Back | Index | Next |
விடயம் 1097: கொடிகளின் இலைகள் மீது அது புதியாக இருந்தால் அதில் ஸஜதா செய்ய முடியாது . ஆனால் காய்ந்த பிறகு அதில் ஸஜதா செய்ய முடியும் .
விடயம் 1098: மண்ணில் முளைத்து அதை மிருங்களின் உணவாக இருக்கின்றவற்றில் உதாரணமாக புல் போன்றவை மீது ஸஜதா செய்வதில் பிரச்சினையில்லை . சஹீஹ் ஆகும் .
விடயம் 1099: சாப்பிடாத பூக்கள் மீது ஸஜதா செய்வது சஹீஹ் ஆகும் . ஆனால் பூமியில் முளைத்து அதை மருந்துக்காக சாப்பிடப்படும் பூக்களின் மீது ஸஜதா செய்ய முடியாது . உதாரணமாக செம்பருத்தியம் பூ போன்றவை .
விடயம் 1100: ஒரு சில தாவரங்கள் அதை சில கிராமங்களில் சாப்பிடும் வழக்கமும் மற்ற கிராமத்தில் அதை சாப்பிடாத வழக்கமும் இருக்கும் அந்த தாரவத்தின் மேல் ஸஜதா செய்வதும் இன்னும் கழமாகாத காய்களின் மேல் ஸஜதா செய்வதும் ஆகாது . ஆனால் புகையிலை மீது ஸஜதா செய்வது ஆகும் .
விடயம் 1101: சுண்ணாக்கல் மீது ஸஜதா செய்வது ஆகும் . இன்னும் சுட்ட சுண்ணக்கல் இன்னும் செங்கல் , களி மண்ணினால் செய்யப்பட்ட கூஷாக்களின் மீதும் ஸஜதா செய்ய முடியும் .
விடயம் 1102: கடதாசி , ஸஜதா சஹீஹான ஒன்றின் மூலம் செய்யப்பட்டிருந்தால் உதாரணமாக வைக்கோல் , பலகை போன்றவை , அதன் மீது ஸஜதா செய்ய முடியும் . இன்னும் பஞ்சி சுலம் செய்யப்பட்டிருக்கும் கடதாசி மிதும் ஸஜதா செய்தாலும் அதில் பிரச்சினையில்லை .
விடயம் 1103: ஸஜதா செய்வதற்கு எல்லாவற்றையும் விட கர்பலாவுடைய மண் சிறந்ததாகும் . அதற்குப் பிறகு ஏனைய மண் அதற்கும் பிறகு கல்லு அதற்குப் பிறகு தாவரங்களாகும் .
விடயம் 1104: ஸஜதா செய்வது சஹிஹான ஒன்று இல்லாதிருந்தால் அல்லது இருந்தும் சூடு அல்லது குளிர் போன்ற வேறு காரணங்களால் அதில் ஸஜதா செய்ய முடியாது போனால் அச்சந்தர்ப்பத்தில் அவரது ஆடையில் அது சணல் மூலம் நார்த்தப்பட்டதாக அல்லது பஞ்சு மூலம் நெய்யப்பட்டாக இருந்தால் அதில் ஸஜதா செய்ய வேண்டும் . ஆனால் அவரது ஆடை வேறொன்றால் நெய்யப்பட்டிருந்தால் அந்த ஆடையிலேயே ஸஜதா செய்யவேண்டும் . அதற்கும் முடியாது போனால் கையின் மேல் பகுதியில் ஸஜதா செய்ய வேண்டும் . அதற்கும் முடியாது போனால் இஹ்தியாது வாஜிபின் படி அகீக் மோதிரம் போன்ற சுரங்கப் பொருள் மீது ஸஜதா செய்ய வேண்டும் .
