Back Index Next

விடயம் 1146:ஒருவர் அவரை அறியாமலே தூக்கம் அவரை மிகைத்தால் , அவருக்கு தொழுகையில் வைத்து தூக்கம் மிகைத்ததா அல்லது அதன் பின்புவா என்று தெரியாது போனால் கட்டாயம் அவர் அந்தத் தொழுகையை திரும்பத் தொழவேண்டும் . ஆனால் தொழுகை முடிந்தது என அவருக்குத் தெரியும் அந்நிலையில் அவர் தொழுது கொண்டிருக்கும் போது தூக்கம் மிகைத்ததா அல்லது அதற்குப் பின் மிகைத்ததா என்று சந்தேகம் கொண்டால் அவரது தொழுகை சஹீஹாகும் .

விடயம் 1147:ஒருவருக்கு தன்னை அறிந்த நிலையில் தூக்கம் மிகைத்து பின் அவர் தொழுது முடிந்த பின் தூக்கம் ஏற்பட்டதா ? அல்லது தொழுது கொண்டிருக்கும் போது தொழுகிறேன் என மறந்து தூக்கம் ஏற்பட்டதாயின் அவரது தொழுகை சஹீஹ் ஆகும் .

விடயம் 1148:ஒருவர் ஸஜதாவுடைய நிலையில் வைத்து கண் முழித்து அது தொழுகையினள் கடைசி ஸஜதாவா அல்லது நன்றிக்காக செய்யும் ஸஜதாவா என்று சந்தேகம் கொண்டால் அவர் அதை திரும்பத் தொழ வேண்டும் .

மூன்றாவது : தொழுகையில் தக்பீர் கட்டுதல் .

விடயம் 1149:ஒழுக்கத்திற்காக கைகளை கட்டினாலும் இஹ்தியாது வாஜிபின் படி அத்தொழுகையை திரும்பத் தொழவேண்டும் . ஆனால் மறதிகாக அல்லது வேறு வழியின்றி அவ்வாறு செய்தால் அதில் பிரச்சி i யில்லை .

நான்காவது : அல்ஹம்து சூராவுக்குப் பிறகு ஆமீன் கூறல் . அது தவறுதலாக கூறினால் தொழுகை பாத்திலாகாது .

ஐந்தாவது : வேண்டுமென்று அல்லது மறதியாக கிப்லாவை பின்னோக்கி நிற்றல் . அல்லது கிப்லாவுடைய வலது அல்லது இடது பக்கம் திரும்புதல் . ஒருவர் வேண்டுமென்று கிப்லாவை விட்டும் சற்று திரும்பினால் அவரைப் பார்ப்பவவர்கள் அவர் கிப்லாவை முன்னோக்கி இல்லை என்று சொன்னால் அவரது தொழுகை பாத்திலாகும் அது வலது அல்லது இடது பக்கத்தை அடையவில்லை என்றிருந்தாலும் சரியே .

விடயம் 1150:ஒருவர் வேண்டுமென்று அல்லது மறதியாக தலையை பின்பக்கத்தைப் பார்க்கும் அளவுக்குத் திருப்பினால் அவரது தொழுகை பாத்திலாகும் . ஆனால் தலையை சற்று திருப்பினால் அது வேண்டுமென்று இருந்தாலோ அல்லது மறதியாக இருந்தாலோ அவரது தொழுகை பாத்திலாகாது .

ஆறாவது : பொருள் தரும் ஒரு சொல்லை உச்சரித்தல் . அது ஒரு எழுத்தாயிருப்பினும் சரியே . அதை மறதியாக சொன்னால் தொழுகை பாத்திலாகாது .

விடயம் 1151:ஒரு சொல்லைச் சொன்னால் அதற்கு பொருளும் இருந்தால் உதாரணமாக உப் என்ற அறபு சொல்லுக்கு சீ என்ற பொருள் . அவர் அந்த பொருளை அறிந்து அதை நாடினால் அவரது தொழுகை பாத்திலாகும் . அவருக்கு அதன் பொருள் தெரியும் ஆனால் அதை அவர் நர் வில்லை என்றிருந்தால் அவரது தொழுகை பாத்திலாகாது . அத்துடன் ஒரு சொல்லைச் சொல்லி அதற்கு எவ்வித பொருளிலும் பாவிக்காது இருந்து அது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால் அப்போது கூட அவரது தொழுகை பாத்திலாகும் .

