Back | Index | Next |
விடயம் 608: மையித்தை மண்ணில் அடக்கம் செய்ய முடியாது இருந்தால் அடக்குவதற்கு பதிலாக அதை ஒரு கட்டிடத்திற்குல் அல்லது பெட்டிக்குள் வைக்க முடியும்.
விடயம் 609: மையித்தை கப்ருக்குல் அதன் முன் பகுதி கிப்லாவை நோக்கி இருக்கும் வகையில் வலப்பக்கம் ஒருக்கணைத்து வழத்தாட்ட வேண்டும்.
விடயம் 610: ஒருவர் கடலில் வைத்து கப்பலில் மரணித்தால் , அவரது உடலும் கெட வில்லை என்றிருந்தால் இன்னும் அதை கப்பலில் வைத்திருப்பதில் பிரச்சினையில்லை என்றிருந்தால் கரையை அடையும் வரை பொறுமையாக இருந்து மண்ணில் அடக்கம் செய்யவேண்டும். அவ்வாறு இல்லை என்றிருந்தால் கப்பலில் வைத்தே அதைக் குளிப்பாட்டி கபனிட்டு அதைத் தொழுவித்ததன் பிறகு மையித்தின் காலில் பாரமாக ஒன்றைக் கட்டி கடலில் வீசி விடவேண்டும். அல்லது அதை ஓலப்பாயில் வைத்து அதன் இருபக்கங்களையும் கட்டி விட்ட வீச வேண்டும். முடிந்தால் அதை உடனடியாக மிருகங்களில் இறையாகாத இடத்தில் வீச வேண்டும்.
விடயம் 611: எதிரிகள் மையித்து அடக்கப் பட்டிருக்கும் கப்ரைப் பிளந்து அதை எடுப்பார்கள் என்ற அச்சம் இருந்தால் முடியுமாக இருந்தால் மேலே சொல்லப்பட்டது பிரகாரம் அதை கடலில் வீச வேண்டும்.
விடயம் 612: மையித்தை கடலில் வீசுவதற்கு அல்லது அதன் கப்ரை உறுதிப் படுத்துவதற்கு பணம் தேவைப்பட்டால் அதை மைத்துல்மால் எனப்படும் பொதுச் சொத்திலிருந்து எடுக்க வேண்டும்.
விடயம் 613: வயிற்றில் குழந்தை மரணித்த நிலையில் ஒரு காபிரான பெண் மரணித்தால் அக்குழநை ; தையின் தந்தை முஸ்லிமாக இருந்தால் கப்ரினுல் அப்பிள்ளையின் முன் பக்கம் கிப்லாவை நோக்கி இருக்கும் வகையில் அப்பெண்ணை இடது பக்கமாக ஒருக்கணைத்து வழத்தாட்ட வேண்டும். இன்னும் அப்பிள்ளைக்கு ரூஹ் ஊதப்பட வில்லை என்றாலும் சரியே. இஹ்தியாத்து வாஜிபின் படி இப்படியே செய்ய வேண்டும்.
விடயம் 614: காபிர்களுடைய அடக்கஸ்தளத்தில் முஸ்லிமை அடக்கம் செய்வதும் அதேபோல் முஸ்லிம்களுடைய அடக்கஸ்தளத்தில் காபிரை அடக்கம் செய்வதும் ஆகாது.
விடயம் 615: ஒரு முஸ்லிமான மையித்தை அவரைக் கண்ணியப்படுத்தாது அசிங்கப்படுத்தக்கூடிய ஒரு இடத்தில் அடக்கம் செய்தல் கூடாது. உதாரணமாக குப்பை கூழங்கள் கொட்டும் இடத்தில் அடக்கம் செய்வது போல. இது போன்ற இடங்களில் அடக்கம் செய்வது ஆகாது.
விடயம் 616: அபகரிக்கப் பட்ட இடத்தில் மையித்தை அடக்கம் செய்வதும் , அடக்கம் செய்வதற்கு அல்லாது வக்பு செய்யப்பட்டிருக்கும் இடத்திலும் அடக்கம் செய்யக் கூடாது.
