Back Index Next

விடயம் 409 : முஸ்தஹாழாவான பெண் தொழுகையின் நேரம் முடிவடைவதற்கு முன் அவள் முற்றாக சுத்தமடைந்து விடுவால் என்று உணர்ந்தால் , அல்லது குளித்து வுழுச் செய்து தொழும் நேரத்தின் அளவுக்குல் துண்டிக்கப்பட்டு விடும் என்று உணர்ந்தால் கட்டயாம் அவள் பொறுமையாக இருக்க வேண்டும். தொழுகையை சுத்தமாக இருக்கின்ற நிலையில் நிறைவேற்ற வேண்டும். அத்துடன் இஹ்தியாத்து வாஜிபின் படி இரத்தம் நின்று விடும் என்ற சாத்தியக்கூறு இருந்தாலும் அவள் பொறுமையாக இருக்க வேண்டும்.

விடயம் 410 : குறைவான அளவு இஸ்திஹாழாவுள்ள பெண் வுழுச் செய்ததின் பின் கூடுதலான அளவு உள்ள பெண் குளித்து வுழுச் செய்ததின் பின் உடனடியாக தொழ வேண்டும். ஆனால் தொழுகைக்கும் முன் பாங்கு இகாமத் மற்றும் துஆக்களை சொல்வதில் பிரச்சினையில்லை. தொழுகையிலும் கூட குனூத் போன்ற சுன்னத்தான விடயங்களை செய்யவும் முடியும்.

விடயம் 411 : முஸ்தஹாழாவான பெண் குளிப்புக்கும் தொழுகைக்குமிடையில் பிரிவை ஏற்படுத்தினால் அதாவது குளித்தன் பிறகு உடனடியாக தொழாவது விட்டால் இரண்டாவது தடவையாக குளித்து உடனடியாக தொழவேண்டும். ஆனால் இரத்தம் அவ்ரத்தினுல் வரவில்லை என்றிருந்தால் இரண்டாவது தடவையாக குளித்து வுழுச் செய்ய வேண்டிய அவசியமில்லை.

விடயம் 412 : முஸ்தஹாழாவான பெண்ணின் மீது அவள் வுழுச் செய்ததன் பின் , குளித்ததன் பின் முடியுமான அளவு பஞ்சி போன்றவைகளை வைத்து இரத்தம் வருவதைத் தடுக்க வைப்பது அவசியமாகும். இவ்விடயத்தில் பொடுபோக்காக இருந்து இரத்தம் வெளியானால் கட்டாயம் இரண்டாவது தடவையாக தொழ வேண்டும்.  என்றாலும் தொழுகைக்கு முதல் இஹ்தியாத்து வாஜிபின் படி குளித்துக் கொள்ள வேண்டும்.

விடயம் 413 : குளித்துக் கொண்டிருக்கும் போது இரத்தம் வெளிவருவது நின்று விட்டால் குளிப்பு சஹீஹாகும். ஆனால் குளித்துக் கொண்டிருக்கும் போது அவளது  இஸ்திஹாழா நடுத்தரத்தில் இருந்து அதிகமாக மாறினால் முதலில் இருந்து குளிப்பது வாஜிபாகும்.

விடயம் 414 : இஹ்தியாத்து வாஜிபின் படி முஸ்தஹாழாவான பெண் நோன்புடன் இருக்கின்ற முழு நாளிலும் முடியுமான அளவு இரத்தம் வெளி வருவதைத் தடை செய்ய வேண்டும்.

விடயம் 415 : குளிப்பு தன்மீது கடமையான முஸ்தஹாழாவான பெண்ணுடைய நோன்பு , அந்த நாளுடைய தொழுகைக்காக வாஜிபான குளிப்பை நிறைவேற்றுகின்ற போது தான்  சஹீஹாகும். இஹ்தியாத்தின் படி மஃரிப் இஷாவுடைய குளிப்பை அடுத்த நாள் நோன்பு பிடிக்க விருமம்புகின்ற போது நிறைவேற்ற வேண்டும்.

விடயம் 416 : அஸருடைய தொழுகைக்குப் பிறகு ஒரு பெண் முஸ்தஹாழாவானால் சூரியன் மறைகின்ற வரை அவள் குளிக்கவில்லை என்றாலும் அவளது நோன்பு சஹீஹாகும்.

