Back | Index | Next |
விடயம் 793: தொழுகையின் போது பெண் தனது உடம்பு முழுவதையும் , தலைமு i டியைக் கூட மறைக்க வேண்டும். ஆனால் முகத்தில் வுழுச் செய்யும் போது கழுவப்படும் அளவையும் கைகளில் மணிக் கட்டு வரைக்கும் கால்களில் கரண்டைக்கால் வரைக்கும் மறைப்பது அவசியமில்லை. ஆனால் வாஜிபான அளவு மறைத்து விட்டாள் என உறுதி கொள்வதற்காக முகத்தின் ஓரங்களையும் கைகளில் மணிக்கட்டுக்கு சற்று அதிகமாகவும் மறைக்க வேண்டும்.
விடயம் 794: ஒருவர் மறந்த ஸஜதாவை செய்கின்ற போதும் , தஷஹ்ஹுதை ஓதுகின்ற போதும் , இஹ்தியாதின் படி மறதிக்காக செய்யும் ஸஜதா (ஸஹ்) வின் போதும் அவர் தன்னை தொழுகையின் நிலையில் மறைப்பது போல் மறைத்துக் கொள்ள வேண்டும்.
விடயம் 795: தொழுகின்ற போது பெண்கள் , செயற்கை முடிகள் , மறைவான அழகு சாதனங்கள் (காப்பு , மாலை போன்றவை) இன்னும் முக அலங்கார பொருட்கள் (சுர்மா போன்றவை) மறைப்பது அவசியமில்லை. ஆனால் மஹ்ரமல்லாதவர்களை விட்டும் மறைப்பது வாஜிபாகும். அதாவது மஹ்ரமல்லாதவர்களுக்கு முன்னிலையில் மறைப்பது வாஜிபாகும்.
விடயம் 796: ஒருவர் தொழுகையில் வேண்டுமென தனது அவ்ரத்தை மறைக்கது தொழுதால் அவரது தொழுகை பாத்திலாகும். மாறாக அதற்குறிய சட்டத்தை அறியாது இவ்வாறு செய்திருந்தாலும் இஹ்தியாது வாஜிபின் படி அத்தொழுகையை திரும்பத் தொழவேண்டும்.
விடயம் 797: ஒருவர் தொழுது கொண்டிருக்கும் போது தனது அவ்ரத் தெரிகிறது என அறிந்தால் கட்டாயம் அதை மறைக்க வேண்டும். இஹ்தியாது வாஜிபின் படி அத்தொழுகை முடித்து கொண்டு அதை திரும்பவும் தொழவேண்டும். ஆனால் தொழுது முடிந்த பிறகு தொழுது கொண்டிருக்கும் போது அவ்ரத் தெறிந்து கொண்டிருந்தது என அறிந்தால் அவரது தொழுகை சஹீஹாகும்.
விடயம் 798: நிற்கின்ற போது அவரின் ஆடை அவரது அவ்ரத்தை மறைக்க வேண்டும். ஆனால் மற்ற நிலைகளில் உதாரணமாக ருகூஃ , சுஜுது செய்கின்ற போது மறைக்காது போனால் , அவரது அவ்ரத் வெளிப்படுகின்ற போது ஏதாவது ஒன்றைக் கொண்டு அதை மறைத்தால் அவரது தொழுகை சஹீஹாகும். ஆனால் இஹ்தியாது முஸ்தஹப்பின் படி இப்படியான ஆடைகளுடன் தொழக் கூடாது.
விடயம் 799: ஒருவர் தொழுது கொண்டிருக்கையில் தனது அவ்ரத்தை புல் , இலைகளைக் கொண்டும் மறைக்க முடியும். ஆனால் இஹ்தியாது முஸ்தஹப்பின் படி இதைத் தவிர வேறொன்றும் இல்லாத சந்தர்ப்பத்திலேயே இதைக் கொண்டு மறைக்க வேண்டும்.
விடயம் 800: தொழுவதற்கு தனது அவ்ரத்தை மறைப்பதற்கு களிமண்ணைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்றிருந்தால் களி மண்ணால் மறைக்காது அப்படியே தொழுவார். ஏனெனில் களி மண் மறைக்கக் கூடியதல்ல. ஆனால் இஹ்தியாது முஸ்தஹப்பின் படி இரண்டையும் சேர்த்து தொழ வேண்டும். அதாவது ஒரு முறை களி மண்ணை எடுக்காது தொழ வேண்டும். மறு முறை களி மண்ணை எடுத்து தனது அவ்ரத்தை மறைத்துக் கொண்டு தொழ வேண்டும்.
