Back Index Next

விடயம் 721 : ஒருவர் மலசலம் கழிக்கின்ற போதும் மற்ற சந்தர்ப்பங்களிலும் பருவ வயதை அடைந்த ஒவ்வொருவரை விட்டும் தனது அவ்ரத்தை மறைப்பது வாஜிபாகும். அது தனக்கு மஹ்ரமாக இருக்கின்ற சகோதரி , தாய் இன்னும் சகோதரனாக இருப்பினும் சரியே. அதேபோல் நல்லது கெட்டதை பிரித்தறியும் பைத்திய காரன் , பிள்ளைக்கு முன்னும் மறைப்பது வாஜிபாகும். ஆனால் கணவன் மனைவி அவர்களுக்கு மத்தியில் மறைப்பது அவசியமில்லை .

விடயம் 722: கல் அல்லது களி மண் போன்றவற்றால் மலத்தை அது வெளியாகும் இடத்திலிருந்து சுத்தம் செய்கின்ற போது அது சுத்தமாகின்றது பற்றி யோசிக்க வேண்டும் என்றிருந்தாலும் அந்நிலையில் தொழுவதில் பிரச்சினையில்லை .

விடயம் 723: சிறு மூலம் நஜிஸான ஒன்றை குற i வான நிரைக் கொண்டு சுத்த செய்ய விரும்பினால் , தண்ணீரை ஒரு தடவை அதன் மேல் ஊற்றுகின்ற போது அது அதிலிருந்து பிரிந்து சென்று சிறு நீரில் ஏதும் அதில் இருக்க வில்லை என்றிருந்தால் , மீண்டும் ஒருமுறை அதில் தண்ணீரை ஊற்றினால் அது சுத்தமாகும். ஆனால் ஆடை , விரிப்பு போன்றதை ஒவ்வொரு முறை தண்ணீர் ஊற்றியதன் பின் அதிலிருக்கின்ற நீர் வெளியாகின்ற வரை அதை முறுக்க வேண்டும் .

விடயம் 724 : முகத்தில் அல்லது கைகளில் காயம் , பொக்குலம் , உடைந்திருந்து அதன் மேல் பகுதி திறந்திருந்து அதில் தண்ணீர் ஊற்றுவது ஆபத்தாக இருந்தால் அதன் ஓரத்தை தண்ணீரால் கழுவ வேண்டும். இன்னும் அதில் ஈரக்கையால் தடவுவது ஆபத்து இல்லை என்றிருந்தால் இஹ்தியாத்தின் படி அதன் மேல் ஈரக்கையை தடவவேண்டும். பின்னர் சுத்தமான புடவையை அதன் மேல் வைத்து ஈரக்கையை அதன் மேலும் தடவவேண்டும். இந்த அளவும் அவனுக்கு ஆபத் h க இருப்பின் அல்லது காயம் நஜிஸாக இருந்து அதில் தண்ணீர் படி முடியாததாக இருப்பின் அதன் ஓரத்தை வுழு என்று சொல்லுகின்ற அளவுக்கு மேலிருந்து கீழ் நோக்கி கழுவ வேண்டும். இஹ்தியாத்து வாஜிபின் படி கடைசியாக கூறிய சந்தர்ப்பத்தில் தயம்முமும் செய்ய வேண்டும் .

விடயம் 725: ஒருவரின் உடல் , மரணித்து குளிப்பாட்டாத குளிரான ஒருவரின் மையித்தில் பட்டால் அதாவது மையித்தைத் தொட்டால் அதற்காக மையித்தை தொட்டத்தற்காக குளிப்பை நிறைவேற்ற வேண்டும். அது தூக்கத்தில் தொட்டிருந்தாலும் சரி அல்லது விழித்திருக்கும் போது , அல்லது சுய நினைவோடு தொட்டிருந்தாலும் சரி அல்லது சுயநிலைவில்லாது தொட்டிருந்தாலும் சரி. அவரது நகம் , எலும்பு அந்த மையித்தை பட்டாலும் அதற்காகவும் குளிக்க வேண்டும். ஆனால் செத்த மிருகத்தைப் பிடித்தால் அதற்காக குளிப்பதுது அவர் மீது கடமையாக மாட்டாது.

