Back | Index | Next |
விடயம் 536 : முஸ்லிமான ஒருவர் மரணித்தால் அவரை குளிப்பாட்டி கபனிட்டு தொழுவித்து அடக்கம் செய்வது ஒவ்வொருவர் மீதும் வாஜிபாகும். ஆதை எவராகினும் ஒருவர் செய்தாலும் மற்றவர்களிலிருந்து அப்பொறுப்பு விழுந்து விடும். அதாவது அவர்கள் அதைச் செய்ய வில்லை என்பதால் குற்றமாக கனிக்கப்பட மாட்டாது. ஆனால் அவர்களில் ஒருவரும் அதைச் செய்ய வில்லை என்றால் அனைவரும் குற்றவாளியாவார்கள்.
விடயம் 537 : எவராகினும் ஒருவர் மையித்துடைய வேலைகளைச் செய்து கொண்டிருந்தால் மற்றவர்களும் அதைச் செய்ய வேண்டும் என கடமையில்லை. ஆனால் அவர் அறைவாசியோடு நிறுத்தி விட்டால் மற்றவர்கள் அதைச் செய்ய வேண்டும்.
விடயம் 538 : ஒருவர் இன்னார் இம்மையித்துடைய வேலைகளை செய்து கொண்டிருக்கின்றார் என உறுதி கொண்டால் அவரும் அதைச் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் இன்னார் செய்வார் என்று சந்தேகம் இருந்தால் கட்டாயம் இவரும் அதற்குறிய வேலைகளைச் செய்ய வேண்டும்.
விடயம் 539 : மையித்தை குளிப்பாட்டியர் அல்லது கபன் செய்தவர் அல்லது அடக்கம் செய்தவர் பிழையாக செய்தார் ஒருவர் அறிந்தால் கட்டாயம் அதைத் திரும்பச் செய்ய வேண்டும். அது பாத்திலாக இருந்திருக்கும் என நினைத்தாலோ அல்லது சரியாக செய்தாரா இல்லையா என சந்தேகம் கொண்டாலோ அதைத் திரும்பச் செய்ய வேண்டிய அவசியமில்லை.
விடயம் 540 : மையித்தை குளிப்பாட்டவும் கபனிடவும் தொழுவிக்கவும் அடக்கம் செய்யவும் அதற்குறியவரிடத்தில் அனுமதி எடுக்க வேண்டும்.
விடயம் 541 : ஒரு பெண் மரணித்தால் அவளது உரிமையாளர் அவள் கணவனாகும். அவனால் அதைக் குளிப்பாட்டவும் , கபனிடவும் அடக்கம் செய்யவும் முடியும். அவனுக்குப் பிறகே ஏனைய அதாவது அம்மையித்தில் இருந்து அனந்தரம் எடுப்பவர்கள் தலையிட முடியும். (அதாவது நான் தான் செய்ய வேண்டும் என கூற முடியும்) இன்னும் அனந்தரம் எடுப்பதில் எவர்கள் முன்னுரிமை பெறுகின்றார்களோ அவர்களுக்கே இந்த விடயத்திலும் முன்னுரிமை இருக்கின்றது.
விடயம் 542 : ஒருவர் நான் மையித்தின் உரிமையாளர் என்றோ அல்லது இவர் மரணிக்கும் முன் என்னிடம் நான் தான் அவருடைய வேலைகளைச் செய்ய வேண்டும் என கூறியது என்று சொன்னால் , இது போல் வேறு எவரும் கூறாது இருந்தால் , அவர் மீதே மையித்துடைய கடமையை செய்வது கடமையாகும்.
விடயம் 54 3 : ஒருவர் தான் மரணித்ததன் பின் அவர் சொந்தாக் காரரைத் தவிர வேறு ஒருவரை தன்னைக் குளிப்பாட்டவும் , கபனிடவும் , தொழுவிக்கவும் , அடக்கம் செய்யவும் நியமித்திருந்தால் இந்நிலையில் இச்செயல்களை வேறு ஒருவர் செய்ய வந்தால் இஹ்தியாத்து வாஜிபின் படி அவர் கட்டாயம் மையித்தின் சொந்தக் காரரிடமும் நியமித்த மற்றவரிடமும் அனுமதி எடுக்க வேண்டும். இன்னும் ஒருவர் தான் மரணித்த பிறகு மையித்துக்குறிய வேலைகளை தனது மகன் தான் செய்ய வேண்டும் என பணித்தால் இஹ்தியாத்து வாஜிபின் படி மகன் மீது தந்தையின் உபதேசப்படி செய்வது வாஜிபாகும். மாறாக அதை ஏற்றுக் கொள்ளாது இருக்க முடியாது.