விடயம் 1152: இருமுதல் , ஏப்பமிடுதல் , ஆ என்று சொல்லுதலில் பிரச்சினையில்லை . ஆனால் ஆஹ் என்று இரு எழுதுள்ளவற்றைச் சொல்லுதல் அது வேண்டுமென்றிருந்தால் தொழுகை பாத்திலாகும் .

விடயம் 1153: ஒரு சொல்லை திக்ரு என நினைத்துச் சொன்னால் உதாரணமாக அல்லாஹு அக்பர் என்று சொல்வது போல் . ஆனால் அதைச் சொல்லும் போது சத்தமாக சொல்லி அதன் மூலம் மற்றவர்களுக்கு எதையாவது தெரியப்படுத்தினால் அதில் பிரச்சினையில்லை ஆனால் அதை மற்றவர்களுக்கு ஒன்றைத் தெரியப்படுத்த வேண்டும் என்ற நினைப்பில் அதைச் சொன்னால் அவரது தொழுகை பாத்திலாகும் . அப்போது அவர் திக்ரு என்று நினைப்பைக் கொண்டிருந்தாலும் சரியே .

விடயம் 1154: தொழுகையில் குர்ஆன் ஓதுதல் , ஜனாபத்துடைய சட்டத்தில் சொல்லப்பட்ட நான்கு ஸஜதா வாஜிபான சூராக்களைத் தவிர , அத்துடன் அதில் துஆக் கேட்டலில் பிரச்சினையில்லை . ஆனால் இஹ்தியாது வாஜிபின்படி இவை அறபு மொழியில் இருக்க வேண்டும் .

விடயம் 1155:அல்ஹம்து , சூரா மற்றும் ஏனைய தொழுகையின் திக்ருகளில் ஏதாவதை பல தடவை வேண்டுமென்று சொன்னாலும் அதில் பிரச்சினையில்லை . ஆனால் அதை வஸ்வாஸின் காரணமாக பல தடவை சொன்னால் தொழுகையில் சிக்கல் ஏற்படும் .

விடயம் 1156:தொழுது கொண்டிருக்கும் போது ஒருவர் மற்றவருக்குச் சலாம் சொன்னக் கூடாது . ஆனால் மற்றவர் அவருக்கு ஸலாம் சொன்னால் அப்போது ஸலாம் முதலில் இருக்கும் படி அதற்கு பதில் சொல்ல வேண்டும் அதாவது அஸ்ஸலாமு அலைக்கும் அல்லது ஸலாம் அலைக்கும் என்று சொல்ல வேண்டும் மாறாக அலைக்குமுஸ்ஸலாம் என்று சொல்லக் கூடாது .

விடயம் 1157:ஒருவர் ஸலாம் சொல்லுகின்ற போது அதற்குறிய பதிலை உடனடியாக சொல்ல வேண்டும் அது தொழுகையில் இருந்தாலும் சரி அல்லது தொழுகையில் இல்லாதிருந்தாலும் சரி . ஒருவர் வேண்டுமென்று அல்லது மறதியாக ஸலாத்துடைய பதிலை தாமதாக சொன்னால் அது ஸலாத்துடைய பதில் என்று கணிக்கப்படாததாக இருந்தால் அவர் தொழுகையில் இருந்தால் அதற்குறிய பதிலை சொல்லக் கூடாது . ஆனால் தொழுகையில் இல்லாதிலிருந்தால் அந்நிலையில் அவர் பதில் சொல்வது வஜிபு இல்லை .

விடயம் 1158:ஸலாத்துடைய பதிலை அதைச் சொன்னவருக்கு கேட்கும் அளவுக்கு சத்தமாகச் சொல்ல வேண்டும் . ஸலாம் சொன்னவர் செவிடாக இருந்தாலும் அதை சத்தமாக அல்லது ஒரு அசைவின் மூலம் அவர் ஸலாத்துயைட பதிலைத்தான் சொல்லுகிறார் என்று அறிந்து கொள்கின்ற படி சொல்ல வேண்டும் .

விடயம் 1159:தொழுது கொண்டிருப்பவர் ஸலாமுடைய பதிலை ஸலாத்தின் பதில் என்ற நினைப்புடனே சொல்ல வேண்டும் . ஆனால் அதை திக்ர் என்ற நினைப்பில் சொல்லக் கூடாது .