தொழுகையின் சட்டங்கள்

தொழுகை தீனின் மிகச் சிறந்த அமலாகும். அது அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் மற்ற அனைத்து அமல்களும் ஏற்றுக் கொள்ளப்படும். ஏற்றுக் கொள்ளப்பட வில்லை என்றால் மற்ற அனைத்து அமல்களும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ஒருவர் ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள் ஒரு ஓடையில் தன்னை கழுவி சுத்தம் செய்தால் அவரது மேனியில் எவ்வித அழுக்கோ அல்லது கொழுப்புத் தன்மையோ இருக்க மாட்டாது. அதேபோல் தான் ஐந்து நேரத் தொழுகையும் மனிதனது பாவங்களை சுத்தப் படுத்துகின்றது. ஒவ்வொருவரும் ஐந்து நேரத் தொழுகையையும் அதன் முதல் நேரத்தில் தொழுவது மிகவும் சிறந்ததாகும். தொழுகையில் பொடுபோக்காக இருப்பவர் தொழாதவரைப் போலாகும். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: ' தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர் , அதை இலோசாக கருதுபவருக்கு மறுமையில் கடும் வேதனை இருக்கின்றது .'

ஒருமுறை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் பள்ளி வாயலுக்குல் நுழைந்தார்கள் அப்போது ஒருவர் அங்கு வந்து தன் தொழுகையை பூரணமில்லாது அதாவது ருகூஃ , சுஜுதுகளை ஓழுங்காக செய்யாது தொழுது கொண்டிருந்தால் இதைப் பார்த்த நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் ' இம்மனிதர் இதே நிலையில் மரணித்தால் அவர் எனது தீனில் இருந்த நிலையில் மரணிக்க வில்லை ' என்றார்கள் .

எனவே ஒருவர் தொழும் போது அவசரவசரமாக தொழக் கூடாது. அல்லாஹிவின் ஞாபகத்தோடு தொழ வேண்டும். யாரோடு பேசுகின்றார் என ஞாபகத்தோடு கவனத்தோடு இருக்க வேண்டும். இன்னும் இறைவனுக்கு முன் தன்னை ஒரு அற்பமாக கனிக்க வேண்டும். ஒருவர் தொழுகையின் போது முற்று முழுதாக இந்த விடயங்களை கவனத்தில் கொண்டால் தன்னையே மறந்து விடுவார். தனக்கு என்ன நடந்தாலும் அதை அவர் உணர மாட்டார். ஹஸரத் அலி அலைஹிஸ்ஸலாம் அவர்களும் இதையே கடைப்பிடித்தார்கள் அவரகளது காலில் இருந்த அம்மை அவர் தொழுது கொண்டிருந்த நிலையில் தான் வெளியில் எடுத்தால் அவர்களுக்கு அது விளங்க வில்லை .

மேலும் தொழுபவர் கட்டாயமாக பாவமன்னிப்புக் கேட்க வேண்டும். இன்னும் அது ஏற்றுக் கொள்ளப் படுவதற்கு தடையாக இருக்கின்ற  பொறாமை , பெருமை , புறம்பேசுதல் , ஹராத்தை உண்ணுதல் மயக்கமூட்டக் கூடியவைகளைக் குடித்தல் , கும்ஸ் இன்னும் ஸகாத் கொடுக்காதிருத்தல் போன்ற ஒவ்வொரு பாவத்தையும் விடவேண்டும். அதேபோல் தொழுகையின் நன்மைகளைக் குறைக்கும் காரியங்களையும் செய்யாதிருத்தல். உதாரணமாக தூக்க நிலையிலும் , சிறுநீரை அடக்கிக் கொண்டும் தொழுகைக்கும் நிற்காதிருத்தல். இன்னும் தொழும் போது வானத்தைப் பார்க்காதிருத்தல். அதேபோல் தொழுகையின நன்மைகளை அதிகரிக்கும் காரியங்களை செய்தல். உதாரணமாக அகீக் மூலம் செய்யப்பட்ட மோதிரத்தை கையில் போடுதல் , சுத்தமான ஆடையை அணிதல் , முடி வாருதல் பல் துலக்குதல் , அத்ர் எனப்படும் வாசனைத் திரவியங்களைப் பாவித்தல்.

வாஜிபான தொழுகைகள்

வாஜிபான தொழுகைகள் ஆறு உண்டு.

