Back Index Next

விடயம் 576 : மையித்துடைய கபன் அதன் மூலம் நஜிஸானால் அல்லது வேறு வித்தில் நஜிஸானால் , கபன் அழியாது என்றிருந்தால் நஜிஸான இடத்தைக் கழுவ வேண்டும் அல்லது வெட்ட வேண்டும். ஆனால் கப்ரினுல் வைத்து விட்டால் நஜிஸ் பட்ட இடத்தை துண்டிப்பது சிறந்ததாகும். ஆனால் மையித்தை வெளியே கொண்டு வருவது அவரை இழிவு படுத்துவதாக இருந்தால் அப்பகுதியை துண்டிப்பது வாஜிபாகும். இன்னும் அதைத் துண்டிக்கவோ அல்லது கழுவவோ முடியாது இருந்து , அதை மாற்ற முடியுமாக இருந்தால் கட்டாயம் அதை மாற்ற வேண்டும்.

விடயம் 577 : ஹஜ்ஜுக்கு அல்லது உம்ராவுக்கு இஹ்ராம் கட்டிய ஒருவர் மரணித்தால் கட்டாயம் மற்றவர்களை கபன செய்வது போல் அவரையும் கபனிட வேண்டும். அவரது தலை இன்னும் முகத்தை மறைப்பதில் பிரச்சினையில்லை.

விடயம் 578 : ஒருவர் உயிரோடு இருக்கின்ற காலத்தில் தனக்குறிய கபன் , இலந்த இலை , கற்பூரம் போன்றவைகளை தயார் செய்து வைப்பது சுன்னத்தாகும்.

கற்பூரம் வைப்பதின் சட்டங்கள்

விடயம் 579 : குளிப்பாட்டியதன் பின் மையித்துக்கு கற்பூரம் வைப்பது வாஜிபாகும். அதாவது நெற்றி , உள்ளங்கை , முழங்கால் , கால் பெருவிரல் நுனியில் கற்பூரம் தடவுவது கடமையாகும். மூக்கின் மேலும் தடவுவது முஸ்தஹப்பாகும். அதற்கு முதல் கற்பூரம் நன்கு தூளாகவும் புதிதாகவும் இருத்தல் வேண்டும். அது தவனை முடிந்து பழசாகி அதன் மனம் போயிருந்தால் அது போதுமாகாது.

விடயம் 580 : மையித்துக்கு கற்பூரம் தடவுவதில் சுஜுதுடைய உறுப்புக்களைக் கவனித்து மறைப்படி செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை. இஹ்தியாத்து முஸ்தஹப்பு முதலில் கற்பூரம் மையித்தின் நெற்றியில் தடவ வேண்டும் என்றிருந்தாலும் சரி.

விடயம் 581 : மையித்தை கபனிடுவதற்கு முதல் அதற்கு கற்பூரம் தடவுவது சிறந்ததாகும். இன்னும் கபனிடும் போது அதைச் செய்தாலும் பரவாயில்லை அதற்குப் பிறகு தடவினாலும் தடையில்லை.

விடயம் 582 : ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிய ஒருவர் ஸபா மர்வாவுக்கு இடையில் தொங்கோட்டம் ஓடுவதற்கு முதல் மரணித்தால் அவருக்கு கற்பூரம் தடவுவது ஆகாது. அத்துடன் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டி முடியை கத்தரிப்பதற்கு முதல் மரணித்தால் அவருக்கும் கற்பூரம் தடவக் கூடாது.

விடயம் 583 : கணவனை இழந்த பெண் இத்தா இருக்கும் போது மரணித்தால் , இத்தா இருக்கின்ற காலங்களில் மனம் பூசுவது ஹராம் என்றிருந்தாலும் , அவளுக்கு கற்பூரம் தடவுவது வாஜிபாகும்.

