Back | Index | Next |
விடயம் 502 : ஒரு பெண்ணின் இரத்தப் போக்கு பத்து நாட்களுக்கு முதல் சுத்தமடைந்தால் , உள்ளரங்கத்தினுல் இரத்தம் இருக்கின்றது என சந்தேகம் கொண்டால் கட்டாயம் ஓரளவு பஞ்சை பெண் குறியினுல் வைத்து சற்று தாமதித்து பின் வெளியில் எடுக்க வேண்டும். அப்போது அது சுத்தமாக இருந்தால் குளித்து வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற வேண்டும். அது சுத்தமாக இல்லாதிருந்தால் ; இரத்தம் மஞ்சல் நிறமாக அழுக்கடைந்திருந்தாலும் சரியே. அது ஹைழுடைய காலத்தில் இல்லாதிருந்தாலோ அல்லது ஹைழு பத்து நாட்களுக்கு இருக்கும் என்றிருந்தாலோ கட்டாயம் அவள் பொருமையாக இருக் வேண்டும். அது பத்து நாட்களுக்கு முதல் சுத்தமாகி விட்டால் குளிப்பால். புத்தாவது நாளில் சுத்தமடைந்து விட்டாலோ அல்லது இரத்தப் போக்கு பத்து நாட்களை கடந்து விட்டாலோ பத்தாவது நாளில் குளிப்பால். அவளுடைய இரத்தப் போக்கு பத்து நாட்களை விட குறைவானது என்றிருந்தால் , பத்து நாட்கள் முடிவடைவதற்கு முதலோ அல்லது பத்தாவது நாளிலோ சுத்தமாகி விடும் என அறிந்திருந்தால் குளிக்க மாட்டால். இரத்தப் போக்கு பத்து நாட்களுக்கு அதிகாக இருக்கும் என சந்தேகம் கொண்டால் அந்த நாளுடைய வணக்கத்தை விடுவால். அதன் பின் பத்து நாட்கள் வரையுமுள்ள வணக்கங்களை விடுவால். ஆனால் பத்து நாள் வரைக்கும் ஹைழுடையவல் மீது விலக்கப் பட்டுள்ளவைகளை விட்டு விட்டு முஸ்தஹாழாவான பெண் செய்வது போல் செய்வது சிறந்ததாகும். எனவே பத்து நாட்கள் முடிவடைவதற்கு முதல் அல்லது பத்தாவது நாளில் இரத்தப் போக்கு சுத்தமாகி விட் ; டால் அவை அனைத்தும் ஹைழாகும். பத்து நாட்களுக்கு மேலானால் வழமையாக இரத்தப் போக்கு இருக்கின்ற அளவை ஹைழு என்றும் மற்றவைகளை இஸ்திஹாழா என்றும் கருத வேண்டும். பின்னர் இரத்தப் போக்கு இருக்கின்ற அளவுக்கு பின்னர் செய்யாது விடப்பட்ட வணக்கங்களை கழாச் செய்ய வேண்டும்.
விடயம் 503 : சில நாட்களை ஹைழுடைய நாட்கள் என நினைத்து வணக்கங்களை விட்டு பின் ஹைழு இல்லை என் அறிந்தால் அந்நாட்களில் விடப்பட்ட தொழுகை , நோன்புகளை கழாச் செய்ய வேண்டும். சில நாட்களில் ஹைழு இல்லை என்ற நினைப்பில் வணக்கங்கள் செய்து பின்னர் ஹைழு என் அறிந்தால் அந்நாட்களில் நோன்பு பிடித்திருந்தால் கட்டாயமாக அதை கழாச் செய்ய வேண்டும்.
விடயம் 504 : தாயினது வயிற்றிலிருந்து பிள்ளையின் முதலாவது உறுப்பு வெளியாகும் நேரத்திலிருந்து வெளிப்படும் இரத்தத்தை அது பத்து நாட்களுக்கு நின்று விட்டாலோ அல்லது பத்தாவது நாளில் நின்று விட்டாலோ அதை நிபாஸுடைய இரத்தம் என அழைப்படும். நிபாஸுடைய காலத்தில் அது உள்ள பெண்களை நபஸா என் அழைக்கப் படும்.
விடயம் 505 : தாயினது வயிற்றினிலிருந்து பிள்ளையின் முதலாவது உறுப்பு வெளி வருவதற்கு முதல் வெளியாகும் இரத்தம் நிபாஸுடைய இரத்தம் இல்லை.