விடயம் 1105: கட்டியில்லாது நெலியும் களிமண் , மணல் மீது ஸஜதா செய்யும் போது உடம்பு அசையாது இருக்க மாட்டாது அதில் ஸஜதா செய்வதென்றால் சற்று உள்சென்றதும் உடம்பு அசையாது இருந்து விடும் என்றிருந்தால் அதில் செய்வதில் பிரச்சினையில்லை .
விடயம் 1106: முதலாவது ஸஜதாவில் மொஹர் நெற்றியில் ஒட்டிக் கொண்டால் அவர் அதை எடுக்காது இரண்டாவது ஸஜதாவுக்கும் சென்றால் அதில் பிரச்சினையில்லை . அது இரண்டு ஸஜதாக்கள் என கணிக்கப்படும் . ஆனால் நெற்றியில் இருக்கும் மொஹரை எடுப்பது சிறந்ததாகும் .
விடயம் 1107: தொழுது கொண்டிருக்கும் போது ஸஜதா செய்வது ஆகுமானது தொலைந்து விட்டால் இன்னும் ஸஜதா செய்வது ஆகுமானவை இல்லை என்றிருந்தால் , நேரம் கூடுதலாக இருந்து அத்தோடு வேறறொரு இடத்தில் ஸஜதா செய்வது ஆகுமாது காணப்பட்டால் கட்டாயம் தொழுகையை முறிக்க வேண்டும் . ஆனால் நேரம் குறைவாக இருந்தால் அல்லது ஸஜதா செய்வது ஆகுமானது இல்லை என்றிருந்தால் அவரது ஆடையில் அது சணலால் அல்லது பஞ்சினால் நெய்யப்பட்டிருந்தால் அதில் ஸஜதா செய்ய வேண்டும் . மாறாக அது வேறொன்றால் நெய்யப்பட்டிருந்தால் அதில் அந்த ஆடையிலேயே ஸஜதா செய்ய வேண்டும் . அதற்கும் முடியாது போனால் கையின் மேல் பகுதியில் ஸஜதா செய்ய வேண்டும் . அதற்கும் முடியாது போனால் இஹ்தியாது வாஜிபின் படி அகீக் மோதிரம் போன்ற சுரங்கப் பொருள் மீது ஸஜதா செய்ய வேண்டும் .
விடயம் 1108: ஒருவர் ஸஜதா செய்து கொண்டிருக்கும் போது இப்போது ஸஜதாவில் நெற்றியை ஸஜதா செய்ய முடியாத ஒன்றின் மீது வைத்துள்ளேன் அதில் ஸஜதா செய்தால் தொழுகை பாத்திலாகும் என உணர்ந்தால் , முடிந்தால் அவ்விடத்திலிருந்து ஸஜதா செய்வது ஆகுமான ஒன்றின் பக்கம் நெற்றியை இழுக்க முடியுமாக இருந்தால் அப்படியே செய்ய வேண்டும் . அதாவது நெற்றியை இழுக்க வேண்டும் . அப்போது நேரம் குறைவாக இருந்தால் மேற்கூறிய விடயத்தில் சொல்லப்பட்டது போன்று செய்ய வேண்டும் .
விடயம் 1109: ஒருவர் ஸஜதா செய்வது சஹீஹ் இல்லாதவற்றில் , முடியாதவற்றில் ஸஜதா செய்து அதை ஸஜதா செய்து முடித்த பிறகு அவர் அறிந்தால் அதில் பிரச்சினையில்லை .
விடயம் 1110: ஸஜதாவில் சில விடயங்கள் முஸ்தஹப்பாகும் .
1. நின்று தொழுபவர் ருகூவில் இருந்து தலையை முற்றாக தூக்கி நிமிர்ந்து நின்ற பிறகு இன்னும் இருந்து தொழுபவர் நிமிர்ந்து இருந்த பிறகு ஸஜதாவுக்குச் செல்ல தக்பீர் சொல்ல வேண்டும் .