விடயம் 584 : இஹ்தியாத்து வாஜிபின் படி மையித்தை கஸ்தூரி , அம்பர் வாசனை , ஊதுவத்தி இது போகன்ற வேறு வகையான வாசனைத் திரவியங்களைக் கொண்டு மனம் பூசக் கூடாது. இன்னும் மையித்தில் தடவுவதற்கு கூட இவைகளை கற்பூரத்துடன் சேர்க்க கூடாது.

விடயம் 585 : காபூருடன் இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மண்ணிலலிருந்து சிறிதளவு கற்பூத்துடன் சேர்ப்பது முஸ்தஹப்பாகும். ஆனால் அந்த கற்பூரத்தை கண்ணியமில்லாத இடங்களில் தடவக் கூடாது. அத்துடன் கற்பூரத்துடன் சேர்க்கும் மண் கற்பூரத்தை மண்ணாக மாற்றும் அளவுக்கு அதிகமாக இருக்க கூடாது.

விடயம் 586 : இருக்கின்ற கற்பூரம் குளிப்பாட்டுவதற்கும் தடவுவதற்கும் போதுமாக இல்லாது இருந்தால் குளிப்புக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதேபோல் ஏழு உறுப்புகளுக்கும் தடவ போதுமானதாக இல்லாதிருந்தால் நெற்றிக்கு முன்னுரிமை கொடுக்கப் படும்.

விடயம் 587 : மையித்தில் பச்சையான புதிய இரண்டு கட்டையை வைப்பது முஸ்தஹப்பாகும்.

மையித்து தொழுகையின் சட்டங்கள்

விடயம் 588 : முஸ்லிமாக மையித்தை தொழுவித்தல் அது சிறு பிள்ளையாக இருந்தாலும் வாஜிபாகும். ஆனால் அப்பிள்ளையின் தாய் தந்தை , பாட்டன் பாட்டிகள் அல்லது அவர்களில் ஒருவரேனும் முஸ்லிமாக இருக்க வேண்டும். இன்னும் அப்பிள்ளைக்கு ஆறு வருடம் பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

விடயம் 589 : மையித்து தொழுகை குளிப்பாட்டி கற்பூரம் தடவி கபனிட்ட பின் நிறைவேற்றப் பட வேண்டும். இவைகளுக்கு முன்போ அல்லது செய்து கொண்டிரக்கும் போதோ தொழுதால் , அது மறதியா இருந்தாலோ அல்லது சட்டத்தை அறியாது செய்தாலும் சரி அது போதுமாகாது.

விடயம் 590 : மையித்து தொழுகையை நிறைவேற்றும் ஒருவர் வுழுவுடன் அல்லது குளித்துக் கொண்டு அல்லது தயம்மும் செய்துதான் தொழ வேண்டும் என்றோ இன்னும் உடலும் ஆடையும் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவரது ஆடை அபகரிக்கப் பட்டதாக இருந்தாலும் பரவாயில்லை. இஹ்தியாத்து முஸ்தஹப்பின் படி மற்ற தொழுமைகளில் அவசியமாக இருக்கின்ற அனைத்தையும் கவனிக்க வேண்டும் என்றிருந்தாலும் சரி.

விடயம் 591 : மையித்துத் தொழுகை நிறைவேற்றும் ஒருவர் கிப்லாவை முன்னோக்கி நிற்க வேண்டும். அத்துடன் மையித்தையும் தனக்கு  முன் மையித்தின் தலை பக்கம் தொழுபவர்களின் வலது பக்கமும் கால் அவர்களின் இடது பக்கமும் இருக்கின்றவாறு வைக்க வேண்டும்.

விடயம் 592 : தொழுபவர்களின் இடம் மையித்து வைத்திருக்கும் இடத்தை விட பனிவாக அல்லது உயரமாக இருக்க கூடாது. ஆனால் சற்று உயராகவோ அல்லது பனிவாகவோ இருந்தால் பரவாயில்லை.

