Back | Index | Next |
விடயம் 821: அபகரிக்கப்பட்ட ஆடை அணிவது ஹராம் என அறிந்த ஒருவருக்கு அது தொழுகையை பாத்திலாக்குமா இல்லையா என தெரியாதிருந்தால் , வேண்டுமென அவர் அபகரிக்கப்பட்ட ஆடையுடன் தொழுதால் இஹ்தியாது வாஜிபு அவரது தொழுகை பாத்திலாகும். இன்னும் அவர் அதை அபகரிக்கப்படாத ஆடையுடன் திரும்பத் தொழவேண்டும்.
விடயம் 822: ஒருவடைய ஆடை அபகரிக்கப்பட்டது என அவருக்கு தெரியாது போனால் அல்லது மறந்து போய் அதனுடன் தொழுதால் அவரது தொழுகை சஹீஹாகும். ஆனால் அவரே அந்த ஆடையை அபகரித்திருந்து மறந்திருந்தால் இஹ்தியாது வாஜிபின் படி அவரது தொழுகை பாத்திலாகும். கட்டாயம் அந்த தொழுகையை அபகரிக்கப்படாத ஆடையுடன் திரும்பத் தொழவேண்டும்.
விடயம் 823: அபகரிக்கப்பட்ட பொருட்கள் சிறயதாக இருக்கட்டும் அல்லது பெரியதாக இருக்கட்டும் (தஸ்பீஹ் , கைக்குட்டை... போன்றவை) தொழுபவருடன் இருந்தால் அது தொழுகை பாத்திலாவதற்கு காரணமாகாது.
விடயம் 824: ஒருவர் தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள அபகரிப்பட்ட ஆடையுடன் தொழுதால் அல்லது உதாரணமாக திருடன் அபகரிக்கப்பட்ட ஆடையை திருடிக் கொண்டு செல்லாது இருப்பதற்காக அதனுடன் தொழுதால் அவரது தொழுகை சஹீஹாகும்.
விடயம் 825: ஒருவருக்கு அவரது ஆடை அபகரிக்கப்பட்டதென தெரியாதிருந்து அல்லது மறந்து போய் தொழுது கொண்டிருக்கும் போது இடையில் அவருக்கு ஞாபகம் ஏற்பட்டால் , அவ்ரத்தை மறைக்க கூடிய ஒன்றை அவர் அணிந்திருந்தால் இன்னும் உடனடியாக தொழுகை அமைப்பு குழம்பாது அந்த ஆடையை கழட்ட முடியுமாக இருந்தால் அதை கழட்ட வேண்டும். அப்போத அவரது தொழுகை சஹீஹாகும். அதை தொடர்ந்து தொழுது முடிப்பார். ஆனால் அவ்ரத்தை மறைக்க கூடிய ஒன்றையும் அவர் அணிய வில்லையென்றிருந்தால் அல்லது உடனடியாக அதைக் கழட்ட முடியாதிருந்தால் அல்லது அதை கழட்டும் போது தொழுகையின் அமைப்பு குழம்பி விடும் என்றிருந்தால் ஒரு ரகஅத் தொழுவதற்குறிய நேரம் இருந்தாலும் சரி தொழுகையை முறித்து விட்டு அபகரிக்கப்படாத ஆடையுடன் தொழவேண்டும். அந்தளவுக்கும் நேரம் இல்லை என்றிருந்தால் தொழுது கொண்டிருந்த நிலையில் அதைக் கழட்டி விட்டு நிர்வாணமார்கள் எப்படித் தொழவேண்டும் என அவர்களுக்குச் சொல்லப்பட்டிருக்கும் சட்டதிட்டத்தின் படி தொழுது முடிக்கவேண்டும்.
விடயம் 826: கும்ஸ் அல்லது ஸகாத் கொடுக்காது பணத்தின் மூலம் ஆடை வாங்கினால் அதற்கு அபகரிக்கப்பட்டதற்குறிய சட்டமேயாகும் அந்த ஆடையுடன் தொழுதால் அவரது தொழுகை பாத்திலாகும். ஆனால் ஆடை கடனுக்கு அல்லது கடன் எடுத்து வாங்கி அதை கும்ஸ் அல்லது ஸகாத் கொடுக்காத பணம் அல்லது ஹராமான பணத்தில் இருந்து கொடுக்க வேண்டும் என நாட்டமும் கொண்டிருந்தால் அந்த ஆடையுடன் தொழுதாலும் அவரது தொழுகை பாத்திலாகும்.