2. ஆண்கள் பள்ளிக்குச் செல்லும் போது கைகளையும் , பெண்கள் முழங்கால்களையும் மண்ணில் வைக்க வேண்டும் .
3. நெற்றியை வைப்பதோடு சேர்த்து மூக்கையும் ஸஜதா செய்வது ஆகுமான ஒன்றில் வைக்க வேண்டும் .
4. ஸஜதாவின் போது கைவிரல்களை ஒன்றோடொன்று சேர்த்து காதுக்கு நேராக விரல் நுனிகள் கிப்லாவின் பக்கம் இருக்கு படி அதை வைக்க வேண்டும் .
5. ஸஜதாவில் துஆக் கேட்க வேண்டும் . இறைவனிடம் தனது தேவைகளை கேட்கவேண்டும் . ஸஜதாவில் ஓதுவதற்கு பொறுத்தமான துஆக்களில் இதுவும் ஒன்றாகும் .
يا خَير المسئوُلينَ وَيا خَيْرَ الْمُعْطينَ اُرزُقْنى وَارْزُقْ عِيالى مِنْ فَضْلِكَ فَاِنَّكَ ذُوالْفَضْلِ الْعَظيمِ .
கேட்கப் படுபவர்களில் மிகவும் சிறந்தவனே ! , இன்னும் கொடுப்பவர்களில் மிகவும் சிறந்தவனே உன்னுடைய சிறப்பிலிருந்து எனக்கும் எனது குடும்பத்தினருக்கு உணவளிப்பாயாக ஏனெனில் நிச்சயமாக உனக்கு மகா சிறப்பு இருக்கின்றது .
6. ஸஜதாவுக்குப் பிறகு இடது தொடையில் இருத்தல் , வலது காலுக்கு மேல் இடது காலின் மேற்பகுதியை வைத்தல் . இச்செயலை தவர்குக் அதாவது பித்தட்டில் அமர்தல் என கூறப்படும் .
7. ஒவ்வொரு ஸஜதாவுக்குப் பிறகும் இருந்து உடம்பு அசையாது இருந்ததும் தக்பீர் சொல்ல வேண்டும் .
8. முதலாவது ஸஜதாவுக்குப் பிறகு உடம்பு அசையாது விட்டதும்استغفر الله ربي واتوب اليه ( அஸ்தஃபிருல்லாஹ ரப்பீ வஅதூபு இலைஹி) என்று சொல்ல வேண்டும் .
9. ஸஜதாவை நீட்டவேண்டும் . எழுந்து இருக்கின்ற போது கைகளை தொடையின் மேல் வைக்க வேண்டும் .
10. இரண்டாவது ஸஜதாவுக்குச் செல்வதற்கு , உடம்பு அசையாது இருக்கும் போது அல்லாஹு அக்பர் என்று சொல்ல வேண்டும் .
11. ஸஜதாக்களில் ஸலவாத் சொல்ல வேண்டும் .
12. ஸஜதாவில் இருந்து எழும்பும் போது கைகளை முழங்கால்களுக்குப்பின் பூமியில் இருந்து எடுக்க வேண்டும் .
13. ஆண்கள் முழங்கைகளையும் வயிற்றையும் மண்ணில் ஒட்டி வைக்க கூடாது . இன்னும் விலாப்பகுதியை விட்டும் குடங்கையை வேறாக வைக்க வேண்டும் . ஆனால் பெண்கள் முழங்கைகையும் வயிற்றையும் மண்ணில் வைக்க வேண்டும். உடம்பின் மற்ற பகுதிகளை ஒன்றுடன் உன்று சேர்த்து வைக்க வேண்டும்.
இன்னும் பல முஸ்தஹப்புக்கள் இருக்கின்ற அவை இதை விட பெரிய இஸ்லாமிய சட்ட நூற்களில் கூறப்பட்டுள்ளது.
