Back Index Next

விடயம் 646 : தண்ணீர் தேடி அவர் தான் போகவேண்டும் என்ற அவசியமில்லை. மாறாக அவருக்கு நம்பிக்கையான ஒருவரையும் அனுப்ப முடியும். இந்நிலையில் பலருக்கு பகரமாக ஒருவர் போனாலும் போதுமாகும்.

விடயம் 647 : தன் பிரயாணப் பொதிக்குல் அல்லது வீட்டில் அல்லது பிரயாணிகளிடம் தண்ணீர் இருக்கும் என சந்தேகம் கொண்டால் தண்ணீர் இல்லை என்ற உறுதி அவருக்கு ஏற்படும் வரை அல்லது தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாது போகின்ற வரைக்கும் தேடவேண்டும்.

விடயம் 648 : தொழுகை நேரம் வருவதற்கு முன் தண்ணீர் தேடி கிடைக்காது போய் தொழுகை நேரம் வரும் வரை அவ்விடத்திலேயே இருந்தால் மீண்டும் தண்ணீர் தேடிச் செல்ல வேண்டிய அவசியமில்லை.

விடயம் 649 : தொழுகை நேரம் வந்த பிறகு தண்ணீர் தேடிச் சென்று அது கிடைக்காது போய் அடுத்த தொழுகையின் நேரம் வரும் வரை அங்கேயே இருந்து பின் தண்ணீர் கிடைக்கும் என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டால் இஹ்தியாத்து வாஜிபின் படி தேடிச் செல்ல வேண்டும்.

விடயம் 650 : மிருகம் அல்லது கள்வர்களின் மூலம் தன் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து ஏற்படும் என பயந்தால் தண்ணீர் தேடிச் செல்வது அவருக்கு கடினமாக இருந்து அதை அவரால் தாங்க முடியாது என்றிருந்தால் அல்லது தொழுகையின் நேரம் மிகவும் சுருக்கமாக இருந்து தண்ணீர் தேட முடியாத நிலையாக இருந்தால் அதைச் தேடிச் செல்ல வேண்டிய அவசியமில்லை.

விடயம் 651: தொழுகையின் நேரம் சுருங்குகின்ற வரைக்கும் தண்ணீர் தேடிச் செல்லதிருந்தால் அவர் பாவம் செய்து விட்டார். ஆனால் தயம்மும் செய்து தொழும் தொழுகை சஹீஹாகும். அதாவது நிறைவேறும்.

விடயம் 652 : தண்ணீர் கிடைக்கமாட்டதென்று உறுதி கொண்டிருந்த ஒருவர் அதைத் தேடிச் செல்லாது தயம்மும் செய்து தொழுது பின்னர் தேடிச் சென்றிருந்தால் தண்ணீர் கிடைத்திருக்கும் என உணர்ந்தால் அவரது தொழுகை பாத்திலாகும். அதாவது தண்ணீர் தேடிச் சென்று வுழுச் செய்து மீண்டும் தொழ வேண்டும்.

விடயம் 653 : தண்ணீர் தேடி கிடைக்காத பிறகு தயம்மும் செய்து தொழுது பின் தண்ணீர் தேடிச் சென்ற இடத்தில் நீர் இருந்தது என அறிந்தால் அவரது தொழுகை சஹீஹாகும்.

விடயம் 654: தொழுகையின் நேரம் வந்ததன் பின் வுழுவுடன் இருக்கும் ஒருவர் , வுழுவை முறித்தால் தண்ணீர் கிடைக்காதென்று அறிந்தால் , வுழுவைப் பாதுக்க முடியுமாக இருந்தால் அதை முறிக்கக் கூடாது.

விடயம் 655 : தொழுகையின் நேரம் வருவதற்கு முன் வுழுவுடன் இருக்கும் ஒருவர் , வுழுவை முறித்தால் தண்ணீர் கிடைக்காதென்று அறிந்தால் , வுழுவைப் பாதுக்க முடியுமாக இருந்தால்  இஹ்தியாத்து வாஜிபின் படி அதை முறிக்கக் கூடாது.

விடயம் 656 : வுழுச் செய்வதற்கு அல்லது குளிப்பதற்கு போதுமான அளவு தண்ணீர் வைத்திருக்கும் ஒருவர் அதை ஊற்றி விட்டால் பின் தண்ணீர் கிடைக்காதென்று அறிந்தால் , தொழுகையின் நேரமும் நெருங்கியிருந்தால் அதை ஊற்றி விடுவது ஹராமாகும். இன்னும் இஹ்தியாத்து வாஜிபின் படி தொழுகையின் நேரம் வருவதற்கு முன்னரும் அதை ஊற்றி விடக்கூடாது.

