Back Index Next

விடயம் 994:நிற்க முடிந்த ஒருவர் , நிற்பதன் மூலமாக சுகவீனமடைவார் அல்லது ஏதாவது அவருக்கு ஏற்படும் என பயந்தால் அவர் இருந்து கொண்டு தொழ முடியும் . இருப்பதிலும் அச்சம் கொண்டால் தூங்கிக் கொண்டு தொழ முடியும் .

விடயம் 995:தொழுகையின் நேரம் செல்வதற்கு முதல் அவருக்கு ஏற்பட்டிருக்கும் தடை , இடையூறு நீங்கி விடும் என்ற உறுதி அவருக்கு இருந்தால் இஹ்யாது வாஜிபின் படி தொழுகையின் கடைசி நேரம் வரை பொறுமையாக இருக்க வேண்டும் . முடிந்தால் நின்று கொண்டு தொழ வேண்டும் . முடியாது போனால் இருந்து கொண்டு தொழ வேண்டும் . ஆனால் கடைசி நேரம் முடிவதற்குல் அது நீங்கி விடும் என சந்தேகம் கொண்டால் பொறுமையாக இருப்பது சிறந்ததாகும் .

விடயம் 996:நின்று கொண்டிருக்கின்ற போது உடம்பை நிமிர்த்தியவாறு வைத்துக் கொள்வதும் , கீழே பார்த்துக் கொண்டிருப்பதும் , கைகளை தொடைகளின் மேல் வைத்திருப்பதும் , கை விரல்களை சேர்த்து வைத்திருப்பதும் , ஸஜதாவுயைட இடத்தைப் பார்ப்பதும் , உடம்புடைய சுமையை இரு கால்களிலும் சமமாக வைத்திருப்பதும் , ஹுழுஃ இன்னும் ஹுஸுவுடன் இருப்பதும் , கால்களை முன்னும் பின்னும் வைக்காதிருப்பதும் , ஆணாக இருந்தால் மூன்று விரல்களின் அளவில் இருந்து ஒரு சாண் வரைக்கும் விரித்து வைத்திருக்க வேண்டும் அதை விட அகலமாக வைக்காதிருப்பதும் , இன்னும் பெண்ணாக இருந்தால் கால்களை சேர்த்து வைத்திருப்பதும் முஸ்தஹப்பாகும் .

கிராஅத்

விடயம் 997:அன்றாட வாஜிபான தொழுகையில் முதலாவது , இரண்டாவது ரகஅத்துக்களில் ஒவ்வொருவரும் அல்ஹம்து சூராவுக்குப் பிறகு பூரமான ஒரு சூராவை ஓதவேண்டும் .

விடயம் 998:தொழுகையின் நேரம் குறைவாக இருந்து சூரா ஓத முடியாத நிலை மனிதனுக்கு ஏற்பட்டால் உதாரணமாக அல்ஹம்து சூராவுக்குப் பிறகு சூராவை ஓதினால் திருடர்களால் அல்லது விலங்குகளால் அல்லது அது போன்றவைகளால் அவனுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படும் என பயந்தால் அந்நிலையில் அதை ஓதக் கூடாது . இன்னும் ஒரு விடயத்தில் அவசரமாக இருந்தாலும் சூராவை ஓதக் கூடாது .

விடயம் 999:ஒருவர் வேண்டுமென்று சூராவை அல்ஹம்துவுக்கு முதல் ஓதினால் அவரது தொழுகை பாத்திலாகும் . இன்னும் தவறுதலாக அதற்கு முதல் ஓதினால் இடையில் அவருக்கு ஞாபகம் வந்தால் சூரா ஓதுவதை விட்டு விட்டு அல்ஹம்து சூராவை ஓதவேண்டும் அதன் பின் சூராவை ஆரம்பத்திலிருந்து ஓதவேண்டும் .

விடயம் 1000: ஒருவர் அல்ஹம்துவையும் சூராவை அல்லது அவற்றில் ஒன்றை மறந்து ருகூஃவுக்குச் சென்றதன் பின் அவருக்கு ஞாபகம் வந்தால் அவரது தொழுகை சஹீஹாகும் .

விடயம் 1001: அவர் ருகூஃவுக்கு குனிவதற்கு முதல் அவருக்கு அல்ஹம்து இன்னும் சூராவை ஓதவில்லை என்று ஞாபகம் வந்தால் கட்டாயம் ஓத வேண்டும் . இன்னும் சூரா மட்டும் தான் ஓதவில்லை என ஞாபகம் வந்தால் சூராவை மட்டும் ஓத வேண்டும் . ஆனால் அல்ஹம்து ஓதவில்லை என ஞாபகம் வந்தால் முதலில் அதை ஓதிவிட்டு பின் மீண்டும் சூராவை ஓதவேண்டும் . இன்னும் குனிந்து ருகூஃவை அடைதற்கு முதல் அறிந்தால் அல்ஹம்து , சூராவை அல்லது சூரா மட்டும் ஓத வில்லை என அறிந்தால் மேற்கூறிய முறைப்படி செய்ய வேண்டும் .