விடயம் 417 : குறைவான அளவு இஸ்திஹாழாவடைய பெண் தொழுகைக்கு முன் நடுத்தரமான அளவு அல்லது அதிகமான அளவுள்ளவளாக மாறினால் , நடுத்ததரம் அல்லது கூடுதலான அளவு பற்றிய விடயங்களில் கூறப்பட்டதைப் போன்று செய்ய வேண்டும். இன்னும் நடுத்தரமான அளவுள்ளவள் கூடுதலான அளவுள்ளவாக மாறினால் அதிகமான அளவு இஸ்திஹாழாவுள்ள பெண் செய்வதைப் போல் செய்யவேண்டும். அவள் நடுத்தரமான அளவு இஸ்திஹாழாவுக்கு குளித்திருந்தாலும் அதில் பிரயோசனம் இல்லை. இரண்டாவது தடவையாக அதிகமான அளவுக்காக குளிக்க வேண்டும்.

விடயம் 418 : தொழுது கொண்டிருக்கும் போது நடுத்தர அளவு இஸ்திஹாழாவுள்ள பெண் அதிகமான அளவுள்ளவாக மாறினால் கட்டாயம் அவள் தொழுகையை உடைக்க வேண்டும் அதிகமான அளவுக்காக குளிக்கவேண்டும். இன்னும் ஏனைய செயல்களையும் செய்ய வேண்டும் பின் அந்த தொழுகையை நிறைவேற்ற வேண்டும். குளிப்பதற்கு நேரம் இல்லை என்றிருந்தால் குளிப்புக்கு பதிலாக கட்டாயம் தயம்மம் செய்ய வேண்டும் வுழுவும் செய்ய வேண்டும். வுழுச் செய்வதற்கும் நேரம் இல்லை என்றிருந்தால் அதற்குப் பதிலாகவும் ஒரு வுழுச் செய்ய வேண்டும். தயம்மம் செய்வதற்கும் நேரம் இல்லை என்றிருந்தால் தொழுகையை முறிக்க முடியாது அதேநிலையில் தொழுது முடிக்க வேண்டும். பின் இஹ்தியாத்து வாஜிபின் படி அதை கழாச் செய்யவேண்டும். அதேபோல் தொழுது கொண்டிருக்கும் போது குறைவான அளவான இஸ்திஹாழா நடுத்தரமான அல்லது கூடுதலான அளவாக மாறினால் , அது நடுத்தரமான அளவாக இருந்தால் கட்டாயமாக குளிப்பதுடன் வுழுவும் செய்ய வேண்டும்.

விடயம் 419 : தொழுது கொண்டிருக்கும் போது இரத்தம் துண்டிக்கப்பட்டு விட்டால் முஸ்தஹாழாவான பெண் உற்பகுதியிலும் துண்டிக்கப்பட்டு விட்டதா என்று அறியாது போனால் இஹ்தியாத்து வாஜிபின் படி வுழு , குளிப்பு , தொழுகையை திரும்பச் செய்ய வேண்டும்.

விடயம் 420 : கூடுதலான அளவு இஸ்திஹாழாவுடைய பெண் நடுத்தர நிலைக்கு மாறினால் , கட்டாயமாக முதலாவது தொழுகைக்கு அதிகமான அளவினது சட்டத்தின் பிரகாரமும் அடுத்த தொழுகைகளுக்கு நடுத்தரமான அளவுடைய சட்டத்தின் பிரகாரமும் செய்யவேண்டும். உதாரணமாக ளுஹருடைய தொழுகைக்கு முன் இஸ்திஹாழா அதிக அளவுள்ள பெண் நடுத்தர நிலைக்கு மாறினால் கட்டாயமாக ளுஹர் தொழுகையை நிறைவேற்ற குளிக்க வேண்டும் அஸர் , மஃரிப் , இஷா தொழுகைகளுக்காக வுழுச் செய்ய வேண்டும்.

விடயம் 421 : ஒவ்வொரு தொழுகைக்கு முன்பும் இஸ்திஹாழாவின் கூடுதலான அளவுள்ள இரத்தம் துண்டிக்கப் பட்டு திரும்பவும் வந்தால் கட்டாயம் ஒவ்வொரு தொழுகைக்கும் ஒரு முறை குளிக்க வேண்டும்.