விடயம் 1111: ஸஜதாவில் குர்ஆன் ஓதுதல் மக்ருஹ் ஆகும். இன்னும் ஸஜதா செய்யும் இடத்தில் இருக்கும் புழுதி போன்றதை நீக்குவதற்காக அங்கு ஊதுவதும் மக்ரூஹ் ஆகும். அங்கு ஊதுவது மூலமாக வாயிலிருந்து இரு எழுத்துக்கள் வெளியானால் தொழுகை பாத்திலாகும். இது தவிர்ந்த மற்றும் பல மக்ரூஹ்கள் பெரிய இஸ்லாமிய சட்ட நூற்களில் சொல்லப்பட்டுள்ளன.
விடயம் 1112: அல் குர்ஆனின் நாங்கு சூராக்களில் ஸஜதாவுடைய வசனம் இருக்கின்றது. அந்த சூராக்கள் சூரதுன் நஜ்ம் (53) , சூரா இக்ரஃ (96) , சூரா அலிப் லாம் தன்ஸீல் (32) , சூரா ஹாமீம் ஸஜதா (41) ஆகும். எப்போதாவது ஒருவர் ஸஜதாவுடைய ஆயத்தை , வசனத்தை ஓதினால் அல்லது கேட்டால் கட்டாயம் உடனடியாக ஸஜதா செய்ய வேண்டும். மறந்து விட்டால் அது ஞாபகம் வந்தவுடன் ஸஜதா செய்வது வாஜிப்பாகும். ஆனால் அவரது காதுக்கு இந்த வசனங்கள் கேட்டால் இஹ்தியாது வாஜிபின் படி ஸஜதா செய்ய வேண்டும்.
விடயம் 1113: ஒருவர் ஸஸஜதாவுடைய வசனத்தை ஓதும் போது அதை மற்றவர் மூலமும் கேட்டால் அச்சந்தர்ப்பத்தில் இரண்டு ஸஜதாக்கள் செய்ய வேண்டும்.
விடயம் 1114: தொழுகை அல்லாததில் ஸஜதாவுடைய நிலையில் இந்த ஸஜதாவுடைய வசனங்களை ஓதினால் அல்லது அதைக் கேட்டால் கட்டாயம் ஸஜதாவில் இருந்து தலையை உயர்த்தி பின் மீண்டும் ஸஜதாவுக்குச் செல்ல வேண்டும்.
விடயம் 1115: ஸஜதாவுடைய வசனங்களை ஒலிபரப்புக் கூட்டுத்தானம் அல்லது டேப் அல்லது கொம்பியூட்டல் மூலம் கேட்டால் ஸஜதா செய்வது அவசியமில்லை. ஆனால் அது ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நேரடியாக ஒலிபரப்பப்பட்டால் உதாணரமாக ஒலி பெருக்கி மூலம் கேட்பது போல் இந்நிலையில் கட்டாயம் ஸஜதா செய்ய வேண்டும்.
விடயம் 1116: இஹ்தியாது வாஜிபின் படி குர்ஆனுடைய வாஜிபான ஸஜதாக்களில் உண்பதிலும் , அணிவதிலும் ஸஜதா செய்ய முடியாது. ஆனால் தொழுகையுடைய ஸஜதாவில் இருக்கும் ஏனைய நிபந்தனைகள் இந்த ஸஜதாவில் வாஜிபில்லை.
விடயம் 1117: குர்ஆனுடைய வாஜிபான ஸஜதா , இவர் ஸஜதா செய்தார் என்று சொல்லும் அளவுக்கு அது இருக்க வேண்டும். அதாவது நிய்யத்துன் ஸஜதாவின் வெளிப்படையான அமைப்பும் போதுமாகும்.
விடயம் 1118: குர்ஆனுடைய ஸஜதாவில் நெற்றியை ஸஜதாவுடைய நிய்யத்துடன் மண்ணில் வைக்கும் போது அதில் திக்ரு சொல்லாவிட்டாலும் அது போதுமாகும். திக்ர் சொல்வது முஸ்தஹப்பு அவர் அதில் இதைச் சொல்வது சிறந்ததாகும்.
