Back Index Next

விடயம் 925:பள்ளி வாயல் பழுதாகினாலும் சரி அதை விற்கவோ அல்லது தனது சொத்தாக்கவோ , வீதியோது சேர்க்கவோ முடியாது.

விடயம் 926: பள்ளிக்குறிய கதவு , யன்னல் போன்ற மற்ற பொருட்களையும் விற்பது ஹராமாகும். பள்ளி பழுதானால் அதை சரிசெய்து பள்ளிவாயலாகவே ஆக்க வேண்டும். அதை அந்தப் பள்ளிவாயலில் பயன் படுத்த முடியாதென்றிருந்தால் மற்ற பள்ளி வாயலுக்காக பயன் படுத்த வேண்டும். ஆனால் அதை எந்தப் பள்ளி வாயலிலும் பயன் படுத்த முடியாதென்றிருந்தால் அப்போது விற்க முடியும். அதன் பணத்தை முடிந்தால் அந்தப் பள்ளியிக்காக செலவு செய்ய வேண்டும் முடியாவிட்டால் மற்ற பள்ளிகளுக்காக செலவு செய்ய வேண்டும்.

விடயம் 927:பள்ளி வாயல் கட்டுதல் , பழுதாக இருக்கும் பள்ளியை திருத்துதல் முஸ்தஹப்பாகும். அது திருத்த முடியாத அளவுக்கு பழுதானதாக இருந்தால் அதை உடைத்து விட்டு திரும்ப கட்ட வேண்டும். இன்னும் பழுதடையாத பள்ளியை மக்களது தேவைகளுக்காக உடைத்து பெரிதாக கட்டவும் முடியும்.

விடயம் 928:பள்ளியை சுத்தம் செய்தல் அதை ஒளி அடையச் செய்தல் முஸ்தஹப்பாகும். பள்ளிக்குச் செல்லும் ஒருவர் தனக்கு மனம் பூசிக் கொள்வது , சுத்தமான விலை கூடிய ஆடையை அணிந்து கொள்வது , பாதணியின் கீழ் பகுதியை அதில் நஜிஸ் இல்லாதவாறு சுத்தம் செய்வது , பள்ளியினுல் நுழையும் போது வலது பாலை முன் வைப்பது , அதிலிருந்து வெளியே வரும் போது இடது காலை வெளியே வைப்பது முஸ்தஹப்பாகும். அதேபோல் எல்லோருக்கும் முன் பள்ளிக்கு வருவதும் அனைவரும் சென்ற பின் அங்கிருந்து வெளியேறுவதும் சுன்னத்தாகும்.

விடயம் 929:மனிதன் பள்ளியினுல் நுழைந்ததும் அதற்காக இரண்டு ரகஅத் தஹிய்யதுல் மஸ்ஜித் என தொழுவது முஸ்தஹப்பாகும். வேறு வாஜிபாக அல்லது முஸ்தஹப்பான தொழுகைகள் தொழுதாலும் போதுமாகும்.

விடயம் 930: பள்ளியில் தூங்குதல் - வேறு வழியில்லாதிருந்தால் தவிர- உலக விவகாரம் பற்றி உரையாடுதல் , உபதேசம் இல்லாத கவிதைகளை வாசித்தல் மக்ரூஹ் ஆகும். மேலும் உமிழ் நீர் , சழிழை பள்ளியில் துப்புதல் , தொலைந்த பொருளைத் தேடுதல் , சத்தத்தை உயர்த்துதலும் மக்ரூஹாகும். ஆனால் அதான் சொல்வதற்காக சத்தத்தை உயர்த்துவதில் தடையில்லை.

விடயம் 931: சிறுவர்கள் , பையித்தகாரர்கள் பள்ளியினுல் செல்தற்கு அனுமதி கொடுத்தல் மக்ரூஹ் ஆகும். ஆனால் பிள்ளைகளைக் கொண்டு வருவது அடையூராக இல்லாதிருந்தால் அவ்வாறு கொண்டு வருதன் மூலத் அவர்களுக்கும் தொழுகையில் ஆர்வம் ஏற்படுமாயின் அவர்களைக் கொண்டு வருவது முஸ்தஹப்பாகும்.

விடயம் 932:வெள்ளைப் பூண்டு , வெங்காயம் போன்றதை சாப்பிட்ட ஒருவர் , அவரது வாயிலிருந்து அதன் வாடை வீசுமாயின் அவர் பள்ளிக்குச் செல்வது மக்ரூஹாகும்.