விடயம் 657 : தண்ணீர் கிடைக்காது என்று அறியும் ஒருவர் , தொழுகையின் நேரம் வந்த பிறகு தன்னுடைய வுழுவை முறித்தால் , பாத்திலாக்கினால் அல்லது தன்னிடம் இருக்கும் தண்ணீரை ஊற்றி விட்டால் பாவம் செய்து விட்டால். ஆனால் தயம்மும் செய்து தொழும் அவரது தொழுகை சஹீஹாகும். இஹ்தியாத்து முஸ்தஹப்பின் படி அதை கழாச் செய்யவேண்டும் என்றிருந்தாலும் சரியே!

இரண்டாவது சந்தர்ப்பம்

விடயம் 658 : வயோதிப காரணத்தால் அல்லது மிருகம் கள்வர் போன்றவர்களினால் தன்னுயிருக்கும் உடமைக்கும் ஆபத்து ஏற்படும் என்று பயந்தால் அல்லது கிணற்றிலிருந்து நீரை அல்லி எடுப்பதற்குறிய வாலி போன்ற உபகரணம் இல்லாதிருந்து தண்ணீரைப் பெறாதிருந்தால் கட்டாயம் தயம்மும் செய்ய வேண்டும்.

விடயம் 659 : தண்ணீரை கிணற்றிலிருந்து எடுப்பதற்கு வாலி கைறு போன்றவை தேவைப்பட்டு வாங்க வேண்டும் அல்லது வாடகைக்கு எடுக்க வேண்டும் என்றிருந்தால் அதன் விலை வழமைக்கு மாறாக பல மடங்கு அதிகமாக இருந்தாலும் சரி அதை வாங்க வேண்டும். அதேபோல் தண்ணீருக்கு விலையை  அதிகரித்து விற்கப்பட்டாலும் சரி அதை வாங்க வேண்டும். அவை விற்கப் படும் அளவுக்கு அவரிடம் பணம் இருந்து அது அவருக்கு தேவையாக இருப்பின் அதை வாங்க வேண்டியது கடமையல்ல.

விடயம் 660 : தண்ணீர் வாங்குவதற்கு கடன் பட வேண்டிய நிர்ப்பந்தநிலை ஏற்பட்டாலும் கடன் வாங்க வேண்டும்.  ஆனால் அக்கடனை பின்னர் அடைக்க முடியாது என்று அறிந்த ஒருவர் கடன் படுவது கடமையில்லை.

விடயம் 661 : தண்ணீரை எடுப்பதற்காக மடுதோண்டுவது கஷ்டமில்லை என்றிருந்தால் கட் ; டாயம் மடு தோண்டி தண்ணீர் எடுக்கவேண்டும்.

விடயம் 662 : ஒருவருக்கு சிறிதளவு தண்ணீர் கொடுக்கப்பட்டால் அது அவருடைய கண்ணியத்தை குறைக்காதென்றிருந்தால் கட்டாயம் அதை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மூன்றாவது சந்தர்ப்பம்

விடயம் 663 : தண்ணீர் பாவிப்பது அவருக்கு தடையில்லாதிருத்தல் அல்லது அதைப் பாவித்தால் அவர் நோயாளியாகி விடுவார் அல்லது அவரில் சில பழிப்புகள் வெளியாகி விடும் அல்லது அவரிடம் இருக்கும் நோய் சுகமாவதற்கு காலம் அதிகமாக எடுக்கும் அல்லது அது உரத்து விடும் என பயந்தால் கட்டாயம் தயம்மும் செய்ய வேண்டும். சூடான நீரைப் பாவிப்பது அவருக்கு ஆபத்தாக இல்லை என்றிருந்தால் அதைக் கொண்டு வுழுச் செய்யவேண்டும் குளிக்க  வேண்டும்.

விடயம் 664: தண்ணீரைப் பாவித்தால் அது அவருக்கு தொல்லையைக் கொடுக்கும் என்று உறுதி கொண்டிக்க வேண்டிய அவசியமில்லை. மாறாத தொல்லை கொடுக்கும் என்ற சந்தேகம் இருந்து அது மக்கள் கண்ணோட்டதிலும் நம்பக் கூடியதாக இருந்தால் அதன் மூலம் அவருக்கு பயம் ஏற்பட்டால் போதுமாகும் கட்டாயம் அவர் தயம்மும் செய்ய வேண்டும்.

