Back | Index | Next |
விடயம் 891: பொதுவான இடங்களில் உதாரணமாக: ஹோட்டல்கள் , பிரயாணிகள் விடுதிகள் இன்னும் பொதுவாக குளிப்பதற்கும் பிரயாணிகளை எதிர்பார்த்து வைக்கப் பட்டிருக்கும் இடங்கள் போன்றவையில் தொழுவதில் பிரச்சினை இல்லை. ஆனால் பிரயாணி இல்லாதவர்கள் அதில் தொழுவதென்றால் அதன் சொந்தக்காரர் பொருந்திக் கொள்வார் என்றறிந்திருந்தால் தடையில்லை. ஆனால் குறிப்பான இடத்தில் அதன் சொந்தக்காரரின் அனுமதியில்லாது தொழுவது ஆகாது. ஆனால் மற்றவைகளுக்கு அனுமதி கொடுத்திருக்கும் அவர் இங்கு தொழுதாலும் பொருந்திக் கொள்வார் என அறிந்தால் அங்கு தொழுவதில் பிரச்சினையில்லை. உதாரணமாக விருந்திற்காக இன்னும் ஓய்வெடுப்பதற்காக அழைத்திருக்கும் ஒருவர் தொழுவதையும் பொருந்திக் கொள்வார் என்பது போல.
விடயம் 892: பரந்து விரிந்த நிளப்பரப்பில் மக்கள் அதைத் தவிர்ந்து கொள்ளது அவர்களுக்கு முடியாததாக அல்லது கஸ்டமாக இருந்தால் , அதன் சொந்தக்காரர்கள் அங்கு தொழுவதை , உட்காருவதை , தூங்குவதை வெறுக்கின்றனர் என்றிருந்தாலும் சரி அதில் தொழுவதில் பிரச்சினையில்லை. அதற்கு சொந்தமானவர்களில் சிறுவர்கள் இன்னும் பையத்திகாரர்கள் இருந்து இஹ்தியாது வாஜிபின் படி அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்ற அறிவு இருந்தாலும் அதை தவிர்ந்து கொள்ள வேண்டும் என்றிருந்தாலும் சரியே!.
இரண்டாவது: தரிபட்டிருக்க வேண்டும்.
விடயம் 893: தொழுபவரின் இடம் அமைதியாக அதாவது ஆடாமல் அசையாது இருக்க வேண்டும். எனவே பிரயாண வண்டிகளில் அசைவு இருந்தால் அதில் தொழுதால் தொழுகை பாத்திலாகும். ஆனால் சங்கடமான நிலமைகளைத் தவிர. – உதாரணமாக நேரம் குறைவாக இருத்தல் போல - இந்த நிலமையிலும் கூட தொழுகையின் நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆடும் போதும் அசையும் போதும் தொழுகையில் எதையும் செய்யக் கூடாது. மேலும் வண்டி திசை திரும்பும் போதும் அவர் தன்னை கிப்லாவின் பக்கம் திருப்பிக் கொள்ள வேண்டும்.
விடயம் 894: தொழும் போது மனிதனை குழுக்காத , மனிதன் அதில் அசையாது இருந்து செல்லும் வண்டிகளில் உதாரணமாக கப்பல் , விமானம் , இன்னும் புகை வண்டி போன்றவைகளில் தொழுகையின் நிபந்தனைகள் , கிப்லாவைக் கவனத்தில் கொண்டு தொழுவதில் பிரச்சினையில்லை. ஆனால் வழக்கத்தில் அசையாது இருப்பதற்கு மாற்றமாக இருந்தால் உதாரணமாக விறிய வள்ளம் , பிரயாண வண்டி போன்றவைகளில் தொழுவது சஹீஹாக மாட்டாது. இக்கட்டான நிலையைத் தவிர.
விடயம் 895: வைக்கோல்கட்டு , மண் குமியல் போன்ற தரிபட்டிருக்காதவைகள் மீது தொழுவது கூடாது. ஆனால் அதன் அசைவு மிகவும் குறைவாக இருந்து தொழுகையின் வாஜிபுகளையும் ஏனைய நிபந்தனைகளையும் கவனித்து நிறைவேற்ற முடியும் என்றிருந்தால் தடையில்லை.
