Back Index Next

மூன்றாவது: ஒரு பெண்ணுக்கு தொடராக இரண்டு மாதங்கள் குறிப்பிட்ட திகதியில் இரத்தம் வெளியானால் , இரத்தம் வெளியாகி மூன்று நாட்களுக்குப் பிறகு , ஒரு நாள் அல்லது அதை விட அதிகமான அளவு அவள் சுத்தமாகி அதாவது இரத்தம் வெளிவராது விட்டு மீண்டும் இரத்தம் வெளியானால் அது வெளியான எல்லா நாட்களும் இடையில் சுத்தமாக இருந்த நாட்களுடன் பத்து நாட்களுக்கு அதிகமாக வில்லையென்றால் , இன்னும் அந்த இரண்டு மாதங்களில் இரத்தம் வெளியான நாட்களும் இடையில் சுத்தமாக இருந்த நாட்களும் சமமாக இருந்தால் இரத்தம் வெளியான இன்னும் இடையில் சுத்தமாக இருந்த சகல நாட்களும் அப்பெண்ணின் ஹைழுடைய நாட்களாகும். இன்னும் இரண்டு மாதங்களில் இடையில் சுத்தமாக இரந்த நாட்கள் சமமாகவே இருக்க வேண்டு என்ற அவசியில்லை. உதாரணமாக முதலாவது மாதத்தில் முதலாம் நாளில் இருந்து மூன்றாம் நாள் வரை இரத்த வெளியாகி மூன்று நாட்கள் சுத்தமாக இருந்தால் அதாவது இரத்தம் வெளிவராது இருந்தால் , இன்னும் இரண்டாவது மாதத்தில் மூன்று நாட்கள் இரத்தம் வெளியாகி  மூன்று நாட்களுக்கு அல்லது அதை விட குறைவான அளவு சுத்தமாக இரத்தம் வெளியாகாது இருந்து மீண்டும் இரத்தம் வெளியானால் இவை மொத்தமாக ஒன்பது நாட்கள் ஆகும். அப்பெண்ணுடைய ஹைழுடைய நாட்களும் ஒன்பது நாட்களாகும்.

விடயம் 476 : ஆதத்து வக்திய்யா இன்னும் அததிய்யா அதாவது மாதாந்த ருதுவில் தவணையும் எண்ணிக்கையும் உள்ள பெண்ணுக்கு அந்த கால அவகாசத்தை விட இரண்டு மூன்று நாட்கள் முன்னரோ அல்லது பின்னரோ இரத்தம் வெளியானால் அது ஹைழுடைய அடையாளங்களைக் கொண்டிருக்க வில்லை என்றாலும் சரி அவள் ஹைழுடைய பெண்ணுக்கு சொல்லப்பட்டிருக்கும் சட்டங்களைக் கடைப்பிடித்து நடந்து கொள்ள வேண்டும். இன்னும் அவள் பின்னர் அது ஹைழுடைய இரத்தம் இல்லை என அறிந்தால் , உதாரணமாக மூன்று நாட்களுக்கு முதல் நின்று விடுவது போல் , கட்டாயமாக அவள் அக்காலத்தில் செய்யாது விட்ட எல்லா வணக்கங்களையும் கழாச் செய்ய வேண்டும்.

விடயம் 477 : ஆதத்து வக்திய்யா இன்னும் அததிய்யா அதாவது மாதாந்த ருதுவில் தவணை இன்னும் எண்ணிக்கையும் உள்ள பெண்ணுக்கு , அதன் தவணை வருவதற்கு முதலும் இன்னும் தவணையின் எல்லா நாட்களிலும் மேலும் தவணை முடிந்து சில நாட்கள் அதிகமாகவும் இரத்த வெளியானால் அவை அனைத்தும் பத்து நாட்களுக்கு அதிகமாக வில்லையென்றால் அவை அனைத்தும் ஹைழுடைய நாட்களாகும். மாறாக பத்து நாட்களுக்கு மேலானால் ஹைழுடைய தவணைக்கு முன்பும் பின்பும் வந்த இரத்தம் இஸ்திஹாழாவுடைய இரத்தமாகும். ஹைழுடைய தவணைக்கு முன்னும் பின்பும் செய்யாது விட்ட வணக்கங்களை கட்டாயம் கழாச் செய்யவேண்டும்.