விடயம் 665 : கண்வலி இருக்கின்ற ஒருவர் தண்ணீர் பாவிப்பது அவருக்கு தொல்லையைக் கொடுக்கும் அது அவருக்கு ஆபத்தாகும் இந்நிலையில் அவர் கட்டாயம் தயம்மும் செய்ய வேண்டும்.

விடயம் 666 : உறுதி இருப்பதன் மூலம் அல்லது அபத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில் தயம்மும் செய்து தொழுவதற்கு முன் தண்ணீர் பாவிப்பது அவருக்கு ஆபத்தை ஏற்படுத்தாது என அறிந்தால் அவர் செய்த தயம்மும் பாத்திலாகும். அதன் மூலம் தொழமுடியாது. ஆனால் தொழுது முடிந்த பின் அறிந்தால் தொழுத தொழுகை சஹீஹாகும். ஆனால் அடுத்துள்ள தொழுகைகளுக்கு கட்டாயம் வுழுச் செய்ய வேண்டும்.

விடயம் 667 : தண்ணீரைப் பாவிப்பதில் அவருக்கு எந்தவொரு தொல்லையும் ஆபத்தும் இல்லை என்ற சிந்தனையில் இருக்கும் ஒருவர் குளித்தாளோ அல்லது வுழு செய்தாளோ அதன் பின் அது அவருக்கு சங்கடத்தை தொல்லையை ஏற்படுத்தும் என அறிந்தால் அவரது குளிப்பு , வுழு சஹீஹாகும்.

நாலாவது சந்தர்ப்பம்

விடயம் 668 : தன்னிம் இருக்கும் தண்ணீரைக் கொண்டு வுழுச் செய்தாளோ அல்லது குளித்தாளோ தானும் தனது மனைவி பிள்ளைகள் , நண்பன் இன்னும் தன்னுடன் தொடர்பு பட்டவர்கள் தாகத்தால் மரணிப்பார்கள் அல்லது சுகயீணமடைவார்கள் அல்லது தாங்க முடியாத அளவுக்கு தாகிப்பார்கள் என பயந்தால் வுழு இன்னும் குளிக்கும் இடத்தில் கட்டாயம் தயம்மும் செய்ய வேண்டும். மேலும் தன்னிடம் உள்ள மிருகம் தாகத்தால் இல்லாது போய் விடும் எனப்பயந்தால் தண்ணீரை அதற்கு கொடுத்து தயம்மும் செய்யவேண்டும். உயிரைப் பாதுகாப்பது வாஜிபான ஒருவர் அவருக்கு தண்ணீர் கொடுக்காது விட்டார் அவர் மரணிப்பார் என்றகின்ற போது கட்டாயம் அவருக்கு தண்ணீரைக் கொடுத்து விட்டு வுழுவுக்கு பதிலாக தயம்மும் செய்ய வேண்டும்.

விடயம் 669 : வுழுச் செய்வதற்காகவும் குளிப்பதற்காகவும் வைத்திருக்கும் குடிப்பதற்கு போதுமான சுத்தமான நீரைத் தவிர தனக்கும் தன்னுடன் இருப்பவர்களும் குடிப்பதற்கு போதுமான அளவு நஜிஸான நீரும் வைத்திருந்தால் கட்டாயம் சுத்தமான நீரை குடிப்பதற்கு வைத்துக் கொண்டு தயம்மும் செய்து தொழவேண்டும். ஆனால் தண்ணீர் மிருகத்திற்கும் தேவைப்பட்டால் கட்டாயம் நஜிஸான நீரை அதற்குக் கொடுத்து சுத்தமான நீரைக் கொண்டு வுழுச் செய்து குளிக்கவேண்டும்.

ஐந்தாவது சந்தர்ப்பம்

விடயம் 670 : உடல் அல்லது ஆடை அழுக்கடைந்து சிறிதளவு தண்ணீர் வைத்திருக்கும் ஒருவர் , அவர் அதன் மூலம் வுழுச் செய்தாலோ அல்லது குளித்தாளோ உடலை அல்லது ஆடையை கழுவவதற்கு எதுவும் மிஞ்சாது இந்நிலையில் அவர் உடலைக் கழுவி தயம்மும் செய்து தொழவேண்டும். ஆனால் தயம்மும் செய்வதற்கு ஒன்றும் இல்லாதிருந்தால் தண்ணீரை வுழுச் செய்வதற்கு , குளிப்பதற்கு பயன் படுத்தவேண்டும். நஜிஸான உடம்புடன் அல்லது ஆடையுடன் தொழவேண்டும்.