விடயம் 896: காற்று , மழை , சனத் தொகை போன்ற காரணங்களினால் தொழுகையை பூரணமாக தொழ முடியாது என்ற நம்பிக்கை இருக்கின்ற இடத்தில் தொழுகையை பூரணமாக தொழுது முடித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் தொழ ஆரம்பிப்பதில் பிரச்சினையில்லை. இன்னும் தொழுது கொண்டிருக்கும் அவைகளில் ஏதும் நிகழாது இருந்தால் அவரது தொழுகை சஹீஹாகும். மேலும் நிற்பது ஹராமான இடங்களில் (உதாரணமாக மோடு இடிந்து விழும் அல்லது மலை சரிவு அல்லது விபத்து ஏற்படும் இடங்கள் போன்ற இன்னும் பல இடங்கள்) தொழக் கூடாது. ஆனால் தொழுதால் அவரது தொழுகை சஹீஹாகும். என்றாலும் அவர் ஹராமான விடயத்தை செய்து விட்டார். மேலும் நிற்பது , அமர்வது ஹராமான இடங்களிலும் உதாரணமாக அல்லாஹ்வுடைய பெயர் அல்லது அல்குர்ஆனின் ஒரு அத்தியாயம் எழுதப்பட்ட விரிப்பு அல்லது பத்திரிக்கை மீதும் தொழக் கூடாது. மாறாக தொழுதால் அவரது தொழுகை சஹீஹாகும் என்றாலும் அவர் ஹராமான விடயத்தை செய்து விட்டார்.
விடயம் 897: இஹ்தியாது வாஜிபின் படி கஃபாவின் மேல் பகுதியின் மீது (அதாவது அதன் மோட்டுப் பகுதியில்) தொழாதிருத்தல். ஆனால் தங்கடமான நிலமையைத் தவிர.
விடயம் 898: சுன்னத்தான தொழுகைகளை கஃபாவின் மேல் பகுதியின் மீது (அதாவது அதன் மோட்டுப் பகுதியில்) தொழுவதில் பிரச்சினையில்லை. மாறாக கஃபாவுடைய இல்லத்தின் உற்பகுதியில் இருக்கும் ஒவ்வொரு தூணுக்கு முன்னும் இரண்டு ரகஅத்துக் தொழுவது சுன்னத்தாகும்.
மூன்றாவது: தொழுகையின் வாஜிபுகளை செய்ய முடியுமான இடத்தில் தொழுதல்
விடயம் 899: நிமிர்ந்து நிற்கமுடியாது மோடு பனிவாக இருக்கும் இடத்தில் அல்லது முறைப்படி குனிந்து ருகூஃ இன்னும் கூஜுது செய்ய முடியாத அளவு ஒடுங்கிய இடத்தில் தொழக் கூடாது. அப்படியான இடத்தில் தான் தொழ வேண்டும் என்ற நிர்ப்பந்த நிலை ஏற்பட்டால் முடியுமான ருகூஃ மற்றும் சுஜுதை செய்ய வேண்டும்.
விடயம் 900: ஒவ்வொரு மனிதரும் அதப் எனும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். எனவே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹீ வஆலிஹி இன்னும் இமாம்களது கப்ருக்கு முன்னே (அதாவது கப்ரைப் பிற்படுத்தித்) தொழக்கூடாது. இன்னும் இஹ்தியாது வாஜிபின் படி மஃசூம்களது (பரிசுத்தவான்களது) கப்ருக்கு சரிசமமாக நின்றும் தொழக் கூடாது.
விடயம் 901: தொழும் போது , தொழுகைக்கும் பரிசுத்தவான்களின் கப்ருகளுக்கும் இடையில் சுவர் , திறை போன்ற தடை இருந்து அது அவர்களை தரக் குறைவாக அதாவது இழிவாக கருதவில்லை என்றால் பிரச்சினையில்லை.
நாலாவது: ஆடை , மேனியை நஜிஸாக்காதவையாக இருத்தல்
விடயம் 902: தொழும் இடம் நஜிஸாக இருந்தால் , அது தொழுபவரின் ஆடையில் , மேனியில் படுமளவுக்கு ஈரமாக இருக்காதிருத்தல். தொழுகையில் மன்னிக்கப்பட்ட நஜிஸ்களைத் தவிர. ஆனால் நெற்றியை வைக்கும் இடம் நஜிஸாக இருந்தால் அவரது தொழுகை பாத்திலாகிவிடும். அந்த நஜிஸ் கடக்காததாக இருந்தாலும் சரியே! வாஜிபான ஸஜதாவை செய்வதற்கு போதுமான அளவு சுத்தமாக இருந்தால் போதுமாகும். இஹ்தியாது முஸ்தஹப்பின் படி தொழுபவரிக் இடம் அறவே நஜிஸாக இருக்க கூடாது.