விடயம் 801: தொழுகையை அவ்ரத்தை மறைக்க ஏதும் இல்லாது இருந்தால் , ஏதாவது கிடைத்து விடும் என சந்தேகப் பட்டால் , இஹ்தியாது வாஜிபின் படி தொழுகையை பிற்படுத்த வேண்டும். ஒன்றும் கிடைக்காது போனால் அதன் கடைசி நேரத்தில் தனக்குறிய கடமைக் கேற்ப செய்து தொழுது கொள்வார்.
விடயம் 802: தொழ விரும்பும் ஒருவர் தனது அவ்ரத்தை மறைத்துக் கொள்வதற்கு இலை குலைகளும் இல்லாதிருந்தால் , தொழுகையின் கடைசி நேரம் வரைக்கும் அவ்ரத்தை மறைத்து தொழுவதற்கு ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் இல்லாதிருந்தால் , மஹ்ரம் அல்லாதவர்கள் அவரைப் பார்ப்பார்கள் என்றிருந்தால் நின்ற நிலையில் தொழவேண்டும். தனது அவ்ரத்தை தொடையைக் கொண்டு மறைக்க வேண்டும். அவரை யாரும் பார்க்க மாட்டார்கள் என்றிருந்தால் தனது முன் பக்கத்தை தன் கையைக் கொண்டு மறைத்துக் கொள்வார். எந்நிலையிலும் ருகூஃ , சுஜுதுகளை சமிக்கினை மூலம் செய்வார். சுஜுதுக்காக வேண்டி தலை சற்று கீழே கொண்டு வருவார்.
விடயம் 803: தொழுபவரின் ஆடையின் நிபந்தனைகள் ஆறு:
முதலாவது: சுத்தமாக இருத்தல்
இரண்டாவது: இஹ்தியாது வாஜிபின் படி ஆகுமானதாக (முபாஹாஹ) இருத்தல்.
மூன்றாவது: இறந்தவற்றின் பகுதிகளாக இல்லாதிருத்தல்.
நான்காவது , ஐந்தாவது: தொழுபவர் ஆணாக இருந்தால் அவரது ஆடை தனிப்பட்டாக , தங்கத்தால் நெய்யப்பட்டதாக இல்லாதிருத்தல். இது பற்றி விரிவாக பின்வரும் விடயங்களில் சொல்லப்படும்.
முதலாவது நிபந்தனை
விடயம் 804: தொழுபவரின் ஆடை சுத்தமாக இருக்க வேண்டும். ஒருவர் வேண்டுமென அழுக்காக , நஜிஸான உடல் , உடையுடன் தொழுதால் அவரது தொழுகை பாத்திலாகும்.
விடயம் 805: அழுக்கான உடல் , உடையுடன் தொழுதால் தொழுகை பாத்திலாகும் என்று தெரியாத ஒருவர் , நஜிஸான உடை அல்லது உடலுடன் தொழுதால் அவரது தொழுகை பாத்திலாகும்.
விடயம் 806: சட்டம் அறியாத காரணத்தால் , ஒரு பொருள் நஜிஸ் என அறியாது இருக்கின்றார் உதாரணமாக நஜிஸ் உண்ட ஒட்டகத்தின் வியர்வை அல்லது காபிருடைய வியர்வை நஜிஸ் என தெறியாது இருக்கின்றார் , இந்நிலையில் அவர் அந்த ஆடை அல்லது மேனியுடன் தொழுதால் அவரது தொழுகை பாத்திலாகும்.
விடயம் 807: ஒருவர் உடல் அல்லது உடை நஜிஸ் என தெறியாது இருக்கிறார் , அவர் தொழுது முடிந்ததும் அவருக்கு அது நஜிஸ் என தெறிய வந்தால் அவரது தொழுகை சஹீஹாகும். ஆனால் இஹ்தியாது முஸ்தஹப்பு நேரம் இருந்தால் அதை திரும்பத் தொழவேண்டும்.
விடயம் 808: ஒருவர் தன் உடல் அல்லது உடை நஜிஸானது என மறந்து தொழ ஆரம்பித்த தொழுது கொண்டிருக்கும் போது அல்லது தொழுது முடிந்ததும் அவருக்கு ஞாபகம் வந்தால் கட்டாயம் அந்த தொழுகையை திரும்பத் தொழவேண்டும். நேரம் சென்றிருந்தால் அதை கழாச் செய்ய வேண்டும்.
