Back | Index | Next |
விடயம் 687 : ஒருவர் இதன் மீது தயம்மும் செய்வது ஆகும் என உறுதியாக இருந்தால் அதன் மீது தயம்மும் செய்து தொழுது பின் அதன் மீது தயம்மும் செய்வது கூடாது என அறிந்தால் அத்தயம்மும் மூலம் தொழப்பட்ட தொழுகைகளை கட்டாயம் மீண்டும் இரண்டாவது தடவையாக தொழவேண்டும்.
விடயம் 688 : தயம்மும் செய்யப்படுபவை அபகரிக்கப்பட்டதாக இல்லாதிருக்க வேண்டும்.
விடயம் 689 : அபகரிக்கப்பட்ட இடத்தில் தயம்மும் செய்தால் அது பாத்திலாகும். எனவே ஒருவர் தனது நிலத்தில் தயம்மும் செய்வதற்கு தன் கையை அடிக்கின்ற போது அது மற்றவரின் நிலத்துக்குல் அவரது அனுமதியில்லாது போய் அந்தக் கையை அவர் தன் நெற்றியில் தடவினால் அவரது தயம்மும் பாத்திலாகாது.
விடயம் 690 : ஒருவர் தயம்மும் செய்பவை அபகரிக்கப்பட்டதா இல்லையா என அவருக்குத் தெரியாது போனால் அல்லது மறந்தால் அவரது தயம்மும் சஹீஹாகும். ஆனால் மறந்தாவர் அபகரிக்கப்பட்டவராக இருக்க கூடாது. அப்படியிருந்தால் இஹ்தியாத்து வாஜிபின் படி தயம்மும் பாத்திலாகும்.
விடயம் 691 : அபகரிக்கப் பட்ட இடத்தில் சிறையடைக்கப் பட்டுள்ள ஒருவர் , அங்குள்ள தண்ணீரும் இடமும் அபகரிக்கப் பட்டதாக இருந்தால் கட்டாயம் தயம்மும் செய்து தொழவேண்டும்.
விடயம் 692 : தயம்மும் செய்வதற்கு எடுக்கப்படுபவற்றில் கையில் ஒட்டுகின்ற படி புழுதி இருப்பது முஸ்தஹப்பாகும். கைகளை அதில் அடித்த பிறகு இரு கைகளையும் அதில் இருக்கின்ற புழுதி போகின்ற படி அதை தட்டவேண்டும்.
விடயம் 693 : பள்ளம் , மடு , வீதியில் கிடக்கும் மணல் , உப்பு அதன் மேல் உரையாத உப்பு பூமியில் தயம்மும் செய்வது மக்ரூஹ் ஆகும். அப்பூமியில் உப்பு உரைந்திருந்தால் அதில் தயம்மும் செய்வது பாத்திலாகும்.
விடயம் 694 : தயம்மும் செய்வதில் நான்கு விடயங்கள் வாஜிபாகும். அவை
முதலாவது: நிய்யத்து.
இரண்டாவது: இரண்டு உள்ளங்கைகளையும் தயம்மும் செய்வது ஆகுமான ஒன்றில் ஒரே நேரத்தில் அடித்தல்.
மூன்றாவது: இரண்டு உள்ளங்கைகளையும் கை மற்றும் நெற்றி முழுவதும் இதன் இரு பக்கமும் தடவுதல். அதாவது முடி முளைக்கும் இடத்தில் இருந்து கண் புருவம் மற்றும் மூக்கு மேல் பகுதியில் தடவுதல். இஹ்தியாத்து வாஜிபின் படி இரண்டு கைகளையும் கண் புருவங்களின் மேலும் தடவவேண்டும்.
நான்காவது: இடது கையின் உள்ளங்கையை வலது கையின் மேல் பகுதி முழுவதிலும் தடவுதல் , அதன்பின் வலது கையின் உள்ளங்கையை இடது கையின் மேல் பகுதி முழுவதிலும் தடவுதல்.
