Back Index  

விடயம் 1223: தொழுகைக்குப் பிறகு அவர் தொழுகையில் சந்தேகம் வைத்திந்தார் என அறிந்தால் உதாரணமாக இரண்டு ரகஅத்து தொழுதாரா அல்லது மூன்று ரகஅத்து தொழுதாரா என்பதில் சந்தேகம் வந்து அதை மூன்று ரகஅத் என வைத்து தொழுது முடித்தார் . ஆனால் மூன்று ரகஅத் என்ற இந்த வைப்பபை அவர் கற்பனையின் படி வைத்தாரா அல்லது இரண்டு தரப்பும் அவரது பார்வையில் ஒன்றென வைத்தாரா என அவருக்கு தெரியாது போனால் கட்டாயம் இஹ்தியாது தொழுகையை தொழவேண்டும் .

விடயம் 1224: ஒருவர் தஷஹ்ஹுத் ஓதிக் கொண்டிருக்கும் போது அல்லது எழுந்து நிற்கும் போது இரண்டு ஸஜதா செய்தேனா இல்லையா என சந்தேகம் எற்பட்டால் மேலும் அப்போது ஒன்றைச் செய்த பின் ஏற்படும் சஹீஹான சந்தேகங்களில் ஒன்று நிகந்தால் , உதாரணமாக இரண்டு ரகஅத் தொழுதேனா அல்லது மூன்று ரகஅத் தொழுதேனா என்பது போல , அப்போது கட்டாயம் அப்படியான சந்தேகத்திற்கறிய சட்டத்தின் படி அமல் செய்யவேண்டும் .

விடயம் 1225: தஷஹ்ஹுத் ஓத ஆரம்பிக்கு முன் அல்லது தஷஹ்ஹுத் இல்லாத ரகஅத்துக்களில் நிற்பதற்கு முதல் இரண்டு ஸஜதாக்களையும் செய்தேனா இல்லையா என சந்தேகம் ஏற்பட்டால் இன்னும் அதே நேரத்தில் இரண்டு ஸஜதாக்களையும் முடித்த பிறகு ஏற்படும் சஹீஹான சந்தேகங்களில் ஒன்று அவருக்கு நிகழ்ந்தால் அவரது தொழுகை பாத்திலாகும் .

விடயம் 1226: ஒருவர் நிற்கும் போது மூன்றுக்கும் நான்கிற்கும் இடையில் அல்லது மூன்றுக்கும் நான்கிற்கும் ஐந்து ரகஅத்துக்களுக்கிடையில் சந்தேகம் ஏற்பட்டால் இன்னும் முந்திய ரகஅத்தில் இரு ஸஜதாக்களை செய்யவில்லை என ஞாபகம் வந்தால் அவரது தொழுகை பாத்திலாகும் .

விடயம் 1227: ஒருவரது சந்தேகம் நீங்கி பின் அவருக்கு வேறொரு சந்தேகம் ஏற்பட்டால் உதாரணமாக இரண்டு ரகஅத்து தொழுதேனா அல்லது மூன்று ரகஅத் தொழுதேனா என சந்தேகம் ஏற்பட்டு பின் மூன்று ரகஅத்து தொழுதேனா அல்லது நாங்கு ரகஅத் தோழுதேனா எனவும் சந்தேகம் ஏற்பட்டால் கட்டாயம் அவர் இரண்டாவது சந்தேகத்தின் படி அமல் செய்ய வேண்டும் .

விடயம் 1228: ஒருவர் தொழுது முடிந்த பிறகு தொழுகையில் சந்தேகித்தால் உதாரணமாக இரண்டிற்கும் நான்கிற்கும் இடையில் அல்லது மூன்றுக்கும் நான்கிற்குமிடையில் சந்தேகப்பட்டேனா என சந்தேகித்தால் , இஹ்தியாது வாஜிபின் படி அந்த இரண்டுடைய சட்டத்தின் படி அமல் செய்ய வேண்டும் . இன்னும் தெழுகையையும் திரும்பத் தொழவேண்டும் .

விடயம் 1229: ஒருவர் தொழுது முடிந்த பிறகு அவருக்கு தொழுகையில் வைத்து ஒரு சந்தேகம் வந்தது ஆனால் அவருக்கு அது தொழுகையை பாத்திலாக்கும் சந்தேகமா அல்லது சஹீஹான சந்தேகமா என தெரியாது அல்லது சஹீஹான சந்தேகம் என தெரியும் அதன் எந்தப்பகுதி என தெரியாது அப்போது இஹ்தியாது வாஜிபின் படி சஹீஹான சந்தேகத்திற்குறிய சட்டத்தின் படி அமல் செய்வதோடு அத்தொழுகையையும் திரும்பத் தொழவேண்டும் .

விடயம் 1230: இருந்த நிலையில் தொழும் ஒருவருக்கு , ஒரு ரகஅத்து நின்ற நிலையில் அல்லது இரு ரகஅத் இருந்த நிலையில் இஹ்தியாத்துடைய தொழுகையை கட்டாயம் தொழவேண்டிய சந்தேகம் ஏற்பட்டால் அவர் இருந்த நிலையில் ஒரு ரகஅத் இஹ்தியாத்துடைய தொழுகையை தொழுவார் . நின்ற நிலையில் இரண்டு ரகஅத் இஹ்தியாத்துடைய தொழுகை தொழவேண்டிய சந்தேகம் அவருக்கு ஏற்பட்டால் கட்டாயம் அவர் இருந்த நிலையில் இரு ரகஅத் இஹ்தியாத்துடைய தொழுகையை தொழவேண்டும் .

விடயம் 1231: நின்று தொழும் ஒருவர் இஹ்தியாத்துடைய தொழுகையை தொழும் போது அவரால் நிற்க முடியாது போய் இருந்த நிலையில் தொழ வேண்டும் என்ற நிலைக்கு வந்தால் கட்டாயம் முன்னர் கூறிய விடயத்தில் சொல்லப்பட்டது போல் நின்ற நிலையில் தொழவேண்டிய ரகஅத்தின் எண்ணிக்கையை இருந்த நிலையில் தொழவேண்டும் .

விடயம் 1232: இருந்த நிலையில் தொழும் ஒருவர் இஹ்தியாத்துடைய தொழுகையை தொழும் போது அவரால் நிற்க முடியுமாக இருந்தால் அவர் நின்று தொழுபவரின் கடமை என்று சொல்லப்பட்டிருப்பதின் படி செய்து கொள்ளவேண்டும் .