விடயம் 593 : தொழுவபர் மையித்தை விட்டும் தூரமாக நிற்க கூடாது. ஆனால் மையித்து தொழுகையை ஜமாஅத்தாக நிறைவேற்றுபவர் மையித்தை விட்டும் தூரமாக நின்று ஸப்புகள் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தால் பிரச்சினை இல்லை.

விடயம் 594 : தொழுபவர் மையித்துக்கு முன்னால் நிற்க வேண்டும். ஆனால் தொழுகை ஜமாஅத்தாக தொழப்பட்டு ஸப்புகள் மையித்தின் இரு பக்கமாகவும் நீன்று சென்றால் மையித்து முன்னால் இ ; ல்லாதவர்களின் தொழுகையில் பிரச்சினை இல்லை.

விடயம் 595 : மையித்துக்கும் தொழுபவர்களுக்கும் இடையில் பர்தா அல்லது சுவர் போன்றவை இருக்க கூடாது. ஆனால் மையித் சந்தூக்குப் பெட்டி போன்றவைகளில் இருந்தால் அதில் பிரச்சினை இல்லை.

விடயம் 596 : மையித்து தொழுகை தொழப்படுகின்ற நேரத்தில் மையித்தின் அவ்ரத் மறைக்கப் பட்டிருக்க வேண்டும். அதைக் கபன் செய்ய முடியாததாக இருந்தால் பலகை கல்லு போன்றதால் அதன் அவ்ரத்தை மறைக்க வேண்டும்.

விடயம் 597 : மையித்து தொழுகையை நின்ற நிலையில் அல்லாஹுக்காக என்ற நிய்யத்துடன் தொழ வேண்டும். நிய்யத்து வைக்கும் போது மையித்தை குறிப்பிட வேண்டும். உதாரணமாக இந்த மையித்தின் மீது அல்லாஹுக்காக தொழுகிறேன் என்று நிய்யத்துச் செய்வது போல்.

விடயம் 598 : மையித்து தொழுகையை நின்று தொழ சக்தியுள்ள எவரும் இல்லை என்றிருந்தால் , இன்மேலும் நின்று தொழக் கூடிய ஒருவர் என எதிர் பார்க்க முடியாமல் இருந்தால் அல்லது எவராவது வருவார் என்ற நம்பிக்கை இல்லாது இருந்தால் உட்கார்ந்த நிலையில் தொழ முடியும். மையித்து தொழுகையை உட்கார்ந்த நிலையில் தொழுது முடித்த பின் அடக்கம் செய்வதற்கு முதல் நின்று கொண்டு தொழ சக்தியுள்ள ஒருவர் வந்தால் இரண்டாவது தடவையும் மையித்து தொழுகையை நின்ற நிலையில் தொழுவது வாஜிபாகும்.

விடயம் 599 : மையித்து ஒருவரை அவர் தான் தனக்கு தொழுவிக்க வேண்டும் என வசிய்யத் செய்திருந்தால் இஹ்தியாத்து வாஜிபு அந்த மனிதர் மையித்தின் சொந்தக் காரரிடத்தில் அனுமதி எடுக்க வேண்டும். இன்னும் சொந்தக்காரருக்கும் அனுமதி எடுப்பது இஹ்தியாத்து வாஜிபின் படி கடமையாகும்.

விடயம் 600 : ஒரு மையித்ததுக்கு பல தடவைகள் தொழுவது மக்ரூஹ் ஆகும். ஆனால் மையித்து தக்வாயுடையவர் அல்லது அறிவுடையவராக இருந்தால் பரவாயில்லை.

விடயம் 601 : மையித்தை வேண்டுமென்றோ அல்லது மறதியாகவே அல்லது வேறு காரங்களுக்காகவோ தொழுவிக்காது அடக்கம் செய்தால் , அல்லது அடக்கம் செய்தபின் அதன் மீது தொழப்பட்ட தொழுகை பாத்தில் என அறிந்தால் மையித்தின் உடம்பு பிரியாது இருக்கின்ற வரைக்கும் மையித்து தொழுகைக்காக சொல்லப்பட்ட நிபந்தனைக் கொண்டு அதன் கப்ரடியில் நின்று தொழ வேண்டும்.