முதலாவது: நாள்தோரும் தொழும் தொழுகைகள்

இரண்டாவது: ஆயாதுடைய தொழுகை

மூன்றாவது: மையித்துடைய தொழுகை

நான்காவது: இறையில்லமான கஃபாவை வாஜிபாக தவாபு செய்யும் போது தொழுபவவை அதாவது தவாபுடைய தொழுகை. (உதாரணமாக: உம்ரா தமத்துஃ , உம்ரா முப்ரதாவுடைய தவாபின் தொழுகை இன்னும் ஹஜ் தமத்துஃஉவில் தவாபுடைய தொழுகையை மற்றும் தவாபுன் நிஸாவிலும் உள்ள தவாபுடைய தொழுகையைப் போல .)

ஐந்தாவது: தந்தைக்கு கழாவான தொழுகை மூத்த ஆண் மகன் மீது வாஜிபாகும். இஹ்தியாத்து வாஜிபின் படி தாயுடைய கழாவான தொழுகையும் அதே போல்தான் .

ஆறாவது: கூலி , நேர்ச்சை , சத்தியம் , வாக்குக் கொடுப்பதன் மூலம் வாஜிபாகும் தொழுகை. (இங்கு ஒன்றைக் கூற வேண்டும். மேற்கூறியவைகளின் மூலம் கடமையாகும் தொழுகை உண்மையில் அது வாஜிபில்லை. மாறாக கூலிக்காக செய்த ஒப்பந்தம் இன்னும் நேர்ச்சை , சத்தியம் அதேபோல் செய்த உடம்படிக்கையை நிறைவேற்றுவது வாஜிபாகும்.)

நாளாந்தம் கடமையான தொழுகைகள்

நாளாந்தம் கடமையான தொழுகைகள் ஐந்தாகும்: ளுஹர் , அஸர்: இவை அனைத்தும் இவை ஒவ்வொன்றும் நாங்கு ரகஅத்துக்கள். மஃரிப் இது மூன்று ரகஅத்தாகும்.  இஷா இது நான்கு ரகஅத் , சுபஹ் இரண்டு ரகஅத் .

விடயம் 726 : பிரயாணத்தின் போது நான்கு ரஅத்துள்ள தொழுகைகள் பின்னர் கூறப்படும் நிபந்தனைகளைக் கொண்டு இரண்டு ரகஅத்தாக தொழவேண்டும்.

ளுஹர் அஸர் தொழுகையின் நேரம்

விடயம் 727 : கம்பு போன்றதை மண்ணில் நிமிர்த்தி வைக்க வேண்டும். காலையில் சூரியன் உதிக்கின்ற போது அதன் நிழல் மேற்குப் பக்கமாக விழும். சூரியன் மேலெ போகப் போக அந்த நிழலின் நீளம் குறையும் எங்களது ஊர்களில் ளுஹருடைய நேரம் அந்த நிழலின் மிகவும் குறைந்த அளவாகும். ளுஹருடைய நேரம் கழிந்ததும் அந்த நிழல் கிழக்குப் பக்கமாக விழும் சூரியன் மேற்குப் பக்கமாக செல்லச் செல்ல அக்கம்பின் நிழல் கிழக்குப் பக்கமாக நீண்டு கொண்டே செல்லும். இதன்படி நிழல் அதன் மிகக் குறைந்த அளவை அடைந்தது மீண்டும் அது அதிகமாக அரம்பித்ததும் ளுஹருடைய நேரம் ஆரம்பமாகி விட்டது என அறியமுடிகின்றது. ஆனால் மக்கா போன்ற இடங்களில் நிழல் முற்றாக மறைந்து மீண்டும் அது விழ ஆரம்பித்த போதே ளுஹருடைய நேரம் ஆகிவிட்டது என அறியமுடிகின்றது .

விடயம் 728: ளுஹருடைய நேரத்தை அறிவதற்காக மண்ணீல் மீது நாட்டப்படும் கம்பு போன்றதை நேரம் காட்டி எனப்படும் .

