Back | Index | Next |
விடயம் 1029: ஒருவர் தொழுகையின் முதலாம் , இரண்டாம் ரகஅத்துக்களில் அதை மூன்றாம் , நான்காம் ரகஅத்துக்கள் என நினைத்து தஸ்பீஹாதுல் அர்பஆ ஓதினால் , இது அவர் ருகூஃ செல்வதற்கு முன் அவரக்கு ஞாபகம் வந்தால் கட்டாயம் அல்ஹம்து மற்றும் சூராவை ஓதவேண்டும் . இன்னும் இஹ்தியாது வாஜிபின்படி தொழுகை முடிந்ததும் தஸ்பீஹாத்துக்கள் அதிகமானதற்காக வேண்டி மறதிக்கான ஸஜதா ( ஸஜதா ஸஹ்வு) செய்ய வேண்டும் . ஆனால் அவர் ருகூவில் வைத்து உணர்ந்தால் அவரது தொழுகை சஹீஹாகும் .
விடயம் 1030: ஒருவர் தொழுகையின் கடைசி இரு ரகஅத்திலும் அதை தெரீழகயின் முதல் ரகஅத் என நினைத்து அல்ஹம்துவை ஓதினால் அல்லது அதன் முதல் இரு ரகஅத்திலும் அது தொழுகையின் கடைசி ரகஅத்தென நினைத்து அல்ஹம்து மட்டும் ஓதி அதை ருகூவுக்கு செல்வதற்கு முதல் உணர்ந்தாலும் சரி அல்லது ருகூக்குச் சென்ற பின் உணர்ந்தாலும் சரி அவரது தொழுகை சஹீஹாகும் .
விடயம் 1031: ஒருவர் தொழுகையின் மூன்றாம் , நான்காம் ரகஅத்துக்களில் அல்ஹம்துவை ஓத நினைத்து தஸ்பீஹாத்தை மொழிந்தால் அல்லது தஸ்பீஹாத்தை ஓத நினைத்து அல்ஹம்துவை மொழிந்தால் இந்த நிலமைகளில் அதை விட்டு விட்டு இரண்டாவது தடவை அல்ஹம்துவை அல்லது தஸ்பீஹாத்தை ஓதவேண்டும் . ஆனால் அவர் மொழிந்தவை அவர் ஓதுவதில் வழமையாக்கிக் கொண்டவையாக இருப்பின் , இன்னும் உள்ளத்தால் அதை சற்று நினைத்திருந்தாலும் சரி அதைக் கொண்டு தொழுகையைப் பூரணப்படுத்திக் கொள்வார் அவரது தொழுகை சஹீஹாகும் .
விடயம் 1032: ஒருவர் தொழுகையின் மூன்றாம் நான்காம் ரகஅத்துக்களில் தஸ்பீஹாதுல் அர்பஆ ஓதுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார் அவர் அதை நாடாது அல்ஹம்து சூராவை ஓத ஆரம்பித்தால் , அவர் அதை விட்டு விட்டு திரும்ப அல்ஹம்து சூராவை அல்லது தஸ்பீஹாதுல் அர்பஆவை ஓதவேண்டும் .
விடயம் 1033: மூன்றாம் நான்காம் ரகஅத்துக்களில் தஸ்பீஹாத்துக்களுக்குப் பிறகு இஸ்திஃபார் சொல்லிக் கொள்வது முஸ்தஹப்பாகும் . அதாவது அஸ்தஃபிருல்லாஹ ரப்பி வ அ ( த்) தூபு இலைஹி என்று அல்லது அல்லாஹும்மஃபிர்லி என்று ஓதுவது முஸ்தஹப்பாகும் . ஒருவர் ஹம்து அல்லது தஸ்பீஹாத்துக்களை ஓதிய நினைப்பில் இதைச் சொல்லத் தொடங்கி பின் ஹம்து அல்லது தஸ்பீஹ் சென்னேனா என சந்தேகம் கொண்டால் அவரது சந்தேகத்தை கவனத்தில் கொள்ளக் கூடாது . அதேபோல் தொழுபவர் ருகூவுக்குக் குனிவதற்கு முதல் இஸ்திஃபாரையும் சொல்லாத நிலையில் ஹம்து அல்லது தஸ்பீஹ் சொன்னேனா என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டால் அதைக் கவனத்தில் கொள்ளக் கூடாது .