விடயம் 617: ஒருவர் அடக்கப் பட்ட கப்ரில் மற்றவை அடக்கம் செய்யக் கூடாது , அக்கப்ரு பழையதாக இருந்தால் அல்லது அந்த மையித்தின் எலும்புகள் உக்கி இறந்து போயிந்தால் தவிர. (அப்படி இருந்தால் அடக்கம் செய்யலாம்) அடக்கப்படும் இடம் மையித்து அடக்கப் படுவதற்காக வக்பு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். அது ஒருவருக்கு சொந்தமானதாக இருந்தால் அவரிடம் அனுமதி எடுக்க வேண்டும். முன்னர் இந்த இடத்தில் அடக்கப்பட்ட மையித்து இன்னும் முற்றாக அழிய வில்லை என்று சந்தேகம் கொண்டால் அதில் இரண்டாவது மையித்தை அடக்கவோ அல்லது வேறு வேலைகளுக்காகவோ அதை பிளக்கவோ அல்லது வெட்டவோ கூடாது. ஆனால் வெட்டப்பட்டால் அதில் இரண்டாவது மையித்தை அடக்குவதில் பிரச்சினையில்லை.
விடயம் 618: மையித்திலிருந்து வேறாகும் பொருட்கள் , அது முடியாக இருக்கட்டும் அல்லது நகம் , பல்லாக இருக்கட்டும் அவைகளையும் அதனுடன் அடக்கம் செய்யப்பட வேண்டும். மனிதன் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவனிலிருந்து வேறாகும் நகம் , முடி போன்றவைகளை அடக்கம் செய்வது முஸ்தஹப்பாகும்.
விடயம் 619: ஒருவர் கிணற்றுக்குல் மரணித்தால் அவரை அங்கிருந்து எடுக்கவும் முடியாது போனால் அக்கிணற்றை மூடி விட்டு அதை அவரது கப்ராக ஆக்கவேண்டும்.
விடயம் 620: பிள்ளை தாயின் வயிற்றுக்குல் இறந்தால் , அது தாயியுடைய கற்பத்தில் இருப்பது தாயிக்கு ஆபத்தாக இருந்தால் , மிகவும் இலேசான வழியைப் பயன் படுத்தி இதை வெளியில் எடுக்க வேண்டும். அதை துண்டு துண்டாகத்தான் வெளியே எடுக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப் பட்டாலும் பிரச்சினையில்லை அதை வெளியே எடுக்க வேண்டும். ஆனால் அப்பெண்ணின் கணவர் அத்துறையில் படித்தவராக இருந்தால் அவர் மூலமே எடுக்க வேண்டும். அல்லது நன்கறிந்த ஒரு பெண் மூலமே எடுக்க வேண்டும். அதற்கு முடியாதிருந்தால் மஹ்ரமான ஒரு ஆண்ணுக்கு தெறிந்திருந்தமால் அவர் மூலம் எடுக்க வேண்டும். அதற்கும் முடியாதிருந்தால் மஹ்ரமல்லாதவருக்குத் தான் அது தெறிந்திருந்தால் அவர் மூலம் பிள்ளையை வெளியில் எடுக்க வேண்டும். அப்படிப் பட்டவரும் இல்லாதிருந்தால் அத்துறையில் கற்காதவர் மூலம் பிள்ளையை வெளியில் எடுக்க வேண்டும்.
விடயம் 621: கற்பிணிப் பெண் மரணித்து அவளது வயிற்றில் பிள்ளை உயிருடன் இருந்தால் , பிள்ளை உயிர் வாழமாட்டாது என்ற நம்பிக்கை இருந்தாலும் சரி மேலே சென்ற விடயத்தில் கூறப்பட்டவர்களைக் கொண்டு தாயின் இடது பக்கத்தை வெட்டி பிள்ளையை எடுக்க வேண்டும். பின் மீண்டும் அதைத் தைக்க வேண்டும்.