விடயம் 422 : அதிகமான அளவுள்ள இஸ்திஹாழா குறைவான அளவானால் கட்டாயம் முதலாவது தொழுகைக்கு அதிகமான அளவுடைய சட்டத்தையும் அடுத்த தொழுகைகளுக்கு குறைவான அளவுடைய சட்டங்களையும் பின்பற்ற வேண்டும். அதேபோன்று நடுத்தரமான அளவுள்ள இஸ்திஹாழா குறைவான அளவானால் முதலாவது தொழுகைக்கு நடுத்தரத்துடைய சட்டத்தையும் அடுத்த தொழுகைகளுக்கு குறைவானதுடைய  சட்டங்களையும் பின் பற்ற வேண்டும்.

விடயம் 423 : இஸ்திஹாழாவுடைய பெண் அவள் கட்டாயக் கடமையான ஒரு செயலை , அது பஞ்சு அல்லது துணியை மாற்றுவதாக இருந்தாலும் சரி விடுவாளானால் அவளது தொழுகை பாத்திலாகும்.

விடயம் 424 : குறைவான அளவு இஸ்திஹாழாவுள்ள பெண் தொழுகையைத் தவிர வுழுவுடனே செய்ய வேண்டும் என நிபந்தனையுடைய வேலையை செய்ய நினைத்தால் , உதாரணம் குர்ஆனைத் தொடுதல் போன்றது , இஹ்தியாத்து வாஜிபின் படி அவள் வுழு செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் தொழுகைக்காக செய்த வுழு போதுமாகாது.

விடயம் 425 : மஸ்ஜிதுல் ஹராம் , மஸ்ஜிதுன் நபி , மற்றும் ஏனைய பள்ளி வாயல்களில் தங்குதல் , வாஜிபான ஸஜதாக்கள் உள்ள சூராக்களை ஓதுதல் , கணவருடன் சேருதல் போன்றவை முஸ்தஹாழாவான பெண்ணுக்கு தடையில்லை அதாவது அப்படிச் செய்தால் பிரச்சினையில்லை. இருந்தும்  இந்த செயல்களுக்காக தன் மீது வாஜிபாக உள்ள குளிப்பை நிறைவேற்றி இருப்து இஹ்தியாத்து முஸ்தஹப்பு ஆகும்.

விடயம் 426 : இஸ்திஹாலா கூடதலாக உள்ள பெண் தொழுகையின் நேரத்திற்கு முதல் குர்ஆனுடைய எழுத்தை தொட விரும்பினால் கட்டாயம் குளித்துக் கொள்ளவேண்டும். இன்னும் நடுத்தரமான அளவுள்ள பெண் விரும்பினால் அன்று அவள் குளித்திருந்தால் வுழு செய்து கொண்டால் போதுமாகும்.

விடயம் 427 : ஆயாதுடைய தொழுகைகள் இஸ்திஹாழாவுடைய பெண்கள் மீதும் வாஜிபாகும். ஆயாதுடைய தொழுகைகளுக்கும் நாளாந்த தொழுகைகளுக்கு கூறப்பட்டவைகளை செய்ய வேண்டும்.

விடயம் 428 : நாளாந்த தொழுகைகளை தொழுது கொண்டிருக்கின்ற போத அவள் மீது ஆயாதுடைய தொழுகையும் கடமையானால் அவைகளை ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்ற நினைத்தால் , ஆயாதுடைய தொழுகைகளுக்கும் நாளாந்த தொழுகைகளை நிறைவேற்றுவதற்கு என்னென்ன வேலைகள் அவள் மீது கடமையோ அதை கட்டாயம் செய்ய வேண்டும். இன்னும் அவ்விரண்டையும் ஒரே குளிப்பு , ஒரே வுழுவின் மூலம் நிறைவேற்ற முடியாது.

விடயம் 429 : இஸ்திஹாழாவுடைய பெண் கழாவான தொழுகையை நிறைவேற்ற நினைத்தாலும் அதாவான தொழுகையை நிறைவேற்ற செய்ய வேண்டியவைகளை கட்டாயம் அவள் செய்ய வேண்டும்.

விடயம் 430 : ஒரு பெண்ணுடைய கற்பத்தில் இருந்து இரத்தம் வெளியானால் அது காயத்துடைய இரத்தம் அல்ல என்று அவளுக்கு அறிந்தால் அதற்கு ஷரீஅத்தில் ஹைழு நிபாஸுடைய சட்டம் இல்லை. கட்டாயம் அவள் இஸ்திஹாழாவுடைய சட்டத்தின் படி செய்து கொள்ள வேண்டும். இன்னும் இஸ்திஹாழாவுடைய இரத்தமப அல்லது வேறு வகையான இரத்தமா என அவளுக்கு சந்தேகம் ஏற்பட்டு அதனுடைய அறிகுறிகளையும் அடையாளங்களையும் கொண்டிருக்க வில்லை என்றால் இஹ்தியாத்து வாஜிபின் படி இஸ்திஹாழாவுடைய வேலைகளைச் செய்து கொள்ள வேண்டும்.