விடயம் 1034: ஒருவர் தொழுகையின் மூன்றாம் அல்லது நான்காம் ரகஅத்தின் ருகூவில் இருக்கும் போது அல்லது ருகூவுக்குச் சென்று கொண்டிருக்கும் போது அல்ஹம்து அல்லது தஸ்பீஹாத்தை ஓதினேனா என அவருக்குச் சந்தேகம் வந்தால் அவர் அதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது .
விடயம் 1035: ஒருவருக்கு எப்போதாவது ஒரு வசனத்தை அல்லது ஒரு சொல்லை சரியாக சொன்னோ இல்லையா என்ற சந்தேகம் ஏற்பட்டால் அவர் அதற்குப் பிறகுள்ளவற்றை செய்யாதிருந்தால் இஹ்தியாது வாஜிபின் படி அந்த வசனத்தை அல்லது சொல்லை சரியாக ஓதவேண்டும் . ஆனால் அவர் அதற்குப் பிறகுள்ளவற்றை செய்து விட்டால் உதாரணமாக ருகூவில் வைத்து அந்த வசனத்தை அல்லது சொல்லை சரியாக ஓதினேனா இல்லையா என சந்தேகம் கொண்டால் அவரது சந்தேகத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது . அது ருகுன் இல்லாதிருந்தால் உதாரணமாக அல்லாஹுஸ் ஸமத் என்று சொல்லுகின்ற போது குல் குவல்லாஹு அஹத் என்பதை சரியாக சொன்னேனா என சந்தேகம் கொண்டால் அந்தி நிலையிலும் கூட அவரது சந்தேகத்தை கவனத்தில் கொள்ளாதிருக்க முடியும் . ஆனால் பேணுதலுக்காக அந்த வசனத்தை அல்லது சொல்லை திரும்ப சரியாக மொழிந்தால் பிரச்சினையில்லை . இன்னும் பல தடவைகள் கூட சந்தேகப் பட்டாலும் அதை பல தடவைகள் ஓதுவார் . ஆனால் அவர் வஸ்வாசுடைய கட்டத்தை அடைந்து அதைத் திரும்பத் திரும்ப ஓதினால் இஹ்தியாது வாஜிபின் படி அத்தொழுகையைத் திரும்பத் தொழுவார் .
விடயம் 1036: முதலாவது ரகஅத்தில் அல்ஹம்து சூரா ஓதுவதற்கு முதல் அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தனிர் ரஜீம் என்று ஓதுவது , இன்னும் ளுஹர் , அஸருடைய தொழுகையில் இமாமாக இருந்தால் பிஸ்மில்லாஹ்வை சத்தமாக சொல்வது , தனித்துத் தொழும் போது சத்தமின்றி சொல்வது , ஹம்து மற்றும் சூராவை கணக்கிட்டு ஓதவது , ஒவ்வொரு வசனத்துடைய கடைசியிலும் நிறுத்துவது , ஹம்து மற்றும் சூராவை ஓதும் போது அதன் பொருளை கவனத்தில் கொள்வது , இன்னும் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதால் இமாம் அல்ஹம்து சூரா ஓதி முடிந்ததும் இன்னும் தனித்துத் தொழுதால் தனக்கு அல்ஹம்து சூரா ஓதி முடிந்ததும் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்று சொல்வது , சூரா இஹ்லாசை ஓதிய பிறகு கதாலிக்கல்லாஹு ரப்பி அல்லது கதாலிக்கல்லாஹு ரப்புனா என்று சொல்வது , இன்னும் சூரா ஓதி முடிந்ததும் ருகூவுக்குச் செல்லு முன் சற்று தாமதித்து பின் ருகூவுக்கச் செல்லும் தக்பீரைச் சொல்வது அல்லது குனூத் ஓதுவது முஸ்தஹப்பாகும் .
விடயம் 1037: சகல தொழுகைகளின் முதலாவது ரகஅத்துக்களில் சூரதுல் கத்ரையும் இரண்டாவது ரகஅத்துக்களில் சூரதுல் இஹ்லாஸையும் ஓதுவது முஸ்தஹப்பாகும் .
விடயம் 1038: ஒருவர் ஒரு நாளில் இரவு பகலாக தொழப்படும் தொழுகைகளில் ஒரு தொழுகையிலேயாவது சூரதுல் இஹ்லாசை ஓதாது இருப்பது மக்ரூஹ் ஆகும் .
விடயம் 1039: ஒரே மூச்சில் சூரா இஹ்லாஸை ஓதி முடிப்பது மக்ரூஹ் ஆகும் . அதேபோல் அல்ஹம்து சூராயும் ஓரே மூச்சில் ஓதுவதும் மக்ரூஹ் ஆகும் .