விடயம் 1002: வாஜிபான தொழுகையில் வாஜிபான ஸஜதாக்கள் இருக்கும் சூராவை , அது எவைகள் என 1105 விடயத்தில் கூறப்படும் , வேண்டுமென ஒருவர் ஓதினால் அவரது தொழுகை பாத்திலாகும் .

விடயம் 1003: ஒருவர் தவறுதலாக ஸஜதாக்கள் இருக்கும் சூராவை ஓத ஆரம்பித்து ஸஜதாவுடைய இடத்தை அடையும் முன் அறிந்தால் அதைத் தொடர்வதை விட்டு விட்டு மற்ற சூராவை ஓதவேண்டும் . ஸஜதாவுடைய வசனத்தை ஓதிய பிறகு அறிந்தால் கட்டாயம் தொழுது கொண்டிருக்கும் போதே கைசக்கினை மூலம் இஹ்தியாதுடைய ஸஜதாவை நிறைவேற்ற வேண்டும் . மேலும் ஓதிய அந்த சூராவுடன் போதுமாக்கிக் கொள்ள முடியும் .

விடயம் 1004: தொழுது கொண்டிருக்கும் போது ஸஜதாவுடைய வசனத்தை கேட்டால் சைக்கினை மூலம் ஸஜதா செய்தால் அவரது தொழுகை சஹீஹாகும் .

விடயம் 1005: முஸ்தஹப்பான தொழுகைகளில் சூரா ஓதுவது அவசியமில்லை . அத்தொழுகை நேர்ச்சை செய்ததன் மூலமாக வாஜிபாகிருந்தாலும் சரியே . ஆனால் சில முஸ்தஹப்பான தொழுகைளில் உதாரணமாக வஹ்ஸதுடைய தொழுகை , அதற்கென குறிப்பிட்டதொரு சூரா இருக்கின்றது அத்தொழுகையை உரிய முறைப்படி நிறைவேற்ற வேண்டுமாயின் அதையே ஓதவேண்டும் . அதை அறைவாசியை அடையவில்லை என்றாலும் சரியே .

விடயம் 1006: ஜும்ஆவடைய தொழுகையில் அல்லது வெள்ளிக் கிழமையில் தொழப்படும் ளுஹர் தொழுகையின் முதலாவது ரகஅத்தில் சூரா ஹம்துக்குப் பிறகு சூரதுல் ஹும்ஆவையையும் இரண்டாவது ரகஅத்தில் அல்ஹம்துக்குப் பிறகு சூரதுல் முனாபீகூனையும் ஓதுவது முஸ்தஹப்பாகும் . இஹ்தியாது வாஜிபின் படி ஒருவர் அத்தொழுகைகயில் அவை தவிர்ந்த வேறொரு சூராவை ஓத ஆரம்பித்து விட்டால் அதை இடையில் நிறுத்தி விட்டு இந்த சூராக்களை ஓத முடியாது .

விடயம் 1007: ஒருவர் தொழுகையில் அல்ஹம்துக்குப் பிறகு சூரதுல் இஹ்லாசை அல்லது சூரதுல் காபீரூனை ஓத ஆரம்பித்து விட்டால் அதை விட்டுவிட்டு வேறு சூராவை ஓத முடியாது . ஆனால் ஜும்ஆவடைய தொழுகையில் அல்லது வெள்ளிக் கிழமையில் தொழப்படும் ளுஹர் தொழுகையில் மறதியாக சூரதுல் ஜும்ஆ மற்றும் சூரதுல் முனாபிகூனுடைய இடத்தில் இந்த சூராக்களை ஓதி அதன் அறைவாசியை அடையவில்லை என்றிருந்தால் அதை அப்படியே நிறுத்தி விட்டு சூரதுல் ஜும்ஆ மற்றும் சூரதுல் முனாபிகூனை ஓத முடியும் .

விடயம் 1008: ஜும்ஆவடைய தொழுகையில் அல்லது வெள்ளிக் கிழமையில் தொழப்படும் ளுஹர் தொழுகையில் ஒருவர் வேண்டுமென்று சூரதுல் இஹ்லாசை அல்லது காபிரூனை ஓதி அதன் அறைவாசியை அடைய வில்லையென்றிருந்தாலும் இஹ்தியாது வாஜிபின் படி அதை நிறுத்தி விட்டு சூரதுல் ஜும்ஆ இன்னும் சூரா முனாபிகூனை ஓத முடியாது .