ஹைழு

அநேகமாக ஒவ்வொரு மாதமும் பெண்ணுடைய கர்பத்தில் இருந்து சில நாட்கள் வெளியாகும் இரத்தத்தை ஹைழு எனப்படும். அந்நேரத்தில் அது வெளியாகும் பெண்ணை ஹாயிழ் என்று கூறப்படும்.

விடயம் 431: ஹைழுடைய இரத்தம் அநேகமான நேரங்களில் கட்டியாக சூடாக கருப்புக் கலந்த சிவப்பு நிறமுடையதாக அல்லது கடும் சிவப்பாக இருக்கும். இன்னும் குதித்து சிறிதளவு சூட்டுடன் வெளி வரும்.

விடயம் 432: மௌலானவான பெண்கள் சந்திர ஆண்டின் படி அறுபது வருடம் பூர்த்தி அடைந்தபிறகே நத்துதல் பெறுவார்கள். அதாவது அவர்களுக்கு ஹைழுடைய இரத்தம் வெளிவராது. ஆனால் ஏனைய பெண்கள் ஐம்பது வருடங்கள் முடிவடைந்ததும் நத்துதல் பெறுவார்கள்.

விடயம் 433: சந்திர ஆண்டின் படி ஒன்பது வருடம் முடிவதற்கு முதல் பெண்பிள்ளையில் இருந்து வெளிவரும் இரத்தமும் , நத்துதல் பெற்றதன் பின் பெண்ணிலிருந்து வெளிவரும் இரத்தமும் ஹைழுடைய இரத்தம் அல்ல.

விடயம் 434: கர்ப்பினிப் பெண்ணுக்கும் பிள்ளைக்கு பால் கொடுக்கும் பெண்ணுக்கும் சிலவேலை ஹைழு ஏற்படும்.

விடயம் 435: ஒன்பது வருடம் பூர்த்தி அடைந்து விட்டதா இல்லையா என அறியாத பெண் பிள்ளை , அவளிலிருந்து இரத்தம் வெளியாகி அது ஹைழுடைய அடையாளங்களைக் கொண்டிருக்க வில்லை என்றால் அது ஹைழுடைய இரத்தமல்ல. என்றாலும் ஹைழுடய அடையாளங்களைக் கொண்டிருந்தாலும் அதற்கு ஹைழு என்று சொல்ல முடியாது.

விடயம் 436: நத்துதல் அடைந்து விட்டேனா இல்லையானெ சந்தேகிக்கும் ஒரு பெண்ணிலிருந்து இரத்தம் வெளியானால் அது ஹைழுடையதா இல்லையா என அவள் அறியாது போனால் அதை ஹைழுடைய இரத்தம் என வைத்துக் கொள்வால். அதாவது நத்துதல் அடைய வில்லை.

விடயம் 437: ஹைழுடைய காலம் மூன்று நாட்களை விட குறைவாகவும் பத்து நாட்களை விட கூடுதலாகவும் இருக்கமாட்டாது. மூன்று நாளை விட சிறிதளவு குறைவாக இருந்தாலும் அது ஹைழு அல்ல.

விடயம் 438: கட்டாயம் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக இரத்தம் வெளி வரவேண்டும். அப்போது தான் அது ஹைழாகும். எனவே இரண்டு நாட்கள் இரத்தம் வெளியாகி ஒரு நாள் சுத்தமடைந்து மீண்டும் மறுநாள் இரத்தம் வெளியானால் அது ஹைழுடைய இரத்தம் அல்ல.

விடயம் 439: மூன்று நாள் முழுவதும் இரத்தம் வெளியாகி கொண்டே இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் ஆரம்பத்தில் இரத்தம் வெளியாகி பின்னர் அவ்ரத்தினுல் இரத்தம் இருந்தால் போதுமாகும். மூன்று நாட்களில் மிகவும் சிறிது நேரம் சுத்தமடைந்தால் , சுத்தமடைந்த நேரம் மூன்று நாட்களும் அவ்ரத்தினுல் இரத்தம் இருந்தது என்று சொல்லுகின்ற அளவுக்கு மிகவும் குறைவானதாக இருந்தாலும் அவள் ஹைழுடயவளாகும்.

