Back Index Next

விடயம் 959: வானொலி , ஒலிநாடா போன்றவற்றின் மூலம் அதானைக் கேட்பது தொழுகைக்கு போதுமாகாது. மாறாக தொழுபவரும் அதான் சொல்ல வேண்டும்.

விடயம் 960: இஹ்தியாது வாஜிப் , அதானை எப்போதும் தொழுகையுடைய நிய்யத்துடனே சொல்ல வேண்டும். நேரம் நுழைந்து விட்டது என்பதை அறிவிப்பதற்காகவும் அதன் பிறகு தொழுகையுள்ளது என்ற நிய்யத்து அல்லாது சொல்வதில் பிரச்சினையுள்ளது.

விடயம் 961: அதான் , இகாமத்தை தனித்து தொழும் நிய்யத்துடன் சொன்னால் , பின் ஒரு கூட்டத்தினர் அவரிடம் ஜமாஅத் நடாத்தும் படி வேண்டிக் கொண்டால் அல்லது மஃமூமாக அந்த தொழுகையை நிறைவேற்ற நின்றால் அந்த அதானும் இகாமத்தும் போதுமாகாது. எனவே அதை திரும்பச் சொல்வது சுன்னத்தாகும்.

தொழுகையின் வாஜிபுகள்

தொழுகையின் வாஜிபுகள் பதினொன்று ஆகும் . அவை முதலாவது :நிய்யத்து, இரண்டாவது :நிற்றல், மூன்றாவது :தக்பீரதுல் இஹ்ராம் சொல்லுதல் ( தொழுகையின் ஆரம்பத்தில் அல்லாஹு அக்பர் என்று சொல்லுதல்) நான்காவது :ருகூஃ, ஐந்தாவது :சுஜுத், ஆறாவது :கிராஅத், ஏழாவது :திக்ர், எட்டாவது :தஷஹ்ஹுத் ஓதுதல், ஒன்பதாவது :ஸலாம் கூறுதல், பத்தாவது :ஒழுங்கு முறைப்படி செய்தல், பதினோராவது : ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ச்சியாக செய்தல் .

விடயம்962:தொழுகையின் சில வாஜிபுகள் ருகுன் ஆகும் . அதாவது ஒருவர் தன் தொழுகையின் அதைச் செய்யாது விட்டாலோ அல்லது அதை அதிகப் படுத்தினாலோ அது வேண்டுமென இருந்தாலும் சரி அல்லது மறதியாக இருந்தாலும் சரி அவரது தொழுகை பாத்திலாகும் . மேலும் சில ருகுன் இல்லை . அதாவது ஒருவர் அதை வேண்டுமென செய்யது விட்டால் தொழுகை பாத்திலாகும் . மாறாக அதை செய்யாது விட்டாலோ அல்லது அதிகப்படத்தினாலோ அவரது தொழுகை பாத்திலாக மாட்டாது . தொழுகையின் ருகுன்கள் ஐந்தாகும் . அவை : முதலாவது : நிய்யத்து , இரண்டாவது : தக்பீரதுல் இஹ்ராம் , மூன்றாவது : தக்பீரதுல் இஹ்ராம் சொல்லும் போதும் ருகூவிற்குச் செல்லும் முன்னரும் நிற்றல் , நான்காவது : ருகூஃ , ஐந்தாவது : இரண்டு ஸஜதாக்கள் .

நிய்யத்து

விடயம் 963:ஒவ்வொரு மனிதனும் தொழுகையை குர்பதுடைய நிய்யத்துடன் , அதாவது அல்லாஹுவுடைய கட்டளையை நிறைவேற்றுவதற்காக , தொழவேண்டும் . நிய்யத்தை உள்ளத்தால் வைக்க வேண்டும என்பதோ ,  ளுஹருடைய நான்கு ரகஅத்தை அல்லாஹுக்காக தொழுகிறேன் என்று உதட்டால் மொழிய வேண்டும் என்பது அவசியமில்லை .

விடயம்964:ளுஹருடைய அல்லது அஸருடைய தொழுகையில் நான்கு ரகஅத் தொழுகிறேன் என நிய்யத்து வைத்து அது எந்த தொழுகை என குறிப்பிட வில்லை என்றால் அவரது தொழுகை பாத்திலாகும் . மேலும் உதாரணமாக ளுஹருத் தொழுகை கழாவான ஒருவர் அத்தொழுகையை வேறொரு ளுஹர் நேரத்தில் கழாச் செய்ய விரும்பினால் அப்போது அவர் எந்த தொழுகையைத தொழப் போகிறார் என்பதை குறிப்பிட வேண்டும் .