மூன்றாவது நிபந்தனை
விடயம் 827: தொழுபவரின் ஆடை சீரிப்பாயும் இரத்தமுடைய இறந்த மிருகத்தின் உறுப்பை , பகுதியைக் கொண்டிராதிருத்தல். ஆனால் உண்பது ஹலாலான இறந்த இரத்தமில்லாத விலங்கின் உதாரணமாக மீன் போன்றதின் உறுப்பைக் கொண்டு செய்யப்பட்டிருந்தால் இஹ்தியாது முஸ்தஹப்பின் படி அதன் மூலம் தொழாதிருத்தல்.
விடயம் 828: இறந்ததில் உயிர் உள்ளவையில் ஒன்று உதாரணமாக இறைச்சி , தோல் போன்றவை தொழுபவருடன் இருந்தால் அவரது தொழுகை பாத்திலாகி விடும். அது அவரது ஆடையாக இருக்கா விட்டாலும் சரியே!
விடயம் 829: உண்பது ஹலாலான இறந்தவற்றின் உயிரில்லாத பொருட்கள் உதாரணமாக முடி போன்றவை , தொழுபவருடன் இருந்தால் அல்லது அதன் மூலம் ஆடை செய்யப்பட்டிருந்து அந்நிலையில் தொழுதால் அவரது தொழுகை சஹீஹாகும்.
விடயம் 830: அபகரிக்கப்பட்ட ஆடை இன்னும் இறந்ததினால் செய்யப்பட்ட ஆடையைத் தவிர வேறு ஆடை இல்லாதிருந்தால் இன்னும் ஆடைதான் அணிய வேண்டும் என்ற நிர்பந்த நிலையும் இல்லாதிருந்தால் நிர்வாணமானவர்கள் எப்படி தொழவேண்டும் என அவர்களுக்குச் சொல்லப்பட்டிருக்கும் சட்டதிட்டங்களின் தொழவேண்டும்.
நான்காவது நிபந்தனை
விடயம் 831: தொழுபவரின் ஆடை உண்பது ஹராமான விலங்களினால் செய்யப்படாததாக இருத்தல். அவைகளில் ஒரு முடியேனும் தொழுபவருடன் இருந்தால் அவரது தொழுகை பாத்திலாகி விடும்.
விடயம் 832: உண்பது ஹராமான உதாரணமாக பூனை போன்ற விலங்களின் வீனி அல்லது வேறு வகையான ஈரம் தொழுபவரின் மேனி அல்லது ஆடையில் பட்டால் , அது ஈரமாக இருந்தால் தொழுகை பாத்திலாகும். ஆனால் அது காய்ந்து அதை துறைக்கப்பட்டிருந்தால் தொழுகை சஹீஹாகும்.
விடயம் 833: ஒருவரது உமிழ் நீர் அல்லது முடி , வியர்வை தொழுபவரின் மேனியில் அல்லது ஆடையில் இருந்தால் அதில் பிரச்சிணையில்லை. அதேபோல் தான் வைரம் , முத்து , ( தேன்) மெழுகு , தேன் இருந்தாலும் அவரது தொழுகை சஹீஹாகும்.
விடயம் 834: ஒருவர் தன்னிடம் இருக்கும் ஆடை ஹலாலான மிருகத்திலிருந்து செய்யப்பட்டதா அல்லது ஹராமான மிருகத்தில் இருந்து செய்யப்பட்டதா என சந்தேகம் கொண்டால் , அது உள் நாட்டில் செய்யப்படிருந்தாலும் சரி அல்லது வெளி நாட்டில் செய்யப்பட்டிருந்தாலும் சரி அதன் மூலம் தொழுவதில் பிரச்சிணையில்லை.
விடயம் 835: ஒருவர் பொத்தான் போன்றவை சிப்பி போன்ற விலங்கில் இருந்து செய்யப்பட்டவை என சந்தேகம் கொண்டால் அதன் மூலம் தொழுவதில் தடையில்லை. ஆனால் சிப்பிதான் என அவருக்கு தெரியும் ஆனால் அதில் சதை இல்லை என சந்தேகப்படுகிறார் அப்போது அதன் மூலம் தொழுவதில் தடையில்லை.