விடயம் 478 : ஆதத்து வக்திய்யா இன்னும் அததிய்யா அதாவது மாதாந்த ருதுவில் தவணை மற்றும் எண்ணிக்கை உள்ள பெண்ணுக்கு தவணைக்கு முதல் இரத்தம் வெளியானால் அது ஹைழுடைய எண்ணிக்கையுடன் சேர்ந்து பத்து நாளுக்கு மேலாக வில்லையென்றால் அவை அனைத்தும் ஹைழுடைய நாட்களாகும். இன்னும் பத்து நாளுக்கு மேலானால் ஹைழு ஏற்படும் நாளுக்கு முதல் வெளியானதை இஸ்திஹாழாவுடைய இரத்தமாக கருத வேண்டும். அதேபோன்றுதான் ஹைழு ஏற்பட்டு முடியும் நாளுக்குப் பிறகும் இரத்தம் வெளியானால் அது பத்து நாட்களுக்கு அதிகமாக வில்லையென்றால் அவை அனைத்தும் ஹைழுடைய இரத்தமாகும். மாறாக பத்து நாட்களுக்கு அதிகமானால் ஹைழு முடியும் நாளை கணக்கெடுத்து அதன் பிறகு வந்தவையை இஸ்திஹாழாவுடைய இரத்தமாக கருத வேண்டும்.

விடயம் 479 : ஹைழுடன் இருக்கும் பெண் , இரத்தம் வெளியாகிய நாளில் இருந்து மூன்று நாட்கள் அல்லது அதை விட அதிகமான நாட்களின் பிறகு சுத்தமாகி மீண்டும் இரண்டாவது தடவையாகவும் இரத்தம் வெளியானால் அந்த  இரண்டு இரத்தத்திற்கும் இடைப்பட்ட நாள் பத்து நாட்களை விட குறைவாக இருந்தால் ,  இரத்தம் வெளியான இன்னும் இடையில் சுத்தமாக இருந்த அனைத்தனை நாட்களும் பத்து நாட்களுக்கு அதிகமானால் ( உதாரணமாக முதல் ஐந்து நாட்களும் இரத்தம் வெளியாகி ஐந்து நாட்கள் சுத்தமடைந்து மீண்டும் ஐந்து நாட்கள் இரத்தம் வெளியாகுதல் போல்) இது பல அமைப்பாகும்:

ஒன்று: முதல் தடவையாக வெளியான எல்லா இரத்தமும் , அதன் ஒரு பகுதி ஹைழுடைய தவணைக்குல் இருந்தால் , சுத்தமடைந்ததன் பின் இரண்டாவதாக வெளியான இரத்தம் அதன் தவணைக்குல் இல்லையென்றிருந்தால் , அப்பெண் முதலாவதாக வெளியானதை ஹைழுடைய இரத்தம் என்றும் இரண்டாவதாக வெளியானதை இஸ்திஹாழாவுடைய இரத்தம் என்று கருத வேண்டும்.

இரண்டு: முதல் வெளிவந்த இரத்தம் ஹைழுடைய தவணையில் இல்லாது இரண்டாவதாக வெளியான எல்லா இரத்தமோ அல்லது அதில் ஒரு பகுதியோ ஹைழுடைய நாளில் இருந்தால் இப்பெண் இரண்டாவதாக வெளி வந்த சகல இரத்தங்களையும் ஹைழுடையதென்றும் முதலாவதாக வெளி வந்ததை இஸ்திஹாழாவுடையதென்றும் கருத வேண்டும்.

மூன்று: முதலாவதாகவும் இரண்டாவதாகவும் வெளிவந்த இரத்தத்தின் ஒரு பகுதி ஹைழுடைய நாளில் இருந்து , அதில் முதலாவதாக வெளியான இரத்தம் ஹைழுடைய நாளிலிருந்தது மூன்று நாட்களை விட குறைவாக இருக்கவில்லை என்றிருந்தால் இடையில் சுத்தமடைந்ததுடன் இரண்டாவதாக வெளியான இரத்தத்தின் ஒரு பகுதி ஹைழுடைய நாளில் இருந்தால் அவை பத்து நாட்களுக்கு குற i வாக இருந்தால் இந்நிலையில் அவை அனைத்தும் ஹைழுடைய இரத்தமாகும். இன்னும் ஹைழுடைய நாட்களுக்கு முன்பு வெளியான இரத்தமும் மேலும் ஹைழுடைய நாட்களுக்கு பிறகு வெளியான இரத்தமும் இஸ்திஹாழாவுடைய இரத்தமாகும். உதாரணமாக ஹைழுடைய நாள் மாதத்தின் மூன்றாம் நாளிலிருந்து பத்தாம் நாள் வரைக்கும் இருந்தது. ஒரு மாதம் அதன் முதலாம் நாளிலிருந்து ஆறாம் நாள் வரைக்கும் இரத்தம் வெளியாகி பின் இரண்டு நாட்கள் சுத்தமடைந்து அதன் பின் பதினைந்தாம் நாள் வரைக்கும் இரத்தம் வெளியானால் , மூன்றாம் நாளிலிருந்து பத்தாம் நாள் வரைக்கும் ஹைழுடைய இரத்தமாகும். இன்னும் மாதத்தின் முதல் நாளிலிருந்து மூன்றாம் நாள் வரைக்கும் அதேபோல் பத்தாம் நாளிலிருந்து பதினைந்தாம் நாள் வரைக்கும் இஸ்திஹாழாவுடைய இரத்தமாகும்.