விடயம் 544 : மையித்தை மூன்று முறை குளிப்பாட்டுவது வாஜிபாகும்.
முதலாவது: இலந்த இலை கலந்த நீரினால்.
இரண்டாவது: கற்பூரம் கலந்த நீரினால்.
மூன்றாவது: சுத்தமான நீரினால்
விடயம் 545 : இலந்த இலை , கற்பூரம் தண்ணீரை முழாபாக மாற்றது இருக்கின்ற அளவுக்கு அதிகமாக இருக்க கூடாது. இன்னும் இலந்த இலை , கற்பூரம் கலக்க வில்லை என்று சொல்லுகின்ற அளவுக்கு குறைவாகவும் இருக்க கூடாது.
விடயம் 546 : இலந்த இலையும் கற்பூரமும் தேவையான அளவு கிடைக்கா விட்டால் இஹ்தியாத்து வாஜிபின் படி கிடைத்திருப்பதை தண்ணீரில் கலக்க வேண்டும். அது அறவே இதில இலந்த இலை மற்றும் கற்பூரம் கலக்க வில்லை என்று சொல்லும் அளவுக்கு மிகவும் குறைவானதாக இருக்க கூடாது.
விடயம் 547 : ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிய ஒருவர் ஸபா மர்வாவுக்கு இடையில் தொங்கோட்டம் ஓடுவதற்கு முதல் மரணித்தால் அவரை கற்பூரம் கலந்த நீரால் குளிப்பாட்டக் கூடாது. அதற்கு மாறாக சுத்தமான நீரினால் குளிப்பாட்ட வேண்டும். இதே போன்று தான் உம்ராவுக்கு இஹ்ராம் கட்டி முடியை கத்தரிப்பதற்கு முதல் மரணித்தால் செய்ய வேண்டும்.
விடயம் 548 : இலந்த இலை , கற்பூரம் அல்லது இவற்றில் ஒன்று கிடைக்காது போனால் அல்லது அவைகளைப் பாவிக்க முடியாது இருந்தால் உதாரணமாக அவை அபகரிக்கப் பட்டதாக இருப்பது போல் , கிடைக்காத ஒவ்வொரு இடத்திலும் சுத்தமான நீரினால் குளிப்பாட்ட வேண்டும்.
விடயம் 549 : மையித்தைக் குளிப்பாட்டுபவர் கட்டாயம் முஸ்லிமாகவும் புத்தி சாதுர்யமானவாரவும் இருக்க வேண்டும். இன்னும் இஹ்தியாத்து வாஜிபின் படி பருவ வயதை அடைந்தவராகவும் இருத்தல் வேண்டும். இன்னும் கட்டாயமாக குளிப்பாட்டுதலுடைய சட்டங்களை அறிந்தவராகவும் இருக்க வேண்டும்.
விடயம் 550 : மையித்தைக் குளிப்பாட்டுபவர் கட்டாயம் இறை கட்டளையை நிறை வேற்றுவதற்காக இதைச் செய்கின்றேன் என நிய்யத்து வைத்திருக்க வேண்டும். அவர் இந்த நிய்யத்தோடு மூன்றாவது குளிப்பின் கடைசி வரைக்கும் இருந்தால் போதுமாகும் அதைப் புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
விடயம் 551 : முஸ்லிமான சிறு பிள்ளையைக் குளிப்பாட்டுவதும் வாஜிபாகும். அது ஹராமான வழியில் பிறந்திருந்தாலும் சரியே!. காபீர்களையும் அவர்களது பிள்ளைகளையும் குளிப்பாட்டுதல் , கபனிடல் , அடக்கம் செய்தல் ஆகுமாகாது. ஒருவர் சிறு வயதில் இருந்தே பைத்தியமாக இருந்து அதே நிலையில் பருவ வயதை அடைந்திருந்தால் , அவனது தாய் தந்தை , அல்லது பாட்டன் பாட்டி அல்லது அவர்களில் ஒருவராவது முஸ்லிமாக இருந்தால் அவனைக் குளிப்பாட்ட வேண்டும். அவர்களில் ஒருவரேனும் முஸ்லிமாக இல்லை என்றிருந்தால் அவனைக் குளிப்பாட்டுவது ஆகுமாகாது.