அதான் , இகாமத்

விடயம் 933:ஆண் , பெண் நாளாந்த தொழுகைக்கு முன் அதான் , இகாமத் சொல்வது சுன்னத்தாகும். ஆனால் நோன்பு , ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு முதல் மூன்று முறை ' அஸ்ஸலாத் ' என்று சொல்வது முஸ்தஹப்பாகும். இன்னும் ஏனைய வாஜிபான தொழுகைகளில் நிய்யத்தோடு மூன்று தடவை ' அஸ்ஸலாத் ' என்று சொல்ல வேண்டும்.

விடயம் 934:பிள்ளை பிறந்த முதலாவது நாளில் அல்லது தொப்புல் கொடி விழுவதற்கு முதல் அதன் வலது காதில் அதானையும் இடது காதில் இகாமத்தையும் சொல்வது முஸ்தஹப்பாகும்.

விடயம் 935:அதான் பதினெட்டு வசனமாகும்.

اَلله اكبرُ நான்கு முறை  اَشهدُ اَنْ لا الهَ اِلاّاللهُ، اَشْهَدُ اَنَّ مُحَمَّداً رسولُ الله  ـ حىَّ عَلَى الصَّلوةِ  ـ حَىَّ عَلَى الفَلاحِ  ـ حَىَّ عَلى خيرِ العملِ، الله اكبرُ  ـ لااِلَه اِلاّالله இவை ஒவ்வொன்றும் இரண்டு தடவை. இமாமத் பதினேழு வசனமாகும். அதாவது ஆரம்பத்தில் இரண்டு    الله اكبرُ ம் கடைசியில் ஒரு   لااِلهَ اِلاّالله    ம் குறைந்து விடும். பின்  حَىَّ عَلَى خيرِ العَمَل   சொன்ன பிறகு قَد قامَتِ الصَّلوةُ என்று இரண்டு தடவை சொல்ல வேண்டும்.

விடயம் 936: اَشْهَدُ اَنَّ عَليَّاً وَلىُّ اللهِ என்பது அதானுடைய , இகாமத்துடை பகுதியல்ல. ஆனால் اَشْهَدُ اَنَّ مُحَمَّداً رسولُ الله என்று சொன்ன பிறகு ' குர்பதுடைய ' நிய்யத்துடைன் இதைச் சொல்வது சிறந்ததாகும்.

அதான் , இகாமத்துடைய பொருள்

اللهُ اكبرُ :அல்லாஹ் மிகப் பெரியவன்

اَشْهَدُ اَنْ لاالهَ الاّاللهُ : அல்லாஹ்வைத் தவிர வணக்கத்துத் தகுதியான வேறு நாயன் இல்லைனெய சாட்சி கூறுகிறேன்.

اَشْهَدُ اَنَّ مُحَمَّداً رسُولُ اللهِ :முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் என சாட்சி பகர்கிறேன்.

اَشْهَدُ اَنَّ عَليَّا اَميرالمؤمنين وولىُّ اللهِ :அமீருல் முஃமினீன் அலி (அலை) அவர்கள் அல்லாஹ்வுடைய ' வலி ' ( பூமியில் மக்களுடைய தலைவர்) என சாட்சி சொல்கிறேன்.

حَىَّ عَلَى الصَّلوةِ :  தொழுகைக்காக விரைந்து வாருங்கள்.

حَىَّ عَلَى الفلاح :  வெற்றியின் பக்கம் விரைந்து வாருங்கள்.

حَىَّ عَلَى خيرِ العَمل : சிறந்த அமலின் பக்கம் விரைந்து வாருங்கள்.

قَد قامتِ الصَّلوة :நிச்சயமாக தொழுகை நிலைநிறுத்தப்பட்டு விட்டது.

لااِلهَ الاَّالله : அல்லாஹ்வைத் தவிர வணக்கத்துத் தகுதியான வேறு நாயன் இல்லை.

விடயம் 937:அதான் , இகாமத்துடைய வசனங்களுக்கு இடையில் கூடுதலான இடைவெளி இருக்க கூடாது. அவைகளுக்கு இடையில் வழமையான இடைவெளியைத் தவிர கூடுதலாக இடைவெளி இருந்தால் அதை ஆரம்பத்திலிருந்து திரும்பச் சொல்ல வேண்டும்.

விடயம் 938:அதான் , இகாமத் சொல்லும் போது சத்தத்தை தொண்டையில் அடைத்து அது இசைபோல வெளியானால் , அந்நிலையில் அதான் , இகாமத் வொல்வது ஹராம் இன்னும் பாத்திலாகும்.

