Back | Index | Next |
விடயம் 446: ஒரு பெண்ணுக்கு மூன்று நாட்களுக்கு குறைவாக இரத்தம் வெளி வந்து அது சுத்தமடைந்து பின் இரண்டாவது தடவையாகவும் வெளிவந்து அது மூன்று நாட்களுக்கு தொடர்ந்தால் இரண்டாவதாக வெளிவந்த இரத்தம் ஹைழுடைய இரத்தமாகும். முதலாவதாக வெளிவந்த இரத்தம் ஹைழுடையதல்ல.
விடயம் 447 : ஹைழுடையவள் மீது சில விடயங்கள் தடை செய்யப் பட்டுள்ளது (ஹராமாகும்).
முதலாவது: வுழுவுடன் அல்லது குளித்துக் கொண்டு அல்லது தயம்மத்துடன் செய்ய வேண்டிய தொழுகை போன்ற வணக்கங்கள். ஆனால் மையித்துத் தொழுகை போன்ற வுழு , குளிப்பு , தயம்மும் அவசிமியல்லாத வணக்கங்களை செய்வதற்து தடையில்லை.
இரண்டாவது: ஜுனுபாளியின் மீது ஹராமான அனைத்து விடயங்களும் ஹைழுடயவள் மீதும் ஹரதமாகும். அது ஜுனுபுடைய சட்டங்களில் கூறப்பட்டு விட்டது.
மூன்றாவது: பெண்ணுறுப்பில் புணருதல் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஹராமாகும். அது ஆணுறுப்பில் கத்னாவுடைய பகுதி மட்டும் பெண்ணுறுப்பினுல் நுழைந்து இந்திரியம் வரவில்லை என்றாலும் சரியே. ஆனால் இஹ்தியாத்து வாஜிபின் படி கத்னாவுடைய பகுதியையும் விட குறைவாகவும் நுழைக்கக் கூடாது. ஹைழுடைய பெண்ணின் பின் பக்கமாக புணருதல் , அவர் அதை விரும்பினால் , கடுமையான முறையில் வெறுக்கத் தக்கதாகும். அதாவது கடும் மக்ரூஹ் ஆகும்.
விடயம் 448 : உண்மையில் ஹைழு உறுதியாகாத நாட்களில் சேர்க்கை செய்வது , ஆனால் கட்டாயம் அவள் அந்நாளை தனக்கு ஹைழுடைய நாளாக கனித்தால் ஹராமாகும். எனவே பத்து நாட்களுக்கு மேலாக ஹைழு ஏற்ப்படும் பெண் பின்னர் கூறப்டும் சட்டத்தின் படி தன்னுடைய சொந்தக் காரர்களின் எத்தனை நாட்கள் ஹைழுடையவர்களாக இருக்கின்றதறோ அதை தனது ஹைழுடைய நாளாக வைத்துக் கொள்வால். அந்நாட்களில் கணவர் அவளுடன் சேர முடியாது.
விடயம் 449 : கணவர் ஹைழுடன் இருக்கும் தன் மனைவியின் முன்குறியில் புணர்ந்தால் இஹ்தியாத்து வாஜிபின் படி கப்பரா (குற்றப்பரிகாரம்) கொடுக்க வேண்டும். அவை கீழ் வரும் அளவைக் கொண்டிருக்கும்:
ஒரு பெண் ஹைழுடன் இருக்கும் நாட்களை மூன்று வகைகளாகப் பிரிக்கப்படும். ஒரு ஆண் அதன் முதலாவது பகுதியில் உடலுறவு கொண்டால் பதினெட்டு (1 8) கொண்டைக் கடலையுடைய அளவு தங்கம் குற்றப்பரிகாரமாக ஏழைகளுக்கு கொடுக்கவேண்டும். இன்னும் அதன் இரண்டாவது பகுதியில் சேர்ந்தால் ஒன்பது (9) கொண்டைக் கடலையுடைய அளவு கொடுக்க வேண்டும். அதேபோல் மூன்றாம் பகுதியில் சேர்ந்தால் நாலரை (4 1 ஃ2) கொண்டைக் கடலையின் அளவு தஹ்கம் ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும். உதாரணமாக ஒரு பெண் ஆறு நாளைக்கு ஹைழுடையவளாக இருக்கின்றால் இந்நிலையில் அவளுடைய கணவர் முதலாம் அல்லது இரண்டாம் இரவுகளில் அவளுடன் சேர்க்கை செய்தால் 1 8 கொண்டைக் கடலையின் அளவு தங்கம் கொடுக்கவேண்டும். இன்னும் அவன் தன் மனைவியுடன் மூன்றாம் அல்லது நான்காம் இரவுகளில் சேர்க்கை செய்தால் 9 கொண்டைக் கடலையின் அளவு தங்கம் கொடுக்க வேண்டும். இன்னும் ஐந்தாம் அல்லது ஆறாம் இரவுகளில் அவளுடன் சேர்ந்தால் 4 1 ஃ2 அளவு கொண்டைக் கடலை தங்கம் குற்றப்பரிகாரமாக கொடுக்கவேண்டும்.