விடயம் 695 : குளிப்புக்கு பதிலாக செய்யும் தயம்முத்திற்கும் வுழுவுக்கு பதிலாக செய்யும் தயம்முத்திற்கும் இடையில் எவ்வித வித்தியாசமும் இல்லை. ஆனால் இஹ்தியாத்து முஸ்தப்பின் படி குளிப்பு பகரமாக தயம்மும் செய்யும் போது இரண்டு தடவை கையை அடித்து செய்ய வேண்டும். அதாவது ஒரு தடைவ கையை மண்ணில் அடித்து நெற்றியை தடவவேண்டும். இன்னும் மற்றொரு தடவை அடித்து கையின் பின் புறங்களைத் தடவ வேண்டும். என்றாலும் வுழுவுக்கு பகரமாக செய்யும் தயம்முத்தில் இஹ்தியாத்து முஸ்தஹப்பின் படி இரண்டு தடவை அடித்து செய்யவேண்டும். ஆனால் மூன்று தடவை கையை அடித்து தயம்மும் செய்வது சிறந்ததாகும். அதாவது இரண்டு தடவை தொடர்சியாக கையை மண்ணில் அடித்து நெற்றியை தடவவேண்டும். பின் ஒரு தடவை மண்ணில் கையை அடித்து கைகளின் மேற் பகுதியை தடவவேண்டும்.
விடயம் 696 : நெற்றியனதும் கைகளினதும் ஒரு குறிப்பிட்ட பகுதியை அதாவது கூறப்பட்ட அதன் அளவுக்கு இல்லாது குறைவாக தடவினால் தயம்மும் பாத்திலாகும். அவர் வேண்டுமென்று செய்தாலும் சரி அல்லது அது பற்றி அவர் அறியாதிருந்தாலும் சரி அல்லது இது பற்றிய சட்டத்தை மறந்திருந்தாலும் சரியே. மாறாக தயம்மும் செய்யும் போது நன்றாக கவனிக்க வேண்டும் என்ற அவசியமுமில்லை. அவரது நெற்றியும் கைகளும் உரிய முறைப்படி தயம்மும் செய்யப்பட்டது என்று கூறினால் போதுமாகும் .
விடயம் 697 : கைகளின் மேற் பகுதி முழுவதும் தயம்மும் செய்யப்பட்டு விட்டது என்று உறுதி ஏற்படுவதற்காக குறிப்பிட்ட அளவை விட கொஞ்சம் மேல் நோக்கி தடவவேண் ; டும். அதற்காக கைகிள் விரல் இடைவெளிகளுக்குல் தடவவேண்டிய அவசியமில்லை .
விடயம் 698 :நெற்றி , கைகளின் மேற்பகுதி இஹ்தியாத்து வாஜிபின் படி மேலிருந்து கீழ் நோக்கி தடவப் பட வேண்டும். இன்னும் அதனுடைய செயல்களை தொடர்ச்சியாக செய்ய வேண்டும். ஆனால் அவைகளுக்கு மத்தியல் இடைவெளி விட்டு அவர் தயம்மும் செய்ய வில்லை என்று சொல்லப்படுமாயின் அவரது தயம்மும் பாத்திலாகும் .
விடயம் 699 : ஒருவர் மீது குளிப்புக்குறிய தயம்முமும் இன்னும் வுழுக்கு பகரமான தயம்முமும் கடமையாக இருந்தால் நிய்யத்து செய்யும் போது அது குளிப்புக்குறியதா அல்லது வுழுக்கு பகரமானதா எதற்குறிய தயம்மும் என குறிப்பிட வேண்டும். அதேபோல் ஒருவருக்கு பல குளிப்புக்குறிய பல தயம்மும் கடமையாக இருப்பின் அவர் தயம்மும் செய்யும் அது எந்த குளிப்புக்குறியது என குறிப்பிட வேண்டும். ஒருவர் வுழுவுக்கு பதிலான இடத்தில் குளிப்பு பதிலாகவும் , அல்லது குளிப்புக்கு பதிலாக இடத்தில் வுழுவுக்கு பதிலாகவும் தவறாக நிய்யத்துச் செய்தால் , அல்லது உதாரணமாக முழுக்கை நீக்குவதற்காக தயம்மும் செய்கின்ற போது மையித்தை தொட்டதற்காக நிய்யத்து வைத்து தயம்மும் செய்தால் , அவரது தவறு அதை பிரித்து அறிவதில் இல்லாதிருந்தால் அவரது தயம்மும் பாத்திலாகும். இன்னும் ஒருவர் மீது ஒரு தயம்மும் கடமையாக இருப்பின் அவர் தயம்மும் செய்யும் போது அதை நிய்யத்து வைத்துக் கொண்டால் போதுமாகும் .