விடயம்965:தொழுகின்ற ஒருவர் தொழுகையின் ஆரம்பத்திலிருந்து அதன் கடைசி வரைக்கும் அந்த நிய்யத்தில் நிலைத்திருக்க வேண்டும் . இதன்படி அவர் தொழுகையின் நடுவில் பராமுகமா இருந்து அவரிடம் என்ன செய்கிறாய் எனக் கேட்கப் பட்டு அவரால் அதன் பதிலைச் சொல்ல முடியாது போனால் அவரது தொழுகை பாத்திலாகும் .

விடயம்966:ஒவ்வொரும் இறை கட்டளையை நிறைவேற்றுவதற்காகவே தொழவேண்டும் . எனவே எவராகினும் முகஸ்துதிக்காக தொழுதால் அவரது தொழுகை பாத்திலாகும் . அந்த முகஸ்துதி மக்களுக்காக இருந்தாலும் சரி அல்லது அல்லாஹுக்காகவும் மக்களுக்காகவும் இரண்டையும் கொண்டிருந்தாலும் சரியே .

விடயம்967:தொழுகையில் ஒரு பகுதியேயாவது அல்லாஹ் அல்லாதவர்களுக்காக தொழுதாலும் அவரது தொழுகை பாத்திலாகி விடும் . அந்த முகஸ்துதி பகுதி வாஜிபாக இருந்தாலும் சரி உதாரணமாக ஹம்து மற்றும் சூராவைப் போல அல்லது முஸ்தஹப்பானதாக இருந்தாலும் சரியே உதாரணமாக குனூத் . இன்னும் ஒருவர் அனைத்து தொழுகையையும் அல்லாஹுக்காகவே தொழுகிறார் ஆனால் மக்களுக்கு காட்டுவதற்காக வேண்டி குறிப்பான ஒரு இடத்தில் உதாரணமாக பள்ளி வாயல் , அல்லது குறிப்பிட்டதொரு நேரத்தில் உதாரணமாக தொழுகையின் ஆரம்ப நேரத்தில் அல்லது குறிப்பானதொரு விதத்தில் உதாரணமாக ஜமாஅத்துடன் தொழுகிறார் அவரது தொழுகையும் பாத்திலாகும் .

தக்பீரதுல் இஹ்ராம்

விடயம் 968:ஒவ்வொரு தொழுகையுடைய ஆரம்பத்திலும் அல்லாஹு அக்பர் என்று சொல்வது வாஜிபாகும் இன்னும் ருக்னாகும் . அல்லாஹு மற்றும் அக்பர் என்ற இரு சொல்லையும் சேர்த்தே கூறவேண்டும் . மேலும் இந்த இரு சொல்லை சரியான அரபு உச்சரிப்பில் சொல்ல வேண்டும் . அதை அரபில் சரியான உச்சரிப்பில் சொல்லாது விட்டாலோ அல்லது அதன் கருத்தை தமிழில் அதாவது அல்லாஹ் மிகப் பெரியவன் என்று சொன்னாலோ அது சஹீஹாக மாட்டாது .

விடயம் 969:இஹ்தியாது வாஜிபின் படி தக்பீரதுல் இஹ்ராமை அதற்கு முன் சொன்னவற்றுடன் உதாரணமாக இகாமத் அல்லது துஆக்களுடன் இணைக்கக் கூடாது .

விடயம் 970:ஒருவர் அல்லாஹு அக்பர் என்ற சொல்லை அதற்குப் பின் ஓதக்கூடியதுடன் உதாரணமாக பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதுடன் இணைக்க விரும்பினால் அக்பர் என்றதை அக்பரு என்று சொல்ல வேண்டும் . வாஜிபான தொழுகைகளில் இஹ்தியாது முஸ்தஹப்பு இவ்வாறு இணைக்கக் கூடாது என்றிருந்தாலும் சரியே .

விடயம் 971:தக்பீரதுல் இஹ்ராம் சொல்லுகின்ற போது உடம்பு அமைதியாக அசையாது இருக்க வேண்டும் . ஒருவர் வேண்டுமென உடல் அசைந்து கொண்டிருக்கும் போது தக்பீரதுல் இஹ்ராம் சொன்னால் அவரது தொழுகை பாத்திலாகும் . மேலும் மறதியாக அசைந்து கொண்டிருக்கும் போது தக்பீரதுல் இஹ்ராம் சொன்னால் இஹ்தியாது வாஜிபின் படி முதலில் தொழுகையை பாத்திலாக்கும் செயலைச் செய்து பின் திரும்ப தக்பீரதுல் இஹ்ராமைச் சொல்ல வேண்டும் .