ஆறாவது சந்தர்ப்பம்

விடயம் 671: தண்ணீல் அல்லது பாவிப்பது அனுமதிக்கப் படாத பாத்திரத்தைத் தவிர இல்லாதிருந்தால் , தண்ணீர் அல்லது வேறு பாத்திரம் இல்லாதிருந்தால் உதாரணமாக தண்ணீர் அல்லது பாத்திரம் உபகரிக்கப் பட்டதாக இருப்பது போல் , இந்நிலையில் வுழுவுடைய இடத்தில் தயம்மும் செய்ய வேண்டும்.

ஏழாவது சந்தர்ப்பம்

விடயம் 672 : நேரம் மிகவும் குறைவாக இருத்தல். இந்நிலையில் வழுச் செய்தாலோ அல்லது குளித்தாளோ தொழுகை முழுவதும் அல்லது அதன் ஒரு பகுதி தொழுகையின் நேரம் சென்றதன் பின் தொழப்படும் என்றிருந்தால் கட்டாயம் தயம்மும் செய்யவேண்டும்.

விடயம் 673 : வேண்டுமென்று வுழுச் செய்வதற்கு அல்லது குளிப்பதற்கு நேரம் இல்லாத அளவு தொழுகையைப் பிற்படுத்தினால் அவர் பாவம் செய்து விட்டார். ஆனால் தயம்மும் செய்து தொழும் அவரது தொழுகை சஹீஹாகும். இஹ்தியாத்து முஸ்தஹப்பு அதை மீண்டும் கழாச் செய்ய வேண்டும் என்றிருந்தாலும் சரியே.

விடயம் 674: வுழுச் செய்தாலோ அல்லது குளித்தாளோ தொழுகைக்கு நேரம் இருக்குமா இல்லையா என ஒருவர் சந்தேகம் கொண்டால் கட்டாயம் அவர் தயம்மும் செய்ய வேண்டும்.

விடயம் 675 : நேரம் குறைவாக இருப்பதற்காக ஒருவர் தயம்மும் செய்தால் , அவரது தயம்மும் அந்த குறுகிய நேரத்தில் உள்ள அமல்களை நிறைவேற்றுவதற்கு மாத்திரமே பிரயோசனப்படும். நிறைவேற்றி முடிந்ததும் உடனடியாக அது பாத்திலாகி விடும். அவரிடம் இருந்த தண்ணீர் இல்லாது போனாலும் அல்லது வேறு காரணங்களுக்காக தண்ணீர் கிடைக்காது போனாலும் அவர் தயம்மத்தை முறிக்காதிருந்தாலும் சரியே! ஆனால் பின் வரும் தொழுகைகளுக்கு அவர் தயம்மும் தான் செய்ய வேண்டுமாயின் மீண்டும் அவர் இரண்டாவது தடவையாக தயம்மும் செய்ய வேண்டும்.

விடயம் 676 : தண்ணீர் வைத்திருக்கும் ஒருவர் , நேரம் குறுகியதாக இருந்து தயம்மும் செய்து தொழ ஆரம்பித்தால் , தொழுது கொண்டிருக்கும் போது இடையில் வைத்திருந்த தண்ணீர் இல்லாது போனால் அடுத்துள்ள தொழுகைகளை அந்த தயம்மத்துடன் நிறைவேற்ற முடியாது. மாறாக அவர் மீண்டும் இரண்டாவது தடவையாகவும் தயம்மும் செய்ய வேண்டும்.

விடயம் 677 : ஒருவர் வுழுச் செய்து அல்லது குளித்து தொழுகையைஇகாமத் சொல்லுதல் , குனூத் ஓதுதல் போன்ற அதன் முஸ்தஹப்பான அமல்களை செய்யாது தொழுமளவுக்கு நேரம் இருந்தால் கட்டாயம் குளித்து அல்லது வுழுச் செய்து  கொண்டு தொழுகையை அதன் முஸ்தஹப்புகளை செய்யாது தொழவேண்டும். அத்துடன் ஒரு சூரத்தை ஓதுகின்ற அளவுக்கும் நேரம் இல்லை என்றிருந்தாலும் அவர் குளிக்க அல்லது வுழுச் செய்து தொழுகையை சூரா ஓதாது தொழ வேண்டும்.