விடயம் 700 : ஒருவர் தயம்மும் செய்கின்ற போது அவரது நெற்றி இன்னும் உள்ளங்களை , புறங்கை சுத்தமாக இருக்க வேண்டும். ஆனால் உள்ளங்கை நஜிஸாக இருந்து அதைத் தண்ணீரால் சுத்தம் செய்ய முடியாது போனால் அந்த கையைக் கொண்டே தயம்மும் செய்வார். ஆனால் உள்ளங்கையில் இருக்கும் நஜிஸ் மற்ற இடத்தில் படக்கூடியதாக இருந்தால் இந்நிலையில் உள்ளங்கையில் பின்பக்கத்தைக் கொண்டு அல்லது மனிக்கட்டு கையைக் கொண்டு தயம்மும் செய்ய வேண்டும் .
விடயம் 701 : ஒருவர் தயம்மும் செய்யும் போது கையில் இருக்கின்ற மோதிரத்தை கலட்ட வேண்டும். இன்னும் நெற்றியில் அல்லது புறங்கையில் , உள்ளங்கையில் தடையான ஒன்று இருந்தால் ; உதாரணமாக ஏதாவது ஒன்று அதில் ஒட்டி இருப்பது போல் , கட்டயாம் அதை தயம்மும் செய்வதற்கு முதல் நீக்கி விடவேண்டும் .
விடயம் 702 : நெற்றியில் அல்லது புறங்கையில் காயம் இருந்தால் புடவை அல்லது அது போன்றதைக் கொண்டு அது கட்டப்பட்டிருந்து அதை அவிழ்க்க முடியாததாக இருந்தால் கையை அதன் மேல் தடவ வேண்டும். இன்னும் உள்ளங்கையிலும் காயம் இருந்தால் அதில் கட்டப்பட்டிருந்து அதை அவிழ்க்க முடியாது போனால் தயம்மும் செய்வது சஹீஹான ஒன்றில் அடித்து நெற்றி இன்னும் புறங்கையில் தடவவேண்டும் .
விடயம் 703 : நெற்றிய இன்னும் புறங்கையில் முடி இருந்தால் பிரச்சினையில்லை. ஆனால் தலை முடி நெற்றியில் விழுந்திருந்தால் கட்டாயம் அதை பின் பக்கமாக நகர்த்த வேண்டும் .
விடயம் 704 : ஒருவர் நெற்றியில் அல்லது புறங்கையில் தடை செய்யக் கூடிய ஒன்று இருக்கின்றது என சந்தேகப்பட்டால் , அது மக்களது பார்வையில் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாக இருந்தால் அது பற்றிய அவருக்கு அப்பபடி தடை செய்யும் ஒன்றும் இல்லை என உறுதி ஏற்படுகின்ற வரை ஆராய வேண்டும் .
விடயம் 705 : ஒருவருக்கு தயம்மும் செய்வது கடமையாகி அவரால் தயம்மும் செய்ய முடியாது போனால் அவர் தனக்குப் பகரமாக ஒருவரை எடுக்க வேண்டும். அவர் தனக்குப் பகரமாக எடுப்பவர் அவரது கையைக் கொண்டு அவரை தயம்மும் செய்து விட வேண்டும். அதற்கும் முடியாததாக இருந்தால் பகரமாக வந்தவர் தன் கையை தயம்மும் செய்வதற்கு ஆகுமான ஒன்றில் அடித்து அவரது நெற்றி இன்னும் புறங்கையில் தடவவேண்டும் .
விடயம் 706 : தயம்மும் செய்ய ஆரம்பித்த பிறகு முந்திய பகுதியை மறந்து விட்டாரா இல்லையா ? என சந்தேகம் கொண்டால் அதை கவனிக்க கூடாது. அவரது தயம்மும் சஹீஹாகும். அத்துடன் ஒவ்வொன்றையும் செய்து முடித்த பின் அதில் செய்தேனா இல்லையா என சந்தேகம் கொண்டால் அதைக் கவனிக்க கூடாது. அவரது தயம்மும் சஹீஹாகும் .