விடயம் 939:ஒரு தொழுகையையாவது அதன் முந்திய தொழுகையுடன் சேர்த்துத் தொழப்பட்டால் அதனுடைய அதான் விழுந்து விடும். சேர்த்து தொழுவது சுன்னத்தானதாக இருக்கட்டும் அல்லது இல்லாததாக இருக்கட்டும். இதன்படி கீழ் வரும் இடங்களில் அதான் விழுந்து விடும்:

1. வெள்ளிக் கிழமையில் அஸருடைய அதான் , அதை ஜும்ஆ அல்லது ளுஹர் தொழுகையுடன் சேர்த்துத் தொழும் போது.

2. துல் ஹஜ் மாதம் ஒம்பதாம் நாள் (அறபாவுடைய தினம்) அஸருடைய அதான் , அது ளுஹருடன் சேர்த்துத் தொழப்பட்டால்.

3. ஹஜ்ஜுப் பெருநாளுடைய இரவில் மஸ்அருல் ஹராமில் இருப்பவர்களுக்கு இஷாவுடைய தொழுகை , அதை அவர்கள் மஃரிபுடன் சேர்த்து தொழுவார்கள். இரண்டு தொழுகைகளைச் சேர்த்துத் தொழுதல் மேற்கூறிய மூன்று இடங்களில் சுன்னத்தாகும்.

4. முஸ்தஹாழாவாக இருக்கும் பெண்ணுடைய அஸர் மற்றும் இஷாத் தொழுகை. அதை அவள் உடனடியாக ளுஹர் அல்லது இஷாத் தொழுகைக்குப் பின் தொழவேண்டும்.

5. மலம் சலம் வெளியாவதைத் தடுக்க முடியாதவர்களுடைய அஸர் , இஷாத் தொழுகை.

இந்த ஐந்து நிலமைகளிலும் முந்திய தொழுகைக்கும் மற்ற தொழுகைக்கும் இடையில் இடைவெளி இல்லை என்றிருந்தால் அதான் விழுந்து விடும். அல்லது சற்று இடைவெளி அவைகளுக்கு இடையில் எற்பட்டாலும் பரவாயில்லை.

விடயம் 940: ஜமாஅத்துத் தொழுகைக்காக அதான் , இகாமத் சொல்லப்பட்டிருந்தால் , அந்த ஜமாஅத்தில் சேர்ந்து தொழப்போகும் ஒருவர் அதை தனது தொழுகைக்காக திரும்பச் சொல்லக் கூடாது. அவர் அங்கு சொன்னதை கேட்க வில்லை என்றிருந்தாலும் சரியே. அல்லது சொல்லப்பட்ட போது அவர் அங்கு சமுகம் கொடுத்திருக்க வில்லை என்றிருந்தாலும் சரியே.

விடயம் 941: ஒருவர் ஜமாஅத் தொழுகைக்காக பள்ளிக்கு போகின்றார் அங்கு ஜமாஅத் தொழுகை நடந்து முடிந்து விட்டிருந்தது. ஆனால் மக்கள் தொழுத ஸப்புகளிலே பிரிந்து செல்லாது இருக்கின்றனர். அப்போது அவர்களது தொழுகைக்கு அதான் , இமாமத் சொல்லப்பட்டிருந்தால் இவர் தனது தொழுகைக்காக அதான் , இகாமத் சொல்ல முடியாது.

விடயம் 942:ஒரு இடத்தில் ஒரு கூட்டத்தினர் ஜமாஅத்தாக தொழுது கொண்டிருக்கின்றனர். அல்லது அவர்கள் தொழுது முடிந்து விட்டது. ஸப்புகளில் இருந்தவர்களும் பிரிந்து செல்லவில்லை. இந்நிலையில் அவர் தனித்து தொழ விரும்பரினாலும் அல்லது ஜமாஅத் நடத்த விரும்பினாலும் அவரது அந்த தொழுகையில் ஐந்து நிபந்தனையைக் கொண்டு அதான் , இகாமத் விழுந்து விடும்.

1. முந்திய ஜமாஅத் தொழுகைக்கு அதன் , இகாமத் சொல்லப்பட்டிருக்க வேண்டும்.

2. அந்த ஜமாஅத் தொழுகை பாத்திலில்லாது இருக்க வேண்டும்.

3. அவரது தொழுகை இன்னும் ஜமாஅத் தொழுகை ஒரே இடத்தில் இருக்க வேண்டும். எனவே ஜமாஅத் தொழுகை பள்ளியினுல் இருந்தால் அவர் மேற்பக்கம் தொழ விரும்பினால் அங்கு அதான் , இகாமத் சொல்வது சுன்னத்தாகும்.