விடயம் 836: கீரியுடைய தோலைக் கொண்டு தொழுவதில் பிரச்சிணையில்லை. ஆனால் இஹ்தியாது வாஜிபின் படி அணிலுடைய தோலைக் கொண்டு தொழாதிருத்தல்.
விடயம் 837: ஹலாலான மிருகத்தில் இருந்து செய்யப்பட்டதா அல்லது ஹராமான மிருகத்தில் இருந்து செய்யப்பட்டதா என தெறியாத ஆடையுடன் தொழுதால் அவரது தொழுகை சஹீஹாகும். ஆனால் அதை மறந்திருந்தால் இஹ்தியாது வாஜிபின் படி அந்த தொழுகையை திரும்பத் தொழவேண்டும்.
விடயம் 838: இறப்பர் போன்றவைகளினால் செய்யப்படும் செயற்கைத் தோலிகளைக் கொண்டு தொழுவதில் பிரச்சிணையில்லை. இதன்படி ஒருவர் இத்தோல் இயற்யையானதா அல்லது செயற்கையானதா , அல்லது ஹராமனா மிருகத்தில் இருந்து எடுக்கப் பட்டதா அல்லது ஹலாலான அறுக்கப் பட்ட மிருகத்தில் இருந்து எடுக்கப்பட்டதா ? என சந்தேகம் கொண் ; டால் அதன் மூலம் தொழுவதில் பிரச்சிணையில்லை.
விடயம் 839: உண்பது ஹராமான மிருகத்தில் இருந்து செய்யப்பட்ட ஆடையைத் தவிர வேறு ஆடையில்லாத ஒருவருக்கு ஆடை அணிந்தே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்த நிலை வந்தால் , அந்த ஆடையுன் தொழமுடியும். ஆனால் நிர்ப்பந்த நிலை இல்லை என்றிருந்தால் நிர்வாணமானவர்கள் எப்படி தொழவேண்டும் என அவர்களுக்குச் சொல்லப்பட்டிருக்கும் சட்ட திட் ; டங்களின் படி செய்து தொழவேண்டும். இஹ்தியாது வாஜிபின படி அந்த ஆடையுடன் இன்னொரு தொழுகையும் தொழவேண்டும்.
ஐந்தாவது , ஆறாவது நிபந்தனை
விடயம் 840: ஆண்களுக்கு தங்கத்தினால் நெய்யப்பட்ட ஆடைகள் அணிவது ஹராமாகும். அதன் மூலம் தொழுதால் தொழுகை பாத்திலாகும். ஆனால் பெண்களுக்கு தொழுகையில் அல்லது வேறு இடங்களில் வித்தியாசமில்லை அதாவது ஹலாலாகும்.
விடயம் 841: தங்கத்தைக் கொண்டு அழகு படுத்தல் உதாரணமாக தங்க மாலை , மோதிரம் அணிதல் , தங்கத்தினாலான மணிக்கூடு கட்டுதல் ஆண்களுக்கு ஹராமாகும். அந்நிலையில் தொழுதால் தொழுகை பாத்திலாகும். கட்டாயம் தங்க கண்ணாடி பாவிப்பதை தவிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் பெண்களுக்கு தொழுகையில் அல்லது வேறு இடங்களில் வித்தியாசமில்லை அதாவது ஹலாலாகும்.
விடயம் 842: தெரியாது அல்லது மறதியாக தங்கத்தில் தொழுதால் இஹ்தியாது வாஜிபின படி அவரது தொழுகை பாத்திலாகும்.
விடயம் 843: தங்கத்தின் மூலம் அலங்கரித்தல் அல்லது தங்கத்தினால் நெய்யப்பட்ட ஆடையை அணிவது ஆண்களுக்கு ஹராமாகும். அது வெளிப்படையாக இருந்தாலும் சரி அல்லது மறை முகமாக இருந்தாலும் சரியே. அந்நிலையில் தொழுதால் தொழுகை பாத்திலாகும். இதன் படி சேர்டுக்கு கீழ் தங்கம் பதிக்கப் பட்ட ஒன்று இருந்தால் அல்லது தங்க மாலை அணிந்திருந்தால் அது வெளியில் தெரிய வில்லை என்றிருந்தாலும் சரியே ஹராமாகும். தொழுகையும் பாத்திலாகும்.