விடயம் 1009: தொழுகையில் சூரா இஹ்லாஸ் மற்றும் காபிரூன் அல்லாத வேறு சூராக்களை ஓதி அதன் அறைவாசியை அடைய வில்லை என்றிருந்தால் அதை விட்டு விட்டு வேறு சூராவை ஓத முடியும் .

விடயம் 1010: ஒருவர் சூராவின் அறைவாசியை மறந்தால் அல்லது நேரம் குறைவாக இருப்பதால் அல்லது வேறு காரணங்களால் அதை பூரணப்படுத்த முடியாது போனால் அதை விட்டுவிட்டு வேறு சூராவை ஓத முடியும் . அதன் அறைவாசியை கடந்திருந்தாலும் சரியே . அல்லது ஓதிய சூரா சூரதுல் இஹ்லாஸ் அல்லது காபிரூனாக இருந்தாலும் சரியே .

விடயம் 1011: ஆண்கள் சுபஹ் மற்றும் மஃரிப் இன்னும் இஷாத் தொழுகைகளில் ஹம்து மற்றும் ஏனைய சூராக்களை சத்தமாக ஓதுவது வாஜிபாகும் . அதேபோல் ஆண்கள் மற்றும் பெண்கள் ளுஹர் இன்னும் அஸர் தொழுகைகளின் ஹம்து இன்னும் சூராவை அமைதியாக சத்தமின்றி ஓதுவது வாஜிபாகும் .

விடயம் 1012: ஆண்கள் சுபஹ் , மஃரிப் இன்னும் இஷாத் தொழுகைகளில் ஹம்து மற்றும் ஏனைய சூராக்களின் கடைசி எழுத்தைக் கூட சத்தமாக ஓதவேண்டும் .

விடயம் 1013: பெண்களுக்கு சுபஹ் மற்றும் மஃரிப் இன்னும் இஷாத் தொழுகைகளில் ஹம்து மற்றும் ஏனைய சூராக்களை சத்தமாகவும் ஓதமுடியும் சத்தமின்றி அமைதியாகவும் ஒதமுடியும் . ஆனால் பெண்ணுடைய சத்தத்தை மஹ்ரமல்லாதவர் கேட்பார் என்றிருந்தால் இஹ்தியாது வாஜிபின் படி கட்டாயம் சத்தமின்றி அமைதியாக ஓதவேண்டும் .

விடயம் 1014: தொழுகையில் சத்தமாக ஓதவேண்டிய இடத்தில் அமைதி hயகவும் அமைதியாக ஓதவேண்டிய இடத்தில் சத்தமாகவும் ஓதினால் அவரது தொழுகை பாத்திலாகும் . ஆனால் இதை மறதியாக அல்லது இவ்விடயம் தெறியாது செய்திருந்தால் தொழுகை சஹீஹாகும் . இன்னும் அல்ஹம்து அல்லது சூரா ஓதிக் கொண்டிருக்கும் போது உணர்ந்தால் ஓதியவற்றை திரும்ப ஓதவேண்டிய அவசியமில்லை .

விடயம் 1015: ஒருவர் அஹம்து மற்றும் சூராவை ஓதுவதில் வழமையான சத்ததத்தை விட உரத்த குரலில் ஓதினால் உதாரணமாக கூக்குரலிட்டு ஓதவது போல , இந்நிலையில் அவரது தொழுகை பாத்திலாகும் .

விடயம் 1016: ஒவ்வொருவரும் தொழுகையை பிழையாக தொழாதிருக்க அதை கற்றுக் கொள்ள வேண்டும் . எவ்வகையிலும் அதை சரியாக கற்றுக் கொள்ள முடியாத ஒருவர் அவரால் எவ்வாறு முடியுமோ அவ்வாறு தொழவேண்டும் . இஹ்தியாது முஸ்தஹப்பின் படி தொழுகையை ஜமாஅத்துடன் தொழவேண்டும் .

விடயம் 1017: அல்ஹம்து , சூரா மற்றும் ஏனையவைகளை நன்றாக ஓத முடியாத ஒருவர் , அதை அவரால் கற்றுக் கொள்ள முடியும என்றிருந்தால் இன்னும் தொழுகையின் நேரமும் கூடுதலாக இருந்தால் கட்டாயம் அதைக் கற்றுக் கொள்ள வேண்டும் . ஆனால் நேரம் கு iறாவக இருந்தால் இஹ்தியாது வாஜிபின் படி முடிந்தால் தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்ற வேண்டும் .

