Back | Index | Next |
விடயம் 1129: ஒருவர் தொழுகையின் ருகுன்களில் ஒரு ருகுனை மறந்து அதற்கு அடுத்தாற்போல் இருக்கும் மற்ற ருகுனை செய்தால் உதாரணமாக ருகூவுக்கு முதல் இரண்டு ஸஜதாக்களையும் செய்வது போல் , இந்நிலையிலும் அவரது தொழுகை பாத்திலாகும்.
விடயம் 1130: ஒருவர் ஒரு ருகுனை மறந்து அதற்குப் பிறகுள்ள ருகுன் இல்லாத ஒன்றைச் செய்தால் உதாரணமாக இரண்டு ஸஜதாக்களையும் செய்வதற்கு முதல் தஷஹ்ஹுத் ஓதுவது போல் இந்நிலையில் கட்டாயம் விடுபட்ட அந்த ருகுனை செய்ய வேண்டும் பின் தவறுதலாக இதற்கு முன் ஓதியவற்றை திரும்பச் ஓதவேண்டும். இன்னும் இஹ்தியாது முஸ்தஹப்பின் படி அதிகமான ஒவ்வொன்றுக்கும் மறதிக்கான இரண்டு ஸஜதாக்கள் செய்ய வேண்டும்.
விடயம் 1131: குருன் இல்லாத வாஜிபுக்களில் ஒன்று மறக்கப்பட்டால் , அந்த வாஜிபு வாஜிபுன் முஸ்தகில்லுன் என்று சொல்லப்படும் தனிப்பட்ட வாஜிபாக இருந்தால் உதாரணமாக சூரதுல் ஹம்து மற்றும் சூரா போன்றது. இந்நிலையில் ஞாபகம் வந்த பிறகு திரும்பிவர விரும்பினால் அப்போது ருகுன் அதிகமாகும் நிலை ஏற்படுமாயின் உதாரணமாக சூராவை மறந்துள்ளார் அது அவருக்கு ருகூவில் பிறகு அது ஞாபகம் வந்தால் அவரது தொழுகை சஹீஹாகும். இஹ்தியாது முஸ்தஹப்பின் படி மறதிக்காக இரண்டு ஸஜதாக்கள் செய்ய வேண்டும். மேலும் திரும்பி வருவதன் மூலம் ருகுன் அதிமாகாது என்றிருந்தால் கட்டாயம் திரும்பி வந்து மறந்த பகுதியை நிறைவேற்ற வேண்டும். இன்னும் அதற்குப் பிறகுள்ளவற்றையும் நிறைவேற்ற வேண்டும். இஹ்தியாது முஸ்தஹப்பின் படி அதிகமான ஒவ்வொன்றுக்கும் மறதிக்கான இருஸஜதாக்கள் செய்ய வேண்டும். ஆனால் விடப்பட்ட வாஜிபு வாஜிபுன் முஸ்தகில்லுன் எனப்படும் தனிப்பட்ட வாஜிபு இல்லாதிருந்தால் மாறாக அது மற்றொரு வாஜிபுடன் சேர்ந்துள்ளதாக இருந்தால் உதாரணமாக ஸஜதாவுடைய திக்ரைப் போல , இந்நிலையில் அடிப்படையான வாஜிபை நிறைவேற்றிய பிறகு (அதாவது ஸஜதாவில் இருந்து தலையை உயர்த்திய பிறகு) அவருக்கு ஞாபகம் வந்தால் அவரது தொழுகை சஹீஹாகும். இன்னும் மறதிக்காக இருஸஜதாக்கள் செய்வது முஸ்தஹப்பாகும்.
விடயம் 1132: முதலாவது ஸஜதாவை இரண்டாவது ஸஜதா எனநினைத்து அல்லது இரண்டாவது ஸஜதாவை முதலாவது ஸஜதா என நினைத்து செய்தால் அவரது தொழுகை சஹீஹாகும். அவரது முதலாவது ஸஜதா முதலாவது ஸஜதா எனவும் இரண்டாவது ஸஜதா இரண்டாவது ஸஜதா எனவும் கணிக்கப்படும்.