விடயம் 844: தொழுபவரின் ஆடை தனி பட்டாக இருக்க கூடாது. அதேபோல் இஹ்தியாது வாஜிபின் படி தனியே இரண்டு அவ்ரத்துக்களையும் மறைக்காத சிறிய தொப்பி போன்றவை தனிபட்டாக இருப்பின் அதன் அதனுடன் தொழுதால் தொழுகை பாத்திலாகி விடும். தொழுகை அல்லாத நேரத்திலும் அதை அணிவது ஆண்களுக்கு ஹராமாகும்.
விடயம் 845: முழுக்க உட்புறம் வைத்து தைக்கப்பட்டுள்ள அல்லது ஒரு பகுதி உட்புறம் வைத்து தைக்கப்பட்டுள்ள ஆடையின் உற்புறம் வைத்துள்ள ஆடையில் ஒரு சிறு துண்டேனும் தனிபட்டாக இருப்பின் அதை அணிவது ஆண்களுக்கு ஹராமாகும். அதன் மூலம் தொழுதால் தொழுகையும் பாத்திலாகி விடும்.
விடயம் 846: தங்க மோதிரம் அல்லது மாலை ஒரு ஆணின் பொக்கிட்டுக்குல் இருந்தால் அதில் பிரச்சிணையில்லை. அது தொழுகையை பாத்திலாக்க மாட்டாது.
விடயம் 847: தனிப்பட்டா இல்லையா என அறியாத ஆடையை அணிவதில் பிரச்சிணையில்லை. அந்நிலையில் தொழுதால் தொழுகை சஹீஹாகும்.
விடயம் 848: பட்டு இன்னும் அது போன்றதிலானவற்றால் செய்யப்பட்ட கைக்குட்டை ஒரு ஆணில் பக்கட்டினுல் இருந்தால் அதில் பிரச்சிணையில்லை. அது தொழுகையை பாத்திலாக்க மாட்டாது.
விடயம் 849: பெண்கள் பட்டாடைகளை அணிவது தொழுகையில் அல்லது வேறு இடங்களில் பிரச்சிணையில்லை ஹலாலாகும்.
விடயம் 850: அபகரிக்கப்பட்ட , தனிப்பட்டு , தங்கத்தால் நெய்யப்பட்ட இன்னும் இறந்தவற்றினால் செய்யப்பட்ட ஆடைகளை நிர்ப்பந்த நிலையில் அணிவதில் தடையில்லை. அத்தோடு ஆடை அணியவேண்டும் ஆனால் தவிர்ந்த வேறு ஆடையில்லை , தொழுகையின் கடைசி நேரம் வரைக்கும் இது நீங்காது என்றிருந்தால் அதை அணிந்து கொண்டு தொழமுடியும்.
விடயம் 851: தொழுபவரின் ஆடை பட்டு அது அல்லாததுடன் கழந்திருந்து அதை அணிந்து தொழுதால் பட்டு அல்லாதவையில் தொழுவது சஹீஹான ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையைக் கொண்டு அவரது தொழுகை சஹீஹாகும். ஆனால் பட்டு அல்லாதவையும் இருக்கின்றது என்ற அளவுக்கு மிகவும் குறைவாக இருந்தால் ஆண்கள் அதை அணிந்து தொழுவது அவர்கள் மீது ஆகாது.
விடயம் 852: ஒரு ஆண் தனிப்பட்டு அல்லது தங்கத்தினால் நெய்யப்பட்ட ஆடையைத் தவிர்ந்த வேறு ஆடை அவரிடம் இல்லாதிருந்தால் , ஆடை அணிய வேண்டும் என்ற நிர்ப்பந்த நிலையும் அவருக்கு இல்லை என்றிருந்தால் நிர்வாணமானவர்கள் எவ்வாறு தொழவேண்டும் என அவர்களுச் சொல்லப்பட்ட சட்டத்தின் படி தொழவேண்டும்.
விடயம் 853: தொழுகையின் போது தன் அவ்ரத்தை மறைத்துக் கொள்ள ஒன்று இல்லாதிருந்தால் , அதை வாங்குவது அல்லது வாடகைக்கு எடுப்பது வாஜிபாகும். ஆனால் அதை தயார் செய்வதற்கு மிகவும் பணம் தேவைப்பட்ட அவ்வளவு பணம் அவருடைய தரத்திற்கு மிகவும் அதிமாக இல்லாதிருந்தால் , இன்னும் அப்பணத்தை அதை தயார் செய்வதற்கு செலவு செய்தால் அவரது நிலை மோசமடையும் (அவருக்கு சிரமம் ஏற்படும்) என்றிருந்தால் நிர்வாணமானவர்களுக்கு சொல்லப்பட்டிருந்த முறைப்படி தொழவேண்டும்.