விடயம் 622 : (இங்கே கூறப்படுபவை அனைத்தும் சுன்னத்தாகும்) கப்ரை ஒரு நடுத்தர அளவுள்ள ஒருவரின் நீளத்திற்கு வெட்டுவதும் , மையித்தை அன்மையில் உள்ள கப்ருஸ்தானத்தில் அடக்கம் செய்வதும் முஸ்தஹப்பாகும். தொலைவில் இருக்கும் அடக்கஸ்தளம் ஒரு வகையில் சிறந்ததாக இருந்தால் அதாவது நல்ல மனிதர்கள் அங்கே அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். அல்லது அதிகமான மக்கள் அங்கே பாத்திஹா ஓதுவதற்குச் செல்கின்றனர் என்ற காரணங்களுக்காக மையித்தை அன்மையில் இருக்கும் மைய வாடியில் அடக்கம் செய்யாது அங்கே கொண்டு அடக்கம் செய்யலாம். மையித்தை கப்ரை விட்டும் கொஞ்சம் தூரமாக மண்ணில் வைக்க வேண்டும். முன்று தடவையில் அதை கப்ரடிக்கு கொண்டு செல்ல வேண்டும் , ஒவ்வொரு முறையும் மண்ணில் வைத்து வைத்து தூக்கவேண்டும். நாலாவது தடவையில் கப்ருக்குல் கொண்டு போக வேண்டும். அந்த மையித்து ஆணாக இருந்தால் மூன்றாவது தடைவ மண்ணில் வைக்கும் போது அதன் தலை கப்ரின் கீழ் பக்கமாக இருக்க வேண்டும். நாலாவது தடவையில் தலைப்பக்கமாக கப்ருக்குல் கொண்டு செல்ல வேண்டும். மையித்து பெண்ணாக இருந்தால் மூன்றாவது தடவையில் கப்ரின் கப்லாவை நோக்க வைக்க வேண்டும். பின் அவ்வாறே கப்ருக்குல் கொண்டு வர வேண்டும். கப்ருக்குல் கொண்டு வருகின்ற போது கப்ருக்கு மேலாக ஒரு பிடவையை விரிக்க வேண்டும். மேலும் மையித்தை சன்தூக்கில் இருந்து மெதுவாக எடுக்க வேண்டும். அடக்கம் செய்வதற்கு முன்பும் , அடக்கம் செய்கின்ற போதும் ஓதுமாறு கூறப்பட்டுள்ள துஆக்களை ஓத வேண்டும். மையித்தை பிள்ளைக் குழியினுல் வைத்த பிறகு கபனில் போடப்பட்டிருக்கும் முடிச்சுக்களை அவிழ்த்து விட்டு அதன் முகத்தை மண்ணில் வைக்க வேண்டும். இன்னும் அதன் முகத்திற்கு கீழ் தலையணை போன்றதை செய்ய வேண்டும். அதேபோல் அதன் பின் பக்கமாக அது அசைந்து பின் பக்கம் போகாதிருப்பதற்காக வேண்டி மண்ணைச் சேர்த்து விட வேண்டும். பிள்ளைக் குழியை மூடுவதற்கு முன் மையித்தின் வலது கையை எடுத்து அதன் வலது தோல்புயத்திற்கு மேலும் அதன் இடது கையை எடுத்து அதன் இடது தோல்புயத்திற்கு மேல் வைத்து அதன் காதுக்கு இருகில் சென்று சத்தமாக இதை மூன்று முறை கூறவேண்டும்.
தந்தையுடைய பெயரையும் சொல்ல வேண்டும். உதாரணமாக மையித்துடைய பெயர் முஹம்மத் அதன் தந்தையுடைய பெயர் அலி என்றால் இதை இப்படி மூன்று முறை சத்தமாக சொல்ல வேண்டும். اِسْمَعْ اِفْهَمْ يا مُحَمّدبن عَلِىّ பின்பு இதை சொல்ல வேண்டும்.