மையித்து தொழுகை தொழும் விதம்

விடயம் 602: மையித்துத் தொழுகை ஐந்து தக்பீர்களைக் கொண்டது. தொழுபவர் இந்த ஐந்து தக்பிர்களையும் இதன் முறைப்படி சொன்னால் போதுமாகும். நிய்யத்தும் முதலாவது தக்பிர் சொன்னதன் பிறகு இதைச் சொல்ல வேண்டும்.   اَشْهَدُ اَنْ لا اِلهَ اِلاّالله وَاَنَّ مُحَمَّداً رَسوُلُ اللهِ.இரண்டாவது தக்பிர் சொன்னதன் பின் இதைக் கூற வேண்டும்.  اللّهُمَّ صَلّ على مُحَمَّد وَآلِ مُحَمّد. மூன்றாம் தக்பீருக்கு பின் இப்படிச் சொல்ல வேண்டும்.ا للّهُمَّ اغْفِر لِلْمُؤمِنينَ وَالْمُؤمِناتِ. நான்காம் தக்பீருக்குப் பிறகு இதைச் சொல்ல வேண்டும். மையித்து ஆணூக இருந்தால் இப்படியும்  اللّهُمَ اغْفِر لِهذا الْميِّتِ பெண்ணாக இருந்தால் இப்படியும் சொல்ல வேண்டும். اللّهُمَ اغْفِر لِهذِهِ الْميِّتِஐந்தாவது தக்பீருக்கு பின்னும் இதையே கூற வேண்டும். இன்னும் ஒவ்வொரு தக்பீருகளுக்குப் பின் இதையும் சொல்வது சிறந்ததாகும். 

முதலாவது தக்பீருக்கு பின் اَشْهَدُ اَنْ لا اِلهَ اِلاّ اللهُ وَحْدَهُ لا شَريكَ لَهُ اِلهاً واحِداً أَحَداً صَمَداً فَرْداً حيّاً قيّوماً دائِماً اَبَداً لَمْ يَتّخذْ صاحِبَةً وَلا وَلَداً، وَاَشْهَدُ اَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَرَسوُلُهُ اَرْسَلَهُ بِالْهُدى وَدينِ الْحَقِّ، لِيُظْهِرَهُ عَلَى الدّينِ كُلِّه، وَلَوْكَرِهَ الْمُشْرِكوُن. بَشيراً وَنَذِيراً بَيْنَ يَدَىِ السّاعَةِ

இரண்டாவது தக்பீருக்குப் பிறகு இதை சொல்ல வேண்டும். اللّهُمَّ صَلّ عَلى مُحَمَّد وَآلِ مُحَمّد وَبارِكْ عَلى مُحَمّد وَآلِ مُحَّمَداً و ارحم محمّداً وَآلَ مُحمّد كَاَفْضَلِ ما صَلَّيْتَ وَبارَكْتَ وَتَرَحَّمْتَ عَلى اِبْراهِيمَ وَآلِ اِبْراهِيمَ اِنَّكَ حَمِيدٌ مَجيدٌ وَصَلِّ عَلى جَميعِ الاَْنْبياءِ وَالْمُرْسَلِينَ

மூன்றாவது தக்பீருக்குப் பிறகு இதைக் கூற வேண்டும். اللّهُمَّ اغْفِرْ لِلْمُؤمِنينَ وَالْمُؤمِناتِ وَالْمُسْلِميِنَ وَالْمُسْلِماتِ الاَْحْياء مِنْهُمْ وَالاَْمْواتِ تابِعْ بَيْنَنا وَبَيْنَهُمْ بِالْخَيراتِ اِنّكَ عَلى كُلِّ شَىء قَدِيرِ .