விடயம் 552 : கட்டியாக விழுந்த பிள்ளையை , அது நான்கு மாதம் கழிந்த பின் விழுந்திருந்தால் , கட்டாயம் அதைக் குளிப்பாட்ட வேண்டும். மாறாக நான்கு மாதம் கழிக்காது இருந்தால் ஒரு துணியில் வைத்து சுற்றி குளிப்பாட்டாது அடக்கம் செய்ய வேண்டும்.
விடயம் 553 : ஆண் பெண்ணையும் , பெண் ஆணையும் குளிப்பாட்டினால் அது பாத்திலாகும். ஆனால் மனைவி தன் கணவனைக் குளிப்பாட்ட முடியும். அதேபோல் கணவனும் தன் மனைவியைக் குளிப்பாட்ட முடியும். இஹ்தியாத்து முஸ்தஹப்பின் படி அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களை அதாவது மனைவி கணவனை இன்னும் கணவன் மனைவியை குளிப்பாட்டக் கூடாது என்றிருந்தாலும் சரியே!.
விடயம் 554 : ஒரு ஆண் மூன்று வருடத்தை கடக்காத சிறுமியை குளிப்பாட்ட முடியும். அதே போல் பெண்ணும் மூன்று வயதைக் கடக்காத ஆண் பிள்ளையைக் குளிப்பாட்ட முடியும்.
விடயம் 555 : மரணித்த ஆண் மையித்தைக் குளிப்பாட்ட எந்த ஆண்களும் கிடைக்க வில்லை என்றிருந்தால் , அவரது உரவினரான பெண்கள் அதாவது தாய் , சகோதரி , மாமி , சாச்சி போன்ற மஹ்ரமானவர்களும் இன்னும் பால் குடியின் மூலம் மஹ்ரமானவர்களும் திரைக்குப் பின்னால் இருந்து அவரைக் குளிப்பாட்ட முடியும். அதேபோல் பெண் ஒருவர் மரணித்து அவளைக் குளிப்பாட்டுவதற்கு எந்தப் பெண்ணும் இல்லாதிருந்தால் அவளுடைய சொந்தக்காரரான அதாவது அவளுக்கு மஹ்ரமானவர்களும் இன்னும் பால் குடியழனட மூலம் மஹ்ரமானவர்களும் திரைக்குப் பின்னால் நின்று குளிப்பாட்ட முடியும்.
விடயம் 556 : மையித்தும் அதைக் குளிப்பாட்டுபவரும் ஆணாக இருந்தால் அல்லது அவர்கள் இருவரும் பெண்ணாக இருந்தால் மையித்தின் மர்மஸ்தானத்தைத் தவிர ஏனைய இடங்களை நிர்வாணமாக்குவது சிறந்ததாகும்.
விடயம் 557 : மையித்தின் அவ்ரத்தைப் பார்ப்பது ஹராமாகும். அதைக் குளிப்பாட்டுகின்றவர் அதன் அவ்ரத்தைப் பார்த்தார் அவர் பாவம் செய்து விட்டார். ஆனால் குளிப்பு பாத்திலாக மாட்டாது.
விடயம் 558 : மையித்தின் உடம்பின் ஒரு பகுதி நஜிஸாக இருந்தால் கட்டாயம் அவ்விடத்தைக் குளிப்பாட்ட முன் கழுவி விட வேண்டும். இஹ்தியாத்து வாஜிபின் படி குளிப்பாட்ட ஆரம்பிக்கும் முன் மையித்தின் உடம்பு முழுவதும் சுத்தமாக இருக்க வேண்டும்.
விடயம் 559 : மையித்தைக் குளிப்பாட்டுவதும் ஜனாபத்துடைய குளிப்பைப் போன்றாகும். இஹ்தியாத்து வாஜிபின் படி தர்தீபியான குளிப்பு முடியுமாக இருக்கின்ற போது இர்தஜமாஸியான முறையில் குளிப்பாட்டக் கூடாது. ஆனால் தர்தீபியான குளிப்பில் மையித்துடைய மூன்று பகுதிகளில் ஒவ்வொன்றையும் அதிகமான தண்ணீருக்குல் அழுழ்துவது (கொண்டு செல்வது) ஜாயிஸாகும்.