விடயம் 440: முதலாவது இரவிலும் நான்காவது இரவிலும் இரத்தம் வெளிவர வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால் கட்டாயமாக இரண்டாவது இரவிலும் மூன்றாவது இரவிலும் இரத்தம் துண்டிக்கக் கூடாது. முதலாம் நாளில் சூரியன் உதயமானதில் இருந்து மூன்றாம் நாளில் சூரியன் மறைகின்ற வரைக்கும் தொடர்ச்சியாக இரத்தம் வெளியானால் , அல்லது முதலாம் நாளின் நடுப்பகுதியில் ஆரம்பமாகி நான்காம் நாளில் அதே நேரத்தில் நின்று விட்டால் இன்னும் இரண்டாம் மூன்றாம் இரவுகளில் இரத்தம் நிற்காது விட்டால் அது ஹைழாகும்.

விடயம் 441: மூன்று நாட்களும் தொடர்ச்சியாக இரத்தம் வெளியாகி நின்றுவிட்டால் , இரண்டாவது தடவையும் இரத்தம் வெளியானால் இரத்தம் வெளியான நாட்களில் நடுவிலே சுத்தமடைந்தால் அது பத்து நாட்களுக்கு மேலாக வில்லை என்றால் இடைப்பகுதியில் சுத்தமாக இருந்த நாட்களும் ஹைழாகும்.

விடயம் 442: ஒரு பெண்ணுக்கு மூன்று நாட்களுக்கு அதிகமாகவும் பத்து நாட்களுக்கு குறைவாக இரத்தம் வெளியானால் அது பொக்கலத்துடைய இரத்தமா அல்லது ஹைழுடைய இரத்தமா என அறியாது போனால் , பொக்கலம் வலது பக்கமுள்ளதா அல்லது இடது பக்கமுள்ளதா என அறியாது போனால் முடியுமாக இருந்தால் சிறிதளவு பஞ்சை அவ்ரத்தினுல் நுழைத்து சற்று நேரம் கழித்து அதை வெளியில் எடுப்பால். இந்நிலையில் இரத்தம் இடது பக்கமிருந்து வெளியானால் இது ஹைழுடைய இரத்தமாகும். அது வலது பக்கமிருந்து வெளியானால் பொக்கலத்துடைய இரத்தமாகும்.

விடயம் 443: ஒரு பெண்ணுக்கு மூன்று நாட்களுக்கு அதிகமாகவும் பத்து நாட்களுக்கு குறைவாக இரத்தம் வெளியானால் , அது ஹைழுடைய இரத்தமா அல்லது காயத்துடைய இரத்தமா என்று அறியாது போனால் , முதல் ஹைழுடயவளாக இருந்திருந்தால் அது ஹைழாகும். சுத்தமாக இருந்திருந்தால் அது சுத்தமாகும். இன்னும் சுத்தமாக இருந்தாலா அல்லது ஹைழுடன் இருந்தாலா என்று அறியாது போனால் ஹைழுடயவல் மீது ஹராமான விடயங்கள் அனைத்தையும் விட்டு விடுவால் இன்னும் ஹைழு அல்லாத பெண் செய்யும் எல்லா அமல்களையும் நிறைவேற்றுவாள்.

விடயம் 444: ஒரு பெண்ணுக்கு இரத்தம் வெளியாகி அது ஹைழுடையதா அல்லது நிபாஸுடையதா (பிள்ளைப்பேறு கழிவு இரத்தம்) என்று சந்தேகித்தால் , அது ஹைழுடைய நிபந்தனைகளைக் கொண்டிருந்தால் அது ஹைழாகும். 

விடயம் 445: ஒரு பெண்ணிலிருந்து இரத்தம் வெளிவந்து அது ஹைழுடயதா அல்லது கன்னிப்பருவத்தினுடையதா என அறியாது போனால் அவள் கட்டாயம் தன்னைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும் அதாவது ஓரளவு பஞ்சை அவ்ரத்தினுல் வைக்க வேண்டும் சற்று நேரம் பொறுமையாக இருந்து அதை வெளியில் எடுக்க வேண்டும் அப்போது அதன் ஓரங்கள் மட்டும் அழுக்கடைந்திருந்தால் அது கன்னிப்பருவத்தின் இரத்தமாகும். ஆனால் பஞ்சின் எல்லா இடத்திலும் பட்டிருந்தால் அது ஹைழுடைய இரத்தமாகும்.