நான்கு: முதலாவதாகவும் இரண்டாவதாகவும் வெளிவந்த இரத்தத்தின் ஒரு பகுதி ஹைழுடைய நாளில் இருந்து , அதில் முதலாவதாக வெளியான இரத்தம் ஹைழுடைய நாளில் இருந்தது மூன்று நாட்களை விட குறைவாக இருந்தால் , இரண்டு இரத்தங்களும் வெளியான எல்லா நேரத்திலும் இன்னும் இடையில் சுத்தமாக இருக்கும் காலத்திலும் முன்பு கூறப்பட்ட ஹைழுடையவள் மீது ஹராமான (விலக்கப்பட்ட) செயல்களை விட்டு விட வேண்டும். வாஜிபான வணக்கங்களைத் தவிர அதை முஸ்தஹாழாவான பெண்ணுடைய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது போன்று செய்து கொண்டு நிறைவேற்ற வேண்டும்.

விடயம் 480 : ஆதத்து வக்திய்யா இன்னும் அததிய்யா அதாவது மாதாந்த ருதுவில் தவணை இன்னும் எண்ணிக்கை உள்ள பெண்ணுக்கு ஹைழு ஏற்பட வேண்டிய நேரத்தில் ஹைழு வராது அது அல்லாத வேலையில் ஹைழு வரும் அளவிற்கு (நாள் அடிப்படையில்) இரத்தம் வெளியானால் , இன்னும் திகதி சென்றதன் பிறகு வந்தால் இரத்தம் வெளிவந்தவுடன் அதை ஹைழாக கருத வேண்டும். மேலும் திகதி செல்லுமுன் வந்தால் அதில் ஹைழுடைய அடையாளங்கள் காணப்பட்டால் அதை ஹைழாக கருதவேண்டும். அப்படி காணப்படவில்லை என்றால் , அது மூன்று நாட்களுக்கு தொடரும் என்று அறிய வில்லையென்றால் மூன்று நாள் வரைக்கும் ஹைழுடைய பெண்ணின் மீது ஹராமான (விலக்கப்பட்டுள்ள) செயல்களை விட வேண்டும். வாஜிபான வணக்கங்ளைத் தவிர. அதை முஸ்தஹாழாவான பெண்ணுடைய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது போன்று செய்து கொண்டு நிறைவேற்ற வேண்டும். அது மூன்று நாட்களுக்கு தொடர்ந்தால் அது ஹைழாகும்.

விடயம் 481 : ஆதத்து வக்திய்யா இன்னும் அததிய்யா அதாவது மாதாந்த ருதுவில் தவணை இன்னும் எண்ணிக்கை உள்ள பெண்ணுக்கு குறிப்பிட்ட திகதியில் இரத்தம் வெளியாகி வழமையாக வெளிவருவதை (நாள் அடிப்படையில்) விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் , இன்னும் சுத்தமடைந்ததன் பின் வழமையாக வெளிவரும் அளவுக்கு (நாள் கணக்கில்) மீண்டும் இரத்தம் வெளியானால் இஹ்தியாத்தின் படி இரண்டு விதமான இரத்தப் போக்கிலும் ஹைழுடைய பெண்ணின் மீது விலக்கப்பட்டிருக்கும் செயல்களை விட்டுவிட வேண்டும். வாஜிபான வணக்கங்களைத் தவிர அதை இஸ்தஹாழாவுடைய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது போன்று செய்து கொண்டு நிறைவேற்ற வேண்டும்.

