Back Index Next

விடயம் 1203: அதிகமாக சந்தேகிப்பவன் ஒரு விடயத்தைச் செய்ய வில்லை என சந்தேகித்தால் கட்டாயம் அதைச் செய்தேன் என கருதி தொழுகையை தொடர வேண்டும் . உதாரணமாக ஸஜதா செய்தேனா இல்லையா ? என சந்தேகித்தால் ஸஜதா செய்தார் என கருதவேண்டும் . மேலும் இரண்டு ரகஅத்து தொழுதேனா அல்லது மூன்று ரகஅத்து தொழுதேனா என சந்தேகித்தால் மூன்று ரகஅத்து தொழுதேன் என கருதவேண்டும் . இன்னும் தொழுகையை பாத்திலாக்கும் ஒரு விடயத்தைச் செய்தேனா என சந்தேகித்தால் அதைச் செய்ய வில்லை என கருதவேண்டும் . உதாரணமாக சுபஹ் தொழுகையில் இரண்டு ரகஅத்து தொழுதேனா அல்லது மூன்று ரகஅத்து தொழுதேனா என சந்தேகித்தால் அந்நிலையில் இரண்டு ரகஅத்து தான் தொழுதேன் என கருதி தொழுகையை முடிக்க வேண்டும் .

விடயம் 1204: ஒருவர் தொழுகையின் ஒரு விடயத்தில் அதிகமாக சந்தேகப்படுகிறார் அவர் தொழுகையின் மற்ற விடயத்திலும் சந்தேகப்பட்டால் கட்டாயம் அதற்குறிய சட்டத்தின் படி செய்து கொள்ள வேண்டும் . உதாரணமாக ஒருவர் அதிகமாக ஸஜதா செய்தேனா இல்லையா என சந்தேகப்பட்டால் , அவர் ருகூஃ செய்தேனா இல்லையா என்ற விடயத்திலும் சந்தேகப்பட்டால் கட்டாயம் அதற்குறிய சட்டத்தின் படி செய்து கொள்ள வேண்டும் . அதாவது அப்போதும் நின்று கொண்டிருந்தால் ருகூஃவை செய்ய வேண்டும் . ஆனால் ஸஜதாவுக்குச் சென்று விட்டால் அச்சந்தேகத்தை கவனத்தில் எடுக்கக் கூடாது .

விடயம் 1205: ஒருவர் குறிப்பிட்ட ஒரு தொழுகையில் உதாரணமாக ளுஹர் தொழுகையில் அதிகமாக சந்தேக்கப்படுகிறார் , அவர் மற்ற தொழுகையிலும் உதாரணமாக அஸர் தொழுகையிலும் சந்தேகப்பட்டால் கட்டாயம் சந்தேகத்துடைய சட்டத்தின் படி அமல் செய்ய வேண்டும் .

விடயம் 1206: குறிப்பிட்ட ஓர் இடத்தில் தொழுவதால் அவருக்கு அதிகமாக சந்தேகம் ஏற்படும் ஒருவர் அது தவிர்ந்த மற்ற இடத்திலும் தொழும் போதும் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டால் சந்தேகத்துடைய சட்டத்தின் படி நடந்து கொள்ள வேண்டும் .

விடயம் 1207: ஒருவர் நான் அதிகமாக சந்தேகிப்பவனாகி விட்டேனா இல்லையா என சந்தேகப்பட்டால் அதாவது சென்ற மூன்று தொழுகையில் சந்தேகப்பட்டாரா அப்போது அதிகமாக சந்தேகிப்பவன் எனப்படுகிறான் அல்லது சென்ற இரண்டு தொழுகையிக் மாத்திரம் சந்தேகப்பட்டாரா அப்போது அவர் சந்தேகிப்பவன் என கருதப்படமாட்டான் . இந்நிலையில் அவர் சந்தேகத்துடைய சட்டத்தின் படி அமல் செய்ய வேண்டும் . அதிகமாக சந்தேகிக்கும் ஒருவருக்கு உறுதி ஏற்படும் வரையில் சாதாரன மக்களின் நிலைக்கு சென்று அவருக்கு ஏற்பட்டிருக்கு சந்தேகத்தை கவனத்தில் எடுக்க கூடாது .