விடயம் 450 : ஹைழுடன் இருக்கும் பெண்ணின் பின் பக்கமாக புணர்ந்தால் அதற்காக கப்பாரா எனும் குற்றப்பரிகாரம் இல்லை.
விடயம் 451 : உடலுறவு கொண்டபோது தங்கத்துக்கு இருந்த விலைக்கும் அதை ஏழைகளுக்குக் கொடுக்கப் போகும் போது அதற்கு இருக்கும் விலைக்கும் இடையில் வித்தியாசம் காணப்பட்டால் கட்டாயம் அவர் தற்போதுள்ள விலையையே கவனிக்க வேண்டும்.
விடயம் 452 : ஒருவர் ஹைழுடைய முதலாவது பகுதியிலும் , இரண்டாவது பகுதியிலும் இன்னும் மூன்றாவது பகுதியிலும் தனது மனைவியுடன் சேர்க்கை செய்தால் அவர் கட்டாயமாக அம்மூன்று பகுதியிற்காகவும் குற்றப்பரிகாரத்தைக் கொடுக்க வேண்டும். அதாவது 37 ½ கொண்டைக் கடலையின் அளவுக்கு தங்கம் கொடுக்க வேண்டும்.
விடயம் 453 : ஒருவர் தன் மனைவி ஹைழுடைய நிலையில் இருக்கும் போது அவளுடன் சேர்க்கை செய்து அதற்காக வேண்டி குற்றப்பரிகாரத்தையும் கொடுத்து விட்டு பின் மீண்டும் அவளுடன் சேர்ந்தால் மீண்டும் அதற்காகவும் குற்றப்பரிகாரம் கொடுக்க வேண்டும்.
விடயம் 454 : ஹைழுடைய ஒரு பெண்ணுடன் பல தடவைகள் சேர்ந்தால் , அவைகளுக்கு இடையில் குற்றப்பிரகாரத்தைக் கொடுக்க வில்லையாயின் இஹ்தியாத்து வாஜிபின்படி ஒவ்வொரு தரம் சேர்ந்ததற்கும் ஒருதடவை குற்றப் பரிகாரம் கொடுக்கவேண்டும்.
விடயம் 455 : ஒருவர் சேர்க்கை செய்து கொண்டிருக்கும் போது பெண் ஹைழுடையவள் என அறிந்தால் உடனடியாக அவளை விட்டு விழகிவிட வேண்டும். மாறாக அவளை விட்டு விழகவில்லையென்றால் இஹ்தியாத்து வாஜிபின் படி குற்றப்பரிகாரம் கொடுக்கவேண்டும்.
விடயம் 456 : ஒருவர் ஹைழுடைய அந்நிய பெண்ணுடன் விபச்சாரம் செய்தால் , அல்லது மஹ்ரமல்லாத ஹைழுடைய பெண்ணுடன் அவள் தனக்கு மனைவியாகுபவள் தானே என்ற நினைப்புடன் அவளுடன் சேர்க்கை செய்தால் இஹ்தியாத்து வாஜிபின் படி கட்டாயம் குற்றப்பரிகாரம் கொடுக்க வேண்டும்.
விடயம் 457 : குற்றப்பரிகாரம் கொடுக்க முடியாத ஒருவர் இஹ்தியாத்தின்படி பசியுடன் இருக்கும் ஒரு ஏழையின் பசி முற்றாக தீருகின்ற அளவு சதகா கொடுக்க வேண்டும். அதற்கும் சக்தி இல்லை என்றிருந்தால் இஸ்திஃபார் செய்ய வேண்டும்.
விடயம் 458 : ஹைழுடைய நிலையில் பெண்ணை தலாக் சொன்னால் அத்தலாக் பாத்திலாகும் இது பற்றி விரிவாக தலாக்குடைய பகுதியில் கூறப்படும்.
விடயம் 459 : ஒரு பெண் ஹைழுடன் இருக்கின்றேன் என்றோ அல்லது ஹைழை விட்டும் தூய்மையாகி விட்டேன் என்று கூறினால் கட்டாயம் அவளது சொல்லை ஏற்க வேண்டும்.