4. அவரது தொழுகையும் , ஜமாஅத்தாக நடந்த தொழுகையும் அதாவான தொழுகையாக இருக்க வேண்டும்.

5. அவரது தொழுகையின் நேரமம் ஜமாஅத்தாக நடந்த தொழுகையின் நேரமும் கூட்டாக இருக்க வேண்டும். உதாரணமாக இருவருடைய தொழுகையும் ளுஹராகும். அல்லது ஜமாஅத்தாக தொழுதவை ளுஹர். இவர் அஸர் தொழுகையை தொழ விரும்புகிறார். அல்லது அவர் ளுஹர் தொழப் போகிறார் ஜமாஅத்தாக தொழப்பட்டவை அஸராகும்.

விடயம் 943: மேற்கூறப்பட்டதில் இரண்டாவதில் சந்தேகம் கொண்டால். அதாவது ஜமாஅத்து சஹீஹாக இல்லையா என சந்தேகம் கொண்டால் , அதானும் இகாமத்தும் விழுந்து விடும். ஆனால் நான்காவது நிபந்தனையில் சந்தேகம் கொண்டால் ' குர்பத்துடைய ' நிய்யத்தை வைத்து அதான் , இகாமத்தைச் சொல்ல வேண்டும்.

விடயம் 944: அதான் , இகாமத்தைக் கேட்கும் ஒருவர் எதைக் கேட்கின்றாரோ அதையே திரும்பச் சொல்வது சுன்னத்தாகும். ஆனால் ' ஹய்ய அலஸ் ஸலாத் என்றதிலிருந்து ஹய்ய அலா ஹைரில் அமல் ' என்பது வரைக்குள்ளதைக் கேட்கும் போது நன்மை எதிர் பார்த்துச் சொல்ல வேண்டும்.

விடயம் 945: மற்றவர் சொல்கின்ற அதான் , இகாமத்தைக் கேட்ட ஒருவர் , அந்த அதானுக்கும் இகாமத்திற்கும் இடையில் மற்றொரு தொழுகையை தொழ விரும்பினால் அவைகளுக்கிடையில் நீண்ட இடைவெளி இல்லையென்றிருந்தால் அவர் தொழப் போகும் தொழுகைக்கும் அதான் இகாமத் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

விடயம் 946:ஒரு ஆண் , பெண் சொல்கின்ற அதானை இச்சையுடைய நினைப்பில் கேட்டால் அவருடைய தொழுகையிலிருந்து அதான் இகாமத் விழ மாட்டாது. ஆனால் இச்சை இல்லாது கேட்டாலும் இஹ்தியாது வாஜிபின் படி அதான் அவரிலிருந்து விழ மாட்டாது. ஆனால் பெண் , ஆண் சொல்கின்ற அதானைக் கேட்டால் அவளிலிருந்து அதான் விழுந்து விடும்.

விடயம் 947: தொழுகையுடைய அதான் , இகாமத்தை கட்டாயம் ஆண்களே சொல்ல வேண்டும்.

விடயம் 948:அதான் சொன்ன பிறகே இகாமத் சொல்ல வேண்டும். மாறாக அதற்கு முதல் சொன்னால் அது சஹீஹ் ; இல்லை.

விடயம் 949:அதான் , இகாமத்துடைய வசனங்களை ஒழுங்கு முறைப்படி சொல்லாது மாற்றி மாற்றி சொன்னால் உதாரணமாக ' ஹய்ய அலல் பலாஹ் ' என்பதை ' ஹய்ய அலஸ் ஸலாத் ' என்பதற்கு முதல் சொன்னால் அதை மாற்றிச் சொல்ல வேண்டும். எனவே ஒழுங்கு முறையில்லாது சொல்லப்பட்ட இடங்களை திரும்பச் சொல்ல வேண்டும்.

விடயம் 950: அதானுக்கும் இகாமத்தும் இடையில் இடைவெளி இருக்க கூடாது. அதற்கு இடையில் இடைவெளி இடப்பட்டால் அதாவது இகாமத் சொல்லுகின்ற போது அது அந்த அதானுக்குறிய தல்ல என்று கருதுகின்ற அளவுக்கு இடைவெளி இடப்பட்டால் அதானையும் இகாமத்தையும் திரும்பச் சொல்லது சுன்னத்தாகும். மேலும் அதான் , இகாமத் , தொழுகைக்கு இடையில் இடைவெளி காணப்பட்டால் அதாவது சொல்லப்பட்ட அதான் இகாமத் இந்த தொழுகைக்குறிய தல்ல என்று கருதுமளவுக்கு இடைவெளி காணப்பட்டால் அந்த தொழுகைக்காக அதான் இகாமத் சொல்வது சுன்னத்தாகும்.