விடயம் 729: ளுஹர் அஸர் தொழுகைகள் ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட சேர்ந்த  நேரம் இருக்கின்றது. அதாவது: ளுஹருடைய குறிப்பான நேரம் ளுஹரு தொழுகையின் நேரம் ஆரம்பித்ததில் இருந்து அதை தொழுவதற்கு எடுக்கின்ற நேர அளவுக்காகும். இன்னும் அஸருடைய குறிப்பான நேரம் அதைத் தொழுவதற்கு எடுக்கின்ற நேர அளவிலிருந்து மஃரிபுடைய நேரம் வரைக்குமாகும். எவராகினும் ஒருவர் இது வரைக்கும் ளுஹருடய தொழுகையை தொழுகையை தொழ வில்லை என்றால் அது கழாவானதாகும். கட்டாயம் அந்த நேரத்தில் அஸருடைய தொழுகையை தொழ வேண்டும். ளுஹருக்கும் இன்னும் அஸருக்கும் குறிப்பான நேரத்திற்கு இடையிலுள்ளவை , ளுஹருக்கும் அஸருக்கும் இடையில் உள்ள கூட்டான நேரம் ஆகும். எனவே இந்நேரத்தில் ஒருவர் தவறுதலாக ளுஹருடைய நேரத்தில் அஸரை அல்லது அஸருடைய நேரத்தில் ளுஹரை மாற்றி மாற்றித் தொழுதால் அவரது தொழுகை சஹீஹாகும் .

விடயம் 730: ளுஹருடைய தொழுகையை தொழுவதற்கு முதல் மறதியாக அஸரைத் தொழ ஆரம்பித்து , தொழுது கொண்டிருக்கும் போது தவறுதலாக தொழுது கொண்டிருப்பதாக உணர்ந்தால் , அது ளுஹருக்கும் அஸருக்கும் கூட்டான நேரமாக இருந்தால் நிய்யத்தை ளுஹருக்கு மீட்டவேண்டும். அதாவது இதுவரை தொழுததும் செய்து கொண்டிருப்பதும் , இனி தொழப் போவதும் ளுஹருடைய தொழுகையாக இருக்க வேண்டும். அது தொழுது முடிந்ததும் அதன் பின் அஸருடைய தொழுகையை தொழ வேண்டும். மாறாக அது ளுஹருக்கு குறிப்பான நேரமாக இருந்தால் இஹ்தியாத்து வாஜிபின் படி நிய்யத்தை ளுஹராக மீட்ட வேண்டும். அதை தொழுது முடிந்ததும் மீண்டும் அதை திரும்பத் தொழவேண்டும் .

விடயம் 731 : ஜும்ஆவுடைய தொழுகை இரண்டு ரகஅத்தாகும். ஜும்ஆவுடைய நாளில் ளுஹருடைய இடத்தில் தொழப்படும். நாயகம் ஸல் அல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களது காலத்திலும் , பரிசுத்தவான்களான இமாம்கள் இருக்கின்ற போது அது வாஜிபு அய்னி ஆகும். ஆனால் கெய்பதுஸ் சுஃராவுடைய காலத்தில் அது வாஜிபு தக்யீரி (வாஜிபு இஹ்தியாரி) அதாவது அவர் ஜும்ஆத் தொழுகைக்கும் ளுஹர் தொழுகைக்குமிடையில் ஒன்றைத் தெரிவு செய்வதில் அவர் சுதந்திரமானவராகும். ஆனால் நீதியான இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் காலத்தில் ஜும்ஆ தொழுகை நிறைவேற்றப்படுவது சிறந்ததாகும் .

விடயம் 732: இஹ்தியாத்து வாஜிபின் படி ஜும்ஆத் தொழுகையை வழக்கத்தில் ளுஹருடைய ஆரம்ப நேரம் என்று சொல்லுகின்ற நேரத்தை விட்டும் பிற்படுத்தக் கூடாது. ளுஹருடைய ஆரம்ப நேரத்தை விட்டும் பிற்படுத்தப்பட்டால் ஜும்ஆத் தொழுகைக்கும் பதிலாக ளுஹர் தொழுகையை தொழ வேண்டும் .

விடயம் 733: மேலே கூறப்பட்டது போல் ளுஹர் அஸர் மஃரிப் இஷா போன்ற ஒவ்வொரு தொழுகைக்கும் குறிப்பிட்டதொரு நேரம் இருக்கின்றது. அந்தநேரத்தில் ஒருவர் வேண்டுமென்று அஸருடைய தொழுகையை ளுஹருக்கு குறிப்பான நேரத்தில் , அல்லது இஷாவுடைய தொழுகையை மஃரிப்புக்கு குறிப்பான நேரத்தில் தொழுதால் அவரது தொழுகை பாத்திலாகும். ஆனால் வேறு தொழுகை அதாவது சுபஹ் தொழுகை அல்லது அது போன்றதின் கழாவை ளுஹருக்கு அல்லது மஃரிபுக்கு குறிப்பான நேரத்தில் தொழுதால் அவரது தொழுகை சஹீஹாகும்.