விடயம் 560 : ஹைழுடைய அல்லது ஜனாபத்துடைய நிலையில் மரணித்த ஒருவருக்கு ஹைழுடைய குளிப்பு அல்லது ஜனாபத்துடைய குளிப்பை செய்ய தேவையில்லை. ஆனால் மையித்துடைய குளிப்பு அவருக்கு மையித்துடைய குளிப்பு போதுமாகும்.
விடயம் 561 : மையித்தைக் குளிப்பாட்ட கூலி எடுப்பது ஆகாது. ஆனால் குளிப்பாட்டுவதற்கு முன் செய்கின்ற வேலைக்கு கூலி எடுப்பது ஹராம் இல்லை.
விடயம் 562 : தண்ணீர் கிடைக்காது போனால் அல்லது அதைப் பாவிக்க முடியாது இருந்தால் ஒவ்வொரு குளிப்புக்கும் பதிலாக ஒவ்வொரு தயம்மும் செய்து விடவேண்டும்.
விடயம் 563 : மையித்துக்கு தயம்மும் செய்து விடுபவர் தனது இரண்டு கைகளையும் பூமியில் அடித்து மையித்துடைய முகம் , புறங்கையில் தடவ வேண்டும். இதற்காக கட்டாயம் மையித்தைத் தூக்க வேண்டும் என்பது அவசியமில்லை. இஹ்தியாத்து வாஜிபின் படி முடியுமாக இருந்தால் மையித்துடைய கையினாலும் அவருக்கு தயம்மம் செய்து விட வேண்டும்.
விடயம் 564 : முஸ்லிமான மையித்தை கட்டாயம் மூன்று துண்டு ஆடைகளால் கபன் செய்ய வேண்டும். அவைகளை சாரம் , சேட் , காலிலிருந்து தலை வரை மறைக்கும் ஆடை என கூறப்படும்.
விடயம் 565 : சாரம் தொப்புலிலிருந்து முழங்கால் வரைக்கும் இருந்து அது வரைக்குமுள்ள உடம்பை மறைக்க வேண்டும். நெஞ்சில் இருந்து முழங்காலுக்கு கீழ் உள்ள பகுதி வரை நீளமாக இருப்பது சிறந்ததாகும். சேட் தோல் புயத்திலிருந்து கெண்டைக்காலின் அறைவாசி வரைக்கும் இருந்து அனைத்து உடம்பையும் மறைக்க கூடியதாக இருத்தல். கு h ல் வரைக்கும் நீளமாக இருப்பது சிறந்ததாகும். நீளமானது அதாவது தலையில் இருந்து கால வரைக்கும் மறைக்க கூடியது இரண்டு பக்கமும் இரு முடிச்சுக்களைப் போடுவதற்கு முடியுமான அளவு நீளமாக இருக்க வேண்டும். அதன் அகலம் ஒரு பக்கத்தை அடுத்த பக்கத்தில் வைப்பதால் சமமாக இருக்க வேண்டும்.
விடயம் 566 : அனந்தரக்காரர் பருவ வயதை அமைந்தவராக இருந்து , மேலே கூறப்பட்டது போன்று கபன் குறிப்பிட்ட அளவை விட சற்று பெரிதாக இருப்பதற்குறிய செலவை அவரது பங்கிலிருந்து எடுக்குமாறு அனுமதி தந்தால் அதை எடுப்பதில் பிரச்சினை இல்லை. இஹ்தியாத்து முஸ்தஹப்பின் வாஜிபான அளவு கபனை விட அதிகமானதை பருவ வயதை அடையாதவரின் பங்கிலிருந்து எடுக்காது இருக்க வேண்டும்.
விடயம் 567 : ஒருவர் முஸ்தஹப்பான கபனுடைய அளவை அவருடைய சொத்தின் மூன்றில் ஒன்றிலிருந்து எடுக்க வேண்டும் என்று உபதேசம் செய்திருந்தால் அல்லது சொத்தின் மூன்றில் ஒரு பங்கை அவரது செலவுக்காப பயன் படுத்த வேண்டும் என கூறி அதை எங்கு செலவு செய்ய வேண்டும் என கூறாது விட்டடிருந்தால் அல்லது அதில் பாவிக்கின்ற சில இடங்களை தெரிவித்திருந்தால் அவரது மூன்றில் ஒன்றான சொத்திலிலிருந்து முஸ்தஹப்பான கபனின் அளவுக்குறியதை எடுக்க முடியும்.