விடயம் 1133: தொழுகையை தொடர்ச்சியாக நிறைவேற்ற வேண்டும். அதாவது தொழுகையின் அமல்களை உதாரணமாக ருகூஃ , சுஜுத் இன்னும் தஷஹ்ஹுதை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்ற வேண்டு ;ம. வழமையாக தொழுகையில் ஒன்றன் பின் ஒன்றாக செய்யவேண்டியதற்கு இடையில் இடைவெளியை ஏற்படுத்துவாராயின் அந்த இடைவெளி தொழுகின்றார் அல்ல என்று சொல்லுமளவுக்கு இருந்தால் அவரது தொழுகை பாத்திலாகும். அது மறதியாக செய்தாலும் சரியே.
விடயம் 1134: தொழுகையில் வேண்டுமென்று எழுத்துக்களுக்கு அல்லது சொற்களுக்கு இடையில் இடைவெளியை ஏற்படுத்தினால் அந்த இடைவெளி தொழுகையுடைய அமைப்பை சீரகுலைக்காததாக இருந்தால் அவரது தொழுகை பாத்திலாகாது. அது மறதியாக இருந்து அதற்கு அடுத்ததாக இருக்கும் ருகுனை செய்ய வில்லை என்றிருந்தால் கட்டாயம் அந்த எழுத்துக்களை அல்லது சொற்களை வழமை போல் ஓதவேண்டும். ஆனால் அதற்கு அடுத்ததாக இருக்கும் ருகுனை செய்து விட்டால் அவரது தொழுகை சஹீஹாகும். தக்பீரதுல் இஹ்ராமைத் தவிர. அதில் சொற்களுக்கு இடையில் ஏற்படுத்தப்படும் இடைவெளி தக்பீரதுல் இஹ்ராமுடைய அமைப்பில் இருந்து வெளியாகிவிடும் என்ற அளவுக்கு இருந்தால் அவரது தொழுகை பாத்திலாகி விடும்.
விடயம் 1135: ருகூஃ , சுஜுத் , குனூத்தை நீட்டுதல் , பெரிய சூராக்களை ஓதுதல் முவாலாத்தைக் குலைக்காது.
விடயம் 1136: வாஜிபான முஸ்தஹப்பான அனைத்துத் தொழுகையிலும் இரண்டாவது ரகஅத்தில் ருகூவுக்கு முதல் குனூத் ஓதுவது முஸ்தஹப்பாகும். வித்ருத் தொழுகையில் அது ஒரு ரகஅத்தாக இருப்பதுடன் அதிலும் ருகூவுக்கு முதல் குனூத் ஓதுவது முஸ்தஹப்பாகும். ஜும்ஆத் தொழுகையில் ஒவ்வொரு ரகஅத்திலும் ஒரு குனூத் இருக்கின்றது , முதலாவது ரகஅத்தில் ருகூவுக்கு முதலும் இரண்டாவது ரகஅத்தில் ருகூவுக்குப் பிறகுமாகும். ஆயாதுடைய தொழுகையில் ஐந்து குனூத் இருக்கின்றது. இன்னும் இருபெருநாள் (ஈதுல் பித்ர் , ஈதுல் அழ்ஹா) தொழுகைகளிலும் முதலாவது ரகஅத்தில் ஐந்து குனூதும் இரண்டாவது ரகஅத்தில் நாங்கு குனூத்துக்களும் இருக்கின்றது.
விடயம் 1137: குனூத் ஓதவிரும்பினால் கட்டாயம் கைகளை முகத்திற்கு நேராக உயர்த்த வேண்டும். இதை விட்டுவிடுவது நல்லதல்ல. மேலும் உள்ளங்கைய i விரித்து வானத்தைப் பார்த்தாற்போல் வைக்க வேண்டும். இன்னும் கட்ட விரலைத் தவிர மற்ற விரல்களை ஒன்றோடொன்று சேர்த்து வைக்க வேண்டும். இன்னும் உள்ளங்கையையே பார்க்க வேண்டும்.
விடயம் 1138: குனூத்தில் எந்த திக்ரை ஓதினாலும் அதாவது சுப்ஹானல்லாஹ் என்று சொன்னாலும் போதுமாகும். ஆனால் இதை ஓதுவது சிறந்ததாகும்.