விடயம் 809: ஒருவர் நேரம் கூடுதலாக இருக்கும் போது தொழ ஆரம்பிக்கிறார் , தொழுது கொண்டிருக்கும் போது அவரது உடல் அல்லது உடை நஜிஸானால் நஜிஸான அந்நிலையில் தொழுகையில் ஏதாவது ஒன்றைத் தொழுவதற்கு முதல் நஜிஸ் பட்டுள்ளது என்று அறிந்தாலோ அல்லது அப்போது தான் நஜிஸ் பட்டதா அல்லது முன்னர் பட் ; டதா என சந்தேகப் பட்டால் , தொழுது கொண்டிருக்கும் அதே நிலையில் தொழுகை குழைந்து விடாது அந்த ஆடையை கழுவ அல்லது மாற்ற முடியுமாக இருந்தால் , அல்லது அந்த ஆடையை மாற்ற முடியுமாயின் தொழுது கொண்டிருக்கும் போதே அதைக் கழுவ வேண்டும் அல்லது அதை மாற்ற வேண்டும். இன்னும் அவரது அவ்ரத்தை மறைக்க கூடிய ஒன்றை அவர் அணிந்திருந்தால் அதைக் கழட்டி விட்டு தொழுகையை தொடர வேண்டும். ஆனால் இதைச் செய்கின்ற போது தொழுகை குழம்பி விடுமாக இருந்தால் கட்டாயம் தொழுகையை முறித்து விட்டு முதல் அதைச் சுத்தம் செய்ய வேண்டும் பின் சுத்தமான உடல் , ஆடையுடனேயே தொழவேண்டும்.
விடயம் 810: ஒருவர் நேரம் குறைவாக இருக்கும் போது தொழ ஆரம்பிக்கிறார் , தொழுது கொண்டிருக்கும் போது அவரது உடல் அல்லது உடை நஜிஸானால் நஜிஸான அந்நிலையில் தொழுகையில் ஏதாவது ஒன்றைத் தொழுவதற்கு முதல் நஜிஸ் பட்டுள்ளது என்று அறிந்தாலோ அல்லது அப்போது தான் நஜிஸ் பட்டதா அல்லது முன்னர் பட் ; டதா என சந்தேகப் பட்டால் , தொழுது கொண்டிருக்கும் அதே நிலையில் தொழுகை குழைந்து விடாது அந்த ஆடையை கழுவ அல்லது மாற்ற முடியுமாக இருந்தால் , அதைக் கழட்டி கழுவ வேண்டும். அல்லது அதை மாற்ற வேண்டும். அல்லது அவரது அவ்ரத்தை மறைக்க கூடிய ஒன்றை அவர் அணிந்திருந்தால் அதைக் கழட்டி விட்டு தொழுகையை தொடர வேண்டும். ஆனால் அவ்வாறு ஒன்றும் அவர் அணிய வில்லையென்றிருந்தால் , ஆடையை சுத்தம் செய்ய , அல்லது மாற்ற முடியாது இருந்தால் கட்டாயம் ஆடையை கழட்ட வேண்டும். பின் நிர்வானமானவர்களுக்குச் சொல்லப்பட்ட சட்டதிட்டத்தின் படி தொழுது முடிக்க வேண்டும். ஆனால் ஆடையை கழட்டினாலோ அல்லது அதை மாற்றினாலோ தொழுகை குழம்பி விடும் , அல்லது குளிர் போன்றதால் ஆடையை கழட்ட முடியாதிருந்தால் கட்டாயம் அதே நிலையில் தொழுது முடிப்பார் அவரது தொழுகை சஹீஹாகும்.
விடயம் 811: நேரம் குறைவதக இருக்கின்ற போது ஒருவர் தொழுது கொண்டிருக்கின்ற போது அவரது உடல் நஜிஸானால் , அந்நிலையில் தொழுகையில் ஏதாவது ஒரு பகுதியை தொழுவதற்கு முதல் நஜிஸ் பட்டுள்ளதை அறிந்தால் அல்லது இப்போது பட்டதா அல்லது இதற்கு முதல் பட்டிருந்ததா என சந்தேகப் பட்டால் , அதை தண்ணீரால் சுத்தம் செய்ய முடியுமாயின் , அப்பொது தொழுகை குழம்ப மாட்டாது என்றிருந்தால் நீரைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்கின்ற போது தொழுகை குழம்பி விடும் என்றிருந்தால் அதே நிலையில் தொழுது முடிக்க வேண்டும். அவரது தொழுகை சஹீஹாகும்.