விடயம் 707 : இடது கையை மஸ்ஹு செய்த பிறகு உரிய முறையில் தயம்மும் செய்தேனா இல்லையா என சந்தேகம் ஏற்பட்டால் அவரது தயம்மும் சஹீஹாகும் .
விடயம் 708 : தயம்மும் செய்வது கடமையான ஒருவர் இஹ்தியாத்து வாஜிபின் படி தொழுகையின் நேரம் வருவதற்கு முதல் தயம்மும் செய்து கொள்வோம் என இருக்க கூடாது. ஆனால் மற்ற வஜிபான செயலுக்காக அல்லது முஸ்தஹப்பான ஒரு அமலுக்காக தயம்மும் செய்து தொழுகையின் நேரம் வரும் வரை அவரது அக்காரணம் நிலைத்திருந்தால் அந்த தயம்முமைக் கொண்டு தொழவும் முடியும் .
விடயம் 709 : தயம்மும் செய்வது கடமையான ஒருவர் அவரைத் தயம்மும் செய்ய வைத்த காரணம் தொழுகையின் கடைசி நேரம் வரைக்கும் இருக்கும் என அறிந்தாலோ அல்லது சந்தேகித்தாலோ தொழுகையின் நேரம் கூடுதலாக இருக்கின்ற போதும் அதை தயம்மும் செய்து தொழ முடியும். ஆனால் தொழுகையின் நேரம் முடிவடைவதற்குல் அக்காரணம் நீங்கி விடும் என அறிந்தால் பொருமையாக இருந்து வுழுச் செய்து அல்லது குளித்துக் கொண்டு தொழவேண்டும். அல்லது நேரம் மிகவும் குறைவாக இருக்கும் போது தயம்மும் செய்து தொழவேண்டும் .
விடயம் 710 : வுழுச் செய்ய அல்லது குளிக்க முடியாத ஒருவர் தனது கழாவான தொழுகைகளை தயம்மும் செய்து தொழ முடியும். விரைவாக அவர் வுழுச் செய்ய அல்லது குளிக்க முடியாத காரணம் நீங்கும் என்று எதிர் பார்த்தாலும் சரியே. ஆனால் கழாவான தொழுகையை தொழுவதற்குறிய சந்தர்ப்பம் கை நழுவுவதற்கு முதல் வுழுச் செய்ய அல்லது குளிக்க முடியாத காரணம் நீங்கி விடும் என்ற உறுதி இருந்தால் இஹ்தியாது வாஜிபின் படி அது நீங்குகின்ற வரைக்கும் பொறுமையாக இருக்க வேண்டும். ஆனால் அது நீங்கி விடும் என்ற சந்தேகம் இருந்தால் தயம்மும் செய்து கொண்டு அதை நிறைவேற்றுவது அவசியமாகும்.
விடயம் 711 : வுழுச் செய்ய அல்லது குளிக்க முடியாத ஒருவர் , குறிப்பிட்ட நேரத்தில் இருக்கின்ற சுன்னத்தான தொழுகைகளை ; உதாரணம் இராத் தொழுகையைப் போல , தயம்மும் செய்து தொழ முடியும். இக்காரணம் அதன் நேரம் முடிகின்ற வரைக்கும் இருக்கும் என அறிந்தால் அதன் முதல் நேரத்திலும் தொழமுடியும் .
விடயம் 712 :தண்ணீர் இல்லாது அல்லது வேறு காரணங்களுக்காக தயம்மும் செய்தால் அக்காரணம் நீங்கிய பின் அத்தயம்மும் பாத்திலாகி விடும் .
விடயம் 713 : வுழுவை பாத்திலாக்க , முறிக்க கூடியவை வுழுக்கு பகரமாக செய்த தயம்முத்தையும் பாத்திலக்கும். இன்னும் குளிப்பை பாத்திலக்குபவை குளிப்புக்கு பதிலாக செய்த தயம்முத்தையும் பாத்திலாக்கும் .
விடயம் 714: குளிக்க முடியாத ஒருவர் , அவர் மீது பல குளிப்புகள் கடமையாக இருந்தால் இஹ்தியாத்து வாஜிபின் படி அவை ஒவ்வொன்றுக்கும் பதிலாக ஒரு தயம்மும் செய்ய வேண்டும் .