மஃரிப் , இஷாத் தொழுகையின் நேரம்

விடயம் 734 : மஃரிபுடைய நேரம் சூரியன் மறைந்து கிழக்குப் பக்கமிருந்து செம்மேகம் கிழம்பி மனிதது தலைக்கு மேலால் செல்கின்ற போதாகும் .

விடயம் 735: மஃரிப் , இஷா ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்டதொரு நேரம் இருக்கின்றது: மஃரிபு தொழுகையின் குறிப்பிட்ட நேரம் அதன் ஆரம்ப நேரத்தில் இருந்து மூன்று ரகஅத் தொழுகின்ற வரைக்குமாகும். இதன்படி பிரயாணியாக இருக்கின்ற ஒருவர் மறதியாகவும் இஷாவுடைய தொழுகையை இந்த நேரத்தில் தொழுதால் அவரது தொழுகை பாத்திலாகும். அதேபோல் இஷாவுக்கு குறிப்பான நேரம் அதன் நான்கு ரகஅத் தொழும் அளவில் இருந்து இரவின் அரைவாசி வரைக்குமாகும். எனவே இந்த நேரம் வரைக்கும் ஒருவர் மஃரிபுத் தொழுகையை வேண்டுமென்று தொழாதிருந்தால் கட்டாயம் முதலில் இஷாத் தொழுகையை தொழவேண்டும். பின்னர் மஃரிபைத் தொழவேண்டும் .

மஃரிபுக்கு குறிப்பான நேரத்திற்கும் இஷாவுக்கு குறிப்பான நேரத்திற்குமிடையிலுள்ள நேரம் மஃரிபு இஷாவுக்கு இடையில் கூட்டான நேரமாகும். அந்நேரத்தில் ஒருவர் தவறுதலாக இஷாவை மஃரிபுக்கு முதல் தொழுதால் , அது தொழுது முடிந்த பின்பே அவருக்கு ஞாபகம் ஏற்பட்டால் அவரது தொழுகை சஹீஹாகும். இன்னும் மஃரிபு தொழுகையை அதன் பின்னர் தொழவேண்டும் .

விடயம் 736: மேலே சென்ற விடயங்களில் கூறப்பட்ட ஒவ்வொரு தொழுகைக்கும் குறிப்பான கூட்டான நேரம் இருக்கின்றது என்பது ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக இருக்கும். உதாரணமாக ஒருவர் பிரயாணியாக இருந்தால் அவர் ளுஹருடைய ஆரம்ப நேரத்தில் இரண்டு ரகஅத் தொழுகையை தொழும் நேரம் சென்று விட்டால் அதன் குறிப்பான நேரம் கடந்து விட்டது. அவர் கூட்டான நேரத்துக்குல் நுழைகின்றார். இன்னும் பிரயாணியில்லாத ஒருவர் ளுஹரின் நான்கு ரகஅத் தொழும் அளவுக்கு நேரம் கழிந்தவுடனே அதன் ஆரம்ப நேரம் கடந்து விடும் .

விடயம் 737: மஃரிபுடைய தொழுகையை தொழுவதற்கு முதல் மறதியாக ஒருவர் இஷாத் தொழுகையை தொழ ஆரம்பித்து தொழுது கொண்டிருக்கும் போது இடையில் தவறாக தொழுகிறேன் என உணர்ந்தால் , தொழுது முடிந்தவை அனைத்தும் அல்லது அதன் அறைவாசி கூட்டான நேரத்தில் தொழப்பட்டு நான்காவது ரகஅத்தின் ரகூஃவுக்கு செல்லாதிருந்தால் கட்டாயம் நிய்யத்தை மஃரிப்புக்கு மீட்டி தொழுகையை முடிக்கவேண்டும். அதன் பின்னர் இஷாவுடைய தொழுகையை நிரைவேற்ற வேண்டும். இன்னும் மஃரிபுக்கு குறிப்பான நேரத்தில் தவறாக தொழுதார் என உணர்ந்தால் அவரது தொழுகை பாத்திலாகும் .

மாறாக நான்காவது ரகஅத்தின் ரகூஃவுக்குச் சென்றிருந்தால் கட்டாயம் இஷாத் தொழுகையை பூரணமாக தொழுது விட்டு அதன் பின்னர் மஃரிபை தொழவேண்டும். ஆனால் இது தொழுபவர் பிரயாணியாக இருக்கின்ற போதே நடை முறைப்படுத்தப்படும் .