விடயம் 1160:பெண் அல்லது மஹ்ரமில்லாத ஆண் அல்லது நல்லது கெட்டதை அறியும் பிள்ளை தொழுபவருக்குச் ஸலாம் சொன்னால் அவர் அதற்கு பதில் சொல்ல முடியும் . ஆனால் அதை திக்ருடைய நினைப்புடன் சொல்வது சிறந்ததாகும் .

விடயம் 1161:தொழுபவர் ஸலாத்துடைய பதிலைக் சொல்ல வில்லை என்றால் பாவம் செய்து விட்டார் . ஆனால் அவரது தொழுகை சஹீஹாகும் .

விடயம் 1162:ஒருவர் தொழுது கொண்டிருப்பவருக்கு ஸலாம் என்று கருதப்படாத அளவுக்கு பிழையாக ஸலாம் சொன்னால் அதற்கு பதில் சொல்வது கடமையல்ல . ஆனால் ஸலாம் என்று கருதப்பட்டால் அதற்கு பதில் சொல்வது கடமையாகும் . ஆனால் துஆவுடைய நினைப்பில் சொல்வது சிறந்ததாகும் .

விடயம் 1163:கேளிக்காக யாராவது ஸலாம் சொன்னால் அதற்கு பதில் சொல்வது கடமையல்ல . இஹ்தியாது வாஜிபின் படி அஹ்லுதின்ம எனப்படும் முஸ்லிம் அல்லாதவர்களின் ஆண் பெண்ணின் ஸலாத்துக்கு அலைக்க என்று பதில் சொல்ல வேண்டும் .

விடயம் 1164:ஒருவர் ஒரு கூட்டத்தைப் பார்த்து ஸலாம் சொன்னால் அதற்கு பதில் சொல்வது அங்குள்ள அனைவர் மீதும் கடமையாகும் . ஆனால் அவர்களின் ஒருவர் பதில் சொன்னாலும் போதுமாகும் .

விடயம் 1165: ஒருவர் ஒரு கூட்டத்தைப் பார்த்து ஸலாம் சொன்னால் அவர் அதில் இருந்த ஒருவருக்கு ஸலாம் சொல்வதை நாட வில்லை என்றிருந்தால் அப்போதும் அங்கிருக்கும் அனைவர் மீதும் பதில் சொல்வது கடமையாகும் .

விடயம் 1166:ஒருவர் ஒரு கூட்டத்திற்கு ஸலாம் சொன்னால் அவர்களுல் ஒருவர் தொழுது கொண்டிருந்தால் அவர் ஸலாம் சொன்னவர் என்னையும் சேர்த்து ஸலாம் சொன்னாரா இல்லையா ? என்று சந்தேகப் பட்டால் அந்நிலையில் அவர் அதற்கு பதில் சொல்லக் கூடாது . அதேபோல் தான் ஸலாம் சொன்னவர் அவரையும் சேர்த்துத் தான் சொன்னார் ஆனால் மற்றவர் அதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று நாடியிருந்தால் அப்போதும் பதில் சொல்லக் கூடாது . ஆனால் மற்றவர் அதற்கு பதில் சொல்ல வில்லை என்றிருந்தால் கட்டாயம் இவர் பதில் சொல்ல வேண்டும் .

விடயம் 1167:ஸலாம் சொல்வது முஸ்தஹப்பாகும் . நடப்பவர் வாகனத்தில் செல்பவருக்கும் நிற்பவர் இருப்பவருக்கும் சிறியவர் பெரியவர்களுகடகும் ஸலாம் சொல்ல வேண்டும் என மிகவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது .

விடயம் 1168:இரண்டு பேர் ஒருவருக் கொருவர் ஸலாம் சொன்னால் பதில் சொல்வது அவர்கள் ஒவ்வொருவர் மீதும் கடமையாகும் .

விடயம் 1169:தொழுகையில் அல்லாத போது ஸலாத்துடைய பதிலை ஸலாத்தை விட சிறப்பாக சொல்வது முஸ்தஹப்பாகும் . அதாவது ஒருவர் ஸலாமுன் அலைக்கும் என்று சொன்னால் அதற்கு பதில் சொல்லும் போது ஸலாமுன் அலைக்கும் வறஹ்மதுல்லாஹ் என்று சொல்ல வேண்டும் .