விடயம் 1208: அதிகமாக சந்தேகப்படும் ஒருவர் ஒரு ருகுனை செய்தேனா இல்லையா என சந்தேகித்தால் அதைக் கவனத்தில் எடுக்க கூடாது . ஆனால் பிறகு அவருக்கு அதைச் செய்யவில்லை என ஞாபகம் வந்தால் , அப்போது அதற்கு அடுத்ததாக உள்ள ருகுனை செய்ய வில்லை என்றிருந்தால் கட்டாயம் அதை நிறைவேற்ற வேண்டும் . அதற்கு அடுத்தாக இருக்கும் ருகுனைச் செய்திருந்தால் அவரது தொழுகை பாத்திலாகும் . உதாரணமாக ருகூஃ செய்தேனா இல்லையா என சந்தேகித்தால் அதைக் கவனத்தில் எடுக்க கூடாது ஆனால் அவருக்கு சுஜுதுக்குச் செல்வதற்கு முதல் ருகூஃ செய்ய வில்லை என ஞாபகம் வந்தால் கட்டாயம் ருகூஃவை நிறைவேற்ற வேண்டும் . ஆனால் அது ஸஜதாவில் இருக்கும் போது ஞாபகம் வந்தால் அவரது தொழுகை பாத்திலாகும் .

விடயம் 1209: அதிகமாக சந்தேகிக்கும் ஒருவர் ருகுன் அல்லாத ஒன்றைச் செய்தேனா இல்லையா என சந்தேகித்தால் அதைக் கவனத்தில் எடுக்க கூடாது . மேலும் பின்னர் அவருக்கு அதைச் செய்ய வில்லை என ஞாபகம் வந்தால் , அப்போது அதைச் செவதற்குறிய இடத்தை விட்டும் கடக்காதிருந்தால் கட்டாயம் அதைச் செய்ய வேண்டும் . ஆனால் அதற்குறிய இடத்தை விட்டும் கடந்திருந்தால் அதாவது அடுத்த ருகுனுக்குல் நுழைந்திருந்தால் அவரது தொழுகை சஹீஹாகும் . உதாரணமாக அல்ஹம்துவை ஓதினேனா இல்லையா என சந்தேகித்தால் அதை அவர் கவனத்தில் எடுக்க கூடாது . மேலும் அவருக்கு குனூத்தில் வைத்து அதை ஓத வில்லை என ஞாபகம் வந்தால் கட்டாயம் அதை ஓதவேண்டும் . ஆனால் ருகூஃவில் வைத்து ஞாபகம் வந்தால் அவரது தொழுகை சஹீஹாகும் .

5. இமாம் மஃமூமுடைய சந்தேகம்.

விடயம் 1210: இமாம் ஜமாஅத் தொழுகையின் ரகஅத்துக்களில் சந்தேகித்தால் உதாரணமாக மூன்று ரகஅத்து தொழுதேனா அல்லது நான்கு ரகஅத்து தொழுதேனா என சந்தேகிப்பது போல , அப்போது நான்கு ரகஅத்து தான் தொழுதோம் என மஃமூமுக்கு உறுதி இருந்தால் அதை இமாமுக்கு தெரியப்படுத்த வேண்டும் . அதன் படி இமாம் தொழுகையை முடிக்க வேண்டும் இஹ்தியாதுடைய தொழுகை தொழுவதும் அவசியமில்லை . அத்துடன் இத்த i னை ரகஅத்து தான் தொழப்பட்டது என இமாமுக்கு உறுதியிருந்து அத்தொழுகையின் ரகஅத்தில் மஃமூம் சந்தேக்கப்பட்டால் அவரது சந்தேகத்தை கவனத்தில் எடுக்க கூடாது .

6. முஸ்தஹப்பான தொழுகைகளில் சந்தேகம்.

விடயம் 1211: ஒருவர் சுன்னத்தான தொழுகையின் ரகஅத்துக்களில் சந்தேகித்தால் , சந்தேகத்தை அதிகமானதில் வைத்தால் அது தொழுகையை பாத்திலாக்கும் என்றிருந்தால் குறைந்ததில் வைக்க வேண்டும் . உதாரணமாக சுபஹுடைய சுன்னத்தான தொழுகையில் இரண்டு ரகஅத்து தொழுதேனா அல்லது மூன்று ரகஅத்து தொழுதேனா என சந்தேகித்தால் அப்போது இரண்டு ரகஅத்து தான் தொழுதேன் என கருதவேண்டும் . ஆனால் சந்தேகத்தின் அதிகமானவை தொழுகையை பாத்திலாக்காது என்றிருந்தால் உதாரணமாக இரண்டு ரகஅத்து தொழுதேனா அல்லது ஒரு ரகஅத்து தொழுதேனா என சந்தேகித்தால் இரண்டில் எதன் படி செய்து கொண்டாலும் அவரது தொழுகை சஹீஹாகும் .