விடயம் 568 : மனைவியின் கபன் கணவனின் மீதாகும். அப்பெண்ணிடம் சொத்துக்கள் இருந்தாலும் சரியே! அதேபோல் பெண்ணை ரஜயிய்யத்தான தலாக் சொல்லியிருந்தால் , இதைப் பற்றி தலாக்குடைய பகுதியில் விரிவாக கூறப்படும். அதற்குறிய இத்தாக் கடமை முடிவடைவதற்குல் மரணித்தால் , அவளது கணவர் அவளுக்குறிய கபனை ஆயத்தம் செய்ய வேண்டும். அவளது கணவர் பரவ வயதை அடைந்திருக்க வில்லை என்றால் , அல்லது அவன் பைத்தியகாரனாக இருந்தால் அவனது பாதுகாவலன் அவன் சொத்திலிருந்து கபனுக்குறிய செலவைக் கொடுக்க வேண்டும்.
விடயம் 569 : மையித்துடைய கபன் அதன் குடும்பத்தாரின் மேல் வாஜிபில்லை. அவன் உயிரோடு இருந்த காலங்களில் அவனது செலவு அவர்கள் மீது வாஜிபாக இருந்தாலும் சரி.
விடயம் 570 : இஹ்தியாத்து வாஜிபின் படி மையித்தைக் கபன் செய்யப் பட்டடிருக்கும் துணி மையித்தின் உடம்பு அதன் மூலம் தெரியுமளவுக்கு மெல்லியதாக இருக்க கூடாது.
விடயம் 571 : கட்டாயமாக கபன் ஆகுமானதாக (முபாஹானதாக) இருக்க வேண்டும். அதாவது மையித்துடைய பணத்தில் இருந்து வாங்கிருக்க வேண்டும். அல்லது வேறு ஒருவர் ஹலாலான பணத்தில் இருந்து ஏற்பாடு செய்து அதன் மூலம் மையித்தைக் கபன் செய்ய பூரண விருப்பத்தோடு கொடுக்க வேண்டும்.
விடயம் 572 : அபகரிக்கப் பட்ட ஒன்றால் மையித்தை கபன் செய்ய முடியாது. அதைத் தவிர வேறு ஒன்றும் கிடைக்க வில்லை என்றிருந்தாலும் சரி ஆகுமாகாது. மையித்துடைய கபன் அபகரிக்கப் பட்டதாக இருந்து அதன் சொந்தக்காரர் அதைப் பொருந்திக் கொள்ளாது விட்டால் கட்டாயம் அதை மையித்துடைய உடம்பிலிருந்து எடுத்து விடவேண்டும். மையித்தை அடக்கம் செய்யிதிருந்தாலும் சரியே!
விடயம் 573 : செத்ததுடைய தோலைக் கொண்டு கபன் செய்தல் ஆகாது. ஆனால் அதைத் தவிர வேறு ஒன்று கிடைக்காது போனால் இஹ்தியாத்து வாஜிபின் படி அதன் மூலம் மையித்தைக் கபன் செய்ய வேண்டும்.
விடயம் 574 : நஜிஸான ஒன்றகை ; கொண்டு அல்லது சுத்தமான பட்டுத் துணியைக் கொண்டு அல்லது தங்கத்தினால் நெய்யப்பட்ட துணியைக் கொண்டு மையித்தை கபன் செய்தல் கூடாது. ஆனால் தங்கடமான வேலையில் பிரச்சினையில்லை.
விடயம் 575 : ஆட்டு ரோமத்தினால் அல்லது உண்பது ஹராமான விலங்குகளின் ரோமத்தினால் செய்யப் பட்ட துணியைக் கொண்டு மையித்தைக் கபனிடுவது தங்கடம் இல்லாத நிலையில் ஆகாது. ஆனால் உண்பது ஹலாலான விலங்குகளின் தோலைக் கொண்டு , அதை துணிதான் என்று சொல்லுகின்றவாறு செய்யப் பட்டிருந்தால் , அதேபோல் உண்பது ஹலாலான விலங்குகளின் உரோமங்களிலிருந்து நெய்யப் பட்டிருந்தால் அதன் மூலம் கபனிடுவதில் பிரச்சினையில்லை. இஹ்தியாத்து முஸ்தஹப்பு அவ்விரண்டைக் கொண்டும் கபனிடக் கூடாது என்றாலும் சரி.