لااِلهَ الاّاللهُ الْحَليمُ الْكَريمُ لااِلهَ الاَّ اللهُ العَلِىُّ العَظيمُ سُبْحانَ اللهِ رَبِّ السَّماواتِ السَّبْعِ وَرَبِّ اَلاَْرْضينَ السَّبْعِ وَما فيهنَّ وَما بَيْنَهُنَّ وَرَبِّ الْعَرْشِ العَظيمِ وَالْحَمْدُللهِ رَبِّ العالَمينَ .
விடயம் 1139: குனூத்தை சத்தமாக ஓதுவது முஸ்தஹப்பாகும். ஆனால் தொழுகையை இமாம் ஜமாஅத்தாக தொழும் ஒருவர் அவரது சத்தத்தை இமாம் கேட்கிறார் என்றிருந்தால் குனூத்தை சத்தமாக ஓதுவது முஸ்தஹப்பில்லை.
விடயம் 1140: ஒருவர் வேண்டுமென்று குனூத்தை ஓதாது விட்டால் அதற்கு கழா இல்லை. இன்னும் ஒருவர் அதை மறந்து அவர் ருகூவுடைய அளவுக்கு குனிவதற்கு முதல் அது அவருக்கு ஞாபகம் வந்தால் எழுந்து நின்று ஓதுவது முஸ்தஹப்பாகும். இன்னும் அது அவருக்கு ருகூவில் வைத்து ஞாபகம் வந்தால் ருகூவுக்குப் பிறகு கழாச் செய்வது முஸ்தஹப்பாகும். இன்னும் சுஜுதில் வைத்து ஞாபகம் வந்தால் ஸலாமுக்குப் பிறகு அதை கழாச் செய்வது முஸ்தஹப்பாகும்.
1. சூரதுல் ஹம்தின் மொழியாக்கம்
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحيم
அளவற்ற அருளாளனும் , நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اَلْحَمْدُللهِ رَبِّ العالَمين
அனைத்து புகழும் , அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.
الرَّحمن الرَّحيم
(அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.
مالِكَ يَومِ الدّين
(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).
ايّاكَ نَعْبُدُ وَايّاكَ نَسْتَعينْ
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம் ;உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
اِهْدِنا الصِّراطَ المُسْتَقيم
நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!
صِراطَ الَّذينَ اَنْعَمْتَ عَلَيْهِمْ
(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.
غَيْرِ الْمَغْضوبِ عَلَيْهِمْ وَلاَالضّالّين
(அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.
2. சூரா இஹ்லாசுடைய மொழியாக்கம்.
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحيم
அளவற்ற அருளாளனும் , நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
قُلْ هُوَاللهُ اَحَد
(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
اَللهُ الصَّمَد
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
لَمْ يَلِدْوَلَمْ يوُلَدْ
அவன் (எவரையும்) பெறவுமில்லை ; (எவராலும்) பெறப்படவுமில்லை.
وَلَمْ يَكُنْ لَهُ كُفوُاً اَحَد
அன்றியும் , அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
3. ருகூ , சுஜுத் மற்றும் முஸ்தஹப்பான திக்ருகளின் மொழியாக்கம்.
سُبْحانَ رَبّى الْعَظيمِ وَبِحَمْدِه
கண்ணியமான எனது இறைவன் சகல விதமான பழிப்புகளை விட்டும் தூய்மையானவன். நான் அவனைப் புழந்து கொண்டிருக்கிறேன்.
سُبْحانَ رَبّى الاعَلى وَبِحَمْدِه
அனைத்தையும் விட மிக உயர்வான எனது இறைவன் சகல விதமான பழிப்புகளை விட்டும் தூய்மையானவன். நான் அவனைப் புழந்து கொண்டிருக்கிறேன்.
سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَه
இறைவனைப் புகழ்பவனுடைய புகழை அல்லாஹ் கேட்பானாக.
اَسْتَغْفِراللهِ رَبّى وَاَتُوبُ اِليْه
என்னைப் பரிபாலிக்கும் இறைவனிடம் மன்னிப்புக் கேட்கிறேன். இன்னும் அவனிடமே தவ்பாச் செய்தும் மீளுகிறேன்.
بِحَولِ الله وَقُوّتِه اَقوُمُ وَاَقْعُد
இறைவனது உதவியைக் கொண்டும் அவனது சக்தியைக் கொண்டும் எழும்புகிறேன் இன்னும் உட்காருகிறேன்.
