத்துடன் தனது கடமையை செய்திருந்தால் உதாரணமாக இஸ்திஹாழா குறைவானதாக இருந்து அதற்குறிய சட்டத்தின் படி அமல் செய்திருந்தால் அவளது தொழுகை சஹீஹாகும். ஆவ்வாறு இல்லாதிருந்தால் பாத்திலாகும்.
விடயம் 406 : முஸ்தஹாழாவான பெண்ணுக்கு தன்னை பரிசீலிக்க முடியாது போனால் தன்னுடைய கடமை என்னவோ அதன் படி செய்து கொள்வால். உதாரணமாக இஸ்திஹாழா குறைவானதா அல்லது நடுத்தரமானதா என்று தெரியாது போனால் குறைவான இஸ்திஹாழாவுடைய சட்டத்தின் படி செய்து கொள்வால். ஆனால் இதற்கு முன்னர் அந்த மூன்று வகையில் எவ்வகையைச் சேர்ந்திருந்தது என்று அறிந்திருந்தால் கட்டாயம் அதன் படி செய்து கொள்வால்.
விடயம் 407 : இஸ்திஹாழாவுடைய இரத்தம் ளுஹருடைய ஆரம்பத்தில் அதனுடைய இடத்தில் இருந்து ஓடினால் , ஆனால் அது உடம்பிலிருந்து வெளிவர வில்லை என்றால் பெண் மீது இஸ்திஹாழாவுடைய சட்டத்தை கடைப்பித்து நடக்க வேண்டுமென்பது அவசியமில்லை. வெளியானால் அதனுடைய சட்டத்தின் படி நடந்து கொள்வது வாஜபாகும்.
விடயம் 408 : முஸ்தஹாழாவான பெண் வுழுச் செய்து , குளித்துக் கொண்டிருக்கும் போது அவளிலிருந்து எந்த இரத்தமும் வெளிவர வில்லையென்று அறிந்தால் , தொழுகைக்குப் பிறகும் அவ்ரத்தினுல் ஏதும் இல்லை என்றிருந்தால் அவள் தொழுகையை பிற்படுத்த முடியும் இன்னும் அடுத்த தொழுகைகளையும் அதனுடன் சேர்த்துத் தொழவும் முடியும்.