தயம்மும் செய்வது சஹீஹான பொருட்கள்

விடயம் 678 : மணல் , சிறுகல் , களிமண் போன்றவற்றில் தயம்மும் செய்தால் அவை சுத்தமாக இருந்தால் அத்தயம்மும் சஹீஹாகும். அதேபோல் செங்கல் , கூஸாவிலும் தயம்மும் செய்தாலும் சஹீஹாகும்.

விடயம் 679 :  சுண்ணாம்புக்கல் , கருத்த சலவைக்கல் போன்ற வேறு கற்களிலும் தயம்மும் செய்வது ஆகும். ஆனால் ஆகீக் , பீரூஸ் எனப்படும் கற்களில் தயம்மும் செய்தால் பாத்திலாகும். இஹ்தியாத்து வாஜிபின் படி சுடப்பட்ட சுண்ணாம்புக்கல்லிலும் தயம்மும் செய்யக்கூடாது.

விடயம் 680 : மண் , சிறுகல் , கல்லு , மண்கட்டி போன்றவை ஏதுவும் கிடைக்க வில்லை என்றால் , விரிப்பு , பாய் போன்றதில் சேர்ந்துள்ள புழுதியைக் கொண்டு தயம்மும் செய்ய வேண்டும். அதுவும் இல்லை என்றிருந்தால் களிமண்ணில் தயம்மும் செய்ய வேண்டும். அதுவும் கிடைக்க வில்லை என்றால் இஹ்தியாத்து வாஜிபின் படி தயம்முமின்றி தொழ வேண்டும். பின் அதை கழாச் செய்வது வாஜிபாகும்.

விடயம் 681: ஒருவர் விரிப்பு போன்றதை உதரி அதிலிருந்து மண் போன்றதை எடுத்து தயம்மும் செய்தால் அது பாத்திலாகும். களிமண்ணை காயவைத்து அதை மண்ணாக்கி அதிலிருந்து தயம்மும் செய்தாலும் பாத்திலாகும். காரணம் களிமண்ணல் தயம்மும் செய்ய முடியாது.

விடயம் 682 : தண்ணீர் இல்லாத ஒருவர் பனிக்கட்டி வைத்திருந்தால் முடிந்தால் அதை தண்ணீராக்கி அதன் மூலம் வுழுச் செய்ய அல்லது குளிக்க வேண்டும். அதற்கு முடியாததாக இருந்தால் , இன்னும் தயம்மும் செய்வது ஆகுமான ஒன்றும் இல்லாதிருந்தால் இஹ்தியாத்து வாஜிபின் படி வுழு , தயம்மும் இல்லாது தொழுது பின் அதை கழாச் செய்ய வேண்டும்.

விடயம் 683 : மண் வைக்ககோல் போன்ற தயம்மும் செய்ய முடியாதவற்றுடன் கலந்திருந்தால் அதன் மூலம் தயம்மும் செய்ய முடியாது. ஆனால் அவை மிகவும் குறைவாக இருந்து மண்ணில் இருந்து இறந்து போனவை என கணிப்பிடப்பட்டால் அதன் மூலம் தயம்மும் செய்வது ஆகும்.

விடயம் 684: தயம்மும் செய்வதற்கு ஒன்றும் இல்லாது இருந்தால் அவரால் முடியுமாயின் வாங்கியாவது அதை ஏற்பாடு செய்ய வேண்டும்.

விடயம் 685 : களிமண்ணினால் செய்யப்பட்ட சுவரின் மீது தயம்மும் செய்வது ஆகும். இஹ்தியாத்து முஸ்தஹப்பு , மண் அல்லது காய்ந்து மணல் மணலிடப்பட்ட தரை இருக்கின்ற போது அதில் தயம்மும் செய்யாதிருத்தல்.

விடயம் 686 : எதன் மீது தயம்மும் செய்யப்படுமோ அது சுத்தமானதாக இருக்க வேண்டும். தயம்மும் செய்யப்படுவது சுத்தமானதாக இல்லாதிருந்தால் இஹ்தியாத்து வாஜிபின் படி தயம்மும் , வுழு இல்லாது தொழ வேண்டும். பின் அதை கழாச் செய்ய வேண்டும்.