ஐந்தாவது: ஆண் பெண்ணுக்கு முன் இருத்தல்
விடயம் 903: தொழுகையின் போது பெண்கள் , ஆண்களுக்கு பின்னே நிற்க வேண்டும். பெண் ஸஜதா செய்யும் இடம் ஆண்கள் நிற்கும் இடத்தை விட சற்று பின்பாக இருப்பது சிறந்தது. இதன்படி பெண்கள் ஆண்களுக்கு முன்பாக அல்லது சரிசமமாக நின்றால் தொழுகை பாத்திலாகும். இந்த சட்டத்தில் மஹ்ரமானவர்களுக்கும் மஹ்ரமல்லாதவர்களுக்கும் அல்லது கணவன் மனைவிக்கும இடையில் வித்தியாசம் இல்லை. அதேபோல் வஜிபான மற்றும் சுன்னத்தான தொழுகைகளுக்கும் இடையிலும் வித்தியாசமில்லை.
விடயம் 904: பெண் ஆணுக்கு அருகில் அல்லது அவனுக்கு முன்பு நின்று இருவரும் தொழ ஆரம்பித்தால் அவர்கள் இருவரது தொழுகையும் பாத்திலாகும். ஆனால் அவர்களில் ஒருவர் முன்னர் தொழ ஆரம்பித்திருந்தால் முதலாமவரது தொழுகை சஹீஹாகும். இரண்டாமவரது தொழுகை பாத்திலாகும்.
விடயம் 905: ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் சுவர் அல்லது திறை போடப்பட்டிருந்து அவர்கள் ஒருவரையொருவர் காணாதிருந்தால் அல்லது அவர்களுக்கு இடையில் சுமார் ஐந்து மீட்டர் இடைவெளி இருந்தால் அவர்களது தொழுகை சஹீஹாகும்.
விடயம் 906: பெண் இரண்டாம் மாடியில் தொழுதால் அப்போது அவள் ஆணுக்கு முன்பு நின்றாலோ அல்லது அவனுக்கு சரிசமமாக நின்றாலோ அவளது தொழுகை சஹீஹாகும். அதன் உயரம் ஐந்து மீட்டரை விட பணிவாக இருந்தாலும் சரியே!
ஆறாவது: இடம் சமமாக இருத்தல்
விடயம் 907: நெற்றியை வைக்கும் இடம் முழங்கால் இன்னும் கால்களின் விரல்களை வைக்கும் இடத்தை விட , நான்கு ஒட்டிய விரல்களின் அளவுக்கு மேல் பணிவாகவோ அல்லது உயரமாகவோ இருக்க கூடாது.
விடயம் 908:தன் தொழுகையை பள்ளியில் தான் தொழ வேண்டும் என இஸ்லாமிய மார்க்கத்தில் மிகவும் சிபார்சு செய்யப்பட்டுள்ளது. எல்லாப் பள்ளிகளையும் மஸ்ஜிதுல் ஹராமே சிறந்த பள்ளியாகும். அதற்கு பின் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களது பள்ளி , அதன் பின் மஸ்ஜிதுல் கூபா , பின் மஸ் ; ஜிதுல் பைதுல் முகக்தஸ் , பின் ஒவ்வொரு ஊரில் இருக்கும் பெரிய பள்ளி வாயல் , பின் மஹல்லா பள்ளி வாயல் , அதன் பின் பஸாரில் இருக்கும் பள்ளி வாயல் .
விடயம் 909:பெண்கள் தங்களது தொழுகைகளை தங்களது வீடுகளில் தனிப்பட்ட அறைகளில் தொழுவது சிறந்ததாகும். ஆனால் பள்ளியில் தொழுவது பள்ளியல் தொழுகின்ற சிறப்பைத் தவிர வேறு சிறப்பம்சங்கள் கொண்டிருந்தால் உதாரணமாக பள்ளியில் இமாம் ஜமாஅத்துடன் தொழும்போது இறையச்சம் அதிகம் ஏற்படும் என்றிருந்தால் அதைப் பெற்றுக் கொள்வதற்காக பெண்கள் பூரண ஹிஜாப் அணிந்து கொண்டு பள்ளிக்கு செல்வது சிறந்ததாகும். மேலும் இஸ்லாமிய சட்ட திட்டங்களை பள்ளிக்குச் செல்வதன் மூலமாகத்தான் கற்க முடியும் என்றிருந்தால் பெண்கள் அங்கு செல்வது வாஜிபாகும்.