விடயம் 1212: இஹ்தியாது வாஜிபின் படி ருகுன் குறைவது சுன்னதான தொழுகை பாத்திலாக்கும் ஆனால் ருகுன் அதிகரித்தல் அதை பாத்திலாக்காது . எனவே சுன்னத்தான தொழுகையின் ஒரு ருகுனை மறந்து அதற்கு அடுத்ததாக உள்ள ருகுனை செய்ய பிறகு அதைச் செய்ய வில்லை என ஞாபகம் வந்தால் கட்டாயம் முதலுள்ள ருகுனை நிறைவேற்ற வேண்டும் . உதாரணமாக ருகூஃவில் இருக்கும் போது சூரா ஓதவில்லை என ஞாபகம் வந்தால் கட்டாயம் சென்று அதை நிறைவேற்றி விட்டு மீண்டும் ருகூஃவுக்குச் செல்ல வேண்டும் .

விடயம் 1213: ருகுனாக இருக்கின்ற அல்லது ருகுன் இல்லாத ஒரு சுன்னத்தான விடயத்தில் சந்தேகித்தால் , அதற்குறிய இடத்தை கடக்க வில்லை என்றிருந்தால் கட்டாயம் அதை நிறைவேற்றவேண்டும் . ஆனால் அதற்குறிய இடத்தைக் கடந்து விட்டால் அவரது சந்தேகத்தை கவனத்தில் எடுக்க கூடாது .

விடயம் 1214: இரண்டு ரகஅத்துடைய சுன்னத்தான தொழுகைகளில் மூன்று அல்லது அதை விட அதிகமாகி விட்டது என அவர் கற்பனை செய்தால் அல்லது அவர் இரண்டு ரகஅத்து அல்லது அதை விட குறைவானது என நினைத்தால் கட்டாயம் அதன் படி செய்து கொள்ள வேண்டும் . பாத்திலாக்குவதைத் தவிர உதாரணமாக அவர் ஒரு ரகஅத்து என கற்பனை செய்தால் இஹ்தியாத்துக்காக மற்றொரு ரகஅத்து தொழவேண்டும் .

விடயம் 1215: நாபிலான தொழுகைகளில் மறதிக்காக ஸஜதா செய்வது கடமையாகும் வகையில் ஒரு செயலைச் செய்தால் அல்லது ஒரு ஸஜதாவை அல்லது தஷஹ்ஹுதை மறந்தால் அதற்காக மறதிக்காக ஜஸதா ( ஸஜதா சஹ்வு) செய்த பின் அதைக் கழாச் செய்வது அவசியமில்லை .

விடயம் 1216: ஒருவர் சுன்னத்தான தொழுகைகளை தொழுதேனா இல்லையா என சந்தேகம் கொண்டால் , அத்தொழுகை ஸலாத்து ஜஃபரித் தய்யார் போன்று குறிப்பிட்டதொரு நேரம் இல்லை என்றிருந்தால் தொழ வில்லையென்றே கருதவேண்டும் . அதேபோல் நாலாந்த நபில் தொழுகைகளைப் போன்று தான் குறிப்பிட்ட நேரம் கொண்டிருந்தால் , அதன் நேரம் செல்வதற்கு முதல் அதை நிறைவேற்றினேனா இல்லையா என சந்தேகித்தால் தொழவில்லை என கருதி அதை நிறைவேற்ற வேண்டும் . ஆனால் நேரம் சென்ற பிறகு சந்தேகித்தால் அச்சந்தேகத்தை கவனித்தில் எடுக்க கூடாது .