விடயம் 972:தக்பீர் , ஹம்து , சூரா மற்றும் துஆவை அவருக்கு கேட்கின்ற அளவுக்கு ஓதவேண்டும் . கேட்பது கஸ்டமாக அல்லது செவிடாக அல்லது சத்தமாக இருந்து அவரால் கேட்க முடியாது இருந்தால் அதை அவைகள் ஒன்றும் இல்லாத போது அவருக்கு கேட்கக் கூடிய அளவுக்கு ஓதவேண்டும் .

விடயம் 973:ஊமையாக இருக்கின்ற ஒருவர் அல்லது நாவு நோய் பட்டிருக்கும் ஒருவரால் அல்லாஹு அக்பர் என்பதை சரியாக சொல்ல முடியாது போனால் அவரால் இயன்றளவு அதைச் சொல்ல வேண்டும் . மேலும் அறவே சொல்ல முடியாது போனால் உள்ளத்தால் சொல்லிக் கொண்டு தக்பீருக்காக சைக்கினை செய்யவேண்டும் . முடிந்தால் அவரது நாவையும் அசைக்க வேண்டும் .

விடயம் 974:தக்பீரதுல் இஹ்ராம் சொல்வதற்கு முன் இதை சொல்வது முஸ்தஹப்பாகும் . 

يا مُحْسِنُ قَدْ اَتَاكَ الْمُسِيَىءُ وَقَد اَمَرْتَ الْمُحْسِنَ اَنْ يَتَجاوَزَ عَنِ الْمُسِيىء أنْتَ الْمُحْسِنُ وَاَناَ المُسِىءُ بِحَقِّ مُحَمَّد وَآلِ مُحَمَّد صَلِّ عَلَى مُحَمَّد وَآلِ مُحَمَّد وَتَجاوَزَ عَنْ قَبيحِ ما تَعْلَمُ مِنِّى

மக்களுக்கு நல்லதைச் செய்பவனே உன்னிடம் பாவி வந்துள்ளான் . நீயோ நல்லவர்களை அவர்கள் பாவிகளை மன்னிக்கும் படி ஏவியுள்ளாய் . நீ நல்லவன் நானோ பாவி . முஹம்மத் ( ஸல்) அவர்களது பொருட்டைக் கொண்டும் அவர்களது குடும்பத்தினரது பொருட்டைக் கொண்டும் முஹம்மத் ( ஸல்) மீதும் அவர்களது குடும்பத்தினர் மீதும் ஸலவாத்துச் சொல்வாயாக . இன்னும் என்னில் நிகழ்ந்த மோசமான , இழிவான செயல்களை அறிந்த நீ அதை மன்னித்துக் கொள்வாயாக .

விடயம் 975:தொழுகையின் ஆரம்பத் தக்பீரைச் சொல்லும் போதும் தொழுகையின் நடுவிலுள்ள ஏனைய தக்பீர்களைச் சொல்லும் போதும் கைகளை காதுக்கும் முன்னால் வரைக்கும் உசத்துவது முஸ்தஹப்பாகும் .

விடயம் 976:ஒருவர் தக்பீரதுல் இஹ்ராமை சொன்னாரா இல்லையாவென சந்தேகம் கொண்டால் , அவர் அதன் பிறகு ஓதுபவற்றையோ அல்லது வேறு அஊது போன்ற முஸ்தஹப்பானவற்றை ஓத ஆரம்பித்து விட்டால் அவரது சந்தேகத்தை கவனிக்கக் கூடாது . ஆனால் அவைகளை ஓதுவதற்கு முதல் சந்தேகம் ஏற்பட்டால் கட்டாயம் தக்பீரதுல் இஹ்ராமை திரும்பச் சொல்ல வேண்டும் .

விடயம் 977:தக்பீரதுல் இஹ்ராம் சொன்னதன் பிறகு அதை சஹீஹாக சொன்னேனா இல்லைவென சந்தேகம் கொண்டால் அந்த சந்தேகத்தைக் கவனிக்க கூடாது . ஆனால் தொழுகையை முடித்த பிறகு அதை திரும்பத் தொழுவது முஸ்தஹப்பாகும் .

தொழுகையில் நிற்றல்

விடயம் 978:தக்பீரதுல் இஹ்ராம் சொல்பதற்கு முதல் நிற்பதும் இன்னும் ருகூவிற்குச் செல்வதற்கு முதல் நிற்பதும் ருகுன் ஆகும் . ஆனால் ஹம்து , சூரா ஓதும் போது இன்னும் ருகூவிற்குப் பிறகு நிற்பது ருகுன் இல்லை . ஒருவர் அதை மறதியாக விட்டால் அவரது தொழுகை சஹீஹாகும் .