விடயம் 910: இமாம்களுடைய ஹரம்களில் தொழுவது முஸ்தஹப்பாகும். என்றாலும் பள்ளியை விட சிறந்ததாகும். இமாம் அலி அலைஹிஸ்ஸலாம் அவர்களது ஹரத்தில் தொழும் தொழுகை இருநூறு ஆயிரம் தொழுகைக்கு சமமாகும்.
விடயம் 911:அதிகமாக பள்ளிக்குச் செல்லுதல் இன்னும் தொழுபவர்கள் இல்லாத பள்ளியில் செல்வதும் முஸ்தஹப்பாகும். மேலும் பள்ளி வாயலுக்கு அருகாமையில் இருப்பவர்கள் காரணம் இல்லாது பள்ளி தவிர்ந்த ஏனைய இடத்தில் தொழுவது மக்ரூஹ் ஆகும்.
விடயம் 912: பொடுபோக்காக நினைத்து பள்ளிக்குச் செல்லாதிருக்கும் மனிதருடன் நற்பு வைத்துக் கொள்ளாதிருப்பது , சேர்ந்து உணவு உண்ணாதிருப்பது , ஒரு வேலையில் அவருடன் ஆலோசணை செய்யாதிருப்பது , அவருடைய அயல் வீட்டாராக இல்லாதிருப்பது , அவருக்கு பெண் கொடுக்காதிருப்பதும் அவரிடமிருந்து பெண் எடுக்காதிருப்பதும் முஸ்தஹப்பாகும்.
விடயம் 913:கீழ் வரும் இடஙக்ளில் தொழுவது மக்ரூஹ் ஆகும்: குளியலறை , உப்பளம் , மனிதனுக்கு முன் , திறந்திருக்கும் கதவுக்கு முன் , ரோடு , ஒழுங்கையில் மற்றவர்கள் கடந்து போவதற்கு கஸ்டமில்லாதிருந்தால் , ஆனால் கஸ்டமாக இருப்பின் ஹராமாகும். நெருப்பு , விளக்குக்கு முன் , சமயலறை , நெருப்புக்கு முன் , சிறு நீர் கிடங்குக்கு முன் , உருவம் இன்னும் படத்தை முன்னோக்கி ஆனால் அதை மறைத்து திறையிடப்பட்டால் தவிர , குளிப்பு கடமையானவன் இருக்கும் அறையில் , புகைப்படும் இருக்கும் இடத்தில் அது தொழுபவருக்கு முன்னிலையில் இல்லை என்றிருந்தாலும் சரியே!. கப்ருக்கு முன் , இரண்டு கப்ருகளுக்கு இடையில் இன்னும் அடக்கஸ்தளத்தில்.
விடயம் 914:மக்கள் கடந்து செல்லும் இடத்தில் தொழும் ஒருவர் , அல்லது அவருக்கு முன் வேறொருவர் இருக்கின்ற போது தொழும் ஒருவர் , அவருக்கு அவர்களுக்கு இடையில் திறையாக இருக்கும் வண்ணம் ஏதாவது ஒன்றை வைப்பது முஸ்தஹப்பாகும். அது அஸா , தஸ்பீஹ் இன்னும் கைறு போன்றதாக இருந்தாலும் சரியே.
விடயம் 915: பள்ளியுடைய இடம் , மோடு , மேற்பகுதி , உள்பக்கம் , சுவர் , போன்றதை நஜிஸாக்குவது ஹராமாகும். எவராவது அவை நஜிஸாகியுள்ளது என அறிந்தால் உடனடியாக அதை சுத்தம் செய்ய வேண்டும். இன்னும் இஹ்தியாது வாஜிபின் படி பள்ளியின் வெளிப்பக்கத்தையும் நஜிஸாக்காதிருத்தல். அது நஜிஸானால் அதை நீக்க வேண்டும். ஆனால் அந்த இடத்தை வக்பு செய்தவர் அது பள்ளிக்குறிய இடமில்லை என்று சொன்னால் தவிர.