4. குனூதுடைய மொழியாக்கம்.
لااِلهَ الاّاللهُ الْحَليمُ الْكَريمْ
வணக்கத்துக்குறிய நாயன் சகிப்பும் சங்கையும் கொண்ட இறைவனைத் தவிர வேறு யாருமில்லை.
لااِلهَ الاَّ اللهُ العَلِىُّ العَظيمْ
வணக்கத்துக்குறிய நாயன் மகத்தான உயர்வுமிக்க இறைவனைத் தவிர வேறு யாருமில்லை.
سُبْحانَ اللهِ رَبِّ السَّماواتِ السَّبْعِ وَرَبِّ اَلاَْرْضينَ السَّبْع
ஏழு வானங்கள் இன்னும் ஏழு பூமியன் இறைவனைத் துதிக்கின்றேன்.
وَما بَيْنَهُنَّ وَرَبِّ الْعَرْشِ العَظيم
இன்னும் அவன் அவைகளுக்கு இடையிலுள்ளவற்றின் இறைவனுமாகும். இன்னும் அர்ஷுடைய இறைவனும் அவனே.
وَالْحَمْدُللهِ رَبِّ العالَمينَ
இன்னும் அனைத்து புகழும் , அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே உரியன.
5. தஸ்பீஹாதுல் அர்பஆவுடைய மொழியாக்கம்.
سُبْحانَ اللهِ وَالْحَمْدُللهِ وَلااِلهَ اِلاّ اللهُ وَاللهُ اَكْبَر
அல்லாஹ் சகல விதமான பழிப்புகளை விட்டும் தூய்மையானவன் , எல்லாப் புகழும் அவனுக்கே ஆகும் , வணக்கத்துக்குறிய நாயன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை. இன்னும் அல்லாஹ் மிகப் பெரியவன்.
6. தஷஹ்ஹுத் , ஸலாமுடைய மொழியாக்கம்.
اَشْهَدُ اَنْ لااِلهَ اِلاّاللهُ وَحْدَهُ لاشَريكَ لَهُ
வணக்கத்துக்குறிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை அவன் தனித்தவன் அவனுக்கு இணையொன்றுமில்லை என சாட்சி பகர்கிறேன்.
وَاَشْهَدُ اَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَرَسُولُهُ
இன்னும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் அவனது அடியாரும் தூதரும் ஆவார்கள் எனவும் சாட்சி பகர்கிறேன்.
اَللّهُمَ صَلِّ عَلَى مُحَمَّد وَآلِ مُحَمَّد
இற iவா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் மீதும் அன்னார் குடும்பத்தினர் மீதும் ஸலவாத்துச் சொல்வாயாக.
وَتَقَبَّلْ شَفاعَتَهُ وَارْفَعْ دَرَجَتَه
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களது ஷபாஅத்தை ஏற்றுக் கொளாவாயாக இன்னும அவரது அந்தஸ்தை உயர்த்துவாயாக.
اَلسَّلامُ عَلَيكَ اَيُّها النَّبِىُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكاتُهْ
நபியே (ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி ) உங்கள் மீது அல்லாஹ்வுடைய சாந்தியுத் (ஸலாமும்) அன்பும் (ரஹ்மத்தும்) அருளும் (பரகத்தும்) உண்டாவதாக.
اَلسَّلامُ عَلَيْنا وَعَلَى عِبادِالله الصَّالِحين
எங்கள் மீதும் இன்னும் உண்மையான இறை நல்லடியார்கள் மீதும் அவனது சாந்தி (ஸலாம்) உண்டாகட்டும்.
اَلسَّلامُ عَلَيْكُمْ وَرَحْمَة اللهِ وَبَرَكاتُه
உங்கள் மீது அல்லாஹ்வுடைய ஸலாமும் அன்பும் அருளும் உண்டாவதாக.