விடயம் 1040: முதலாவது ரகஅத்தில் ஓதிய சூராவை இரண்டாவது ரகஅத்திலும் ஓதுவது மக்ரூஹ் ஆகும் . ஆனால் சூரா இஹ்லாஸை இரண்டு ரகஅத்துக்களில் ஓதினாலும் சரி மக்ரூஹ் இல்லை .
விடயம் 1041: ஒவ்வொரு ரகஅத்திலும் கிராஅத்திற்குப் பிறகு முழங்காலில் தன் கையை வைக்கின்ற அளவுக்கு குனிய வேண்டும் . இச் செயலை ருகூஃ என்று சொல்லப்படும் .
விடயம் 1042: ஒரு அளவுக்குக் குனிந்து ஆனால் தன் கைளை முழங்காலில் வைக்க வில்லை என்றால் இது இஹ்தியாதுக்கு மாற்றமாகும் . எனவே இஹ்தியாத்துக்காக கையை முழங்காலில் வைக்க வேண்டும் . இச் செயல் வாஜிப் இல்லை என்றிருந்தாலும் சரியே !
விடயம் 1043: ஒருவர் ருகூவை வழமைக்கு மாற்றமாக செய்தால் உதாரணமாக வலது அல்லது இடது பக்கமாக குனிந்தால் அவரது தொழுகை பாத்திலாகும் . இச்செயலின் போது அவரது கை முழங்காலில் பட்டாலும் சரியே .
விடயம் 1044: ருகூவுடன் சேர்ந்துள்ள நிற்றல் வாஜிபும் ருகுனுமாகும் . அதாவது தொழும் ஒருவர் கட்டாயமாக நின்ற நிலையில் இருந்தே ருகூவுடைய நிய்யத்துடன் குனிய வேண்டும் . இதனால் வேறொரு நினைப்புடன் குனிந்தால் உதாரணமாக ஒரு பொருளை எடுக்க வேண்டும் என்பதற்காக அல்லது சுஜுது செய்வதற்காக குனிந்து அப்போது ருகூஃ செய்ய வில்லை என உணர்ந்தால் இந்நிலையில் கட்டாயம் நிமிர்ந்து நிற்க வேண்டும் . பின் ருகூவுக்குச் செல்ல வேண்டும் . இன்னும் நிற்பதற்கு முதல் ருகூவை செய்தால் ருகூவுக்கு முன்னுள்ள நிற்றலை கவனிக்காத காரணத்தால் அவரது தொழுகை பாத்திலாகும் .
விடயம் 1045: குனிதல் கட்டாயமாக ருகூவுடைய நினைப்புடன் இருக்க வேண்டும் . எனவே வேறொரு நிய்யத்துடன் குனிந்தால் உதாணரமாக ஒரு விலங்கை கொல்வதற்காக குனிந்தால் அதை ருகூவாக கனிக்க முடியாது . மாறாக கட்டாயம் அவர் நிமிர்ந்து நிற்கவேண்டும் . பின் மீண்டும் ருகூவுக்கு குனிய வேண்டும் . இச்செயலை செய்வதன் மூலம் ருகுன் அதிகமாகாது இதனால் அவரது தொழுகையும் பாத்திலாகாது .
விடயம் 1046: ஒருவரின் கை அல்லது முழங்கால் மற்றவர்களின் கை அல்லது முழங்காலுடன் வேறு பட்டதாக இருந்தால் உதாரணமாக அவரது கை மிகவும் நீளமாக இருந்து சற்று குனிந்தாலும் சரி அது அவரது முழங்காலை தொட்டும் விடும் என்றிருந்தால் அல்லது அவரது முழங்கால் மற்றவர்களின் முழங்காலை விட பணிவாக இருந்து அதைத் தொடுவதென்றால் மிகவும் குனிய வேண்டும் என்றிருந்தால் இந்நிலையில் அவர் கட்டாயம் பொதுவான அளவுக்கு குனியவேண்டும் .
விடயம் 1047: இருந்த நிலையில் தொழுபவர்கள் ருகூஃ செய்யும் போது அவரது முகம் முழங்காலுக்கு நேரே வரும் அளவுக்கு குனிய வேண்டும் . இன்னும் அவர் சுஜுது செய்யும் இடத்தை நெருங்குகின்ற வரை குனிவது சிறந்ததாகும் .