விடயம் 1018: இஹ்தியாது முஸ்தஹப்பின படி தொழுகையைக் கற்றுக் கொடுப்பதற்கு கூலி எதுவும் எடுக்கக் கூடாது . ஆனால் அதன் முஸ்தஹப்புகளுக்கு என்றால் பிரச்சினையில்லை .

விடயம் 1019: ஒருவர் அல்ஹம்து அல்லது சூராவின் ஒரு சொல்லை அறியவில்லை என்றால் அல்லது அதை வேண்டுமென்று சொல்லது விட்டால் அல்லது ஒரு எழுத்துடைய இடத்தில் வேறொரு எழுத்தை உச்சரித்தால் அவரது தெழுகை பாத்திலாகும் .

விடயம் 1020: ஒருவருக்கு அவர் ஹம்து மற்றும் சூராவையும் வாஜிபான திக்ருகளையும் சரியான முறையில் ஓதுகிறார் என்று உறுதி இருந்து பின் அவர் அவை தவறாக இருந்தது என அறிந்தால் தொழுத தொழுகைகள் அனைத்தும் சஹீஹாகும் . இன்னும் கழாவும் இல்லை . இஹ்தியாது முஸ்தஹப்பின் படி அவைகளை கழாச் செய்ய வேண்டும் என்றிருந்தாலும் சரியே . ஆனால் ஒருவருக்கு அவர் ஹம்து மற்றும் சூராவையும் வாஜிபான திக்ருகளையும் தவாறன முறையில் ஓதுகிறேனா என சந்தேகம் கொண்டு அதைச் சரி பார்ப்பதிலும் பொடுபோக்காக இருந்து அதே நிலையில் தொழுது பின் அவை தவாறாகவே இருந்தது என உணர்ந்தால் தொழப்பட்ட தொழுகைகளைக் கொண்டு போதுமாக்கிக் கொள்ள முடியாது . இன்னும் சிலருக்கு குறிப்பான உச்சரிப்பு இருக்கின்றது அதன் மூலம் அவர்களால் சரியான அரபு உச்சரிப்பைக் கொண்டு ஓதமுடியாது இந்நிலையில் அவர்களால் எவ்வாறு முடியுமோ அவ்வாறு ஓதி தொழவேண்டும் .

விடயம் 1021: ஸபர் , சேருள்ள சொற்களைக் கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டும் . ஆனால் கடைசில் ஸபர் , சேருள்ள எழுத்தை அதை எப்போதும் நிறுத்துவது ஆகும் என்றிருந்தால் அதனுடைய ஸபர் , சேரை கற்பது அவசியமில்லை . மேலும் ஒரு சொல்லிலுள்ள எழுத்து ஸீனா அல்லது ஸாதா என தெரியாது போனால் கட்டாயம் அதைக் கற்றுக் கொள்ள வேண்டும் . மாறாக அதை இரு முறையிலும் ஓதினால் அதாவது ஒரு முறை ஸீனுடைய உச்சரிப்பிலும் மறு முறை ஸாதுடைய உச்சரிப்பிலும் ஓதினால் அதில் ஒரு முறை பிழையாகும் . அது அதன் மேல் மிச்சமான வார்த்தையாகும் . இதனால் அவரது தொழுகை பாத்திலாகும் . உதாரணமான இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம் என்பதில் முஸ்தகீம் என்ற சொல்லை ஒரு முறை ஸீனுடைய உச்சரிப்பிலும் மறறொரு முறை ஸாதுடைய உச்சரிப்பிலும் ஓதுவது போல .

விடயம் 1022: ஒரு சொல்லில் வாவு (و) இருந்து அதற்கு முன்னால் இருக்கும் எழுத்து ழம்மு பெற்றிருந்து அதற்குப் பிறகுள்ளது ஹம்ஸாக இருந்தால் உதாரணமாகسوءஎன்ற சொல்லைப் போல் , அந்நிலையில் அந்த வாவை சற்று நீட்டுவது சிறந்ததாகும் . அதேபோன்று தான் ஒரு சொல்லில் அலிப் இருந்து அதற்கு முதல் உள்ளது கஸ்ரு பெற்றிருந்து அதற்குப் பின்னுள்ள எழுத்து ஹம்ஸாக இருந்தால் அலிபை நீட்டுவது சிறந்ததாகும் . இன்னும் ஒரு சொல்லில் யா يا  இருந்து அதற்கு முன்னுள்ள எழுத்து கஸ்ரு பெற்றிருந்தால் யாவுக்கு பின்னால் உள்ள எழுத்தும் ஹம்ஸாக இருந்தால் அந்த யாவை நீட்டி ஓதுவது சிறந்ததாகும் . இன்னும் வாவு , அலிப் , யாவுக்குப் பிறகு ஹம்ஸ் இருக்கின்ற இடத்தில் வேறொரு எழுத்து இருந்து அது சுகூன் பெற்றிருந்தால் இந்த மூன்று எழுத்தையும் நீட்டி ஓதுவது சிறந்ததாகும் . உதாரணமாகولا الضالين என்பதைப் போல் இதில் அலிபுக்குப் பிறகுள்ள லாம் சுகூன் பெற்றுள்ளது அதனால் அந்த அலிபை நீட்டுவது சிறந்ததாகும் .