விடயம் 482 : ஆதத்து வக்திய்யா இன்னும் அததிய்யா அதாவது மாதாந்த ருதுவில் தவணை மற்றும் எண்ணிக்கை உள்ள பெண்ணுக்கு பத்து நாட்களை விட அதிகமாக இரத்தப்போக்கு இருந்தால் , ஹைழு ஏற்படும் தவணையில் வெளியான இரத்தத்தில் ஹைழுடைய அடையாளங்கள் இருக்கவில்லை என்றிருந்தாலும் சரி அது ஹைழாகும். இன்னும் ஹைழு வெளியாகும் தவணைக்குப் பிறகு வெளியான இரத்தத்தில் ஹைழுடைய அடையாளங்கள் இருந்தாலும் அது இஸ்திஹாழாவுடைய இரத்தமாகும். உதாரணமாக மாதத்தின் முதலாவது நாளிலிருந்து ஏழாவது நாள் வரைக்கும் ஹைழுடைய இரத்தப்போக்குள்ள ஒரு பெண்ணுக்கு , மாதத்தின் முதலாவது நாளிலிருந்து அதன் பனிரெண்டாவது நாள் வரை இரத்தப்போக்கு தொடர்ந்தால் அதன் ஒன்றிலிருந்து ஏழு நாள் வரைக்குமுள்ள நாட்கள் ஹைழு h கும். பிந்திய ஐந்து நாட்களும் இஸ்திஹாழாவுடைய நாட்களாகும்.

2. சாஹிபு ஆததில் வக்திய்யா

விடயம் 483 : ஆதத்து வக்திய்யா அதாவது குறிப்பிட்ட திகதியில் இரத்தப்போக்கு ஏற்படுவதை தெரிந்துள்ள பெண்கள் மூன்று வகைப்படும். அவர்கள்

முதலாவது: தொடராக இரண்டு மாதங்கள் குறிப்பிட்ட திகதியில் ஹைழு ஏற்படும் பெண் , அது வெளியாகி சில நாட்களுக்குப் பின் அவள் சுத்தமடைகின்றாள். ஆனால் தொரடாக இரண்டு மாதங்களிலும் இரத்தப் போக்கிருந்த நாட்கள் சமமாக இல்லை. உதாரணமாக தொடராக இரண்டு மாதங்களிலும் முதல் நாளில் இரத்தப்போக்கு ஆரம்பிக்கின்றது. ஆனால் முதல் மாதத்தில் ஏழாவது நாளிலும் இரண்டாவது மாதத்தில் ஆறாவது நாளிலும் இரத்தப்போக்கிலிருந்து சுத்தமடைகின்றாள் , இந்தப் பெண் , மாதத்தின் முதலாவது நாளை அவளது ஹைழுடைய பமாக கருத வேண்டும்.

இரண்டாவது: இரத்தப் போக்கிலிருந்து சுத்தமடையாத பெண் ஆனால் அவளுக்கு தொடராக இரண்டு மாதங்கள் இரத்தப்போக்கு குறிப்பிட்ட தேதியில் ஆரம்பிக்கின்றது இன்னும் அதில் ஹைழுடைய அடையாளங்களும் இருக்கின்றது. அதாவது கட்டியான சூடாகவும் கருப்புக் கலந்த சிவப்பு நிறமுடையதாகவும் அல்லது கடும் சிவப்பாகனதாகவும் இருக்கின்றது. மேலும் குதித்து சிறிதளவு சூட்டுடன் வெளிவரும் , இன்னும் மற்றவை இஸ்திஹாழதாவுடைய அடையாளங்களைக் கொண்டிருந்தால் , இன்னும் இரத்தம் ஹைழுடைய அடையாளங்கனளைக் கொண்டிருந்த நாட்கள் இரண்டு மாதத்திலும் ஒரே அளவாக இருக்கவில்லையென்றால் , உதாரணமாக முதலாவது மாதத்தில் முதலாம் றாளிலிருந்து ஏழாம் நாள் வரைக்கும் இரண்டாம் மாதத்தில் முதலாம் நாளிலிருந்து எட்டாம் நாள் வரைக்கும் அவளுடைய இரத்தம் ஹைழுடைய அடையாளங்களைக் கொண்டிருந்தால் மற்றவை இஸ்திஹாழாவுடைய அடையாளங்களைக் கொண்டிருந்தால் இப்படியான பெண்ணும் மாதத்தின் முதலாவது நாளை ஹைழுடய ஆரம்ப நாளாக கருத வேண்டும்.