لااِلهَ الاّ اللهُ حَقّاً حَقّاً، لااِلهَ الاّ اللهُ اِيماناً وَتَصديقاً، لااِلهَ الاّ الله عبوديّةً وَرِقّاً سَجَدتُ لَكَ يا رَبِّ تَعَبُّداً وَرِقّاً، لامُسْتَنْكِفاً وَلا مُستَكبِراً بَلْ اَنَا عَبْدُ ذَلِيلٌ ضَعيفٌ خائِفٌ مُسْتَجيرٌ .
விடயம் 1119: குர்ஆனுடைய வாஜிபான ஸஜதாவுக்கு தக்பீரதுல் இஹ்ராம் , தஷஹ்ஹுத் , ஸலாம் இல்லை. ஸஜதாவில் இருந்து தலையை தூக்கியதும் தக்பீர் சொல்வது இஹ்தியாது முஸ்தஹப்பாகும்.
விடயம் 1120: வாஜிபான அனைத்துத் தொழுகைளின் இரண்டாவது ரகஅத்திலும் மஃரிபின் மூன்றாவது ரகஅத்திலும் ளுஹர் , அஸர் , இஷாத் தொழுகையின் நான்காவது ரகஅத்திலும் இரண்டாவது ஸஜதாவுக்குப் பிறகு எழுந்து அமர்ந்து உடம்பு அசையாது அமைதியானதும் தஷஹ்ஹுத் ஓதவேண்டும். அதாவது இவ்வாறு ஓதவேண்டும்.
اَشْهَدُ اَنْ لااِلهَ اِلاّ اللهُ وَحْدَهُ لاشَريكَ لَهُ وَاَشْهَدُ اَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَرَسُولُهُ اَللّهُمَ صَلِّ عَلَى مُحَمَّد وَآلِ مُحَمَّد .
விடயம் 1121: தஷஹ்ஹுதுடைய சொற்கள் கட்டாயம் அறபு மொழியில் சரியான உச்சரிப்புக்களுடன் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ச்சியாக ஓதப்படவேண்டும்.
விடயம் 1122: ஒருவர் தஷஹ்ஹுதை மறந்து எழுந்தால் அது அவருக்கு ருகூவுக்குச் செல்வதற்கு முதல் தஷஹ்ஹுத் ஓதவில்லையென ஞாபகம் வந்தால் கட்டாயம் அவர் அமர்ந்து தஷஹ்ஹுதை ஓதவேண்டும். பின் மீண்டும் எழுந்து நின்று அந்த ரகஅத்தில் ஓதவேண்டியதை ஓதி தொழுது முடிக்க வேண்டும். மாறாக அவருக்கு தஷஹ்ஹுத் ஓதாதது ருகூவில் வைத்து அல்லது அதற்குப் பிறகு ஞாபகம் வந்தால் கட்டாயம் தொழுகையை முடித்து ஸலாம் கொடுத்த பிறகு தஷஹ்ஹுதை கழாச் செய்ய வேண்டும். மறந்த தஷஹ்ஹுதுக்காக இரண்டு மறதிக்கான ஸஜதா செய்ய வேண்டும்.