சஹீஹான சந்தேகங்கள்

விடயம் 1217: ஒம்பது சந்தர்ப்பங்களில் நான்கு ரகஅத்துடைய தொழுகைகளின் ரகஅத்துக்களின் எண்ணிக்கையில் சந்தேகம் கொண்டால் கட் ; டாயம் சற்று யோசிக்க வேண்டும் அப்போது அவருக்கு உறுதி அல்லது இத்தனையாக இருக்கலாம் என தோன்றி சந்தேகம் ஒரு பக்கம் மாத்திரம் இருந்தால் அதன் படி அமல் செய்து கொள்ள வேண்டும் இல்லையேல் கூறப்படும் முறைப்படி செய்து கொள்ள வேண்டும் . அந்த ஒம்பது சந்தர்ப்பங்களும் முறையே :

முதாலது : இரண்டாவது ஸஜதாவில் இருந்து தலையை உயர்த்திய பின் ஒருவர் இரண்டு ரகஅத்து தொழுதேனா அல்லது மூன்று ரகஅத்து தொழுதேனா என சந்தேகப்பட்டால் கட்டாயம் அவர் மூன்று ரகஅத்து தொழுதேன் என கருதி மற்றொரு ரகஅத்து தொழுது அதை முடிக்க வேண்டும் . தொழுது முடிந்ததும் இஹ்தியாத்துடைய தொழுகை ரகஅத்து நின்று கொண்டு அல்லது இரண்டு ரகஅத்து இருந்த நிலையில் தொழவேண்டும் . இதனுடைய சட்டம் பின்னர் கூறப்படும் . 

இரண்டாவது : இரண்டிற்கும் நான்கு ரகஅத்துக்கும் இடையில் சந்தேகித்தல் , இரண்டாவது ஸஜதாவில் இருந்து தலையை உயர்த்தியதும் சந்தேகித்தால் நான்கு ரகஅத்து தொழுதேன் என கருதி தொழுகையை முடிக்க வேண்டும் . பின் இஹ்தியாத்துக்காக இரண்டு ரகஅத்து நின்று தொழவேண்டும் .

மூன்றாவது : இரண்டு மூன்று நான்கு ரகஅத்துக்கு இடையில் சந்தேகித்தல் , இரண்டாவது ஸஜதாவில் இருந்து தலையை உயர்த்தியதும் இதில் சந்தேகித்தால் கட்டாயம் நான்கு ரகஅத் தொழுதேன் என வைக்க வேண்டும் . பின் தொழுது முடிந்ததும் நின்று இரண்டு ரகஅத்தும் பின் இருந்து இரண்டு ரகஅத்து இஹ்தியாத்துடைய தொழுகை தொழவேண்டும் . ஆனால் முதலாவது ஸஜதாவக்குப் பிறகு அல்லது இரண்டாவது ஸஜதாவில் இருந்து தலையை தூக்கு முன்னர் இந்த மூன்றில் ஏதாவதொன்றில் சந்தேகம் ஏற்பட்டால் அத்தொழுகையை திரும்பத் தொழவேண்டும் .

நான்காவது : இரண்டாவது ஸஜதாவில் இருந்து தலையை உயர்த்தியதும் நான்கு , ஐந்து ரகஅத்துக்களுக்கு இடையில் சந்தேகித்தல் , அதில் நான்கு ரகஅத் என வைத்துக் கொண்டு தொழுது முடிக்க வேண்டும் . அதன் பின் மறதிக்காக இரண்டு ஸஜதாக்கள் செய்ய வேண்டும் .

ஐந்தாவது : மூன்றுக்கும் நான்கிற்கும் இடையில் சந்தேகித்தல் , இது தொழுகையின் எந்த இடத்தில் வைத்து ஏற்பட்டாலும் கட்டாயம் நான்கு ரகஅத் என வைத்துக் கொண்டு தொழுது முடிக்க வேண்டும் . அதன் பின் இஹ்தியாத்துடைய தொழுகையயை நின்று ஒரு ரகஅத்து அல்லது இருந்து இரண்டு ரகஅத்து தொழவேண்டும் .

ஆறாவது : நிற்கும் போது நான்கு ஐந்து ரகஅத்துக்களிடையில் சந்தேகித்தல் , அப்போது கட்டாயம் அமந்து தஷஹ்ஹுத் ஓதி ஸலாம் கொடுத்த பின் இஹ்தியாத்துடைய தொழுகையயை நின்று ஒரு ரகஅத்து அல்லது இருந்து இரண்டு ரகஅத்து தொழவேண்டும் .

ஏழாவது : நிற்கும் போது மூன்று , ஐந்து ரகஅத்துக்களிடையில் சந்தேகித்தல் , அப்போது கட்டாயம் அமந்து ஓதி ஸலாம் கொடுத்து இரண்டு ரகஅத்து இஹ்தியாத்துடைய தொழுகையை நின்று தொழவேண்டும் .