هَلْ اَنْتَ عَلَى الْعَهْدِ الَّذِى فارَقْتَنا عَلَيْهِ مِنْ شَهادَةِ اَنْ لااِلهَ اِلاّالله وَحْدَهُ لاشَريكَ لَهُ وَاَنَّ مُحَمَّداً صَلّى الله عَلَيْهِ وَآلِه عَبْدُهُ وَرَسوُلُهُ وَسَيّدُ النّبيّينَ وَخْاتَمُ الْمُرْسَلِينَ وَاَنَّ عَليّاًاَمِيرُالْمُؤمِنينَ وَسَيّدُ الوَصِييّنَ وَاِمامٌ اِفْتَرَضَ اللهُ طاعَتَهَ عَلَى الْعالَميِنَ وَاَنَّ الْحَسَنَ وَالْحُسَيْن وَعَلِىَّ بْنَ الْحُسَيْن وَمُحَمَّدَبْن عَلِىٍّ وَجَعْفَرَبْنَ مُحَمَّد وَموُسَى بْنَ جَعْفَر وَعلىَّ بْنَ موُسى وَمُحَمَّدَبْنَ عَلِىٍّ وَعلىَّ بْنَ مُحَمَّد وَالْحَسَنَ بْنَ عَلِىٍّ وَالْقائِمَ الْحُجَّةَ الْمَهْدِىّ صَلَواتُ الله عَلَيْهِمْ اَئِمَّةُ الْمُؤْمِنيِنَ وَحُجَجُ اللهِ عَلَى الخَلْقِ اَجْمَعينَ وَاَئِمَّتكَ اَئِمَّةٌ هُدِىَ اَبْرارٌ يا فُلانَ بْنَ فُلان
புலான் என்று வந்துள்ள இடத்தில் மையித்துடைய பெயரையும் அதன் தந்தையுடைய பெயரையும் சொல்ல வேண்டும். அதன் பின் இதை கூற வேண்டும்.
اذا اَتاكَ الْمَلَكانِ المُقَرَّبانِ رَسوُلَيْنِ مِنْ عِنْدِاللهِ تَبارَكَ وَتَعالى وَسَئَلاكَ عَنْ رَبِّكَ و عَنْ نَبِيِّكَ وَعَنْ دينِكَ وَعَنْ كِتابِكَ وَعَنْ قِبْلَتِكَ وَعَنْ اَئِمَّتِكَ فَلاْ تَخَفْ وَلا تَحْزَنْ وَقُلْ فِى جَوابِهِما اللهُ رَبّى وَمُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَآلِهِ نَبِيّى وَالاِْسْلامُ دينى وَالْقُرآنُ كِتابى وَالْكَعْبَةُ قِبْلَتِى وَاَمِيرُالْمُؤمِنينَ عَلىُّ بْنُ اَبِى طالب اِمامى وَالْحَسَنُ بْنُ عَلىٍّ الْمُجْتَبى اِمامى وَالْحُسَيْنُ بْنُ عَلِىٍّ الشَّهيدُ بِكَرْبَلا اِمامى وَعلِىُّ زَيْنُ الْعابِدينَ اِمامى وَمُحَمَّدٌ الْباقِرُ اِمامى وَجَعْفَرٌ الصّادِقُ اِمامى، وَ مُوسَى الْكاظِمُ اِمامى، وَعَلىُّ الرِّضا اِمامِى، وَمُحَمَّدٌ الْجَوادُ اِمامِى، وَعَلِىٌّ الْهادِى اِمامِى وَالْحَسنُ الْعَسْكَرى اِمامى وَالْحُجَّةَ الْمُنْتَظَرُ اِمامِى هؤُلاءِ صَلَواتُ اللهِ عَلَيْهِمْ اَجْمَعينَ اَئِمَّتى وَسادَتى وَقادَتى وَشُفَعْائى بِهِمْ اَتَوَلَّى وَمِنْ اَعْدائِهِمْ اَتَبَرَّءُ فِى الدُّنْيا وَالاخِرَةِ ثُمَّ اعْلَمْ يا فُلانَ بْنَ فُلان
புலான் என்று வந்துள்ள இடத்தில் மையித்துடைய பெயரையும் அதன் தந்தையுடைய பெயரையும் சொல்ல வேண்டும். பின்பு இதைக் கூற வேண்டும்.