நான்காம் ஐந்தாம் தக்பீர்களுக்குப் பிறகு மையித்து ஆணாக இருந்தால் இப்படிச் சொல்ல வேண்டும். اللّهُمَ اِنَّ هذَا الْمُسَجَّى قُدّ امَنَا عَبْدُكَ وَابْنُ عَبْدِكَ وَابْنُ اَمَتِكَ نَزَلَ بِكَ وَاَنْتَ خَيْرُ مَنْزوُل بِهِ اَللّهُمَّ اِنَّكَ قَبَضْتَ روُحَهُ اِلَيْكَ وَقَدِ احْتاجَ اِلى رَحْمِتَكَ، وَأَنْتَ غَنىُّ عَنْ عَذابِهِ، اللّهُمَّ اِنّا لا نَعْلَمُ مِنْه اِلاّ خَيْراً وَاَنْتَ اَعْلَمُ بِهِ مِنّا اللّهُمَّ اِنْ كانَ مُحْسِناً فَزِدْ فى اِحْسانِهِ وَاِنْ كان مُسيئاً فَتَجاوَزْ عَنْهُ وَاغْفِرْلَنا وَلَهُ اللّهُمَّ اجْعَلْهُ عِنْدَكَ فِى اَعلى عِلّيّين وَاخْلُفْ عَلى اَهْلِهِ فِى الغابِرينَ وَارْحَمْهُ بِرَحْمِتَكَ يا اَرْحَمَ الرّااحِمينَ .

ஆனால் மையித்து பெண்ணாக இருந்தால் நான்காம் தக்பீருக்குப் பிறகு இப்படிச் சொல்ல வேண்டும். اللّهُمَ اِنَّ هذِهِ الْمُسَجَّاةَ قُدّ امَنَا اَمَتُكَ وَابْنَةُ عَبْدِكَ وَابْنَةُ اَمَتِكَ نَزَلَتْ بِكَ وَاَنْتَ خَيْرُ مَنْزوُل بِهِ اَللّهُمَّ اِنّا لانَعْلَمُ مِنْها اِلاّ خَيْراً وَاَنْتَ اَعْلَمُ بِها مِنّا اللّهُمَّ اِنْ كانَتْ مُحْسِنةً فَزِدْ فى اِحْسانِها وَاِنْ كانَتْ مُسيئةً فَتَجاوَزْ عَنْها وَاغْفِرْلَها اللّهُمَّ اجْعَلْها عِنْدَكَ فِى اَعْلى عِلّيّين وَاخْلُفْ عَلَى اَهْلِها فِى الغابِرينَ وَارْحَمْها بِرَحْمِتَكَ يا اَرْحَمَ الرّااحِمينَ

விடயம் 603: தக்பீர்களையும் துஆக்களையும் மையித்துத் தொழுகை அதக் அமைப்பை விட்டும் வெளியேறாது இருப்பதற்காக வேண்டி தொடர்ச்சியாக சொல்ல வேண்டும்.

விடயம் 604: ஜமாஅத்துடன் மையித்து தொழுகையை தொழும் ஒருவர் அதன் தக்பீர்களையும் துஆக்களையும் கூற வேண்டும்.

மையித்து தொழுகையின் சுன்னத்துக்கள்

விடயம் 605: மையித்துத் தொழுகையில் சில விடயங்கள் சுன்னத்தாகும். அவை ,

முதலாவது: மையித்து தொழுகையை தொழும் ஒருவர் வுழச் செய்து அல்லது குளித்துக் கொண்டு , தயம்மம் செய்து கொண்டு தொழுதல். இஹ்தியாத்து முஸ்தஹப்பின் படி வுழுச் செய்யவோ அல்லது குளிக்க முடியாத சந்தர்ப்பத்தில் , அல்லது வுழுச் செய்து கொண்டிருந்தால் அல்லது குளித்துக் கொண்டிருந்தால் மையித்து தொழுகை அடைய மாட்டார்  என்றிருந்தால் தான் தயம்மும் செய்ய வேண்டும்.