விடயம் 506 : பிள்ளையின் உருவ அமைப்பு , படைப்பு பூரணமானதாக இருக்க வேண்டும் என்றிருக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக பெண்ணின் கரு அறையிலிருந்து இரத்தப் பை வெளியானால் அது கருவறையில் இருந்திருந்தால் மனிதனயிருக்கும் என அப்பெண் அறிந்தாலோ அல்லது நான்கு பேர் கூறினாலோ பத்து நாட்கள் வரை அதனுடன் வெளியாகும் இரத்தம் நஜபாஸுடைய இரத்தமாகும்.
விடயம் 507 : சில வேலைகளில் நிபாஸுடைய இரத்தம் ஒரே தடவையில் வெளியாகும். ஆனால் அது பத்து நாட்களை விட கூடுதலாக இருக்காது.
விடயம் 508 : கட்டி விழுந்து விட்டதா இல்லையா ? என சந்தேகம் கொண்டால் , அல்லது விழுந்தது கருவில் இருந்திருந்தால் அது மனிதாக இருந்திரக்கும் என சந்தேகம் கொண்டால் அதைப் பற்றி ஆராய வேண்டிய அவசியமில்லை. எனவே அவளிலிருந்து வெளியாகும் இரத்தம் நிபாஸுடைய இரத்தம் இல்லை.
விடயம் 509 : பள்ளியில் தரிபடல் , மஸ்ஜிதுல் ஹராம் , மஸ்ஜிதுந்நபியினுல் செல்லுதல் , உறுப்பின் ஒரு பகுதியினை குர்ஆனுடைய எழுத்தில் பட வைத்தல் இன்னும் இது போன்று ஹைழுடையவள் மீது ஹராமான அனைத்தும் நபஸாவான பெண் மீதும் ஹராமாகும். அதேபோல் ஹைழுடையவள் மீது வாஜிபான முஸ்தஹப்பான மக்ரூஹகான விடயங்கள் அனைத்தும் நபஸா மீதும் ஹராமாகும்.
விடயம் 510 : பெண் நிபாஸாக இருக்கின்ற போது அவளை தலாக் சொன்னால் அந்த தலாக் செல்லுபடியற்றதாதகும். இன்னும் அவளுடன் உடலுறவு கொள்வதும் ஹராமாகும். எனவே அவளது கணவன் அவளுடன் உடலுறவு கொண்டால் இஹ்தியாத்து முஸ்தஹப்பின் படி அவன் ஹைழுடைய சட்டத்திலே சொல்லப்பட்ட சட்டங்களின் படி கப்பாரா கொடுக்க வேண்டும்.
விடயம் 511 : பெண் நிபாஸுடைய இரத்தத்தை விட்டும் சுத்தமானவுடன் கட்டாயம் குளித்துக் கொண்டு தன் மீது கடமையான வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற வேண்டும். இதற்காக குளித்தன் பிறகு வுழு செய்ய வேண்டிய அவசியமில்லை. இன்னும் இரண்டாவது முறையும் இரத்தம் வெளியானால் அது வெளியாகி பத்து நாட்களுக்குல் சுத்தமடைந்து விட்டால் அவை அனைத்தும் நிபாஸுடைய இரத்தமாகும். இடையில் சுத்தமாக இருந்த நாட்களில் நோன்பு பிடித்திருந்தால் அதை கழாச் செய்ய வேண்டும்.
விடயம் 512 : நிபாஸுடைய இரத்தம் சுத்தமான பெண் , உட்பகுதியினுல் இரத்தம் உள்ளதென சந்தேகம் கொண்டால் சிறிதளவு பஞ்சு போன்றதை பெண்குறியினுல் வைத்து சற்று பொருமையாக இருந்து பின் அதை எடுக்கவேண்டும். அதில் இரத்தம் இல்லையென்றிருந்தால் வணக்கங்களை நிறைவேற்ற குளித்து கொள்ள வேண்டும்.