ஏழாவது : தொழுகையை முறிப்பதில் மற்றது சத்தமாக சிரித்தல் . அத்துடன் இஹ்தியாது வாஜிபின்படி சத்தமாகவுள்ள ஒவ்வொரு சிரிப்பும் அது வேண்டுமென்றிருந்தால் , இன்னும் மறதியாக இருந்தால் அச்சிரிப்பு தொழுகையின் அமைப்பை மாற்றிவிடுமளவுக்கு இருந்தால் தொழுகை பாத்திலாகும் . ஆனால் புன்முறுவல் தொழுகையை பாத்திலாக்காது .

விடயம் 1170:சிரிப்புடைய சத்தத்தை அடக்குவதற்காக முயற்சி செய்து அவரது நிலை மாறினால் உதாரணமாக அவரது நிறம் சிவப்பாவது போல் இந்நிலை தொழுபவர் என்ற அமைப்பை விட்டும் வெளியேற்றும் அளவுக்கு இருந்தால் அவரது தொழுகை பாத்திலாகும் .

எட்டாவது : உலக விடயத்திற்காக வேண்டி வேண்டுமென்று சத்தமாக அழுதல் . இஹ்தியாது வாஜிபின் படி உலக விடயத்திற்காக சத்தமின்றியும் அழாதிருத்தல் . ஆனால் இறைவனைப் பயந்து அல்லது மறுமையைப் பயந்து அழுதால் அது அமைதியாக அல்லது சத்தமாக இருந்தாலும் சரி அதில் பிரச்சினையில்லை . மாறாக அது சிறந்த அமலாகும் .

ஒம்பதாவது : தொழுகையின் அமைப்பை மாற்றும் ஒரு செயலைச் செய்தல் . உதாரணமாக கையடித்தல் , நடனமாடுதல் , துள்ளுதல் ... இது போன்றவை இவை குறைவாக அல்லது கூடுதலாக வேண்டுமென்று அல்லது மறதியாக இருந்தாலும் சரி அதில் எவ்வித வித்தியாசமுமில்லை . ஆனால் தொழுகையின் அமைப்பை மாற்றாத ஒன்றைச் செய்தல் உதாரணமாக கை மூலம் ஒன்றைச் சுட்டிக் காட்டுதல் இதன் மூலம் தொழுகை பாத்திலாகாது .

விடயம் 1171:தொழுது கொண்டிருக்கும் சிறிதளவு மௌனமாக இருந்தால் அது தொழுகையின் அமைப்பை மாற்றும் அளவுக்கு இருந்தால் தொழுகை பாத்திலாகும் .

விடயம் 1172:தொழுது கொண்டிருக்கும் போது ஏதாவதொன்றைச் செய்தால் அல்லது சிறிது நேரம் மௌனமாக இருந்து பின் தொழுகையின் அமைப்பு மாறிவிட்டதா இல்லையா ? என சந்தேகம் கொண்டால் அவரது தொழுகை சஹீஹாகும் .

பத்தாவது : தொழுகையை முறிப்பதில் மற்றது உண்ணுதல் பருகுதல் ஆகும் . தொழுது கொண்டிருக்கும் போது அதன் அமைப்பு மாறிவிடும் அளவுக்கு ஏதாவதென்றை உண்டாலோ அல்லது பருகினாலோ அவரது தொழுகை பாத்திலாகும் . இஹ்தியாது வாஜிபின் படி தொழுகையின் அமைப்பு குழம்பாது என்றிருந்தாலும் சரி தொழுகை பாத்திலாகும் .

விடயம் 1173: தொழுது கொண்டிருக்கும் போது சாப்பிட்ட பிறகு பல்லிடைகளுக்குல் எஞ்சியிருக்கும் உணவுத் துண்டுகள் தொண்டைக்குல் சென்றால் அது தொழுகையை பாத்திலாக்காது . ஆனால் சீனி மற்றும் சீனிக்கல் போன்றவை வாயினுல் இருந்து தொழுகையில் அது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து உள் செல்லும் என்றிருந்தால் தொழுகையில் சிக்கல் ஏற்படும் .