விடயம் 715 : குளிக்க முடியாத ஒருவர் , குளிப்பு கடமையான ஒரு அமலைச் செய்ய விரும்பினால் கட்டாயமாக அதற்கு குளிப்புக்கு பதிலான தயம்முத்தை செய்ய வேண்டும். இன்னும் வுழுச் செய்ய முடியாது போனால் வுழுச் செய்து கொண்டே செய்ய வேண்டிய ஒரு அமலைச் செய்ய விரும்பினால் அப்போதும் வுழுவுக்குப் பதிலான தயம்முத்தை செய்ய வேண்டும் .
விடயம் 716 :முழுக்குடைய குளிப்புக்கு பதிலாக தயம்மும் செய்தால் தொழுகைக்காக வுழுச் செய் வேண்டிய அவசியமில்லை. ஆனால் இது தவிர்ந்த ஏனைய குளிப்புக்காக தயம்மும் செய்தால் கட்டாயம் வுழுச் செய்ய வேண்டும். வுழுச் செய்ய முடியாது போனால் அதற்கு பதிலாகவும் தயம்மும் செய்ய வேண்டும் .
விடயம் 717 :குளிப்புக்கு பதிலாக தயம்மும் செய்து அதன் பின் வுழுவை முறிக்கக் கூடியவைகள் அவருக்கு நிகழ்ந்தால் , அதற்குப் பின்னர் உள்ள தொழுகைகளுக்காக குளிக்க முடியாது இருந்தால் கட்டாயம் வுழுச் செய்ய வேண்டும். வுழும் செய்ய முடியாதவராக இருந்தால் கட்டாயம் வுழுவுக்கு பதிலாக தயம்மும் செய்ய வேண்டும் .
விடயம் 718 : வுழுவுக்கு பதிலாகவும் இன்னும் குளிப்புக்கு பதிலாகவும் தயம்மும் செய்வது கடமையான ஒருவர் இவ்விரண்டு தயம்முங்களையும் செய்து கொண்டால் போதுமாகும். வேறு தயம்முங்கள் செய்ய வேண்டிய அவசியில்லை .
விடயம் 719 : தயம்மும் கடமையான ஒருவர் , ஒரு வேலைக்காக தயம்மும் செய்தால் ; தயம்மும் அக்காரணமும் இருக்கின்ற வரை வுழுச் செய்து அல்லது குளித்துக் கொண்டு செய்ய வேண்டிய வேலைகளை அத்தயம்மத்தைக் கொண்டு செய்ய முடியும். ஆனால் நேரம் சுருக்கமாக இருந்த காரணத்தினால் அல்லது தண்ணீர் இருந்தும் மையித்துத் தொழுகைக்காக அல்லது தூங்குவதற்காக தயம்மும் செய்திருந்தால் எதற்காக தயம்மும் செய்தாரோ அதன் மூலம் அவைகளை மட்டுமே செய்ய முடியும் .
விடயம் 720 : சில இடங்களில் ஒருவர் தயம்மும் செய்து தொழுத தொழுகைகளை திரும்பத் தொழுவது சுன்னத்தாகும் .
முதலாவது: தண்ணீர் பாவிப்பதைப் பயந்து வேண்டுமென அதை விட்டு தவிர்ந்து கொண்டு தயம்மும் செய்து தொழுத தொழுகை .
இரண்டாவது: தண்ணீர் கிடைக்காது என அறிந்து அல்லது சந்தேகப்பட்டு வேண்டுமென அதை விட்டு தவிர்ந்து கொண்டு தயம்மும் செய்து தொழுத தொழுகை .
மூன்றாவது: தொழுகையின் கடைசி நேரம் வரை வேண்டுமென தண்ணீர் தேடிச் செல்லாது இருந்து இறுதியில் தயம்மும் செய்து தொழுது பின்னர் தேடிச் சென்றிருந்தால் தண்ணீர் கிடைத்திருக்கும் என அறிந்தால் .
நான்காவது: வேண்டுமென தொழுகையை தாமதப்படுத்தி அதன் கடைசி நேரத்தில் தயம்மும் செய்து தொழுத தொழுகை .
ஐந்தாவது: ஒருவர் தண்ணீர் கிடைக்காது என அறிந்து அல்லது சந்தேகப்பட்ட பின்னர் தன்னிடம் இருந்த தண்ணீரை ஊற்றி விட்டு பின் தயம்மும் செய்து தொழுத தொழுகை .