விடயம் 513 : ஒரு பெண்ணுக்கு பத்து நாட்களுக்கு மேலாக பிள்ளைப் பேற்று இரத்தப் போக்கு இருந்தால் அதே நாட்களில் ஹைழுடைய இரத்தப் போக்கும் ஏற்படுவதற்குறிய காலமாக இருந்தால் அவளுடைய ஹைழுடைய அளவுக்குறிய இரத்தப் போக்கு நியாஸுடைய இரத்தப் போக்காகும். இஹ்தியாத்து வாஜிபின் படி ஹைழு முடிந்த அடுத்த நாளிலிருந்து பிள்ளைப் பேற்றின் பத்தாவது நாள் வரைக்கும் வணக்க வழிபாடுகளை இஸ்திஹாழாவுடைய சட்டத்தின் படி செய்ய வேண்டும். இன்னும் பிள்ளைப் பெற்றவர்கள் மீது ஹராமான விடயங்களை தவிர்ந்து கொள்ள வேண்டும். இன்னும் அது ஹைழுடைய காலம் இல்லாவிட்டால் பத்தாவது நாள் வரைக்கும் நிபாஸ் அதற்குப் பிந்திய நாட்கள் அனைத்தும் இஸ்திஹாழாவாகும். இந்த இரண்டு அமைப்பிலும் இஹ்தியாத்து முஸ்தஹப்பின் படி பிள்ளைப் பெற்ற பத்தாவது நாளில் இருந்து பதினெட்டாவது நாள் வரைக்கும் தன் வணக்க வழிபாடுகளை இஸ்திஹாழாவுடைய சட்டத்தின் படி செய்ய வேண்டும். இன்னும் பிள்ளைப் பெற்றவர்கள் மீது ஹராமான விடயங்கங்களைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
விடயம் 514 : நிபாஸுக்கும் அதன் பின் ஏற்படும் ஹைழுக்குமிடையில் பத்து நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும். எனவே நிபாஸ் ஏற்பட்டு பத்து நாட்கள் முடிவதற்குல் இரத்தப் போக்கு ஏற்பட்டால் அது இஸ்திஹாழாவாகும். அது ஹைழுடைய காலத்தில் ஏற்பட்டாலும் சரியே!.
விடயம் 515 : ஒருவர் இறந்த பின் குளிரான குளிப்பாட்டாத மனிதனது உடலை தொட்டால் அதற்காக வேண்டி மையித்தை தொட்டதற்கான குளிப்பை நிறைவேற்ற வேண்டும். தொடுதல் தூக்கத்தில் நடந்திருந்தாலும் சரி அல்லது விழித்திருக்கையில் இடம் பெற்றிருந்தாலும் சரி. ஏன் அவரது நகம் , எலும்பு கூட மையித்தில் பட்டிருந்தாலும் கட்டாயம் குளிக்க வேண்டும். ஆனால் இறந்த மிருகத்தைத் தொட்டால் குளிப்பு கடமையாக மாட்டாது.
விடயம் 516 : இறந்தவரின் உடல் முழுவதும் குளிராகாத நிலையில் ஒருவர் அதைத் தொட்டால் அவரின் மீது குளிப்பு கடமையில்லை. அவர் குளிரான பகுதியைத் தொட்டாலும் சரியே.
விடயம் 517 : ஒருவரது முடி மையித்தில் பட்டாலோ அல்லது மையித்துடைய முடி ஒருவர் மேல் பட்டாலோ அல்லது மையித்துடைய முடி ஒருவரது முடியில் பட்டலோ குளிப்பு வாஜிபு கடமையில்லை. ஆனால் முடி மிகவும் சிறிதாக இருந்து அதன் மூலம் மையித்தில் பட்டால் குளிப்பு கடமையாகும்.
விடயம் 518 : இறந்த பிள்ளையைத் தொட்டாலும் , அது நான்கு மாதங்கள் கழித்து விழுந்திருந்தாலும் சரி அதைத தொட்டாலும் அதற்காக குளிப்பது வாஜிபாகும். இன்னும் நான்கு மாதங்கள் கழிவதற்கு முன் விழுந்த பிள்ளையைத் தொட்டாலும் அதற்காக குளிப்பதும் சிறந்ததாகும். இதன் படி நான்கு மாதங்கள் கழித்து மரணித்த நிலையில் ஒரு குழந்தை பிறந்தால் அப்பிள்ளையின் தாய் மையித்தை தொட்டதற்கான குளிப்பை நிறைவேற்ற வேண்டும். இன்னும் நான்கு மாதங்கள் கழிவதற்கு முன் மரணித்த நிலையில் ஒரு பிள்ளை பிறந்தால் அதன் தாய் மையித்தைத் தொட்டதற்கான குளிப்பை நிறைவேற்றுவது சிறந்ததாகும்.
விடயம் 519 : தாய் மரணித்ததன் பின் பிறக்கும் குழந்தை பருவ வயதை அடைந்ததும் மையித்தைத் தொட்டதற்கான குளிப்பை நிறைவேற்றுவது வாஜிபாகும்.