اِنَّ اللهَ تَبارَكَ وَتَعالى نِعْمَ الرَّبُّ وَاَنَّ مُحَمَّداً صَلَّى اللهُ عَلَيْهِ وَآلِهِ نِعْمَ الرَّسوُلُ وَاَنَّ عَلِىِّ بْنَ اَبىِ طالِب وَاوْلادَهُ الْمَعْصوُمينَ الاَْئِمَّةَ الاِْثْنى عَشَرَ نِعْمَ الائَمَّةُ وَاَنَّ ما جاءَ بِهِ مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَآلِهِ حَقُّ وَاَنَّ الْمَوْتَ حَقٌّ وَسُؤالَ مُنْكَر وَنَكِير فىِ القَبْرِ حَقُّ وَالْبَعْثَ حَقٌ والنُشُورَ حَقٌ وَالصِّراطَ حَقٌّ وَالْمِيزانَ حَقٌّ وَتَطايُرَ الكُتُبِ حَقٌّ وَاَنَّ الْجَنَّةَ حَقُّ وَالنّارَ حَقُّ وَاَنَّ السّاعَةَ آتِيَةٌ لا رَيْبَ فيها وَاَنَّ اللهَ يَبْعَثُ مَنْ فِى الْقُبوُرِ
பின்பு இதைக் சொல்ல வேண்டும். اَفَهِمْتَ يا فُلانُ
புலான் என்று வந்துள்ள இடத்தில் மையித்துடைய பெயரையும் அதன் தந்தையுடைய பெயரையும் சொல்ல வேண்டும். பின் இதைக் கூற வேண்டும்.
ثَبَّتَكَ اللهُ بِالْقوُلِ الثّابِتِ وَهَديكَ اللهُ اِلى صِراط مُسْتَقيم عَرَّفَ اللهُ بَيْنَكَ وَبَيْنَ اوْلِيائِكَ فِى مُسْتَقَرٍّ مِنْ رَحْمَتِهِ پس بگويد: اللّهُمَّ جافِ الاَْرْضَ عَنْ جَنْبَيْهِ وَاصْعَدْ بِروُحِه اِلَيْكَ وَلَقّنهُ مِنْكَ بُرْهاناً اللّهُمَّ عَفْوَكَ عَفْوَك
விடயம் 623 : மையித்தை கப்ருக்குல் வைப்பவர் சுத்தமாக , தலையில் ஒன்றும் அணியாது வெறும்காலோடு இருந்து , மையித்தின் கால் பக்கமாக கப்ரிலிருந்து மேலுக்கு வருவது முஸ்தஹப்பாகும். மையித்தின் குடும்பத்தினரைத் தவிர்ந்தவர்கள் கையினால் மண் அல்லி கப்ரின் மீது போட்டு ' இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ' என்று கூறவேண்டும். மையித்து பெண்ணாக இருந்தால் அதற்கு மஹ்ரமானவர்களே அதை கப்ரினுல் வைக்க வேண்டும். அவர் இல்லாதிருந்தால் குடும்பத்தினரில் ஒருவர் அதை கப்ருக்குல் வைக்க வேண்டும்.
விடயம் 624: கப்ரை சதுரமாக அல்லது செவ்வகமாக ஆக்குவது முஸ்தஹப்பாகும். நான்கு விரல்களின் அளவுக்கு பூமியை விட்டும் உயரமாகக்க வேண்டும். கப்ரு மாறாது இருப்பதற்காக வேண்டி அதன் மேல் ஒரு அடையாளம் வைக்க வேண்டும். கப்ருக்கு மேல் தண்ணீர் ஊற்ற வேண்டும். கை விரல்களை விரித்து மண்ணினுல் நுழைத்து ஏழு தடவை சூரதுல் கத்ர் (في ليلة القدر انا انزلناه) என்றதை ஓதி மையித்துக்காக பாவமன்னிப்புத் தேடும் வகையில் இந்த துஆவை ஓதவேண்டும்.