விடயம் 812: ஒருவர் தனது உடல் அல்லது ஆடை சுத்தமானதா என்பதில் சந்தேகம் கொண்டு , அந்நிலையில் தொழுது பின்னர் அது சுத்தமாக இருக்க வில்லை என்று அறிந்தால் இஹ்தியாது முஸ்தஹப்பின் படி நேரம் இருந்தால் அத்தொழுகையை திரும்பத் தொழவேண்டும். நேரம் சென்றிருந்தால் அதை கழாச் செய்ய வேண்டும்.
விடயம் 813: ஒருவர் ஆடையை தண்ணீரால் சுத்தம் செய்து , அது சுத்தமாகி விட்டதென உறுதி கொண்டு அந்த ஆடையுடன் தொழுது பின் அது சுத்தமாக இருக்கவில்லை என அறிந்தால் இஹ்தியாது வாஜிபின் படி நேரம் எஞ்சியிருந்தால் கட்டாயம் திரும்பத் தொழவேண்டும். நேரம் சென்றிருந்தால் கட்டாயம் அதை கழாச் செய்ய வேண்டும்.
விடயம் 814: ஒருவர் தனது உடலில் அல்லது ஆடையில் இரத்தத்தை காண்டு , அது நஜிஸான இரத்தத்தைச் சேர்ந்தல்ல என உறுதி கொண்டால் உதாரணமாக அது நுளம்புடைய இரத்தம் என உறுதி கொண்டு தொழுகின்றார். ஆனால் தொழுது முடிந்த பின் அந்த இரத்தம் பட்டால் அதனுடன் தொழ முடியாத ஒன்று என அறிந்தால் அவரது தொழுகை சஹீஹாகும்.
விடயம் 815: ஒருவரின் உடலில் அல்லது ஆடையில் நஜிஸான இரத்தம் இருக்கின்றது. அந்நிலையில் தொழுதால் தொழுகை சஹீஹாகும் , உதாரணமாக காயத்துடைய அல்லது பொக்குலத்துடைய இரத்தம் தான் என்று நினைத்து தொழுகின்றார் ஆனால் தொழுது முடிந்த பின் அதன் மூலம் தொழுதால் அது பாத்திலாகும் என்ற வகையான இரத்தம் என அறிந்தால் அவரது தொழுகை சஹீஹாகும்.
விடயம் 816: ஒன்று நஜிஸாக இருப்பதை மறந்து உடல் அல்லது உடை அல்லது ஈரம் அதில் பட்டு மறந்த நிலையில் தொழுது பின்னர் அவருக்கு ஞாபகம் வந்தால் அவரது தொழுகை சஹீஹாகும். ஆனால் நஜிஸ் பட்ட இடத்தை கழுவாது குறைவான தண்ணீர் மூலம் குளித்து தொழுதால் அவரது குளிப்பு இன்னும் தொழுகை பாத்திலாகும். ஆனால் ஓட்டத் தண்ணீர் அல்லது கூடுதலான தண்ணீரில் குளித்து , முதலாவது தடைவ நீர் அந்த இடத்தில் படும் போதே அது சுத்தமாகி விடும் இந்நிலையில் அவரது குளிப்பு சஹீஹாகும். இன்னும் அவரது தொழுகையிலும் பிரச்சிணையில்லை. ஆனால் நஜிஸ் பட்ட இடம் வுழுவுடைய உறுப்புக்களில் ஒன்றாக இருப்பின் அவர் குறைவான நீரினால் சுத்தம் செய்யாது இன்னும் ஒரு தடவை கழுவி வுழுச் செய்து தொழுதால் அவரது வுழு இன்னும் தொழுகை பாத்திலாகும். முந்திய இடத்தில் அவர் அதிகமான தண்ணீரில் வுழு செய்து அல்லது வுழுவுடைய இடத்தை மூன்று முறை கழுவி சுத்தப்படுத்தி கொண்டால் அவரது வுழு இன்னும் தொழுகை சஹீஹாகும்.