விடயம் 951:அதானும் இகாமத்தும் சரியான அரபு முறைப்படி சொல்லப்பட வேண்டும். மாறாக அரபு எழுத்துடைய இடங்களில் உச்சரிப்பை மாற்றிச் சொன்னால் அல்லது அதன் பொருளைச் சொன்னால் சஹீஹ் இல்லை.

விடயம் 952:அதாகும் இகாமத்தும் தொழுகையின் நேரம் நுழைந்த பின்னறே சொல்லப்பட வேண்டும். எனவே வேண்டுமென அல்லது மறதியாக அதன் நேரம் வருவதற்கு முதல் சொன்னால் அது பாத்திலாகும்.

விடயம் 953: இகாமத் சொல்வதற்கு முதல் அதான் சொன்னேனா இல்லையாவென சந்தேகம் ஏற்பட்டால் கட்டாயம் அதான் சொல்ல வேண்டும். ஆனால் இகாமா சொல்லிக் கொண்டிருக்கும் போது அதான் சொன்னேனா இல்லையா என சந்தேகம் ஏற்பட்டால் அப்போது அதான் சொல்லத் தேவையில்லை.

விடயம் 954: அதான் அல்லது இகாமத் சொல்லிக் கொண்டிருக்கும் போது ஒரு வசனத்தைச் சொல்வதற்கு முன் அதற்கு முதல் உள்ளவற்றைச் சொன்னேனா இல்லையா என சந்தேகம் ஏற்பட்டால் கட்டாயம் சந்தேகம் ஏற்பட்ட இடத்தைச் சொல்ல வேண்டும். ஆனால் ஒரு வசனத்தைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது அதற்கு முதலுள்ளவற்றை சொன்னதில் சந்தேகம் ஏற்பட்டால் அதைச் சொல்லத் தேவையில்லை.

விடயம் 955:ஒருவர் அதான் இகாமத்தைச் சொல்கின்ற போது கிப்லாவை முன்னோக்கி நிற்பதும் , வுழுச் செய்த அல்லது குளித்த பின் சொல்வதும் ,  கையை காதில் வைப்பதும் , உரத்த சத்தமாக , வசனத்தை சற்று நீட்டியும் ஒவ்வொரு வசனத்திற்கு இடையிலும் சற்று தாமதிப்பதும் , இரண்டு வசனங்களுக்கு இடையில் பேசாதிருப்பதும் சுன்னத்தாகும்.

விடயம் 956:ஒருவர் இகாமத் சொல்லும் போது அவரது உடல் அமைதியாக இருப்பதும் , அதான் கூறிய சத்தத்தை விட அதை அமைதியாக கூறுவதும் , அதனுடைய வசனங்களை ஒன்றோடொன்று இணைக்காது சொல்வதும் சுன்னத்தாகும். ஆனால் அதான் சொல்லும் போது அதனுடைய வசனங்களுக்கு இடையில் இருந்த இடைவெளியின் அளவுக்கு இதில் இருக்க கூடாது.

விடயம் 957:அதானுக்கும் இகாமத்தும் இடையில் சற்று இருப்பது அல்லது ஸஜதா செய்வது அல்லது திக்ர் சொல்லுதல் , துஆக் கேட்டல் அல்லது அமைதியாக இருத்தல் அல்லது பேசுதல் அல்லது இரண்டு ரகஅத் தொழுவது சுன்னத்தாகும். ஆனால் சுபஹுடைய அதானுக்கும் இகாமத்துக்கும் இடையில் பேசுதல் இன்னும் மஃரிபுயை அதான் இகாமத்துக்கு இடையில் தொழுதல் சுன்னத்தாகாது.

விடயம் 958:நீதியான , நேரத்தை அறியக் கூடிய , உரத்த சத்தமுடைய ஒருவரை அதான் சொல்வதற்காக நியமிப்பதும் இன்னும் உயரமான இடத்திலிருந்து அதான் சொல்வதும் சுன்னத்தாகும். ஓலி பெருக்கி மூலம் அதான் சொல்லும் போது அதைச் சொல்பவர் பணிந்த இடத்திலிருந்து சொல்வதிலும் தடையில்லை.