விடயம் 1048: ஒருவர் ருகூவில் எந்த திக்ரை ஓதினாலும் அது போதுமாகும் . ஆனால் அது மூன்று முறை சுப்ஹானல்லாஹ் என்று சொல்வதையும் அல்லது ஒரு முறை சுப்ஹான ரப்பியல் அழீம் வபிஹம்திஹி என்று சொல்வதற்கும் குறைவாக இருக்க கூடாது .
விடயம் 1049: ருகூவுடைய திக்ரை தொடராக அறபியில் சரியான உச்சரிப்புடன் சொல்ல வேண்டும் . ஆனால் அதை மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு அல்லது அதை விட கூடுதலாக சொல்வது முஸ்தஹப்பாகும் .
விடயம் 1050: ருகூவில் திக்ரு சொல்லுகின்ற அளவுக்கு உடம்பு அசையாது இருக்க வேண்டும் . முஸ்தஹப்பான திக்ருகளிலும் கூட அதை ருகூவுடைய திக் என்று கூறப்பட்டுள்ளது என்ற நினைப்புடன் சொன்னால் இஹ்தியாது வாஜிபின் படி உடம்பு அசையாது இருக்க வேண்டும் .
விடயம் 1051: வாஜிபான ருகூவுடைய திக்ரைச் சொல்லும் போது உணர்வின்றி உடம்பு சற்று அசைந்து அமைதியாக நிற்றல் என்ற நிலையை விட்டும் வெளியானால் இஹ்தியாது வாஜிபின்படி உடம்பு அமைதியானதும் மீண்டும் அந்த திக்ரைச் சொல்ல வேண்டும் . ஆனால் சற்று அசைந்தது உடம்பு அமைதியான நிலையை விட்டும் வெளியாகாத நிலையில் இருந்தால் அல்லது தனது விரலை அசைத்தால் அதில் பிரச்சினையில்லை
விடயம் 1052: ருகூவுக்காக குனிந்து அதன் அளவை அடைவதற்கு முதல் இன்னும் உடம்பு அசையாது நிற்பதற்கு முதல் வேண்டுமென்று ருகூவுடைய திக்ரைச் சொன்னால் அவரது தொழுகை பாத்திலாகும் .
விடயம் 1053: வாஜிபான திக்ரைச் சொல்லி முடிப்பதற்கு முதல் வேண்டுமென்று அவரது தலையை ருகூவில் இருந்து உயர்த்தினால் அவரது தொழுகை பாத்திலாகும் . இன்னும் மறதியாக உயர்த்தினால் , அது ருகூவுடைய நிலையை விட்டும் வெளியாவதற்கு முதல் அவருக்கு ருகூவுடைய திக்ரை முடிக்க வில்லை என ஞாபகம் வந்தால் கட்டாயம் உடம்பு அசையாது இருக்கும் நிலையில் மீண்டும் அந்த திக்ரைச் சொல்ல வேண்டும் . மற்றது அவர் ருகூவுடைய நிலையை விட்டும் வெளியான பிறகு அவருக்கு அது ( ருகூவுடைய திக்ரு சொல்ல வில்லையென்பது) ஞாபகம் வந்தால் அவரது தொழுகை சஹீஹாகும் .
விடயம் 1054: ஒருவரார் ருகூவுடைய திக்ர் சொல்லும் அளவுக்கு ருகூவில் நிற்கமுடியாது விட்டால் , ருகூவுடைய எல்லையை விட்டும் வெளியாவதற்கு முதல் அதை அவரால் சொல்ல முடியும் என்றிருந்தால் கட்டாயம் அந்நிலையில் அதைச் சொல்ல வேண்டும் . அதற்கும் முடியாது என்றிருந்தால் இஹ்தியாத்தின்படி ருகூவில் இருந்து எழும்பும் நிலையில் அதைச் சொல்ல வேண்டும் .
விடயம் 1055: நோய் மற்றும் அது போன்ற காரணமாக ருகூவில் அசையாது நிற்க முடியாது விட்டால் தொழுகை சஹீஹாகும் . ஆனால் ருகூவுடைய நிலையை விட்டும் வெளியாவதற்கு முதல் கட்டாயம் வாஜிபான திக்ரைச் சொல்ல வேண்டும் அதாவது சுப்ஹா ரப்பியல் அழீமி வபிஹம்திஹி என்றோ அல்லது மூன்று தடவை சுப்ஹானல்லாஹ் என்று சொல்ல வேண்டும் .