விடயம் 817: ஒரு ஆடை இருக்கும் ஒருவர் , உடல் , உடை நஜிஸானால் இன்னும் தண்ணீரும் அவைகளில் ஒன்றைத்தான் சுத்தப்படுத்தும் என்ற அளவுக்கு இருந்தால் , ஆடையை கழைய முடியுமாக இருந்தால் அதைக் கழைந்து விட்டு உடலை சுத்தம் செய்து , தொழுகையை நிர்வாணமார்களுக்கு சொல்லப்பட்ட சட்டத்திட்டங்களின் படி நிறைவேற்றுவார். குளிர் போன்ற வேறு காரணத்தில் ஆடையை கழைய முடியாது போனால் , அவ்விரண்டிலுமுள்ள நஜிஸ் ஒன்றாக இருந்தால் உதாரணமாக இரண்டிலும் சிறுநீர் அல்லது இரத்தம் பட்டுள்ளது. அல்லது உடம்பில் உள்ளது ஆடையில் உள்ளதை விட கடினமாக இருந்தால் உதாரணமாக உடம்பில் உள்ள நஜிஸ் சிறு நீராக இருந்தால் அதை குறைவான தண்ணீராக இருந்தால் இரண்டு தடவை கழுவ வேண்டும் என்பதாக இருந்தால் , இந்நிலையில் இஹ்தியாது வாஜிபின் படி உடம்பைக் கழுவ வேண்டும். ஆனால் ஆடையில் உள்ள நஜிஸ் அதிகமாக அல்லது கடினமாக இருந்தால் இந்நிலையில் அவர் விரும்பியதைக் கழுவ முடியும். அதாவது விரும்பினால் ஆடையைக் கழுவுவார். விரும்பினால் உடம்பைக் கழுவுவார்.
விடயம் 818: நஜிஸான ஆடையைத் தவிர வேறு ஆடை இல்லாத ஒருவர் , நேரம் குறுகியதாக இருந்து அல்லது சுத்தமான ஆடை கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இல்லாது இருந்தால் அவர் நிர்வாணமானவர்கள் எப்படித் தொழ வேண்டும் என அவர்களுக்குச் சொல்லப்பட்ட சட்ட திட்டங்களின் படி தொழுகையை நிறைவேற்ற வேண்டும். ஆனால் அவரால் குளிர் போன்ற வேறு காரணத்தால் அந்த ஆடையை கழைய முடியாது போனால் அதே நிலையில் தொழுவார் அவரது தொழுகை சஹீஹாகும்.
விடயம் 819: ஒருவருக்கு இரண்டு ஆடைகள் இருக்கின்றது அவைகளயில் ஒன்று நஜிஸாகியுள்ளதென அவருக்கு தெரியும்இ அவரால் அவைகளை கழுவவும் முடியாது இன்னும் அதில் எது நஜிஸானதென அறியவுமாட்டார். இந்நிலையில் நேரம் இருக்குமாயின் அந்த இரண்டு ஆடைகளுடனும் தொழவேண்டும். உதாரணமாக அவர் ளுஹர்இ அஸர் தொழுகையை தொழ நாடினால் அவை ஒவ்வொன்றையும் அணிந்து ஒரு ளுஹர் ஒரு அஸர் தொழுகை தொழவேண்டும். ஆனால் நேரம் குறைவாக இருந்தால் இஹ்தியாது வாஜிபின் படி அவர் தொழுகையை நிர்வாணமானவர்களுக்கு சொல்லப்பட்ட முறைப்படி தொழுவார். இன்னும் இஹ்தியாது வாஜிபின் படி அந்த தொழுகையை சுத்தமான ஆடையுடன் கழாச் செய்ய வேண்டும்.
இரண்டாவது நிபந்தனை
விடயம் 820: தொழுபவரின் ஆடை இஹ்தியாது வாஜிப் படி முபாஹாக (ஆகுமானதாக) இருக்க வேண்டும். அபகரிக்கப் பட்ட ஆடையை அணிவது ஹராம் என அறிந்த ஒருவர் , வேண்டுமென அபகரிக்கப்பட்ட ஆடையுடன் அல்லது நூல் அல்லது பொத்தான் அல்லது வேறொன்று அபகரிக்கப்பட்டதாக இருந்து அதனுடன் தொழுதால் இஹ்தியாது வாஜிபின படி அவரது தொழுகை பாத்திலாகும். கட்டாயம் அபகரிக்கப்பட்ட ஆடையுடன் தொழுத தொழுகையை திரும்பத் தொழவேண்டும். அதேபோல் தான் அபகரிக்கப்பட்ட ஆடையை அணிவது ஹராம் என்ற சட்டத்தை படிப்பதில் பொடுபோக்காக இருந்தவருடைய சட்டமும்.