விடயம் 460 : ஒரு பெண்ணுக்கு தொழுது கொண்டிருக்கும் போது ஹைழு ஏற்பட்டால் அவளது தொழுகை பாத்திலாகும்.
விடயம் 461 : ஒரு பெண் தொழுது கொண்டிருக்கும் போது ஹைழு வந்து விட்டதா இல்லையா என சந்தேகம கொண்டால் அச்சந்தேகத்தை அவள் கவனிக்காது தொழுகையை தொடர்ந்து செய்வாள். ஆனால் தொழுது முடிந்ததன் பின் தொழுது கொண்டிருக்கும் போது ஹைழு வந்தது என அறிந்தால் அவள் தொழுதவை பாத்திலாகும்.
விடயம் 462 : ஹைழை விட்டு சுத்தமானதன் பிறகு தொழுகைக்காக இன்னும் வுழுவுடன் அல்லது குளித்து அல்லது தயம்மம் செய்து செய்ய வேண்டிய வணக்கங்களை நிறைவேற்ற கட்டாயம் குளிக்க வேண்டும். அதற்குறிய சட்டம் ஜனாபத்துடைய சட்டத்தைப் போலவாகும். ஹைழுடைய குளிப்பும் ஜனாபத்துடைய குளிப்பைப் போன்று குளித்து முடிந்ததன் பின் தொழுகைக்காக வுழுச் செய்யவேண்டிய அவசியமில்லை. என்றாலும் தொழுகைக்காக வேண்டி குளிப்புக்கு முதல் அல்லது அதற்குப் பிறகு வுழுச் செய்து கொள்வது சிறந்ததாகும். ஆனால் இவைகளுக்குகாக குளிப்பதற்கு முதல் வுழுச் செய்து கொள்வது மிகவும் சிறந்தது.
விடயம் 463 : ஒரு பெண் ஹைழை விட்டு சுத்தமடைந்ததன் பின் அவள் குளிக்க வில்லை என்றாலும் சரி அந்நிலையில் தலாக் சொன்னால் அது சஹீஹாகும். இன்னும் கணவனுக்கு அவளுடன் உடலுறவு கொள்ளவும் முடியும். என்றாலும் இஹ்தியாத்து முஸ்தஹப்பின் படி அவள் குளிக்கின்ற வரைக்கும் அவளுடன் சேராமல் இருக்க வேண்டும். ஆனால் ஹைழுடன் இருக்கின்ற போது அவள் மீது ஹராமாக இருந்த விடயங்கள் அனைத்தும் உதாரணமாக பள்ளி வாயலில் தரிபடல் , குர்ஆனுடைய எழுத்தை தொடுதல்... போன்றவை குளிக்கின்ற வரைக்கும் அவளுக்கு ஹலாலாகாது.
விடயம் 464 : குளிப்பதற்கு போதுமான அளவு தண்ணீர் இல்லாது போனால் ஆனால் இருக்கின்ற தண்ணீர் வுழுச் செய்வதற்கு போதுமாக இருந்தால் அதன் மூலம் வுழுச் செய்வாள் குளிப்புக்கு பகரமாக தயம்மம் செய்வாள். இருக்கின்ற தண்ணீர் ஒன்றுக்கும் போதுமாகாததாக இருந்தால் இரண்டு தயம்மம் செய்வாள். ஒன்று குளிப்புக்கு பதிலாக மற்றது வுழுவுக்கு பதிலாக இருக்கும்.
விடயம் 465 : ஹைழுடைய காலத்தில் தொழாது விடப்பட்ட நாளாந்த தொழுகைகளை கழாச் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் விடுபட்ட வாஜிபான நோன்புகளை கழாச் செய்ய வேண்டும்.
விடயம் 466 : தொழுகையின் நேரம் வந்ததும் அதில் தொழாது தாமதித்தால் ஹைழு ஏற்பட்டுவிடும் என்று அறிந்தால் உடனடியாக தொழுகையை நிறைவேற்ற வேண்டும்.