விடயம் 520 : ஒருவர் மூன்று குளிப்பும் நிறைவேற்றப் பட்ட ஒரு மையித்தைத் தொட்டால் அவர் மீது தொட்டதற்பான குளிப்பு வாஜிபாக மாட்டாது. ஆனால் மூன்று குளிப்பும் முடிவதைவதற்குல் மையித்தைத் தொட்டால் அவர் மீது குளிப்பு வாஜிபாகி விடும். அது மூன்றாவது குளிப்பை செய்து கொண்டிருந்தாலும் சரியே.
விடயம் 521 : பைத்தியகாரன் அல்லது பருவ வயதை அடையாத பிள்ளை மையித்தைத் தொட்டால் அவனது பைத்தியம் தெளிவானதும் அல்லது பிள்ளை பருவ வயதை அடைந்த பிறகு கட்டாயம் மையித்தைத் தொட்டதற்கான குளிப்பை நிறைவேற்ற வேண்டும். இன்னும் பிள்ளை நல்லதை கெட்டதை பிரித்தறியும் பருவத்தில் இருக்கின்ற நிலையில் குளித்தாலும் அவனது குளிப்பு சஹீஹாகும்.
விடயம் 522 : உயிருடன் இருக்கின்ற உடம்பில் இருந்து அல்லது மரணித்து குளிப்பாட்டாத மையித்தின் உடம்பில் இருந்து எலும்பு இருக்கின்ற பகுதி பிரிந்தால் , அதைக் குளிப்பாட்டுவதற்கு முதல் எவராவது அதைத் தொட்டால் கட்டாயம் மையித்தைத் தொட்டதற்கான குளிப்பை நிறைவேற்ற வேண்டும். ஆனால் பிரிந்த அத்துண்டில் எலும்பு இல்லாது இருந்து அதைத் தொட்டால் குளிப்பு கடமையாக மாட்டாது.
விடயம் 523 : மரணித்தவற்றில் இருந்து வேறான எலும்பு இன்னும் பல் போன்றவைகளை , அதைக் குளிப்பாட்டுவதற்கு முதல் தொட்டால் இஹ்தியாத்து வாஜிபின் படி குளிக்க வேண்டும். ஆனால் உயிருடன் இருக்கின்ற மனிதனில் இருந்து விழுந்த சதையில்லாத பல்லைத் தொட்டால் குளிப்பு கடமையாக மாட்டாது.
விடயம் 524 : மையித்தை தொட்டதுடைய குளிப்பையும் கட்டாயம் ஜனாபத்துடைய குளிப்பை நிறைவேற்றுவது போலவே நிறைவேற்ற வேண்டும். இதிலும் அதைப் போலவே குளித்து முடிந்ததும் அமல்கள் செய்வதற்காக குளிக்க வேண்டிய அவசிய மில்லை.
விடயம் 525 : ஒருவர் பல மையித்தைத் தொட்டாலோ அல்லது ஒரு மையித்தைப் பல தடவைகள் தொட்டாலோ ஒரு தடவை குளித்தால் போதுமாகும்.
விடயம் 526 : மையித்தைத் தொட்டதற்காக குளிக்காத ஒருவர் பள்ளியில் தரிபடல் , உடலுறவு கொள்ளல் , வஜிபான ஸஜதாக்கள் உள்ள சூராக்களை ஓதுதலில் தடையில்லை. ஆனால் தொழுகைக்கும் அது போற்றதைச் செய்வதற்கும் கட்டாயம் குளிக்க வேண்டும். இன்னும் அதற் பிறகு வுழு செய்வதும் சிறந்ததாகும்.
விடயம் 527 : முஸ்லிம்களில் ஒருவருக்கு மரணம் நெருங்கினால் அவர் ஆணாக இருந்தாலும் சரி , பெண்ணாக இருந்தாலும் சரி , சிறியவராக இருந்தாலும் சரி அல்லது பெரியவராக இருந்தாலும் சரி. அவருடைய கால் பாதங்க்ள கிப்லாவை முன்னோக்குகின்றவாறு அவரை மல்லாக்க தூங்க வைக்க வேண்டும்.
விடயம் 528 : இஹ்தியாத்து வாஜிபு அம்மையித்தைக் குளிப்பாட்டுகின்ற வரைக்கும் அவரை கிப்லாவை முன்னோக்கியே தூங்க வைக்க வேண்டும். ஆனால் குளிப்பாட்டி முடிந்ததன் பின் அவரை மீது தொழுவிக்கின்ற நிலை போன்று அவரை தூங்க வைக்க வேண்டும்.