விடயம் 1123: தஷஹ்ஹுத் ஓதும் போது இடது காலில் இருந்து வலது காலின் மேல் இடது காலின் மேற்பகுதியை வைப்பதும் , தஷஹ்ஹுதுக்கு முதல் அல்ஹம்து லில்லாஹ் (اَلْحَمْدُالله ) என்று சொல்வதும் அல்லது பிஸ்மில்லாஹி வபில்லாஹி வல்ஹம்து லில்லாஹி வஹைருல் அஸ்மாயி லில்லாஹி (بسم الله والحمد لله وخير الاسماء لله ) என்று சொல்வதும் முஸ்தஹப்பாகும். அத்துடன் கைகளை தொடையில் வைப்பதும் இன்னும் விரல்களை சேர்த்து வைத்திருப்பதும் இன்னும் தன் மடியைப் பார்ப்பதும் தஷஹ்ஹுத் ஓதி முடிந்த பிறகு வதகப்பல் ஷபாஅத்தஹு வர்பஃ தரஜதஹு (وتقبل شفاعته وارفع درجته )என்று சொல்வதும் முஸ்தஹப்பாகும். இரண்டாவது தஷஹ்ஹுதில் இந்த வசனத்தை குர்பத்துடைய நிய்யத்துன் சொல்ல வேண்டும் என்பது இஹ்தியாத்தாகும்.
விடயம் 1124: பெண்கள் தஷஹ்ஹுத் ஓதும் போது தன் தொடைகளை ஒன்றுடன் ஒன்று சேர்த்து வைத்துக் கொள்வது முஸ்தஹப்பாகும்.
விடயம் 1125: தொழுகையின் கடைசி ரகஅத்தில் தஷஹ்ஹுத் ஓதி முடிந்த பிறகு இருந்த நிலையில் உடம்பு அசையாது அமைதியாக இருக்கும் போது அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு (السلام عليك ايها النبي ورحمة الله وبركاته ) என்று சொல்வது முஸ்தஹப்பாகும். அதன் பிறகு இதைச் சொல்ல வேண்டும். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு (السلام عليكم ورحمة الله وبكاته ) அல்லது அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் (السلام علينا وعلي عبادالله الصالحين ) என்று சொல்ல வேண்டும். ஆனால் இந்த ஸலாமைச் சொன்னால் இஹ்தியாது வாஜிபின் படி அதற்குப் பிறகு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபகாதுஹு (السلام عليكم ورحمة الله وبركاته ) என்பதையும் சொல்ல வேண்டும்.
விடயம் 1126: ஒருவர் ஸலாத்தை மறந்தால் அது அவருக்கு ஞாபகம் வரும் போது தொழுகையின் அமைப்பு மாறாதிருந்தாலோ அல்லது தொழுகையை பாத்திலாக்கக் கூடிய ஒன்றை அவர் வேண்டுமென்றோ அல்லது மறதியாகவோ செய்திருக்க வில்லையென்றால் உதாரணமாக கிப்லாவை பின்நோக்கி இருத்தல் என்பது போல் , கட்டாயம் அவர் ஸலாத்தைச் சொல்லவேண்டும் அவரது தொழுகை சஹீஹாகும்.
விடயம் 1127: தொழுகையை பாத்திலாக்கக் கூடியவற்றை செய்த பிறகு ஸலாம் கொடுக்க வில்லையென அவருக்கு ஞாபகம் வந்தால் அவரது தொழுகை பாத்திலாகும். இன்னும் தொழுகையின் அமைப்பு சீர் குலைந்த பிறகு ஸலாம் கொடுக்க வில்லையென அவருக்கு ஞாபகம் வந்தால் அந்நிலையில் அவர் தொழுகையை பாத்திலாக்கும் எந்தவொரு செயலையும் செய்திருக்க வில்லை என்றிருந்தால் ஸலாம் கொடுப்பார் அவரது தொழுகை சஹீஹாகும். இன்னும் மறதிக்காக இரு ஸஜதாக்கள் செய்வது முஸ்தஹப்பாகும்.
விடயம் 1128: ஒருவர் மேண்டுமென்று தொழுகையின் தர்தீப்பை மாற்றியமைத்தால் உதாரணமாக அல்ஹம்து ஓதுவதற்கு முதல் சூராவை ஓதுதல் அல்லது ருகூவுக்கு முதல் சுஜுதுக்குச் செல்லுதல் போல் , இந்நிலையில் அவரது தொழுகை பாத்திலாகும்.