விடயம் 467 : ஒரு பெண் தொழுகையை தாமதப்படுத்தினால் , தொழுகையின் ஆரம்ப நேரத்திலிருந்து அதை தொழுது முடிக்கும் நேரம் கழித்து பின் ஹைழு ஏற்பட்டால் , அத்தொழுகையை கழாச்செய்வது அவள் மீது கடமையாகும். அதில் அவள் அவசரவசரமாக அல்லது மெதுவாக ஓதுவதையும் அது போன்ற வேறு விடயங்களைக் கவனிக்க வேண்டும். உதாரணமாக பிரயாணி இல்லாத பெண் ளுஹருடைய ஆரம்ப நேரத்தில் அதை தொழாது விட்டால் அது அவளுக்கு நான்கு ரகஅத்துக்கள் தொழும் நேரம் கழித்ததன் பின் ஹைழு ஏற்பட்டால் தான் அவள் மீது கடமையாகும். இன்னும் பிரயாணிக்கு இரண்டு ரகஅத்துக்கள் தொழுவதுடைய நேரம் போதுமாகும். எனவே இந்த நேரத்தக்குள் ஹைழு ஏற்பட்டால் தான் கடமை இல்லாது போனால் கடமை இல்லை.
விடயம் 468 : ஒரு பெண் தொழுகையின் கடைசி நேத்தில் ஹைழை விட்டும் சுத்தமானால் குளித்து அதனுடன் சம்பந்தப்பட்ட ஏனைய விடயங்களை அதாவது ஆடை அணிதல் அல்லது அதை கழுவுதல் இன்னும் அத்தொழுகையின் ஒரு ரகஅத் அல்லது அதை விட அதிகமாக தொழ முடியும் என்ற அளவுக்கு நேரம் இருந்தால் கட்டாயம் அதைத் தொழவேண்டும் தொழாது விட்டால் அதைக் கழாச் செய்ய வேண்டும்.
விடயம் 469 : ஹைழுடைய பெண்ணுக்கு குளிக்கும் அளவுக்கு நேரம் இல்லாது இருந்தால் அவளுக்கு தயம்மம் செய்து அதன் நேரத்தில் தொழுவதற்கு நேரம் இருந்தால் அது அவள் மீது வாஜிப் இல்லை. ஆனால் நேரம் கடந்து மிகவும் குறுகியதாக இருக்கின்ற போது தயம்முமே செய்ய வேண்டும். உதாரணமாக தண்ணீர் ஆபத்தை விளைவிக்கும் ஒருவள் கட்டாயம் தயம்மம் செய்து அத்தொழுகையை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்ய வில்லையென்றால் அதைக் கழாச் செய்வது வாஜிபாகும்.
விடயம் 470 : ஹைழை விட்டும் சுத்தமடைந்த பெண் தொழுவதற்கு நேரம் இருக்கின்றதா இல்லையா என சந்தேகம் கொண்டால் அவள் அத்தொழுகையை நிறைவேற்ற வேண்டும்.
விடயம் 471 : ஒரு பெண் தொழுகைகுறிய முதல் வேலைகளைச் செய்து ஒரு ரகஅத் தொழுவதற்கு நேரம் இல்லை என நினைத்து தொழாது விட்டு பின் நேரம் இரந்தது என அறிநதால் கட்டாயம் அதை கழாச் செய்ய வேண்டும்.
விடயம் 472 : ஹைழுடைய பெண் தொழுகையின் நேரத்தில் தன்னை சுத்தப்படுத்தவதும் , பஞ்சி , துணி போன்றவைகளை மாற்றி வுழுச் செய்து கொள்வது முஸ்தஹப்பாகும். அதற்கு முடியாது போனால் தயம்மம் செய்ய வேண்டும். இன்னும் தொழும் இடத்தில் கஃபாவை முன்னோக்கி இருந்து திக்ரு , துஆ , ஸலவாத் போன்றவைகளில் ஈடுபடுதல்.
விடயம் 473 : ஓதுதல் , குர்ஆனை சுமத்தல் , குர்ஆனின் ஓரப்பகுதிகளை இன்னும் அதன் எழுத்துக்களுக்கு இடையில் உள்ள இடங்களை தொடுதல் இன்னும் மறுதாணி போடுதல் போன்றவை ஹைழுடன் இருக்கும் பெண்ணுக்கு மக்ரூஹ் ஆகும்.
விடயம் 474 : ஹைழுடைய பெண்கள் ஆறு வகைப்படும். அவை
முதலாவது: சாஹிபு ஆதத்தி வக்திய்யா வ அததிய்யா , காலமும் நேரமும் ஒரே அளவான பெண். அதாவது ஒரு பெண்ணுக்கு தொடர்சியாக இரண்டு மாதங்கள் குறிப்பிட்ட நேரத்தில் ஹைழு ஏற்படுகின்றது , இன்னும் அவள் இரண்டு மாதத்திலும் ஹைழுடன் இருந்த நாட்களும் ஒன்றாகும் . உதாரணமாக அந்த இரண்டு மாதங்களிலும் அதன் முதல் நாட்களில் இருந்து ஏழு நாட்கள் வரைக்கும் ஹைழுடன் இருக்கின்றாள் என்பது போல்.