விடயம் 1056: ஒருவர் ருகூவுடைய அளவுக்கு குனிய முடியாது போனால் கட்டாயம் அவர் ஏதாவது ஒன்றில் சாய்ந்து கொண்டு ருகூஃ செய்ய வேண்டும் . இன்னும் ஒன்றில் சாய்ந்து கொண்டும் ருகூஃ செய்ய முடியாத சந்தர்ப்பங்களில் முடிந்த அளவு குனிந்து வழமை போல் ருகூஃ செய்ய வேண்டும் . அப்படியும் செய்து ருகூஃ செய்ய முடியாது போனால் ருகூஃ செய்யும்போது இருக்கவேண்டும் இருந்து கொண்டு ருகூஃ செய்ய வேண்டும் . இஹ்தியாது முஸ்தஹப்பின்படி வேறொரு தொழுகையையும் தொழவேண்டும் அதில் ருகூவுக்காக தன் தலை மூலம் சைக்கினை செய்ய வேண்டும் .
விடயம் 1057: நின்று கொண்டு தொழ முடிந்த ஒருவர் , அவரால் நின்ற நிலையில் அல்லது இருந்து நிலையில் ருகூஃ செய்ய முடியாது போனால் கட்டாயம் நின்ற நிலையில் தொழ வேண்டும் . ருகூவை தன் தலையின் மூலம் சைக்கினை செய்து நிறைவேற்ற வேண்டும் . அதற்கும் முடியாது போனால் ருகூவுடைய நிய்யத்துடன் தன் கண்களை மூடி அதன் திக்ருகளைச் சொல்ல வேண்டும் . ருகூவிலிருந்து எழும்புகிற நிய்யத்துடன் கண்களை திறக்க வேண்டும் . இதற்கும் முடியாது போனால் உள்ளத்தால் ருகூவை நினைத்து அதன் திக்ரைச் சொல்ல வேண்டும் .
விடயம் 1058: நின்று அல்லது இருந்து கொண்டு ருகூஃ செய்ய முடியாதவர் ருகூவுக்கு மாத்திரம் இருந்த நிலையில சற்று குனிய முடியும் அல்லது நின்ற நிலையில் தலை மூலம் சைக்கினை செய்ய முடியும் என்றிருந்தால் இஹ்தியாது வாஜிபின்படி ஒரு தொழுகையை நின்ற றிலையில் தொழவேண்டும் அதில் ருகூவை தன் தலை மூலம் சைக்கினை செய்து தொழ வேண்டும் . இன்னும் மற்றொரு தொமுகையும் தொழ வேண்டும் அதில் ருகூவின் போது இருந்து முடிந்த அளவு ருகூவுக்காக குனியவேண்டும் .
விடயம் 1059: ருகூவுடைய அளவை அடைந்ததன் பிறகு இன்னும் உடம்பின் அசைவு நின்ற பிறகு தலையை உயர்த்தி இரண்டாவது முறை ருகூவுடைய நிய்யத்துடன் ருகூவுடைய அளவுக்கு குனிந்தால் அவரது தொழுகை பாத்திலாகும் . அத்தோடு ருகூவுடைய அளவுக்கு குனிந்து உடம்பு அசையாது நின்ற பிறகு ருகூவுடைய நிய்யத்துடன் சற்று குனிந்து அது ருகூவுடைய அளவைக் கடந்து விட்டு மீண்டும் அவர் ருகூவுக்கு திரும்பி வந்தால் அவரது தொழுகை பாத்திலாகும் .
விடயம் 1060: ருகூவுடைய திக்ரு முடிந்ததும் நிமிர்ந்து நிற்க வேண்டும் . பின் உடம்பு அசையாது நின்ற பிறகே சுஜுதுக்குச் செல்ல வேண்டும் . ஆனால் ஒருவர் வேண்டுமென்று நிமிர்ந்து நிற்பதற்கு முதல் அல்லது உடம்பு அசையாது நிற்பதற்கு முதல் சுஜுதுக்குச் சென்றால் அவரது தொழுகை பாத்திலாகும் .
விடயம் 1061: ஒருவர் ருகூவை மறந்தால் அது அவருக்கு சுஜுதுக்குச் செல்லும் முன் ஞாபகம் வந்தால் கட்டாயம் நிற்க வேண்டும் . பின் ருகூவுக்குச் செல்ல வேண்டும் . ஆனால் அவர் நிமிர்ந்து நிற்காது சுஜுதுக்கு குனிந்த நிலையில் வைத்தே ருகூவுக்குச் சென்றால் அவரது தொழுகை பாத்திலாகும் .