اللّهُمَّ جافِ الاَْرْضَ عَنْ جَنْبَيْهِ وَاصْعَدْ اِلَيْكَ روُحَهُ وَلَقِّهِ مِنْكَ رِضْواناً وَاَسْكِنْ قَبْرَهُ مِنْ رَحْمَتِكَ ما تُغْنِيهِ بِهِ عَنْ رَحْمَة مَنْ سِواكَ.
விடயம் 625 : மையித்தை அடக்கம் செய்ய வந்தவர்கள் சென்றதன் பின் அதன் சொந்தக் காரர் அல்லது சொந்தக் காரரிடமிருந்து அனுமதி எடுத்தவர் அங்கே நின்று ஓதுமாறு வந்துள்ள துஆக்களை ஓதவேண்டும்.
விடயம் 626 : மையித்தை அடக்கம் செய்ததன் பின் அதன் சொந்தக்காரர்கள் அதற்காக துக்கத்தை அனுஷ்டிப்பது முஸ்தஹப்பாகும். சிறிது காலம் சென்றதன் பின் துக்கத்தை அனுஷ்டிப்பதில் அவர்களுக்கு முஸீபத்துக்கள் ஞாபகம் வந்தால் அதை விட்டுவிடுவது சிறந்ததாகும். மேலும் மூன்று நாட்கள் மையித்து வீட்டாருக்கு உணவு கொடுப்பது முஸ்தஹப்பாகும். அவர்களுடன் அல்லது அவர்களது வீட்டில் உணவு உண்பது மக்ரூஹ் ஆகும்.
விடயம் 627 : மனிதன் தன் குடும்பத்தினர் , குறிப்பாக பிள்ளை மரணிக்கின்ற போது பொறுமையாக இருப்பதும் , மையித்தை ஞாபிக்கும் போதெல்லாம் ' இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீஊன் ' என்று கூறுவதும் , மையித்துக்காக குர்ஆன் ஓதுவதும் , தாய் தந்தையுடைய கப்ரடியில் நின்று அல்லாஹ்விடம் தேவைகளைக் கேட்பதும் இன்னும் அவர்களது கப்ருகளை சீக்கிரமாக அழிந்து போகாத வகையில் உறுதியாக்குவதும் முஸ்தஹப்பாகும்.
விடயம் 628 : ஒருவர் மரணிக்கின்ற போது அதன் சொந்தக்காரர்கள் அல்லது மற்றவர்கள் தங்களது முகம் , உடம்புகளில் அடித்துக் கொண்டு , கீரிக் கொண்டு அழுவது , தங்களுக்கு தங்கடத்தை ஏற்படுத்துவம் ஆகாது.
விடயம் 629 : தந்தை , சகோதரர் அல்லாதவர் மரணிக்கும் போது தனது சட்டைக் கொலரை கிழிப்பது ஜாயிஸ் இல்லை.
விடயம் 630 : ஒருவர் தன் ; மனைவி அல்லது பிள்ளை மரணிக்கும் போது தனது சட்டையைக் கிழித்தால் அல்லது மனைவி தன் கணவன் மரணித்த கவலையில் தன் முகத்தில் அடித்து சிறு கீரலை ஏற்படுத்திக் கொண்டால் அல்லது தன் முடியைப் பிடுங்கினால் கட்டாயம் ஒரு அடிமையை உரிமை விடவேண்டும். அல்லது பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அவர்களுக்கு ஆடை கொடுக்க வேண்டும். இவைகளுக்கு முடியாது இருந்தால் மூன்று நாட்கள் நோன்பு பிடிக்க வேண்டும். மேற்கூறியவைகளை செய்த போது இரத்தம் வரவில்லை என்றிருந்தாலும் சரி இதசை ; செய்தாகவே வேண்டும்.