விடயம் 979:தக்பீரதுல் இஹ்ராம் சொல்வதற்கு முன்பும் சொன்னதன் பிறகும் நின்ற நிலையில் தான் தக்பீரதுல் இஹ்ராம் சொன்னார் என்று உறுதி கொள்வதற்காக சற்று நிற்பது வாஜிபாகும் .

விடயம் 980:ஒருவர் ருகூஃவை மறந்து ஹம்து , சூரா ஓதிய பிறகு ஸஜதா செய்வதற்காக குனியும் போது ருகூஃ செய்யவில்லை என அவருக்கு ஞாபகம் வந்தால் கட்டாயம் அவர் முதலில் நின்று பிறகே ருகூஃவுக்கு செல்ல வேண்டும் . மாறாக குனிந்து சென்ற நிலையில் ருகூசிற்குச் சென்றால் அவர் ருகூஃவுடன் சேர்ந்துள்ள நிற்றலை நிறைவேற்ற வில்லை இதனால் அவரது தொழுகை பாத்திலாகும் .

விடயம் 981:நின்று கொண்டிருக்கின்ற போது அவரது உடலை அசைக்க கூடாது . ஒரு பக்ககும் வளைந்து நிற்றகவும் கூடாது இன்னும் ஒன்றுடன் சாய்ந்து நிற்கவும் கூடாது . இவ்வாறு செய்யாதிருக்க முடிய வில்லை என்றால் அல்லது ருகூஃவுக்காக குனியும் போது கால்களை அசைத்தால் பிரச்சினையில்லை .

விடயம் 982:நின்று கொண்டிருக்கின்ற போது மறதியாக உடம்பை அசைத்தால் அல்லது ஒரு பக்கமாக வளைந்தால் அல்லது ஒன்றுடன் சாய்ந்து நின்றால் பிரச்சினையில்லை . ஆனால் தக்பீரதுல் இஹ்ராம் சொல்லுகின்ற போது நிற்கும் போதும் இன்னும் ருகூஃ செய்வதற்கு முதல் நிற்கும் போதும் இவ்வாறு செய்வது மறதியாக இருந்தாலும் இஹ்தியாது வாஜிபின் படி தொழுகையை திரும்பத் தொழ வேண்டும் .

விடயம் 983:நின்று கொண்டிருக்கும் போது இரண்டு பாதங்களும் மண்ணில் மேல் இருப்பது வாஜிபாகும் . ஆனால் உடம்புடைய சுமை அவ்விரண்டிலும் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை . அது ஒரு காலில் இருந்தாலும் பிரச்சினையில்லை .

விடயம் 984:ஒழுங்காக நிற்க முடிந்த ஒருவர் கால்களை மிகவும் அகலமாக வைத்திருந்தால் அதற்கு வழக்கத்தில் நிற்றல் என்று சொல்ல முடியாததாக இருந்தால் அவரது தொழுகை பாத்திலாகும் .

விடயம் 985:ஒருவர் தொழுகையில் சற்று முன் அல்லது பின் செல்ல விரும்பினால் அல்லது உடம்பை வலது அல்லது இடது பக்கமாக வளைக்க விரும்பினால் அப்போது ஒன்றும் சொல்லக் கூடாது . ஆனால் بحول الله  و قوته  اقوم  واقعد ( பி ஹவ்லில்லாஹி வ குவ்வத்திஹி அகூமு வ அக்உது) என்று எழும்புகின்ற போதே சொல்ல வேண்டும் . இன்னும் வாஜிபான திக்ருகளைச் சொல்லுகின்ற போதும் உடம்பு அசையாது இருக்க வேண்டும் . இஹ்தியாது வாஜிபின் படி முஸ்தஹப்பான திக்ருகளைச் சொல்லுகின்ற போதும் உடல் அசையாது இருக்க வேண்டும் .

விடயம் 986:உடம்பு அசைந்து கொண்டிருக்கின்ற போது திக்ர் சொன்னால் உதாரணமாக ருகூஃவுக்கு செல்கின்ற போது அல்லது ஸஜதாவுக்கு செல்லுகின்ற போது தக்பீர் சொன்னால் , அதை தொழுகையில் சொல்ல வேண்டும் என்ற நினைப்புடன் , நாட்டத்துடன் சொன்னால் இஹ்தியாதுக்காக ( பேணுதலுக்காக) வேண்டி தொழுகையை திரும்பத் தொழவேண்டும் . மாறாக அந்த நினைப்போடு சொல்லாது ஒரு திக்ருதான் என நினைத்துச் சொன்னால் அவரது தொழுகை சஹீஹாகும் .