விடயம் 1023: தொழுகையில் சுகூனில் நிறுத்துதல் இன்னும் ஹரகத்துடன் சேர்த்தல் போன்றவற்றைக் கவனிப்பது அவசியமில்லை . இதனால் ஒரு சொல்லின் கடைசி எழுத்தில் இருக்கும் சபர் அல்லது கஸ்ரு அல்லது ழம்முவை சொன்னால் அந்த சொல்லுக்கும் அதற்குப் பின்னுள்ள சொல்லுக்குமிடையில் பிரிக்க வேண்டும் . உதாரணமாக அர்ரஹ்மானிர் ரஹீம் என்பதில் ரஹீம் என்ற சொல்லுக்கு கஸ்ரு செய்து ஓதினால் சற்று தாமதித்து விட்ட பிறகே மாலிகி யவ்மித்தீன் என்று சொல்ல வேண்டும் . அல்லது ஒரு சொல்லின் கடைசி எழுத்தில் இருக்கும் சபர் அல்லது கஸ்ரு அல்லது ழம்முவை சொல்லாது விட்டு அதை அற்குப் பிறகுள்ள சொல்லுடன் சேர்க்க விரும்பினால் உதாரணமாக அர்ரஹ்மானிர் ரஹீம் என்பதில் ரஹீம் என்பதில் இருக்கும் மீமுக்கு கஸ்ரு செய்யாது சொல்லி விட்டு உடனடியாக அதற்கு அடுத்துள்ளதை அதாவது மாலிகி யவ்மித்தீன் என்று சொன்னால் அவரது தொழுகை பாத்திலாகாது .

விடயம் 1024: தொழுகையின் மூன்றாவது , நான்காவது ரகஅத்தில் அல்ஹம்துவை மட்டும் ஓதவும் முடியும் . அல்லது மூன்று முறை தஸ்பீஹாதுல் அர்பஆ எனப்படும் , சுப்ஹானல்லாஹி வல் ஹம்துலில்லாஹி வலாயிலாக இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் என்ற இந்த திக்ரையும் ஓதவும் முடியும் . இஹ்தியாது வாஜிபின்படி தஸ்பீஹாதுல் அர்பஆவையே ஓதவேண்டும் . இன்னும் ஒரு ரகஅத்தில் அம்ஹம்துவையும் மற்ற ரகஅத்தில் தஸ்பீஹாதுல் அர்பஆவையும் ஓதவும் முடியும் . ஆனால் அந்த இரண்டு ரகஅத்திலும் தஸ்பீஹாதுல் அர்பஆவை ஓதுவதே சிறந்ததாகும் .

விடயம் 1025: நேரம் மிகவும் குறைவாக இருக்கின்ற போது கட்டாயம் தஸ்பீஹாதுல் அர்பஆவையே ஓதவேண்டும் .

விடயம் 1026: தொழுகையின் மூன்றாம் நான்காம் ரகஅத்துக்களில் தஸ்பீஹாதுல் அர்பஆவை சத்தமின்றி சொல்வது ஆண் , பெண் மீது வாஜிபாகும் .

விடயம் 1027: மூன்றாம் நான்காவது ரஅத்தில் அல்ஹம்துவை ஓதினால் இஹ்தியாது வாஜிபின் படி பிஸ்மில்லாவை அமைதியாக சொல்ல வேண்டும் . குறிப்பாக மஃமூம்களும் இன்னும் தனியே தொழுபவர்களும் .

விடயம் 1028: தஸ்பீஹாதுல் அர்பஆவை கற்றுக் கொள்ள முடியாதவர் அல்லது அதை உரிய முறையில் சொல்ல முடியாதவர் கட்டாயம் மூன்றாம் நான்காம் ரகஅத்துக்களில் அல்ஹம்துவை ஓதவேண்டும் .