இரண்டாவது: சாஹிபு ஆதத்தில் வக்திய்யா , காலம் மட்டும் ஒரே அளவான பெண் அதாவது ஒரு பெண்ணுக்கு தொடராக இரண்டு மாதங்கள் குறிப்பிட்ட ஒரே நேரத்தில் ஹைழு ஏற்படுகின்றது. ஆனால் அவள் ஹைழுடன் இருக்கும் நாட்களில் வித்தியாசம் காணப்படுகின்றது. உதாரணமாக இரண்டு மாதங்களிலும் அதன் முதல் நாட்களில் அவளுக்கு ஹைழு ஏற்படுகின்றது. ஆனால் முதல் மாதத்தில் ஏழு நாட்கள் வரைக்கும் இரண்டாவது மாதத்தில் எட்டு நாட்கள் வரைக்கும் இரத்தம் வெளியாகி சுத்தமாகின்றது.
மூன்றாவது: சாஹிபு ஆதத்தில் அததிய்யா , எண்ணிக்கை மாத்திரம் ஒரே அளவான பெண். அதாவது ஒரு பெண்ணுக்கு இரண்டு மாதங்களில் ஹைழு வெளியான நாட்களின் எண்ணிக்கை ஒரே அளவாகும். ஆனால் இரத்தம் வெளியான நேரம் ஒன்று அல்ல. உதாரணமாக முதலாவது மாதம் ஐந்தாதம் நாளில் இருந்து பத்தாவது நாள் வரை இரண்டாவது மாதம் பனிரெண்டாம் நாளிலிருந்து பதினெழாம் நாள் வரை இரத்தம் வெளியாவதைப் போல்.
நான்காவது: முழ்தரிபா , பல மாதங்கள் ஹைழு ஏற்பட்டு அதனுடைய சரியான தகவலை அறியாக ஒரு பெண். அல்லது அவளுக்கு ஏற்படும் மாதாந்த ருது கணக்கு குழம்பி புதிதாக ஹைழு வெளியாகாத பெண்.
ஐந்தாவது: முப்ததியா , வாழ்க்கையில் முதல் தடவையாக ஹைழு ஏற்படும் பெண்.
ஆறாவது: நாஸியா , தனது ஹைழை மறந்த பெண். இவர்கள் ஒவ்வொரு கூட்டத்தினருக்கும் தனிப்பட்ட சட்டங்கள் உள்ளன அவை தனித்தனியே பின் வரும் விடயத்திலிருந்து கூறப்படும்.
விடயம் 475 : காலமும் நேரமும் ஒன்றாக இருக்கின்ற பெண்கள் மூன்று வகைப் படும்.
முதலாவது: தொடராக இரண்டு மாதங்கள் குறிப்பிட்ட நேரத்தில் ஹைழு ஏற்ப்பட்டு அது குறிப்பிட்ட நாளிலும் சுத்தமாகி விடுகின்றது. உதாரணமாக தொடராக இரண்டு மாதங்கள் மாதத்தின் முதலாவது நாளில் இரத்தம் வெளியாகி அதன் ஏழாவது நாளில் அது நின்று விடுகின்றது. எனவே அவளுடைய ஹைழுடைய அளவு மாத்தின் முதலாவது நாளில் இருந்து ஏழாவது நாள் வரைக்குமாகும்.
இரண்டாவது: மேற்குறிப்பிட்டவாறு இல்லாது இரத்தம் நிற்காத பெண் , தொடராக இரண்டு மாதங்கள் குறிப்பிட்ட நாளிலே உதாரணமாக மாதத்தின் முதலாவது நாளில் இருந்து எட்டாவது நாள் வரைக்கும் இரத்தம் வெளியானால் அது ஹைழுடைய அடையாளங்களைக் கொண்டிருந்தால் அதாவது கட்டியான சூடாகவும் கருப்புக் கலந்த சிவப்பு நிறமுடையதாகவும் அல்லது கடும் சிவப்பாகனதாகவும் இருக்கின்றது. இன்னும் குதித்து சிறிதளவு சூட்டுடன் வெளிவரும் , அதற்குப் பிறகு வருபவை இஸ்திஹாழாவுடைய அடையாளங்களைக் கொண்டிருந்தால் அவளுடைய ஹைழுடைய அளவு மாதத்தின் முதலாவது நாளிலிருந்து எட்டாவது நாள் வரைக்குமாகும்.