எட்டாவது : நிற்கும் போது மூன்று , நான்கு , ஐந்து ரகஅத்துக்களிடையில் சந்தேகித்தல் , அப்போது கட்டாயம் அமந்து தஷஹ்ஹுத் ஓதி ஸலாம் கொடுத்த பின் நின்று இரண்டு ரகஅத்தும் பின் இருந்து இரண்டு ரகஅத்தும் இஹ்தியாத்துடைய தொழுகையயை தொழவேண்டும் .

ஒன்பதாவது : நிற்கும் போது ஐந்து , ஆறு ரகஅத்துக்களிடையில் சந்தேகித்தல் , அப்போது கட்டாயம் அமந்து ஓதி ஸலாம் கொடுத்து பின் மறதிக்கான ஸஜதாவைச் செய்ய வேண்டும் .

விடயம் 1218: சஹீஹாக சந்தேகங்களில் ஒன்று ஒருவருக்கு ஏற்படும் போது அவர் தொழுகையை முறிக்க கூடாது மாறாக அவர் முறித்தால் பாவம் செய்து விட்டார் . எனவே தொழுகையை பாத்திலாக்கும் செயலைச் செய்வதற்கு முதல் உதாரணமாக கிப்லாவை விட்டும் திரும்புதல் போன்றவை , தொழுகையை ஆரம்பத்திலிருந்து தொடங்கினால் அவரது இரண்டாவது தொழுகையும் பாத்திலாகும் . ஆனால் தொழுகையை பாத்திலாக்குவதைச் செய்த பின் அதைத் தொடங்கினால் அவரது இரண்டாவது தொழுகை சஹீஹாகும் .

விடயம் 1219: இஹ்தியாத்துடைய தொழுகை வாஜிபாகக் கூடிய ஒரு சந்தேகம் ஒருவருக்கு தொழுகையில் எற்பட்டு அவர் தொழுது முடிந்ததும் அந்த இஹ்தியாத்துடைய தொழுகையைத் தொழாது மற்ற தொழுகை ஆரம்பித்தால் அவர் பாவம் செய்து விட்டார் . எனவே தொழுகை பாத்திலாக்கும் ஒன்றைச் செய்வதற்கு முன் மற்றத் தொழுகையை ஆரம்பித்தால் அவரது இரண்டாவது தொழுகையும் பாத்திலாகும் . ஆனால் அதை பாத்திலாக்கும் ஒன்றைச் செய்த பின் தொழ ஆரம்பித்தால் அவரது இரண்டாவது தொழுகை சஹீஹ் ஆகும் .

விடயம் 1220: ஒருவருக்கு சஹீஹான சந்தேகம் எற்படும் போது சொல்லப்பட்டது போல் உடனடியாக சற்று யோசிக்க வேண்டும் . அப்போது அதன் மூலம் உறுதி அல்லது ஒரு பக்கத்திற்கு சந்தேகம் மாறுதல் போன்றவை ஏற்பட வில்லை என்றால் அவரது சந்தேகம் இல்லாது போகாது மேலும் சற்று யோசித்தாலும் அதில் பிரச்சினையில்லை . உதாரணமாக ஒருவர் ஸஜதாவில் இருக்கும் போது சந்தேகம் ஏற்பட்டால் அதை அவர் அதற்குகப் பிறகு வரைக்கும் பிற்படுத்த முடியும் .

விடயம் 1221: ஆரம்பத்தில் அவரது சந்தேகம் ஒரு தரப்பில் அதிகமாக இருந்து பின்னர் இரண்டு பக்கமாக மாறி அதன் மேல் அவரது பார்வை ஒன்றாக இருந்தால் சந்தேகத்திற்குறிய சட்டத்தின் படி அமல் செய்யவேண்டும் . ஆனால் ஆரம்பத்திலே அவரது பார்வையில் இரு தரப்புக்களும் சமமாக இருந்து அதில் அவரது கடமை எதுவோ அதன் படி வைத்து பின் அவரது நினைப்பு மறு பக்கம் சென்றால் கட்டாயம் அந்தப் பக்கத்தை எடுத்து தொழுகையை முடிக்க வேண்டும் .

விடயம் 1222: அவரது சந்தேகம் ஒரு தரப்பா அல்லது இரு தரப்பா அல்லது இரு தரப்புக்களும் அவரது பார்வையில் ஒன்றா என்று தெரியாத ஒருவர் சந்தேகத்திற்குறிய கடமையின் படி அமல் செய்ய வேண்டும் .