விடயம் 1141: தொழுகைக்குப் பின் திக்ரு , துஆ , குர்ஆன் ஓதுவது முஸ்தஹப்பாகும். இன்னும் அதை இடத்திலிருந்து எழும்புதற்கு முதலும் , வுழு இன்னும் குளிப்பு பாத்திலாவதற்கு முதலும் கிப்லாவை முன்னோக்கி அதை ஓதுவது சிறந்தது. அது அறபுமொழியில் தான் இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. ஆனால் துஆ நூற்களில் சொல்லப்பட்டுள்ளவற்றை ஓதுவது சிறந்ததாகும். தஸ்பீஹுஸ் ஸஹ்ரா தொழுகைக்குப் பிறகு ஓதுபவற்றில் மிகவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அதாவது அல்லாஹு அக்பர் 34 தடவை , அல்ஹம்து லில்லாஹ் 33 தடவை இன்னும் சுப்ஹானல்லாஹ் 33 தடவை சொல்லவேண்டும். இதில் சுப்ஹானல்லாவை அல்ஹம்துக்கு முதலும் சொல்ல முடியும் ஆனால் அதை அல்ஹம்துக்கு பிறகு சொல்வதே சிறந்ததாகும்.
விடயம் 1142: தொழுகைக்குப் பிறகு நன்றிக்காக ஸஜதா (ஸஜதா சுக்ரு) செய்வது முஸ்தஹப்பாகும். அதாவது நெற்றியை சுக்ரு (நன்றிக்காக) என்ற நினைப்புடன் மண்ணில் வைத்தால் அதுவே போதுமாகும். ஆனால் நூறு தடவை அல்லது மூன்று தடவை சுக்ரன் லில்லாஹ் அல்லது சுக்ரன் அல்லது அப்வன் என்று சொல்வது சிறந்ததாகும். அத்தோடு மனிதனுக்கு கிடைக்கும் எல்லா நிஃமத்துக்கும் இன்னும் அவனை விட்டுத் தூரமாகும் அனைத்து பலாய்களுக்கும் சுக்ருடைய ஸஜதா செய்வது முஸ்தஹப்பாகும்.
விடயம் 1143: எப்போதாவது ஒருவர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் பெயரை உதாரணமாக முஹம்மத் , அஹ்மத் அல்லது அவர்களது சிறப்பு , புணைப் பெயரைக் கேட்டால் உதாரணமாக முஸ்தபா , அபுல் காஸிம் போன்றதை சொன்னாலோ அல்லது கேட்டாலோ ஸலவாத்துச் சொல்வது முஸ்தஹப்பாகும். அவர் தொழுகையில் இருந்தாலும் சரியே.
விடயம் 1144: நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் பெயரை எழுதும்போது ஸஜலாத்தையும் எழுதுவது முஸ்தஹப்பாகும் . அத்துடன் அதை ஞாபகிக்கும் போதெல்லாம் ஸலவாத் சொல்வதும் முஸ்தஹப்பாகும் .
தொழுகையை முறிப்பவை
விடயம் 1145: பனிரெண்டு விடயங்கள் தொழுகையை முறிக்கும் அவைகளுக்கு முப்திலாத் என்று சொல்லப்படும் .
முதலாவது : தொழுது கொண்டிருக்கும் போது அதற்குறிய நிபந்தனைகளில் ஒன்று இல்லாது போகுதல் . உதாரணமாக தொழுது கொண்டிருக்கும் போது அவரது உடல் அல்லது உடை நஜிஸாகுதல் .
இரண்டாவது : தொழுது கொண்டிருக்கும் போது வேண்டுமென்று அல்லது மறதியாக அல்லது வேறு வழியின்றி வுழுவை அல்லது குளிப்பை பாத்திலாக்க கூடியவை நிகழ்வதாகும் . உதாரணமாக சிறு நீர் அவரிலிருந்து வெளிப்படல் . ஆனால் ஒருவருக்கு மலம் சலம் வெளியாவதை தடுத்து நிறுத்த முடியாது போய் அவர் வுழுவுடைய சட்டத்தில் சொல்லப்பட்டது போல் நடந்து கொண்டால் அவரது தொழுகை பாத்திலாகாது . அதுபோல் தொழுது கொண்டிருக்கும் போது முஸ்தஹாழாவான பெண்ணிலிருந்து இரத்தம் வெளியாகி அவள் இஸ்திஹாழாவுடைய சட்டத்தில் சொல்லப்பட்டது போல் நடந்து கொண்டால் அவளது தொழுகை பாத்திலாகாது சஹீஹாகும் .