விடயம் 916:பள்ளியை சுத்தம் செய்ய முடியாது போனால் அல்லது அதைச் செய்வதற்கு உதவி தேவைப்பட்டு அது கிடைக்காது போனால் அதைச் சுத்தம் செய்வது வாஜிபில்லை. ஆனால் அதைச் சுத்தம் செய்ய முடிந்தவருக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
விடயம் 917: பள்ளியில் ஒரு இடம் நஜிஸாகி அவ்விடத்தை உடைப்பது அல்லது தோன்றுவது மூலமாக அதைச் சுத்தம் செய்ய முடியும் என்றிருந்தால் அதைச் தோன்ற வேண்டும். அல்லது உடைக்கும் போது மற்ற பகுதி அதிகமாக சேதமடையாது என்றிருந்தால் அதை உடைக்க வேண்டும். தோன்றிய இடத்தை நிறப்புவது இன்னும் உடைத்த இடத்தை கட்டுவதும் வாஜிபில்லை. ஆனால் அதை நஜிஸாக்கியவர் தோன்றினால் அல்லது உடைத்தால் முடியுமாக இருந்தால் அதை புனர்நிர்மானம் செய்ய வேண்டும்.
விடயம் 918:பள்ளியை அபகரித்து அந்த இடத்தில் வீடு அல்லது அது போன்றது கட்டினால் அபிவிருத்தி திட்டத்தின் போது ஒழுங்கை , கிராமத்தில் இருந்த பள்ளியின் ஒரு பகுதி வீதியில் காணப்பட்டால் இஹ்தியாது வாஜிபின் படி அதையும் நஜிஸாக்குவது ஆகாது. அதைச் சுத்தம் செய்வதும் வாஜிபாகும்.
விடயம் 919:மரணித்த உடலை குளிப்பாட் ; ட முன் பள்ளியில் வைத்தல் , அது நஜிஸ் பள்ளியில் படுவதற்கு காரணமாகாதிருந்தால் அல்லது பள்ளியை அசிங்கப்படுத்துவதற்காக இல்லாதிருந்தால் அதில் தடையில்லை. ஆனால் அப்படியான மையித்தை பள்ளயில் வைக்காதிருப்பது சிறந்ததாகும். ஆனால் குளிப்பாட்டிய பின் வைப்பதில் தடையில்லை.
விடயம் 920:நாயகம் ஸல்லல்லல்லாஹு அலைஹி வஆலிஹி இன்னும் இமாம்களின் ஹரம்களை நஜிஸாக்குவது ஹராமாகும். நஜிஸானால் அந்த நஜிஸ் இருப்பது அவர்களை தரக்குறைவாக இருப்பதற்கு காரணமானால் அதைச் சுத்தம் செய்வது வாஜிபாகும். இஹ்தியாது முஸ்தஹப்பின் படி கண்ணியக் குறைவாக கருதப்படாவிட்டாலும் அதைச் சுத்தம் செய்ய வேண்டும்.
விடயம் 921:பள்ளிய்ல இருக்கும் பாய் அல்லது விரிப்பு நஜிஸானால் , இஹ்தியாது வாஜிபின் படி அதை கழுவுவது வாஜிபாகும்.
விடயம் 922: பள்ளிக்குல் சிறு நீர் , இரத்தம் போன்ற அய்ன நஜிஸ்களைக் கொண்டு செல்வது , அது பள்ளியை இழிவு படுத்துவதாயின் ஹராமாகும். அதேபோல் நஜிஸான ஒன்றை கொண்டு போவது (உதாரணமாக நஜிஸான ஆடை , பாதணி) அது பள்ளியை இழிவு படுத்துவதாயின் ஹராமாகும்.
விடயம் 923:துக்க அனுஷ்டானங்களுக்காக அல்லது விழாக்களுக்காக பள்ளியை கருத்த நிறமுடையதாக்கினால் தேனீர் மற்றும் உணவுப் பாத்திரங்களை பள்ளி வாயலுக்குல் கொண்டு போனால் இச்செயல் பள்ளி வாயலுக்கு தீங்கை ஏற்படுத்தாதிருந்தால் இன்னும் தொழுவதற்கு தடையாக இல்லாதிருந்தால் அதில் தடையில்லை.
விடயம் 924: இஹ்தியாது வாஜிபின் படி பள்ளி வாயலை தங்கத்தினால் அலங்கரிக்க கூடாது. அதேபோல் இஹ்தியாது வாஜிபின் படி மனிதன் , மிருகம் போன்ற உயிருள்ளவற்றின் உருவத்தை வரையவும் கூடாது. ஆனால் உயிரில்லாத , உதாரணமாக பூ போன்றதை வரைவது மக்ரூஹ் ஆகும்.