மூன்றாவது: ஒரு பெண்ணுக்கு தொடராக இரண்டு மாதங்கள் குறிப்பான தேதியில் , மூன்று நாட்கள் அல்லது அதை விட அதிகமாக இரத்தப் போக்கு ஏற்பட்டு பின்னர் அது சுத்தமடைந்து இரண்டாவது தடவையாகவும் இரத்தம் வெளியானால் இரத்தம் வெளியாகிய அனைத்து நாளும் அடையில் சுத்தமாக இருந்த நாட்களுடன் சேர்த்து பத்து நாட்களுக்கு அதிகமாகாது இருந்தால் ஆனால் இரண்டாம் மாதத்தில் முதலாம் மாதத்தை விட குறைவாக அல்லது கூடுதலாக இருந்தால் , உதாரணமாக முதலாம் மாதத்தில் எட்டு நதட்களும் இரண்டாம் மாதத்தில் ஏழு நாட்களுமாக இருந்தால் இந்தப் பெண்ணும் மாதத்தின் முதலாவது நாளை ஹைழுடைய ஆரம்பநாளாக கருதவேண்டும்.

விடயம் 484 : ஆதத்து வக்திய்யா உள்ள பெண் , அவளுக்கு மாதாந்த ருது ஏற்படும் நாட்களை விட இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முதல் அது ஏற்பட்டால் அது ஹைழுடைய அடையாளங்களைக் கொண்டிருக்க வில்லையென்றாலும் சரி அப்பெண்ணும் மேலே ஹைழுடைய பெண்களுக்கு சொல்லப்பட்டவாறு செய்து கொள்ள வேண்டும். மேலும் அவள் பின்னர் அது ஹைழு இல்லை என அறிந்தால் , உதாரணமாக மூன்று நாட்களுக்கு முதல் சுத்தமடைவது போல் , அந்நிலையில் விடப்பட்ட வணக்கங்களை எல்லாம் கழாச் செய்ய வேண்டும்.

விடயம் 485 : ஆதத்து வக்திய்யா உள்ள பெண்ணுக்கு , பத்து நாட்களுக்கு அதிகமாக இரத்தப்போக்கு இருந்து அதை ஹைழுடைய அடையாளங்களை வைத்து இணங்கண்டு கொள்ள முடியாது போனால் , அவள் தனது குடும்பத்தினருக்கு இரத்தப்போக்கிருக்கும் நாட்களை அறிந்து இவளும் அதே அளவு வைத்துக் கொள்வாள் , குடும்பம் என்பது தந்தை வழியிலும் தாய் வழியிலும் சரி உயிருடன் இருந்தாலும் சரி அல்லது மரணித்திருந்தாலும் சரி. அவர்கள் அனைவரது இரத்தப்போக்குள்ள நாட்கள் ஒரே அளவாக இருக்கின்ற போதே இவள் அதை வைத்துக் கொள்ள முடியும். ஒரே அளவாக இருக்கவில்லை என்றால் உதாரணமாக சிலருக்கு ஐந்து நாட்களும் இன்னும் சிலருக்கு ஏழு நாளும் இரத்தப்போக்கு இருந்திருந்தால் இப்பெண்ணும் அதை இவளுடைய ஹைழுடைய அளவாக கருத முடியாது. ஆனால் அவர்களில் சிலருக்கு மற்றவர்களை விட குறைவாக இரத்தப்போக்கு இருக்கின்றது அதை அவர்களுடன் ஒப்பிடும்போது அது பெரிதாக வித்தியாசப்பட வில்லை என்றிருந்தால் இந்நழலையில் அவர்களுக்கு அதிகமாக இரத்தப்போக்கு இருக்கின்ற நாட்களை இவளும் தன்னுடைய ஹைழுடைய நாளாக கருத வேண்டும்.

விடயம் 486 : ஆதத்து வக்திய்யா உள்ள பெண் தன்னுடைய ஹைழுடைய அளவுக்கும் தன் குடும்பத்தினரது ஹைழுடைய அளவை எடுத்திருந்தால் அவள் ஒவ்வொரு மாதமும் இரத்தம் வெளியாகும் நாளை அவளது ஹைழுடைய முதலாவது நாளாக கருத வேண்டும். உதாரணமாக ஒரு பெண்ணுக்கு மாதத்தில் முதலாவது நாள் இரத்தம் வெளியாகி சிலவேலை ஏழாவது நாளில் சிலவேலை எட்டாவது நாளில் சுத்தமடைகின்றது. அவளுக்கு மாதத்தல் பனிரெண்டு நாட்கள் இரத்தப்போக்கு இருந்து தனது குடும்பத்தினருக்கு ஏழு நாட்கள் இரத்தப்போக்கு இருந்தால் இவளும் முதல் ஏழு நாளை ஹைழாகவும் மற்றவையை இஸ்திஹாழாவாகவும் கருதவேண்டும்.