விடயம் 987:அல் ஹம்துவை ஓதிக் கொண்டிருக்கும் போது கையை உசுப்புவது , விரலை அசைப்பதில் பிரச்சினையில்லை . இஹ்தியாது முஸ்தஹப்பின் படி அவ்வாறு செய்யக் கூடாது என்றிருந்தாலும் சரியே .

விடயம் 988:அல் ஹம்து மற்றும் சூராவை , அல்லது வாஜிபான திக்ருகளை ஓதிக் கொண்டிக்கும் போது வேண்டுமென்றல்லாது உடல் அசைந்து அமைதியா நிற்றல் என்ற விதத்தை விட்டும் வெளியானால் இஹ்தியாது வாஜிபின் படி எவற்றையெல்லாம் அந்நிலையில் ஓதினாரோ அவற்றையெல்லாம் உடம்பு அமைதியானதும் திரும்ப ஓதவேண்டும் .

விடயம் 989:தொழுது கொண்டிருக்கும் போது நிற்க முடியாது போனால் கட்டாய அமர்ந்து விடவேண்டும் . உட்கார்ந்திருக்கவும் முடியாது போனால் தூங்க வேண்டும் . ஆனால் அவரது உடல் அமைதியாகின்ற வரைக்கும் தொழுகையுடைய வாஜிபுகளில் எதையும் ஓதக் கூடாது .

விடயம் 990:நின்று கொண்டு தொழ முடிந்த ஒருவர் இருந்து கொண்டு தொழக் கூடாது . உதாரணமாக நிற்கின்ற போது உடம்பு அசைகின்றது அல்லது ஒன்றுடன் சாய்ந்து கொள்ள அல்லது உடம்பை வளைக்க வேண்டிய அல்லது குணிய வேண்டிய அல்லது கால்களை வழமையை விட அதிகமாக விரிக்க வேண்டிய நிற்பந்த நிலை ஏற்படுகிறது எது எப்படியிருந்தாலும் நின்றவாறே தொழவேண்டும் . ஆனால் இவைகளை ஒன்றையும் செய்ய முடியாது போனால் உதாரணமாக ருகூஃவுக்கு கூட நிற்க முடியவில்லை என்றால் நிமிர்ந்தவாறு அமர்ந்து பின் இருந்த நிலையில் தொழவேண்டும் .

விடயம் 991:ஒருவர் இருந்து கொண்டு தொழ முடிந்தால் அவர் தூங்கிக் கொண்டு தொழக் கூடாது . நிமிர்ந்தவாறு இருக்க முடியாது போனால் எவ்வாறு உட்கார முடியுமோ அவ்வாறு உட்கார்ந்து தொழவேண்டும் . அமரவே முடியாதிருந்தால் கிப்லாவுடைய சட்டங்களில் சொல்லப்பட்டுள்ள பிரகாரம் வலப்பக்கமாக தூங்க வேண்டும் . அதற்கும் முடியாமல் போனால் இடப்பக்கமாக தூங்க வேண்டும் . அதற்கு முடியாது போனால் அவரது கால் பாதங்கள் கிப்லாவை முன்னோக்கியுள்ளவாறு மல்லாந்து தூங்க வேண்டும் .

விடயம் 992:இருந்து கொண்டு தொழும் ஒருவர் ஹம்து மற்றும் சூராவை ஓதிய பிறகு அவரால் நின்ற நிலையில் இருந்து ருகூஃ செய்ய முடியும் என்றிருந்தால் கட்டாயம் நிற்க வேண்டும் பின் நின்ற நிலையில் இருந்து ருகூஃ செய்ய வேண்டும் . இதற்கு முடியாது போனால் இருந்த நிலையில் ருகூஃ செய்ய வேண்டும் .

விடயம் 993:தூங்கிக் கொண்டு தொழும் ஒருவர் தொழுகைக்கு இடையில் அவரால் அமர முடியும் என்றிருந்தால் முடிந்த அளவு இருந்து கொண்டு தொழ வேண்டும் . மேலும் நிற்க முடியும் என்றிருந்தால் கட்டாயம் முடிந்தவைகளை நின்று கொண்டு தொழ வேண்டும் . ஆனால் அவரது உடம்பு அமைதியாகின்ற வரை தொழுகையின் வாஜிபுகளில் எதையும் ஓதக் கூடாது .