விடயம் 854: ஒருவருக்கு ஆடையில்லாதிருந்து வேறாருவர் அவருக்கு ஆடை கொடுக்கின்றார் அதை ஏற்றுக் கொள்வதில் அவருக்கு ஏற்றுக் கொள்ள முடியாத சிரமம் இல்லை என்றிருந்தால் கட்டாயம் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் இரவலாக அல்லது மற்றவர்களிடம் கொடுக்குமாறு கேட்டுப் பெறுவது அவருக்கு கஸ்டமில்லை என்றிருந்தால் , ஆடைகள் இருக்கின்ற ஒருவரிடம் இரவலாக அல்லது கொடுக்கும்படி கேட்க வேண்டும்.
விடயம் 855: இஹ்தியாது வாஜிபின் படி ஒரு மனிதன் மற்றவர்களுக்கு முன்னிலையில் விலை கூடிய பிரபல்யமான , வர்ண அல்லது இன்னாரார் நெய்யப்பட்டது என்று பிரயபல்யம் வாய்ந்த ஆடையை , மற்றவர்களுக்கும் அதை வாங்கி அணிய முடியாதிருந்தால் அதை அணியக் கூடாது. ஆனால் அதை அணிந்து தொழுதால் அதில் பிரச்சிணையில்லை.
விடயம் 856: பிரபல்யமான ஆடை என்பது வழக்கத்தில் பேசப்படுவதாகும். அதை அணிகின்ற போது மற்றவர்களுக்கு மத்தியில் எடுத்துக் காட்டக் கூடியதாகும். அல்லது அதை அணிபவருடைய தரத்திற்கு வர்ணத்தாலும் அமைப்பாலும் உகந்ததாக இல்லாதிருத்தல்.
விடயம் 857: இஹ்தியாது வாஜிபின் படி ஆண்கள் பெண்களுடைய ஆடையையும் பெண்கள் ஆண்களுடைய ஆடையையும் அணியாதிருத்தல். ஆதாவது ஆண்கள் , இவர் பெண்களைப் போல் ஆடை அணிந்துள்ளார் என்று சொல்லுமளவுக்கு அணியாதிருத்தல். அதேபோல் பெண்களும் ஆண்களைப் போல் ஆடை அணிந்துள்ளார் என்று சொல்லுமளவுக்கு அணியாதிருத்தல். இதன்படி ஆண்கள் தனியே பெண்களுடைய செருப்பை மட்டும் அணிவதில் பிரச்சிணையில்லை. அதேபோல் தான் பெண்களும் ஆண்களுடைய செருப்பை தனியே அணிவதில் பிரச்சிணையில்லை. ஆனால் அந்த ஆடைகளுடன் தொழுதாலும் பிரச்சிணையில்லை.
விடயம் 858: மறைப்பதற்கு ஒன்றுமில்லாத ஒருவர் , தொழுகையின் கடைசி நேரம் வரைக்கும் ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு இருந்தால் இஹ்தியாது வாஜிப் படி தொழுகையை அதன் ஆரம்ப நேரத்திலிருந்து பிற்படுத்தி மறை ; த்துக் கொண்டே தொழவேண்டும்.
விடயம் 859: தூங்கிக் கொண்ட நிலையில் தொழவேண்டிய ஒருவர் , நிர்வாணமாக இருந்தால் , இன்னும் அவரது மெத்தையுரை அல்லது மெத்தை நஜிஸாக அல்லது தனிப்பட்டாக அல்லது உண்பது ஹராமான இறந்த விலங்குகள் மூலம் செய்யப்பட்டாக இருந்தால் இஹ்தியாது வாஜிபின் படி தன் தொழுகையின் போது அதன் மூலம் மூடாதிருத்தல்.
விடயம் 860: மூன்று நிலமைகளில் , அது என்னபென்று பின்னர் விரிவாக கூறப்படும் , உடல் அல்லது உடை நஜிஸாக இருந்து தொழுதால் அவரது தொழுகை சஹீஹாகும்.
முதலாவது: தனது உடம்பில் இருக்கின்ற காயத்தினால் அல்லது பொக்கலத்தினால் அவரது உடல் அல்லது உடை நஜிஸாகிருத்தல்