பதினோராவது : இரண்டு ரகஅத்து அல்லது மூன்று ரகஅத்துள்ள தொழுகையில் அல்லது நான்கு ரகஅத்துள்ள தொழுகையில் முதலாவது ரகஅத்தில் சந்தேகப்படுதல் .

பனிரெண்டாவது : தொழுகையின் ருக்னை வேண்டுமென்று அல்லது மறதியாக கூட்டுதல் அல்லது குறைத்தல் , அல்லது ருகுன் இல்லாதவைகளை வேண்டுமென்று கூட்டுதல் அல்லது குறைத்தல் .

விடயம் 1174: தொழுது முடிந்த பிறகு தொழுது கொண்டிருக்கும் போது அதை பாத்திலாக்கும் , முறிக்க கூடிய செயல்களைச் செய்தேனா இல்லையா ? என சந்தேகம் கொண்டால் அவரது தொழுகை சஹீஹாகும் .

  தொழுகையில் மக்ரூஹான விடயங்கள்

விடயம் 1175: தொழுகையில் இருக்கும் போது முகத்தை வலது அல்லது இடது பக்கம் திருப்புதல் , கண்களை மூடுதல் அல்லது வலது அல்லது இடது பக்கம் திருப்புதல் , தாடி , கையுடன் விளையாடுதல் , கை விரல்களைக் கோருத்தல் , துப்புதல் , குர்ஆனுடைய எழுத்து , புத்தகம் , மோதிரமத்தில் இருக்கும் எழுத்தைப் பார்த்தல் போன்றவை மக்ரூஹ் ஆகும் . மேலும் அல்ஹம்து மற்றும் ஏனைய சூரா ஓதும் போது மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று செவி மடுப்பதற்காக மௌனமாகுவதும் மக்ரூஹ் ஆகும் . அத்தோடு தொழுகையில் பயபக்தியைப் போக்கும் ஒவ்வொரு செயலையும் செய்வது மக்ரூஹ் ஆகும் .

விடயம் 1176: ஒருவருக்கு தூக்கம் வரும் போதும் மல சலம் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும் போதும் அதை அடக்கிக் கொண்டு தொழுவது மக்ரூஹ் ஆகும் .  அதேபோல் கால்களில் வலியை ஏற்படுத்தும் ஒடுக்கமான கால்மோசைகளை அணிந்து தொழுவதும் மக்ரூஹ் ஆகும் . இதைத் தவிர வேறு பல மக்ரூஹ்கள் இதை விட பெரிய நூற்களில் கூறப்பட்டுள்ளது .

தொழுகையை முறிக்க முடியுமான இடங்கள்.

விடயம் 1177: வாஜிபான தொழுகையை ஒரு காரணமுமின்றி முறிப்பது ஹராமாகும் . ஆனால் உடல் உயிரைப் பாதுகாக்க இன்னும் உடலுக்கும் பொருளுக்கும் ஏற்படும் ஆபத்தை தடுத்து நிறுத்த முறித்தால் அதில் பிரச்சினையில்லை .

விடயம் 1178: ஒருவர் தனது உயிரைப் பாதுகாக்க அல்லது இவரது பொறுப்பில் இருப்பவரின் உயிரைப் பாதுகாக்க அல்லது பாதுகாப்பது வாஜிபான சொத்தைப் பாதுகாப்பது தொழுகையை முறிக்காது முடியாததாக இருந்தால் அப்போது கட்டாயம் தொழுகையை முறிக்க வேண்டும் . ஆனால் முக்கியம் இல்லாத ஒன்றைப் பாதுகாக்க தொழுகையை முறிப்பது மக்ரூஹ் ஆகும் .

விடயம் 1179: தொழுகையின் நேரம் அதிகமாக இருந்து ஒருவர் தொழுது கொண்டிருக்கும் போது கடன் கொடுத்தவன் வந்து தனது கடனைக் கேட்டால் , அவருக்கு அந்நிலையில் அதைக் கொடுக்க முடியுமாக இருந்தால் நிச்சயம் அதே நிலையில் கொடுக்க வேண்டும் . ஆனால் தொழுகையை முறிக்காது அதைக் கொடுக்க முடியாது போனால் கட்டாயம் தொழுகையை முறித்து அவரது கடனைக் கொடுக்க வேண்டும் பின் தொழவேண்டும் .