இரண்டாவது: மையித்து ஆணாக இருந்தால் , இமாம் ஜமாஅத்தாக நிற்பவர் அல்லது தனிமையில் தொழ நிற்பவர் அவரது நீளத்தின் நடுவில் நிற்க வேண்டும். மாறாக மையித்து பெண்ணாக இருந்தால் அவளது நெஞ்சுக்கு முன்னால் நிற்றல். 

மூன்றாவது: பாதணி இல்லாது தொழல்

நான்காவது: ஒவ்வொரு தக்பீரிலும் கைகளை உயர்த்துதல்.

ஐந்தாவது: மையித்துக்கும் அவருக்கும் இடையில் உள்ள பிரிவு , காற்று வீசினால் அவரது ஆடை மையித்தில் படுமளவிற்கு நெருக்கமாக இருத்தல். 

ஆறாவது: மையித்துத் தொழுகையை ஜமாத்தாக தொழல்

ஏழாவது: இமாம் ஜமாஅத் தக்பீர்களையும் துஆக்களையும் சத்தமாகவும்  மற்றவர்கள் அமைதியாக ஓதுதல்.

எட்டாவது: மையித்து தொழுகை ஜமாஅத்தாக நடக்கும் போது மஃமூன் ஒருவராக இருந்தாலும் இமாமுக்கு பின் நிற்றல்.

ஒன்பதாவது: மையித்து தொழுகையை தொழுது கொண்டிருப்வர்கள் மையித்திற்காகவும் முஃமின்களுக்காகவும் அதிகமாக துஆச் செய்தல்.

பத்தாவது: மையித்து தொழுகை ஆரம்பமாவதற்கு முதல் மூன்று தடவை ' அஸ்ஸலாத் என சொல்லல்.

பதினோராவது: மக்கள் மையித்து தொழுகையில் அதிகமாக கலந்து கொள்ளும் இடத்தில் தொழுவித்தல்.

பனிரெண்டாவது: ஹைழுடன் இருக்கும் பெண் மையித்து தொழுகையை ஜமாஅத்தாக தொழுதால் அவள் தனியே ஒரு ஸப்பில் நிற்க வேண்டும்.

விடயம் 606: மையித்து தொழுகையை மஸ்ஜிதுகளிலே தொழுவது மக்ரூஹ் ஆகும். ஆனால் மஸ்ஜிதுல் ஹராமாக இருந்தால் மக்ரூஹ் இல்லை.

அடக்கம் செய்வதன் சட்டங்கள்

விடயம் 607: மையித்தை அதனட வாசம் வெளிவாராத வகையிலும் , மிருகங்கள் அதை வெளியில் எடுக்காத வகையிலும் மண்ணில் அடக்கம் செய்வது வாஜிபாகும். மையித்தை வெளியில் எடுக்க மிருகங்கள் இல்லாதிருந்தாலோ அல்லது அதிலலிருந்து வெளிவரும் வாசத்தால் கஷ்டத்தை எதிர் கொள்ள அதை அடக்கம் செய்யும் சுற்றுப் புரங்களில் மக்கள் வாழ வில்லை என்றிருந்தாலும் சரி இஹ்தியாத்து வாஜிபு கப்ருடைய ஆழம் மேலே கூறப்பட்ட அளவுக்கே இருக்க வேண்டும். இன்னும் அடக்கம் செய்யப்படும் மையித்தை மிருங்கள் வெளியில் எடுத்து விடும் அச்சம் இருந்தால் கட்டாயம் அந்த கப்ரை கல்லு போன்றதை வைத்து எடுக்காத வகையில் அதை உறுதிப்படுத்த வேண்டும்.