விடயம் 529 : மரணம் நெருங்கியவை கிப்லாவை முன்னோக்கி தூங்க வைப்பது முஸ்லிம்கள் ஒவ்வொருவர் மீதும் கடமையாகும். அதற்காக அரவந உடந்தக் காரரிடம் அனுமதி எடுக்க வேண்டிய அவசியமில்லை.
விடயம் 530 : இறுதி நேரத்தில் இருக்கின்ற ஒருவருக்கு கலிமாவை அவருக்கு விளங்குகின்றவாறு சொல்லிக் கொடுப்பது முஸ்தஹப்பாகும். அத்துடன் சொல்லப் பட்ட அனைத்தையும் மரணிக்க வரைக்கும் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டும்.
விடயம் 531 : இந்த துஆவையும் மரணத்தருவாயில் உள்ளவருக்கு விளங்குகின்ற வகையில் சொல்லுவது முஸ்தஹப்பாகும். «اللّهمَّ اغْفِرْلِىَ الْكَثيرَ مِنْ مَعاصيكَ وَاَقْبَلْ مِنِّى الْيَسِيرَ مِنْ طاعَتِكَ يا مَنْ يَقْبَلُ الْيَسِيرَ وَيَعْفوُ عَنِ الْكَثِيرِ اِقْبَلْ مِنّى الْيَسِير; واعْفُ عَنّى الْكثيرَ اِنَّكَ اَنْتَ الْعَفُوُّ الْغَفُورُ اللّهُمَّ ارْحَمْنىِ فَاِنَّكَ رَحيمٌ».
விடயம் 532 : கடினமாக உயிர் கொடுப்பவரை அவர் கோபிக்க மாட்டார் என்றிருந்தால் தொழுத இடத்திற்கு அவரைக் கொண்டு செல்வது முஸ்தஹப்பாகும்.
விடயம் 533 : மரணத் தருவாயில் இருப்பவர் ராஹத் அடையவதற்காக அவரது தலைப் பக்கம் இருந்து யாஸீன் சூராவையும் , சூரா அஸ்ஸாபாத் , சூரா அஹ்ஸாப் , ஆயதுல் குர்ஸியையும் , சூரா அஃராபின் ஐம்பத்தி நான்காவது வசனமான இந்த اِنَّ رَبَّكُمُ اللهُ الَّذى خَلَقَ السَّماواتِ... வசனத்தையும் இன்னும் சூரா பகராவின் கடைசி மூன்று வசனங்களையும் ஓதுவது சுன்னத்தாகும். என்றாலும் அல்குர்ஆனில் இருந்து எந்த அளவு ஓத முடியுமோ அவ்வளவு ஓதவேண்டும்.
விடயம் 534 : மரணத் தருவாயில் இருப்பவரை தனியே வைத்தல் , இன்னும் அரவந வயிற்றின் மேல் ஏதாவது ஒன்றை வைத்தல் , இன்னும் ஜுனுபுடையவன் , ஹைழுடையவள் அவருடன் இருப்பதும் அதேபோல் அதிகமாக கதைத்தல் , இன்னும் அழுதல் , அவருடன் பெண்களை தனியே வைத்தல் மக்ரூஹ் ஆகும்.
விடயம் 535 : மரணித்தின் பின் மையித்துடைய வாய் திறந்திருக்காதவாறு மூடி விடுதல் இன்னும் கண்களையும் , தந்தங்களையும் மூடி விடுதல் , கை , கால்களை நீட்டி வைத்தல் இன்னும் அதன் மேல் ஒரு ஆடையை போடுதல் அதாவது ஆடையால் போர்த்துதல் முஸ்தஹப்பாகும். இன்னும் அவர் இரவில் மரணித்தால் அங்கே வெளிச்சம் வைக்க வேண்டும். அவரது மையித்தை நல்லடக்கம் செய்ய முஃமின்களுக்கு அறிவிக்க வேண்டும். இன்னும் அதை அவசரமாக அடக்கம் செய்ய வேண்டும். அவரது மரணத்தில் , அவர் உண்மையில் இறந்து விட்டாரா ? என உறுதியில்லாது சந்தேகம் இருந்தால் , அது தெளிவாகின்ற வரை பொருமையாக இருக்க வேண்டும். மேலும் மையித்து கற்பிணியாக இருந்து அதன் வயிற்றில் இருக்கும் பிள்ளை உயிருடன் இருந்தால் அடக்கம் செய்வதை சற்று தாமதித்து விலாப் பக்கத்தின் இடது பக்கத்தைப பிளந்து பிள்ளையை வெளியே எடுத்து விட்டு அதை மீண்டும் தைத்துவிட வேண்டும்.